Wednesday, December 17, 2008

இதயத்து வியர்வைத்துளிகள் !!




ஈழத் தமிழனின் நிலையை எண்ணும் போது என் இதயம் சிந்திய வியர்வைத் துளிகள் ,



உண்ண உணவில்லை
உடுத்த உடையில்லை
உரிமைக்கு மதிப்பில்லை
உயிர் வாழ வழியில்லை
- நான் ஈழத் தமிழன்


அங்கே பறிக்கப்பட்ட ஒவ்வொரு உயிருக்கும்
அங்கே மறுக்கப்பட்ட ஒவ்வொரு உரிமைக்கும்
இங்கே லட்சம் உணர்வுகள் விதைக்கப்படுகின்றன


தமிழன் இல்லாத ஊரில்லை - என்று
மார்தட்டுவதை விடு
அங்கே தமிழன் இருக்க ஊரில்லை - அதை
எதிர்த்து அறப்போர் தொடு






சொந்த மக்களையே அகதிகளாகப் பார்க்கும் அவலம்
இது வந்தாரை வாழவைக்கும் தமிழகமா ??
ஆம் !
வந்தாரை எல்லாம் வாழ வைக்கும் - ஆனால்
உறவினர்களை அகதிகளாக்கும்


அவல நிலை மாற வேண்டும்
அன்புக்கரம் நீள வேண்டும்
அடிமைத்தனம் ஒழிய வேண்டும்
அகதி என்ற சொல் அகராதியில் இருந்து அழிய வேண்டும்


தமிழை விட இனிமை வேறெதுவுமில்லை
ஈழத் தமிழில் கதறும் போது
அதை மிஞ்சக் கொடுமையில்லை






தமிழ் உன் பேச்சில் இருக்க வேண்டாம்
தமிழ் உன் மூச்சில் இருக்க வேண்டாம்
தமிழ் உன் உணர்வில் இருக்கட்டும்
அப்போது பிறக்கும் விடிவு காலம் ஈழத்தமிழனுக்கு


ஈழத்துல நார்வேக்காரன் சமரசத்துக்கு வழி செய்றான் - நாம
சாப்பாடுக்காவது வழி செய்யலாமே !