Tuesday, March 18, 2008

முடியல...............

"இது உனக்கு தேவையா ? இருக்குற வேலைய ஒழுங்கா பாக்குறத விட்டுட்டு ஏன் இப்டி கவர்மென்ட் வேலைக்கு அலையுற ? "...நான் ஒவ்வொரு வாட்டியும் கவர்மென்ட் வேலைக்கு அப்ளை பண்றப்போ ..என் கிட்ட என்னை சுத்தி இருக்கவுங்க கேக்குற கேள்வி ...

என்னதான் நாமளும் வேலையில இருந்து நல்லா சம்பாதிச்சாலும் இந்த கவர்மென்ட் வேல ஆசை மட்டும் போகவே மாட்டேங்குது.பி.எஸ்.என்.எல். ஜே.டி.ஒ. போஸ்டுக்கு அப்ளை பண்றதுக்கு காலங்காத்தால பத்து மணிக்கு நாலு பக்கம் அப்ளிகேஷன் நிரப்பிட்டு டி.டி எடுக்கலாம்னு ஒரு பேங்க்க்கு போனேன்.ஆச்சர்யம் ஆனால் உண்மை !!! கூட்டமே இல்ல.என்னடா இதுனு பார்த்தா கிரில் கேட் மூடி இருக்குது ,அதுல ஒரு போர்டு "LUNCH BREAK" அப்டின்னு .அடங்கொய்யால ...காலயில பத்து மணிக்கே லஞ்ச் ஆ ...ரொம்ப ஓவர் டா னு ..ஒரு சந்தேகத்துல போர்ட திருப்பி பாத்தா "OFFICE HOURS STARTS FROM 10.30" னு போட்ருந்தது.சரி னு ஒரு வழியா உள்ள போயி அங்க இருந்த ஒரு கடமை தவறாத கண்ணியவான் கிட்ட "DD எடுக்கணும் ..challan வேணும் "னு கேட்டேன்.."Local ஆ Outstation ஆ " னு கேட்டான்.ச்சே... பயபுள்ள ஆரம்பத்துலயே ரொம்ப தெளிவா இருக்கானே னு நினைச்சுட்டு "payable at chennai" னு ஒரு DD பார்மை நிரப்பிட்டு போய் க்யூ ல நின்னேன்.அந்த கவுண்ட்டர் ல ஒரு "கடமை தவறாத கண்ணியவாளினி (கரெக்டா ???)..என்கிட்டே இருந்த பார்மை வாங்கி கர கர னு கிறுக்கிட்டு அப்புறமா ..."outstation" ஆ ..."printer not working" னு சொல்லிட்டு அடுத்த வேலைய பாக்க ஆரம்பிச்சுருச்சு.ஏண்டா அப்ப பிரிண்டர் வேல செய்யலைனா ..அன்னிக்கு பூராவும் outstation க்கு DD தர மாட்டீங்களா டா ..சூப்பர்.....அப்புறம் "local payable" DD எடுத்துட்டு ..Register Post அனுப்புறதுக்கு போனேன்.ரேஷன் கடையில நிக்கிற மாதிரி அப்படி ஒரு கூட்டம்.ஸ்டாம்ப் செக்க்ஷன் போய் எவ்ளோ ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஓட்டணும்னு கேட்டேன் "13 ரூபாய்க்கு னு சொன்னானுங்க.சரின்னு ஓட்டிட்டு போய் மறுபடியும் க்யு ல நின்னேன்...முன்னாடி ஒருத்தன் நின்னு சண்ட போட்டுட்டு இருந்தான்.சரியா காதுல விழல ..என்னவோ ரெஜிஸ்டர் போஸ்ட்..ஸ்பீட் போஸ்ட் னு மாத்தி மாத்தி பேசிக்கிட்டு இருந்தானுங்க ..கொஞ்ச நேரம் கழிச்சு ..கதவ மூடிட்டானுங்க ..என்னாங்க டா னு ..பாத்தா ..."லஞ்ச் பிரேக்....இப்போ உள்ள இருக்கவுங்க கிட்ட இருந்து தான் போஸ்ட் வாங்குவோம்..இனிமே லஞ்ச் பிரேக் முடியுற வரைக்கும் யாரும் உள்ள வரக்கூடாது " னு ஒரு அருமையான பாயிண்ட் சொன்னாரு உள்ள உக்காந்திருந்த ஒரு சோமாபுரி இளவரசர் .....உள்ள நின்னுகிட்டு இருந்தவுங்க கிட்ட எல்லாம் அனுப்ப வேண்டியத மொத்தமா வாங்கிட்டு உள்ள போய்ட்டான் ஒருத்தன்.இப்பவும் அந்த ரெஜிஸ்டர் போஸ்ட் பார்ட்டி சண்ட போடுட்டு தான் இருந்தான்.உடனே உள்ள இருந்த ஒரு ஆபிசர் "என்ன பிரச்சனையா இருந்தாலும் கம்ப்ளயின்ட் ரிட்டன் ல எழுதி குடுத்திட்டு போ " னு சொல்லிட்டு போய்ட்டாரு. அவனும் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணி பார்த்துட்டு கிளம்பிட்டான்.. அப்புறம் ஒருத்தன் ...ஒரு அப்ளிகேஷன் பார்மை கையில ..வச்சிக்கிட்டு இது யாருது னு கேட்டுட்டு இருந்தான் .."அடங்கொக்க மக்கா ..அது என்னுது டா...என்ன பிரச்னை னு பார்த்த 32 ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஓட்டணும் ..13 ரூபாய்க்கு தான் ஓட்டிருக்க னு கேட்டான்.ஸ்டாம்ப் செக்க்ஷன் ல இருந்தவன் தான் டா
13 ரூபாய்க்கு ஓட்ட சொன்னான் னு சொன்னேன்.."அவன் சொன்னா உனக்கு தெரியாதா னு கேட்டான் ..."....அட அறிவு கெட்ட முட்டாப்பயலே...போஸ்ட் ஆபிஸ் ல வேல பாக்குற உனக்கே எவ்ளோ ரூபாய்க்கு ஸ்டாம்ப் ஓட்டணும் னு சரியா தெரியலைனா எனக்கு எப்டி டா தெரியும் ..மொன்ன நாயே "...அப்டின்னு கேக்கணும் னு நினைச்சேன்...ஆனா ..என்னையும் ரிட்டன் ல எழுதி குடுக்க சொல்லிட்டான்னா..என்ன பண்றது...அதுனால...மையமா ஒரு சிரிப்பு சிரிச்சுட்டு தேவையான ஸ்டாம்ப் ஓட்டிட்டு திருப்பி பார்மை குடுத்தேன்....இதுக்குள்ள எனக்கு அப்புறம் வந்தவன் லாம் பார்மை குடுத்துட்டு போயிட்டான் ...ஒரு வழியா போயி என் பார்மை எடுத்து கீபோர்டுல ஆராய்ச்சி பண்ணி என்ட்ரி போட ஆரம்பிச்சப்போ.........அட அட அட ...நம்ம ஈபி ...நம்ம ஈபி தான்...அடிச்சுக்க ஆளே இல்ல ...... நல்லா வலுவா பவரைக் கட் பண்ணிடானுங்க போல...புளிச்சு னு மானிட்டர் ஆப் ஆயிடுச்சு....ஏண்டா ஒரு UPS வச்சிக்க மாட்டீங்களா டா.....அப்டியே அவன் ஸ்டைலா நிமிந்து பாத்து ...மதியம் வா னு சொன்னான் ... "சார் மதியம் ரெஜிஸ்டர் போஸ்ட் வாங்க மாட்டீங்களே சார் னு கேட்டதுக்கு ...அப்போ நாளைக்கு வா அப்டினான்.....ஏண்டா DD எடுக்க போன பிரிண்டர் ஒர்க் ஆகல னு சொல்றீங்க... போஸ்ட் அனுப்ப வந்தா ..கரண்ட் இல்ல அப்புறம் வா னு சொல்றீங்க ...ராக்கெட் வேகத்துல முன்னேறிக்கிட்டு இருக்கீங்க டா ...." அப்டி னு நினைக்கும் போது...என்னை நானே கேட்டுகிட்டேன்


"இது உனக்கு தேவையா ? இருக்குற வேலைய ஒழுங்கா பாக்குறத விட்டுட்டு ஏன் இப்டி கவர்மண்ட் வேலைக்கு அலையுற ? "