Tuesday, May 6, 2008

ஜகதலப்பிரதாபங்கள் - பிளேடு பக்கிரி

நான் பிரைமரி ஸ்கூல் படிச்சிகிட்டு இருந்தப்போ நான் தான் ஸ்கூல் டாப்பர் :-) (ஹைய்யர் செகண்டரி லயும் நான் டாப்பர் தான் )..அதுனால நம்மள அமைதியான பையன் னு அவிங்களா முடிவு பண்ணிட்டானுங்க ...நம்ம பண்ற ஊமக்குசும்பெல்லம் கண்டுபுடிக்கிற அளவுக்கு அவிங்களுக்கு தெறம பத்தாது..நான் ரெண்டாங்கிளாஸ் படிக்கிறப்போ எனக்கு ஒரு நண்பன் இருந்தான் (பேர் வேண்டாமே !!) ..இத அவன் படிப்பானா னு தெரியல...நானு ,அவன் அப்புறம் திவாகர் னு ஒருத்தன்..இதுல திவாகர் எனக்கு கொஞ்சம் க்ளோஸ். ...மூணு பெரும் இண்டர்வல் ல தொட்டு புடிச்சு விளையாடறது வழக்கம்.அப்போ எங்க ஸ்கூல் ல ராஜி மிஸ் னு ஒருத்தங்க இருந்தாங்க.இன்னும் இருப்பாங்க னு தான் நினைக்கிறேன். அவுங்கள பாத்தா பசங்கள்ள இருந்து ஆயா வரைக்கும் அப்டி ஒரு பயம்.நிஜமா..இந்த ரேவதி கூட ஒரு படத்துல "ஒரு தென்றல் புயலாகி வருதே " னு கோவமா பாடிட்டே வரும்ல ...அதே மாதிரி தான் எப்போவும் வருவாங்க..அவுங்க அப்போ புதுசா ஒரு ரூல் அமுல் படுத்தி இருந்தாங்க ..அதாவது பசங்க ஸ்கூல் க்கு பென்சில் சீவுரதுக்கோ...வேற எந்த உபயோகத்துக்கோ பிளேடு கொண்டு வரக்கூடாது னு ...ஏன்னா.பிளேடு யூஸ் பண்ண தெரியாத சின்ன பயலுவ ...கைய கிளிச்சிட்டு போய் பெர்மிஷன் வாங்குறத ஒரு பொழப்பா வச்சிருந்தானுங்க ...எங்க வீட்லயும் எனக்கு ஷார்ப்னர் வாங்கி குடுத்தாங்க..ஆனா நான் வாரத்துக்கு ஒரு மூணு நாலு ஷார்ப்னர் தானம் பண்றத வழக்கமா வச்சிருந்ததால...வீட்ல ஷார்ப்னர் க்கு தடை போட்டுட்டாங்க ...ஆனா நான் என்னோட ஸ்கூல் பேக் ல பிளேடு வச்சிருப்பேன் ...அவிங்களும் ஸ்கூல் ல செக் பண்ணுவானுங்க...ஆனா பாக்ஸ் ல மட்டும் தான் செக் பண்ணுவானுங்க...(என்னா investigation )..நான் பேக் ல வச்சிருந்த பிளேடு மொன்னை ஆயிடுச்சு னு புதுசா பிளேடு வாங்கி டவுசர் பாக்கெட் ல வச்சிருந்தேன்.(கவனிக்க: என் டவுசர் பாக்கெட் ல எப்பவாவது புளிப்பு முட்டாயும் வச்சிருப்பேன்).அன்னிக்கு வழக்கம் போல தொட்டு புடிச்சு விளையாடிட்டு இருந்தப்போ...திவாகரும் நானும் பேசி வச்சு சாட் பூட் த்ரீ போட்டு ..அந்த நாதாரிய பட்டு வர வச்சிட்டோம் (this is called planning)...அவன் வந்து என்ன அவுட் ஆக்குனது மட்டும் இல்லாம...என் டவுசர் பாக்கெட் ல கைய வுட்டு ..புளிப்பு முட்டாய அபகரிக்க பாத்தான்...அங்க தான் விதி விளையாடுச்சு ..அவன் கை விட்ட பாக்கெட் ல முட்டாய் இல்ல...நான் வச்சிருந்த புது பிளேடு தான் இருந்துச்சு .கைய வெளிய எடுத்த நாலு விரல்ல ரத்தம் ...அம்மே னு கத்திட்டு அழுக ஆரம்பிச்சிட்டான் ..என்னடா இதுக்கெல்லாம் அழுகுறதா னு நான் தேத்திட்டு இருந்தா ..சத்தம் கூடுது ...பக்கத்துல இருந்த ஆயாவ கூப்டு கம்ப்ளையின் பண்ணிட்டான்.சரி நமக்கு தோள் குடுக்க திவாகர் இருப்பான் னு பார்த்தா ..பயபுள்ள அப்பீட் ஆயிடுச்சு ..."You too Brutus" னு மனசுக்குள்ள நினச்சிக்கிட்டு மனோகரா படத்துல சிவாஜி நடக்குற மாதிரி ஸ்டாப் ரூம் குள்ள போனேன்(இழுத்துட்டு போனாங்க பா )..என் நேரம் ..ராஜி மிஸ் ..அங்க இருந்தாங்க ...அந்த நாதாரி வேற..என்னமோ நான் வேணும்னே பிளேடு எடுத்து அவன் கைய கீச்சுன மாறி சீன் போட்டுட்டான்..ஒரு 15 நிமிஷம் இங்கிலீஷ் லேயே திட்டுனாங்க ...பக்கத்துல இருந்த ஆயா "எல்லாம் நல்லா படிக்கிற திமிரு " னு கோர்த்து வுடுது ...ஏண்டா ..நல்லா படிக்கிறதுக்கும் பிளேடு எடுத்து கைய கீச்சுரதுக்கும் என்னடா சம்பந்தம் ..உங்க புத்திசாலித்தனத்துக்கு ஒரு அளவே இல்லையா டா..னு நினைச்சு முடிக்கல...அதுக்குள்ளே.."மேடம் இவன் பேக் செக் பண்ணுங்க " அப்டினுன்றுச்சு ....உடனே ராஜி மிஸ்ஸும்..இன்னொரு மேடமும் ..என் க்ளாசுக்கு கிளம்பிட்டாங்க...நான் வழியெல்லாம் சொன்னேன்... அவன் புளிப்பு முட்டாய ஆட்டைய போடறதுக்கு தான் கைய வுட்டான்..அப்ப தான் பிளேடு கிழிச்சது ..நான் வேணும்னு கிழிக்கல னு...என்ன யாருமே நம்பல...அந்த பக்கி..பாவமா மூஞ்சிய வச்சிக்கிட்டு சும்மா வந்தது..க்ளாசுக்கு வந்ததும் கூட வந்த மிஸ்
கொஞ்சம் கூட யோசிக்காம பேக் செக் பண்ண ஆரம்பிச்சிடுச்சு..அவ்வளவு தான் என் பென்சில் சீவாத என்னோட மொன்ன பிளேடு அந்த மிஸ் கைய கிளிச்சிருச்சு ...அவ்ளோ தான் என்ன பாத்து கோவமா அந்த மிஸ் ஒரு கேள்வி கேட்டுச்சு "are u a blade pakkiri ..having this much blade..why ?"...இத சும்மா விடக்கூடாது..வீட்டுல கம்ப்ளையின் பண்ணனும் சொல்லுச்சு ..."டேய் வேணாம்டா ஒண்ணுமில்லாத 5 ரூவா மேட்டருக்கே என்ன தூக்கி போட்டு தூர் வாருனாங்க...இது தெரிஞ்சா என் ஆயுசே முடிஞ்சிரும் டா னு " சொன்னேன் ..அதையெல்லாம் அவிங்க கண்டுக்கவே இல்ல..பிளேடு வச்சிருந்ததே தப்பு..அத வச்சு ஒரு பையன் கைய கீச்சுனது ஒரு தப்பு...அத விட பெரிய விஷயம் அந்த மிஸ் கைய கீச்சிகிட்டது ..இது தான் அவிங்க குற்றப்பத்திரிக்கை.எனக்கு வீட்ட நினைச்சாலே தல சுத்த ஆரம்பிச்சிடுச்சு .அப்போ கூட அந்த பையன் உண்மைய ஒத்துக்கல...நான் திவாகர சாட்சிக்கு கூப்டேன் "I did not go to play miss" னு சொல்லிட்டான் ..இதுக்கு மேல நான் என்ன செய்ய முடியும் ? அப்போ போன் இல்லாததுனால என்ன பத்தின கம்ப்ளைண்ட ஒரு லெட்டர் ல எழுதி வேன் டிரைவர் த குடுத்து வீட்ல குடுக்க சொல்லிடாங்க ..நான் அப்போ கூட வேன் டிரைவர் கிட்ட டீல் பேசிக்கலாம் னு நினச்சேன்...ஆனா ஏற்கெனவே ஒரு வாட்டி அவர கடிச்சு வச்சதுனால ..அவரு உதவி செய்ய மாட்டேன் சொல்லிட்டாரு...என்ன கொடுமை பாத்தீங்களா ?...அப்புறம் என்ன ...வீட்டுக்கு போய் ...லெட்டர் குடுத்து ...வழக்கம் போல தான்.."இந்த அடி போதுமா ..இன்னும் கொஞ்சம் வேணுமா ? "...

மறு நாள் காலையில ஸ்கூல் போனா...அந்த நன்னாரி கையில பிளேடு அறுத்ததுக்கு அமிர்தாஞ்சன் ..போட்டு வந்துருக்கான் ..அத எங்கிட்ட காமிச்சு .."You cut my finger no...give me pulippu muttai" னான்...அடப்பாவி .இதுக்குத்தான் இவ்ளோ படம் போட்டியா டா னு ...துரோகத்த தாங்க முடியாம ..அவன ஆச தீர அடிச்சுட்டேன் .அப்புறம் அதுக்கு தனியா விசாரணை பண்ணானுங்க.....
பிளேடு கீச்சுனதா சொல்லி என்ன மாட்டி விட்டவன் எங்க இருக்கான் னு தெரியல..ஆனா அந்த திவாகர் செகண்ட் ஸ்டாண்டர்ட் படிக்கும் போதே ஒரு ஆக்சிடென்ட் ல இறந்துட்டான்.அவன் இறந்து பதினாறு வருஷம் ஆச்சு .ப்ளாக் ல சும்மா காமெடி க்கு திட்டி எழுதுனாலும் ....இன்னும் அவன் போட்டோவ வச்சிருக்கேன் ..இருந்திருந்தா அவனும் இந்த ப்ளாக் படிச்சிருப்பான்..

பணம் கக்கி மெசினின் பம்மாத்து வேலை ...

எனக்கு மட்டும் தான் வாழ்க்கை ல எல்லா விஷயமும் காமெடியா நடக்குதா ?? இல்ல நான் எல்லாத்தையும் காமெடியா எடுத்துக்குறேனா னு தெரியல.இது நான் சென்னை ல குப்பை கொட்டிட்டு இருக்கும் போது நடந்த ஒரு கருமாந்திரம்.சென்னை ல அது பங்குனி வெயில் பல்லை காட்டிட்டு அடிச்ச நேரம்.நான் வழக்கம் போல ஆபீஸ் கட் அடிச்சிட்டு (நீங்களெல்லாம் காலேஜ் தான் கட் அடிப்பீங்கோ ...நாங்க அப்டி இல்ல ) ஊர் சுத்திக்கிட்டு இருந்தேன்.அன்னிக்கு சம்பள நாள்.நான்அக்கவுண்ட் வச்சிருந்த, இந்தியாவின் தலைசிறந்த ஒரு வங்கியோட பணம் கக்கி மெசின் ல போய் பணம் எடுக்கலாம் னு போனேன்.அப்போ நமக்கு சம்பளம் மாசத்துக்கு 12000 ரூவா.கோடம்பாக்கம் பாலம் கிட்ட இருந்த பணம் கக்கி மெசின் ல ஒரு 100 ரூவா எடுத்துட்டு (நாங்கெல்லாம் சிக்கனமா செலவழிப்போம் !!) சாப்பிட போனேன் .சாப்ட்டு முடிச்சிட்டு நானும் என நண்பனும் சோழிங்கநல்லூர் நோக்கி பயணமானோம்.போற வழியில வேளச்சேரி ல அதே வங்கியோட பணம் கக்கி மெசின் இருந்துச்சு.சரி இன்னொரு நூறு ரூவா எடுத்து செலவுக்கு வச்சிக்கலாம் னு போனேன் .அதுவும் கார்டை முழுங்கிட்டு நூறு ரூவா குடுத்துச்சு.அதுக்கப்புறம் அந்த முட்டாப்பயபுள்ள ஒரு ஸ்லிப் குடுத்துச்சு.அதுல withdrawal 100 , balance 300 னு காமிச்சது .அய்யய்யோ ..இது என்னடா வம்பா போச்சு..நீங்களே சொல்லுங்க மிச்சம் 11800 தான காமிக்கணும்.சரி இத பேங்க் லேயே confirm பண்ணிக்கலாம் னு உள்ள போனேன்.அங்க வழக்கம் போல ஆபீசர்ஸ் எல்லாம் ரெம்ப வேல பாத்துட்டு இருந்தாங்க.அங்க இருந்த ஒரு பெரிய ஆபீசர் கிட்ட போய் எனக்கு நடந்த கொடூரத்த சொன்னேன்.அவரு பில் கேட்ஸ் கு எவ்ளோ டாக்ஸ் வரும் கணக்கு பாத்துட்டு இருந்தார் போல ரெம்ப டென்ஷன் ஆயிட்டாரு.அப்புறம் நான் குடுத்த ஸ்லிப்
கையில வச்சிக்கிட்டு மேலயும் கீழயும் பாத்துட்டு .. ...அந்த உரையாடல கீழ படிங்க ...


மேனேஜர் : எவ்ளோ input குடுத்தேள்..?
நான் : 100 ரூவா சார்
மேனேஜர்: மெசின் எவ்ளோ குடுத்துச்சு ?
நான் : 100 ரூவா சார்..
மேனேஜர் : அப்போ சரி தானே ..இதுல உங்களுக்கு என்ன பிரச்சன ?


அட தாமிர டப்பா தலையா ...நான் நூறு ரூவா கேட்டேன்..அதுவும் குடுத்துச்சு.. மிச்சம் 300 காமிக்குது டா ....பாக்கி 11500 எங்க டா போச்சு ...னு கேட்டா, அந்த மாயாண்டி மண்டையன் ...அத நீங்க அக்கவுண்ட் ஓப்பன் பண்ண பேங்க் ல போய் கேளுங்கோ னு சொல்லிட்டான் .அப்புறம் நீங்க என்ன TVS 50 சர்வீஸ் பண்றதுக்கா டா பிராஞ்ச் வச்சிருக்கீங்க னு கேக்கணும் போல இருந்துச்சு ...பொத்திக்கிட்டு வந்துட்டேன் .
நான் அக்கவுண்ட் வச்சிருந்த பிராஞ்ச் பெங்களூரு ல இருந்துச்சு.நீங்க என்னைய வண்டி வண்டி யா கேள்வி கேக்காதீங்க ..சென்னையில பேங்க் இல்லாமயா நான் பெங்களுரு ல ஓப்பன் பண்ணேன்...எங்க ஆபீஸ் பாலிசி அப்புடி...எப்புடி ??

அப்புறம் அந்த பெங்களுரு பிராஞ்ச் க்கு போன் பண்ணி காட்டு கத்து கத்துனேன்..."technical problem " னு சொன்னான் ..."I am not satisfied with your service..I want to close this account..tell me the procedure " னு சொன்னேன்...சரி கொஞ்சம் சீரியஸா எடுத்து பண்ணுவானுகளேனு .அதுக்கு அவன் ..அப்புடி எல்லாம் க்ளோஸ் பண்ண முடியாது ...நீ வேல பாக்குற கம்பெனி ல ரெண்டு வருஷம் பாண்ட் போட்ருக்கு ..
அந்த காசு 75000 த்த கட்டிட்டு க்ளோஸ் பண்ணிக்கோ னு ...என்ன மூடிட்டு போடா னு சொல்லாம சொல்லிட்டான் ...அப்புறம் மனசு கேக்காம ...மத்தியானம் K TV ல "ஆண்பாவம் " படம் பாத்துட்டு ..மல்லாக்க படுத்து தூங்கிட்டேன் ...அப்புறம் ஒரு ரெண்டு நாள் கழிச்சு அந்த காச குடுத்துட்டாங்க ...


பின் குறிப்பு : நான் இந்த ப்ளாக் எழுதணும் னு சொல்லி உற்சாகம் குடுத்தது என் நண்பன் பங்கிலி..இல்ல இல்ல ...மங்கிலி ...அட ச்சே...சங்கிலி ...அவன பத்தி சொல்லனும்னா ..அவன் ஒரு பச்செலப்புடுங்கி ...சாரி...நாக்கு தவறிடுச்சு ...பச்சிளம் குழந்தை...ரெம்ப தைரிய சாலி ...அவரு இஷ்டப்படி தான் ஒவ்வொரு நிமிச்தையும் வாழ்வார் (!!!) ...

உள்குத்து : டேய் மாப்ள ..நீ ஆசைப்பட்ட மாதிரியே உன் பேர என் ப்ளாக் ல போட்டுட்டேன் டா...என்னமோ நான் போட மாட்டேன் னு சொன்ன...பாத்தியா..உன் மேல எனக்கு எவ்ளோ பாசம் ...சரி தெரியாம கேக்குறேன்...இப்புடி அவசியம் உனக்கு ஒரு விளம்பரம் வேணுமா...விடு விடு நண்பனா போய்ட்ட...