Friday, October 31, 2008

Where s da party !!!!

சிலம்பாட்டம் படத்துல இருந்து ஒரு பாட்டு . நமக்கு சிம்பு பேர கேட்டாலே வாந்தி வரும்.இருந்தாலும் இந்த பாட்டு எனக்கு ரொம்ப புடிச்சு போச்சு.ரெண்டு நாள்ல ஒரு அம்பது வாட்டி கேட்ருப்பேன்.பாட்டுல அப்டி பெருசா எதுவும் இல்ல . மெட்டு நல்லா இருக்கு ,அத விட முகேஷ்னு ஒருத்தர் பாடி இருக்காரு .அவரோட மாடுலேஷன் தான் பாட்ட ரெம்ப ஹிட் ஆக்கிருக்குனு நினைக்கிறேன்.செம பாட்டு சார்.நெஜமா.நல்லா என்ஜாய் பண்ணி கேக்கலாம்.

ஆனா நம்ம லிட்டில் சூப்பர் ஸ்டார் இந்த பாட்ட எப்டி எடுக்க போறாருன்னு தெரியல. ஏதோ ஒரு பேட்டி நான் இந்த பாட்ட செம லோக்கல் ஸ்டைல் எடுக்க போறேன் னு பல்ல கடிச்சிட்டு சொன்னாரு.அவரு வழக்கம் போல கைலிய தூக்கி வாயில கடிச்சிட்டு "இந்தா இந்தா " னு ஆடுனாரு னு பாட்டு ஊத்திக்கிரும்.

என்ன கொடுமை சார் இது ..திடீர் னு blogger "transliteration service unavailable" னு சொல்லுது.


Here is the link

http://music.galatta.com/entertainment/music/songs/albumid/1531/movie/silambattam.html