Tuesday, December 8, 2009

ஜ‌க‌த‌ல‌ப்பிர‌தாப‌ங்க‌ள் - ‍என் பொதுவாழ்க்கையின் ஆர‌ம்பம்


அப்போ எனக்கு ஒன்பது வயசிருக்கும். நான் நாலாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தேன். நிறைய்ய்ய்ய படிக்க வேண்டியது இருந்ததால, அப்போ என்னோட ஒரே பொழுதுபோக்கு, "டஸ்டர்" எடுத்து போர்டு அழிக்கிறது.ரொம்ப சாதாரணமா நினைச்சிராதீங்க. அதுக்கு எவ்ளோ போட்டி இருக்கும்னு எனக்குத்தான் தெரியும்.அப்போ நான் க்ளாஸ் லீடர் ஆவல, சப்‍‍ லீடர் போஸ்ட்ல தான் இருந்தேன். ஏன்னா அதுக்கு முந்தின் எக்ஸாம்ல, நான் செகண்ட் ரேங்க்தான் எடுத்திருந்தேன்.

சரி..இதுல எங்கடா பொதுவாழ்க்கை வந்துச்சுன்னு நீங்க கேக்கலாம். மேட்டருக்கு வர்றேன்.அந்த ஒரு நாள், ஒரு நிமிடம், ஒரு நொடி என் வாழ்க்கையை புரட்டி போட்டிச்சு.

செகண்ட் அவர் முடிஞ்ச உடனே ப்ரேக் இருக்கும். கணக்கு மிஸ் வெளியே போன உடனே, ஒடிப்போயி டஸ்டரை எடுத்துட்டேன். மனசுல அவ்ளோ ஆனந்தம். இன்னிக்கு ஃபுல் போர்டையும் நம்மதான் அழிக்க போறோம்னு. அப்போதான் அவன் குறுக்க வந்தான். "கேரளா". இது அவன் ஊரு மட்டும் இல்ல.அவனுக்கு நாங்க வச்ச பேரும் அதுதான்.

"ப்ளீஸ் டா.. இப்போ நான் அழிக்கிறேன், லன்ச்ல உனக்கு நான் டஸ்டர் எடுத்து தர்றேன். அப்போ நீ அழிச்சுக்கோ.ப்ராமிஸ் டா"ன்னு சொன்னான்.

"ப்ளீஸ்"னு அவன் சொன்னது, என்னவோ ஒரு மாதிரி இருந்துச்சு. நமக்கு எவ்ளோ இரக்க சிந்தனை இருக்குன்னு உங்களுக்கு தெரியுமே.தெரியாட்டி ஒரு சாம்பிள் சொல்றேன். பக்கத்துல இருக்கவன்ட்ட கலர் பென்சிலை குடுத்துட்டு, ட்ராயிங் கிளாஸ்ல நான் அடி வாங்கிருக்கேன். அதே மாதிரி இவன்ட்டயும் டஸ்டரை குடுத்துட்டேன். அவன் சந்தோசமா அழிக்க ஆரம்பிச்சுட்டான். நான் போயி கூடையில் இருந்த கை முறுக்கு சாப்பிட்டு உக்காந்துட்டேன்.

லஞ்ச் பிரேக் வந்துச்சு.சொன்ன மாதிரியே அவன் தான் டஸ்டரை எடுத்தான். கேக்காம குடுப்பான்னு பாத்தேன். குடுக்கல. போர்டை அழிக்க போனான். தடுத்து நிறுத்தி கேட்டேன். "நீ தானடா எனக்கு தர்றேன்னு பிராமிஸ் பண்ணுன. இப்போ நீயே அழிக்க போற. குடுடா"னு கேட்டேன்.

" நான் அப்போ சொன்னது பொய் பிராமிஸ்டா, நீ லூஸு மாதிரி நம்பிட்டு என்கிட்ட குடுத்துட்ட.என்னய என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா. அந்த ப்ராமிஸ் மட்டும் இல்லடா, இந்த போர்டையும் நான் தான் அழிப்பேன்"னு கொக்கரிச்சான்.


"என்னய என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா"

"என்னய என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா"

"என்னய என்ன உன்ன மாதிரி லூசுன்னு நினைச்சியா"

மூணாங்கிளாஸ் வரைக்கும் சாந்தமா இருந்த என்னை ரெளத்திரனா மாத்துன, வார்த்தைகள்.என்னாலயே என்னை கட்டுப்படுத்த முடியல. அது வரைக்கும் நானே பாக்காத "என்னை" அவன் பார்த்தான். அவனால அத தாங்க முடியல. கண் இமைக்கும் நேரத்துல டஸ்டர் என் கைக்கு வந்துருச்சு. என் கோவம் குறையல. அடுத்த நொடி என் கையில் இருந்த டஸ்டர் அவன் மண்டையை பதம் பாத்துருச்சு. பிஞ்சு பாடி போல, பொள பொளன்னு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சுருச்சு. என்ன மேட்டர்னா,எனக்கு அப்போக்கூட "அய்யோ, ரத்தம் வருதே"ன்னு பதறத் தோணல.அவன் ஒரு சுமால் பாய்.... அழ ஆரம்பிச்சுட்டான். அழுதுகிட்டே வெளிய ஒடிட்டான்.

எங்க போவான்னு எனக்கும் தெரியும். நேரா ஸ்டாஃப் ரூமுக்குதான் போவான். தைரியம் இல்லாதவன். அப்புறம் வழக்கம்போல அவிங்களா ஒரு முடிவு எடுத்துட்டு என்னை போட்டு புரட்டி எடுப்பானுங்க. அது வரைக்கும் எதுக்கு டைம் வேஸ்ட் பண்ணனும்னு, போர்ட் அழிக்க ஆரம்பிச்சிட்டேன்.கொஞ்ச நேரத்துல ராஜி மிஸ், கேரளா அப்புறம் எஸ்தர் அக்கா மூணு பேரும் வந்தாங்க. வழக்கம் போல திட்டிட்டு..."எஸ்தர்..இந்த பையனை ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போயிட்டு, அப்படியே இந்த பையனோட அப்பாவை கூட்டிட்டு வாங்க."னு சொன்னாங்க.

என்னாங்கடா..எப்பவும் லெட்டர்தான குடுத்து விடுவீங்க. இன்னைக்கு நேராவே வர சொல்றாங்கன்னு ஒரு பயம் வந்துச்சு. இதெல்லாம் நமக்கு புதுசான்னு லூசுல விட்டுட்டேன்.அன்னிக்கு எங்க அப்பா வேலை விஷயமா வெளியூர் போயிருந்தாங்க. அம்மாவை கூப்பிடக் கூடாது, ஏன்னா அவுங்க எனக்கு ரொம்ப செல்லம் குடுப்பாங்கன்னு இவிங்களா முடிவு பண்ணிட்டு, திரும்ப ஸ்கூலுக்கு கூட்டிட்டு வந்தாங்க. எனக்குதான் தெரியும், வீட்டுல பிரச்னைன்னு வந்த நான் சோலோவா நின்னுதான் சமாளிக்கணும்னு.

மறுநாள் காலையில ஸ்கூலுக்குப் போன உடனே, என்னை ஸ்டாஃப் ரூம் முன்னாடி நீல் ட்வுன் போட சொல்லிட்டாங்க.
"உறுப்பறுந்து போனாலே உள்ளம் கலங்கேன்.. செருப்பறுந்து போனதுக்கா சிந்தை கலங்குவேன்".. போங்கடான்னு நீல் டவுன் போட்டுட்டேன். ப்ரேக்ல மூணாவதுல இருந்து அஞ்சாவது படிக்கிற எல்லா பசங்களும் அந்த பக்கமாத்தான் மூச்சா போறதுக்கு போயாகணும். எல்லாரும் என்னய ஒரு மாதிரி பாத்துட்டு போனாங்க. ஜூனியர்ஸ் முகத்துல ஒரு பீதி. "He only broke Kerala's head "ன்னு அவிங்க முனகுனது எனக்கு கேட்டது. என‌க்கு அவ‌ன் ம‌ண்டைய‌ உடைச்ச‌துல‌ கொஞ்ச‌ம்கூட‌ வ‌ருத்த‌மோ க‌வ‌லையோ இல்லை.

எதையும் நேருக்கு நேர் சந்திக்க தைரியம் இல்லாம,எனக்கு தெரியாம எங்க அப்பாவை வரசொல்லிட்டாங்க. எங்க அப்பா வர்றப்ப, நான் ஸ்டாஃப் ரூம் முன்னாடி நீல் டவுன் போட்டிருந்தேன். அந்த கோர காட்சி இன்னும் என் மனசுல இருக்கு. யாருக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. நான், எங்க அப்பா, கேரளா, ராஜி மிஸ். வழக்கம்போல அவிங்களா பேச ஆரம்பிச்சாங்க.
அப்புற‌ம்தான் ஒவ்வொரு மிஸ்ஸா வ‌ர‌ ஆர‌ம்பிச்சாங்க‌.

"தேர்ட் ஸ்டான்ட்ர்ட் வ‌ரைக்கும் எழுத்து ந‌ல்லா இருக்கும். இப்போல்லாம் இவ‌ன் முன்ன‌ மாதிரி அழ‌காவே எழுதுற‌தில்ல‌" இது க‌ண‌க்கு மிஸ். (ங்கொய்யால‌, க‌ண‌க்குல‌ என்னாத்த‌, கையெழுத்து)

"அன்னிக்கும் அப்ப‌டித்தான் சார், முன்னாடி இருக்குற‌ பைய‌ன் மேல‌ இன்க் தெளிச்சிட்டான்" இது இங்கிலீஷ் மிஸ்(டேய், அவ‌ன் என் மேல‌ தெளிச்ச‌தை நான் உங்க‌கிட்ட‌ க‌ம்ப‌ளைன் ப‌ண்ண‌ல‌டா).

"இவ‌ன் முன்ன‌ மாதிரி க‌வ‌ன‌மா இல்ல‌. அதுனால‌ தான் கோட்டை விட்டுட்டு செக‌ண்ட‌ ரேங்க் எடுத்துருக்கான்." (யக்கா , நான் உங்க கிளாஸே இல்ல, நான் ஃபோர்த் பி செக்ஷன். நீங்க ஃபோர்த் ஏ க்கு கிளாஸ் டீச்சர்)

ச‌ர‌மாரியா புகார் குடுத்து, ஆட்ட‌த்தை ஆர‌ம்பிச்சிட்டாங்க‌. ரெண்டு நாள் அதே இட‌த்துல‌ நீல் ட‌வுன் போட‌ வ‌ச்சாங்க‌. க்ளாஸுக்கு போக‌ முடிய‌ல. "நீங்க‌ ந‌ட‌த்துற‌த‌ க‌வ‌னிக்காம‌லும் நான் ப‌டிச்சு ஃப‌ர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன்டா"ன்னு க‌ங்க‌ண‌ம் க‌ட்டிகிட்டேன். என்ன‌ வ‌ருத்த‌ம், கேம்ஸ் பீரிய‌ட் கூட‌ போக‌ முடிய‌ல‌.

ஸ்கூல்ல‌யே இப்ப‌டின்னா, வீட்டுல் கேக்க‌வா வேணும். வெள்ளை ச‌ட்டைய‌ ட்ரை வாஷ்க்கு போட்ட‌ மாதிரி வெளுத்து விட்டுட்டாங்க‌. ஆனா இதுக்காக நான் த‌ண்டிக்க‌ப‌ட்ட‌போது, வ‌ருத்த‌மே இல்ல‌. த‌ப்பு ப‌ண்ணி, ஏமாத்த‌ நினைச்ச‌வ‌ன் த‌லையில் மூணு தைய‌ல் போட‌ வ‌ச்ச‌ சந்தோச‌மும், நியாயத்தை நிலை நாட்டின நிம்ம‌தியும் இருந்துச்சு.இருக்குது. அன்னில‌ இருந்து அநியாய‌த்தை த‌ட்டிக் கேக்குற‌து என‌க்கு ப‌ழ‌க்க‌மாயிருச்சு. நான் பொது வாழ்க்கையில என்னோட‌ ப‌ய‌ண‌த்த‌ ஆர‌ம்பிச்சேன்.

இது ந‌ட‌ந்து இன்னிக்கோட‌ 16 வ‌ருஷ‌ம் முடியுது. என்னோட‌ பொதுவாழ்க்கைப் ப‌ய‌ண‌த்துக்கு ஆர‌ம்ப‌மா இருந்த அந்த‌ நாள், இன்னும் என் நினைவுல ப‌சுமையா இருக்கு.


டிஸ்கி: நான் த‌ண்ட‌னை முடிஞ்சு திரும்பி க்ளாசுக்கு போன பிற‌கு, அந்த ட‌ஸ்ட‌ரை நான் ம‌ட்டும்தான் யூஸ் ப‌ண்ணேன். சும்மாவா, மூணு தைய‌ல்னா சும்மாவா.

பெங்களூர் ஸ்பெஷல் - கார் கண்ணாடியில் முட்டை


ஒரு மூணு வாரம் முன்னாடி ஆபிஸ்ல ஒரு ஃபார்வேர்ட் மெயில் வந்தது. அதாவது , பெங்களூரில ஆட்டய போடுறதுக்கு புதுசா ஒரு டெக்னிக் கண்டுபுடிச்சிருக்காங்க. அதுனால எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. அப்டின்னு. என்னா டெக்னிக்...

"நீங்க கார் ஓட்டிட்டு போகும் போது, "சட்"னு கண்ணாடியில் முட்டை வந்து விழுந்து உடைஞ்சா எப்படி இருக்கும். அய்யய்யோ ஓண்ணுமே தெரியலயேன்னு வைப்பரை போட்டீங்க. அவ்ளோதான்... "வெங்கட்ராமா கோவிந்தா"ன்னு தூக்கிருவாங்க. ஏன்னா ? தண்ணியோட முட்டை கலந்தா, அது ரொம்ப கடினமா மாறி உங்க விஷன் ப்ளாக் ஆயிருமாம். உங்களால எதுவும் பாக்க முடியாது. ரோட்டோரத்துல வண்டிய நிப்பாட்டியே ஆகணும். அப்புறம் வந்து ஆப்படிச்சுட்டு, ஆட்டயப் போட்டு போயிருவானுங்க. அதுனால உசாரய்யா உசாரு"ன்னு மெயில் வந்துச்சு.


இப்படி எல்லாமா யோசிப்பாங்கன்னு லூசுல விட்டுட்டேன். ஏன்னா முட்டை அடிக்காமலும் நம்ம கார் அப்படிதான் இருக்கும் .. ஹி..ஹி..

ஆனா இது மெயில் வ‌ந்து கொஞ்ச‌ நாள்ல‌யே , நேத்து நைட்டு என்கூட‌ வேல‌ பாக்குற‌வ‌ரு கார்ல‌ அடிச்சிட்டாங்க‌ :( . பான‌ஸ்வாடி ஃப‌ய‌ர் ப்ரிகேட் ரோட்டுல‌ வ‌ச்சு. அவ‌ரு இந்த‌ மெயிலை ப‌டிச்சிருந்த‌தால‌, வைப்ப‌ர் போடாம‌ எஸ் ஆயிட்டாரு.அந்த ஃபோட்டோதான் நீங்க பாக்குறது

உசார‌ய்யா உசாரு... எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறாங்க‌.

Monday, December 7, 2009

என் தனிமை நீங்க என்ன‌ வ‌ழி ?செல்ஃபோனின் ஒரு அழுத்தில்
உறவுகளோடு பேச முடிகிறது

ஜிடாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட‌
நண்பர்களோடு வ‌ழ‌க்க‌மாக‌ சாட்ட‌ முடிகிற‌து

இணைய‌த்தின் ஒவ்வொரு க்ளிக்கிலும்
புதிதாக‌ க‌ற்றுக் கொள்ள முடிகிற‌து

விண் ஆம்ப்பில் பாட‌ல் கேட்டு
இசையில் ல‌யிக்க முடிகிற‌து

இப்ப‌டி எதையாவ‌து மொக்கையாக
தில்லோடு எழுத‌ முடிகிறது

இவ்வ‌ள‌வு இருந்தும் த‌னிமையால்
என்னை வாட்ட‌ முடிகிறது.
மீள‌ என்ன‌ வழி

ம்ஹூம்..கேபிள் க‌னெக்ஷ‌ன் வாங்கியே
ஆக‌ணும் போல் இருக்கிறது :(

லீலை - சக்கரைப்பொங்கல்+தக்காளி சட்னி


லீலை. படத்துல வொர்க் பண்ணிருக்கிற யாரையுமே தெரியல. ஷிவ் பண்டிட் மட்டும், ஏர்டெல் விளம்பரத்துலயும், ஐ.பி.எல் லயும் பாத்துருக்கோம். சதீஷ் சக்கரவர்த்தினு ஒரு புது ஆளு இசை அமைச்சிருக்காரு. படத்துல மூணு பாட்டு அவர்தான் பாடியிருக்காரு.

ஜில்லென்று ஒரு கலவரம் ‍ பாதி நல்லாயிருக்கு. ஆனா எங்கேயோ கேட்ட ஃபீலிங். ஆரம்பத்துல வர்ற ஒரு ஹம்மிங் நல்லா இருக்கு. வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் கவனமா எழுதிருக்கலாம்.அங்க அங்க மொக்கயா இருக்கு. ஒரு சாம்பிள் "சாலையில் ட்ராஃபிக்கில் நான் வாடும் போது" :)மத்தபடி பாட்டு ஒ.கே. பின்னாடி இருந்து "ஹே.. ஹே"னு கத்தாட்டி நம்ம ஆளுங்களுக்கு ட்யூன் போட்ட திருப்தியே இருக்காது போலிருக்கு.


ஒரு கிளி ஒரு கிளி பாட்டு என்னால பாதிக்கு மேல கேக்க முடியல. ஷ்ரேயா கோஷல் மட்டும்தான் ஒரே ஆறுதல். என்னமோ கவிதை வாசிக்கிற மாதிரி ட்யூன் போட்டுருக்காங்க. ஷ்ரேயா வாய்ஸோட, சதீஷ் சக்கரவர்த்தி வாய்ஸ் காம்பினேஷன்....முடியல. சக்கரப்பொங்கலுக்கு தக்காளி சட்னி தொட்டுக்கிட்டு சாப்பிடற மாதிரி இருக்கு. என்னமோ ட்ரை பண்ணிருக்காங்க.வரல.தம் அடிக்கிற பழக்கம் இருக்குறவுங்க இந்த படத்துக்கு போறப்போ எக்ஸ்ட்ரா ஒரு சிகரெட் வாங்கி வச்சுக்குங்க. நீங்க கண்டிப்பா வெளிய எந்திச்சு போக வேண்டியது இருக்கும் :) இந்த பாட்டு ரிஜிட்டட்ட்ட்ட்ட்ட்ட்டட் !!!

பொன்மாலைப் பொழுது பென்னி..ப்ளீஸ்,இது மாதிரி பாட்டெல்லாம் இனிமே க‌மிட் ப‌ண்ணிக்காதீங்க. "ரெயின் ரெயின் கோ அவே" பாட்டுக்கு எஸ்.ஏ. ராஜ்குமார் ராக் ஸ்டைல்ல‌ ம்யூசிக் போட்டா எப்ப‌டி இருக்கும். அத‌விட‌ கேவ‌ல‌மா இருக்கு. "பொன்மாலைப் பொழுது"னு ஒரு அருமையான‌ பாட்டு இருக்குப்பா,த‌ய‌வு செஞ்சு வ‌ரிக‌ள் மாத்திக்குங்க‌ :(. போன‌ பாட்டுக்கு ஒரு சிக‌ரெட் எக்ஸ்ட்ரா சொன்னேன்..ஐ யாம் சாரி. ஒன் மோர் எடுத்துக்குங்க‌.

ப‌பிள் க‌ம் ‍ஒன்லி மீஸிக்.. நோ லிரிக்ஸ். பா.விஜ‌ய் வாஸ் ரைட்டிங் வெரி வெல்.வாட் ஹாப்ப‌ண்ட் டு ஹிம். ஐ யாம் ஏபிள் டு ஹிய‌ர் ஒன்லி "தொம் தொம்" ச‌வுண்ட்ஸ்". திஸ் இஸ் அப்ஸர்டு.என்னடா என்ன ஆச்சு இவனுக்குனு பாக்குறீங்களா.பாட்டு பூரா இப்ப‌டித்தான் பீட்ட‌ர் பீய்ச்சி அடிக்குது. விஜய், முத்துக்குமார் பட்டய கிளப்பிட்டு இருக்காரு கவனிச்சீங்களா? அர்னால்ட் ப‌ட‌த்துக்கா பாட்டு எழுதுறீங்க.அப்ப‌டியே எழுதுனாலும்,அத‌ எப்ப‌டி ர‌சிக்க‌ வைக்கிற‌துன்னு ஏ.ஆர். ர‌ஹ்மான்கிட்ட‌ ட்யூஷ‌ன் போங்க‌. அப்புற‌ம் ஒரு மேட்ட‌ர் சதீஷ், நாங்க‌ "கிஸ்ம‌த் க‌னெக்ஷ‌ன்" ஹிந்தி ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ "Move your body now..Shake your body now" பாட்டு கேட்டுருக்கோம். இடையில மட்டும் சொருகினா க‌ண்டுபுடிக்க‌ முடியாதுன்னு நினைச்சீங்க‌ளா ? நாங்கெல்லாம் ம‌துரைக்கார‌ங்க‌...ஆங் !!

உன்னைப் பார்த்த‌ பின்பு இந்த‌ பாட்டு நான் கேக்க‌ல‌, கேக்க‌ விரும்ப‌ல‌, கேக்க‌வும் மாட்டேன். எங்க‌ அப்ப‌த்தா சொல்லிருக்கு, "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு ப‌த‌ம்".விஷுவல் ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்தாதான் பாட்டு எல்லா பாட்டுமே தேறும்.

ஜில்லென்று பாட்டுக்கு 1 மார்க், மொத்த‌ம் 3/5. எப்ப‌டின்னு கேக்குறீங்க‌ளா ?
ஹீரோயினி ந‌ல்லா இருக்குற‌ மாதிரி இருக்குது, அவுங்க‌ளுக்காக ஒரு மார்க். க‌டைசி பாட்டு நான் கேக்க‌ல‌, அதுனால‌ அதுக்கு கிரேஸ் மார்க் "1".

"லீலை" பாட்டுக்கு என்னோட‌ லிஸ்ட்ல‌ இட‌ம் இல்லை.


எவனோ ஒருத்தன் லீலை சாங்ஸ் ஆர் குட்"னு நிலைமைத் தகவல்( அதாங்க ஸ்டேட்டஸ் மெசேஜ்) வச்சா..உனக்கு எங்கடா போச்சு புத்தி. பீ கேர்ஃபுல். ம்ம்ம்ம்... என்னைச் சொன்னேன். :(


டிஸ்கி : இது என்னோட‌ க‌ருத்துதான். யாராவ‌து கோவ‌ப்பட்டா வழக்கம் போல..க‌ம்பேனி பொறுப்பாகாது.

Friday, December 4, 2009

(((400/2)-(150/2))/5)* 2 = 50 வது இடுகை :)


ஐம்பதாவது இடுகை

திவு ஆரம்பிச்சு ரெண்டு வருசமாச்சு.ஆனா தொடர்ந்து எழுதுனது என்னமோ 2009ல இருந்துதான். தமிழிஷ்ல இணைச்சதுக்கு அப்புறமாதான் நிறைய பேரு படிக்க ஆரம்பிச்சாங்க. பாராட்டி வந்த பின்னூட்டங்கள், அசிங்கமா திட்டி வந்த மெயில்கள், இதெல்லாம் தாண்டி ஒரு வழியா 50 இடுகை எழுதியாச்சு.50 இடுகையெல்லாம் ஒரு மேட்டரான்னு கேக்காதீங்க, எனக்கு இது பெரிய விஷயம்தான்...இப்போதைக்கு.

டையில.. ஜோ அண்ணனும்,ஜெகநாதன் அண்ணனும் சுவாரஸ்ய பதிவர் விருது வேற குடுத்துட்டாங்க. அத இது வரைக்கும் நான் என்னோட பதிவுல போடல. 50 ஆவது இடுகை போடுறப்போ சொல்லணும்னு வச்சிருந்தேன். சொல்லிட்டேன். ஜெகநாதன் அண்ணன் நான் எழுதுன ரெண்டு இடுகைகாகத்தான் எனக்கு அந்த விருது குடுத்துருக்காருன்னு நினைக்கிறேன்.

அதுல எனக்கு புடிச்சது

இது


ரெண்டு இடுகையில நான் அவரை இம்ப்ரெஸ் பண்ணுனது சந்தோசமா இருந்துச்சு.


ஜோ அண்ணன் பின்னூட்டத்தில பேச ஆரம்பிச்சு, ஃபோன்ல பேசி, அப்புறம் நேர்ல பார்த்து. இன்னைக்கு என்னோட நெருங்கிய நண்பர் ஆகிட்டாரு. நாங்க ரெண்டு பேரு மட்டும் இருந்த பதிவர் சந்திப்பு ஏராளம். அலைச்சலை யோசிக்காம, வயசானவரா (எப்பூடி !!) இருந்தாலும் எலக்ட்ரானிக் சிட்டில இருந்து, கஸ்தூரி நகர் வரைக்கும் வருவாரு. என் நட்பு வட்டாரத்துக்கும் இவரு இப்போ ரொம்ப பரிச்சயம் ஆயிட்டாரு. இப்படியே நிறைய எழுதணும்னு ஆசையா இருக்கு. எழுதுவேன்னு நினைக்கிறேன் :)

னக்கு ஆதரவு குடுங்க, ஓட்டுப்போடுங்க‍ன்னு இது வரைக்கும் நான் கேட்டது இல்ல.இனிமேலும் கேக்கமாட்டேன். கேக்காமத்தான் எல்லாம் கிடைச்சிருக்கு. அத வச்சுதான் நான் என்ன திருத்திக்க முடியுது. ஃபாலோயர்ஸ் கூடணும்னு எண்ணம் இல்ல. இருக்குறவுங்க குறையாம பாத்துக்கிட்டாலே போதும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இன்னும் சின்ன பையன் தான் :)

ங்க வாழ்த்து மட்டும் இல்ல..வசவும்கூட என்ன எழுதத்தான் தூண்டும்.

நான் எழுதுனதுல, எனக்கு புடிச்சது உங்களுக்காக..

இங்கே

நன்றி !!

‍சமரன்.

Thursday, December 3, 2009

எப்படி நம்ம இடுகைய பாப்புலர் ஆக்குறது ?

இன்னைக்கு நம்ம பாக்கப் போற தலைப்பு " எப்படி நம்ம இடுகைய பாப்புலர் ஆக்குறது"ன்னு. இதுக்கு நான் 5 வழி வச்சிருக்கேன்.

மு.கு : எனக்கு தோணுறத மட்டும் தான் நான் எழுதுறேன். இதே மாதிரி வேற யாராவது இதுக்கு முன்னாடி எழுதி இருக்காங்களான்னு, நான் செக் பண்ணலை. அப்படி ஏதாவது இருந்துச்சுன்னா, அதுக்கு கம்பேனி எந்த விதத்துலயும் பருப்பாகாது..சீ..பொறுப்பாகாது.

பேக் டூ த டாபிக்...

1) நீங்க விஜய் ரசிகரா இருந்தா, அஜித்த பத்தி திட்டி எழுதுங்க. அஜித் ரசிகரா இருந்தா, விஜய பத்தி திட்டி எழுதுங்க. ரெண்டு பேரையுமே உங்களுக்கு புடிக்காதா ? நோ பிராப்ளம். தமிழ் சினிமா உலகத்தரத்துல இல்லன்னு சொல்லி ஒரு பதிவு போடுங்க. அந்த கருத்துல உங்களுக்கு ஒப்புதல் இல்லன்னா தமிழ் சினிமா உலகத் தரத்துல இருக்குன்னு ஒரு பதிவு போடுங்க.


2) ஒரு வேளை உங்களுக்கு சினிமாவே புடிக்காம இருந்துச்சுன்னா ? டோன்ட் வொர்ரி. இருக்கவே இருக்குறாரு கலைஞர். குடும்ப அரசியல பத்தி கிழி கிழின்னு கிழிங்க. நம்ம முதல்மந்திரியா இருந்தா, நம்ம குடும்பத்துக்கு எதுவுமே செய்ய மாட்டோம் பாருங்க (!). கலைஞரை பத்தி திட்டி எழுத உங்களுக்கு மனசு வரலைன்னா, இருக்கவே இருக்காங்க ஜெயலலிதா, ராமதாஸ்,வைகோ, விஜயகாந்த். கமான் ... ஸ்டார்ட் மீஸிக் !!


3) உங்களுக்கு அரசியல் புடிக்கலன்னா ? ஒரு காதல் கதை எழுதுங்க. அதுல முக்கியமா, அந்த பொண்ணோட கண்ண பத்தி சொல்றீங்களோ இல்லையோ, இடுப்பு, மார்பு, வளைவு இது மாதிரி வார்த்தையெல்லாம் யூஸ் பண்ணிக்கோங்க.ஆங் .. அப்புறம் அந்த பொண்ணு ஐ.டி ல இருந்தா இன்னும் உசிதம்.


4)காதல் புடிக்காத கர்மவீரரா நீங்க ? ஒழுங்கா, நல்லா எழுதிட்டு இருக்குற பிரபல பதிவர் யாரயாவது பத்தி குறை சொல்லி எழுதுங்க. அவரு என்னா எழுதுறாருன்னு அவருக்கு இவ்ளோ ஃபாலோயர்ஸ்னு ஒரு கேள்வி கேளுங்க. திட்டுறதுக்காகவாது ஒரு பத்து பேரு வரமாட்டாங்களா என்ன ?


5)
.
.
.
.
.
.
.
.
.
.
ஹலோ.. அந்த அஞ்சாவது வழியைத்தான் நான் ட்ரை பண்ணிகிட்டு இருக்கேன். வொர்க் அவுட் ஆச்சுன்னா சொல்றேன். போயி புள்ளகளை படிக்க வைங்க.
பி.கு : இது யாரயும் புண்படுத்தணும்னு எழுதல. சும்மா ஜாலிக்காகத்தான் எழுதிருக்கேன். இதப் பாத்து யாராவது கோவப்பட்டா அவுங்களுக்கு நான் ஒண்ணு சொல்லிக்க விரும்புறேன்.

" நாங்க சும்மா ஓடுனாலே வேகமா ஒடுவோம். அதுவும் பயந்து ஓடுனோம்னு வைங்க...ஹும்..உங்களாலயெல்லாம் ஈடு குடுக்க முடியாது."

ஜெனி யாரு ?

மனைவி கணவனை சப்பாத்திக் கட்டையால் அப்புகிறாள் (!)

கணவன் :ஏண்டி அடிக்கிற?

மனைவி :உன் பாக்கெட்ல ஒரு பேப்பர் இருக்கு. அதுல 'ஜெனி'ன்னு ஒரு பேரு எழுதிருக்கு.எவ அவ ?


கணவன் :சனியனே..போன வாரம் குதிரை ரேஸ் போயிருந்தேன்.அது நான் பெட் கட்டின குதிரையோட பேரு

2 நாட்கள் கழித்து...

மீண்டும் அதே சப்பாத்திக் கட்டை அப்பு...

கணவன் : இப்ப ஏண்டி அடிச்ச ?

மனைவி : ம்ம்ம்...உன் குதிரை போன்ல பேசுது. லைன்லதான் இருக்கு வா.தியாகி 1:பொண்ணுங்க மட்டும் எப்படி மச்சி நிம்மதியா,சந்தோசமா இருக்காங்க ?

தியாகி 2:சப்ப மேட்டர்டா..இது கூடவா தெரியல..அவுங்களுக்கு எல்லாம் பொண்டாட்டி கிடையாது மச்சி.


பி.கு : இது எனக்கு மின்னஞ்சலில் வந்தது.

Wednesday, December 2, 2009

விப‌த்தும்..ம‌ன‌தின் விச‌ன‌மும்

இத எப்படி இத்தன நாளா எழுத விட்டேன்னு தெரியல. இப்போதான் ஞாபகம் வந்துச்சு.2004 டிசம்பர்னு நினைக்கிறேன். சனி,ஞாயிறு லீவுக்கு வீட்டுக்கு வந்திருந்தேன். படிக்கும் போதே வேலை கிடைச்ச சந்தோசம், அப்போதான் வானத்துல இருந்து கொஞ்சமா கீழ இறங்கிருந்தேன்.

நானும் அப்பாவும், காலையில கேஸ் சிலிண்டர் மாத்துறதுக்காக எங்க டி.வி.எஸ் சாம்ப்ல போயிட்டு இருந்தோம். எங்க வீடு என்.ஹெச். ரோட்டுக்கு பக்கத்துல இருக்கு. எங்க அப்பாகூட வண்டியில போறப்போ, ரோட்டுல ஏறவே கூடாது, "மண்லயே போ, சர்ரு புர்ருன்னு வருவாங்க"னு சொல்லிட்டே இருப்பாரு. அவரு ரோடு டேக்ஸ் கட்டுறதே வேஸ்ட்னு எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்க.அன்னிக்கும் அதே மாதிரி தான். மண்லயேதான் வண்டி போயிட்டு இருந்தது.

ரோட்டுக்கு எதிர்பக்கம் தொழிற்பேட்டை.ஒரு 10,15 போலீஸ்காரங்க இருந்தாங்க. முந்தின நாள் நடந்த கொலைக்கு ஏதோ விசாரணை நடந்துகிட்டு இருந்துச்சு. நாங்க கிராஸ் பண்ணி போறத, அங்க இருந்த போலீஸ்காரங்களும் பாத்தாங்க.அப்போதான் எதிர்க்க ஒரு சுமோ, ரோட்டுல இருந்து மண்ண நோக்கி, பேய் மாதிரி வந்தான்.எனக்கு ஒரு நிமிசம் அல்லு இல்ல.சுமோ டயருக்கு கீழ ஒரு 8 வய்சு பையன்.அவன அடிச்சு இழுத்துட்டு வருது. சுமோ எங்க மேல மோதிரக் கூடாதுன்னு நான் வண்டிய வளைக்க,அது ஸ்லிப் ஆயிடுச்சு.அப்பாவை கீழ விழாம, புடிச்சதுல, சிலிண்டர் சாய்ஞ்சு, வண்டியோட கீழ விழுந்துட்டோம்.

என் பக்கத்துல சுமோக்கு அடியில கிடந்த அந்த பையன்.சுமோ காரன் ரிவர்ஸ் எடுத்துட்டு முன்னாடி போகப்பாத்தான். எனக்கு என்ன தோணுச்சுனு தெரியல, டிரைவரை இருக்குற கெட்ட வார்த்தலையெல்லாம், திட்டிகிட்டு, டிரைவர அடிக்கவும், வண்டி வேகமெடுக்கவும் சரியா இருந்துச்சு.புடிக்க முடியல. ஆத்திரம், இயலாமை எல்லாம் சேர்ந்து ஒரு மாதிரி ஆயிடுச்சு.

அப்பா கத்துனாங்க "அவன ஏண்டா விரட்டுற. பையனப் பாருடா.சீக்கிரம் தூக்கு"ன்னாங்க. அப்பாவுக்கு ஒரு கை உடைஞ்சிருந்ததால தூக்க முடியல.அந்த பையனோட பாதம் , அவன் தலை கிட்ட மடங்கி இருந்துச்சு. இரத்த வெள்ளம்னு சொல்லுவோமே, அதப் பாத்தேன். கிட்ட போக முடியல. மயக்கம் வந்துருச்சு.அப்பா உடனே "ஒண்ணும் இல்ல .தூக்கு..பயப்படாத"னு சொன்னாலும் என்னால முடியல. அப்பா கண்ட்ரோல் ரூமுக்கு அடிச்சு விஷயத்த சொல்லி, ஆம்புலன்சை வர சொல்லிட்டாரு. நான் வண்டி நம்பர், எத்தன பேரு இருந்தாங்கங்கிறத சொன்னேன்.

அதுக்குள்ள, எதுக்க இருந்த போலீஸ்காரங்க எல்லாம் வந்துட்டாங்க " என்னங்கய்யா ஆச்சு..தம்பி உங்களுக்கு ஓண்ணும் இல்லலை"னு கேட்டாங்க.
"அண்ணே, நீங்க வண்டிய புடிங்க, தே.மகன் அடிச்சிட்டு போயிட்டான்"னு அப்பா இருக்குறது கூட தெரியாம வார்த்தை வருது. அப்பா "ரகு நீ அவன விரட்டு, நான் செக்போஸ்டுக்கு சொல்லிட்டேன்"ன்னு சொன்னாங்க. அப்போ ரகு அவரோட வண்டிய எடுத்துட்டு போன வேகத்துல எனக்கு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. எப்படியும் புடிச்சிருவாங்கன்னு.(அப்பா க்ரைம் ப்ராஞ்ச்ல இன்ஸபெக்டரா இருக்காங்க)

அந்த‌ வ‌ழியா வ‌ந்த‌ ஒரு கார்ல‌, பைய‌ன‌ போலீஸ்கார‌ங்க‌ சேர்ந்து ஏத்திகிட்டு கூட‌ போயிட்டாங்க‌. காப்பாத்திருவாங்க‌ன்னு ந‌ம்பிக்கை இருந்துச்சு.இதெல்லாமே அஞ்சு நிமிச‌த்துல‌ ந‌ட‌ந்து முடிஞ்சிருச்சு.ஒரு இருவ‌து நிமிச‌ம் க‌ழிச்சு, அதே சுமோ திருப்பி வ‌ந்துச்சு, புடிச்சிட்டாங்க‌ன்னு அப்பா சொன்னாங்க‌. வ‌ண்டி வ‌ந்து எங்க‌ ப‌க்க‌த்துல‌ நின்ன‌ உட‌னே "நான் டிரைவ‌ர் ஸீட்ல‌ உக்காந்திருந்த‌வ‌னை மூஞ்சில‌ குத்திட்டேன். "ங்கொம்மால‌..அடிச்சிட்டு,வ‌ண்டிய‌ நிப்பாட்டாம‌ போறியா"ன்னு. அப்பா " டேய் அவ‌ன் போலீஸ்கார‌ன்டா"ன்னு சொல்றப்போதான் என‌க்கு புரிஞ்ச‌து. புடிச்ச‌துக்கு அப்புறம் எப்ப‌டி அவ‌னை வ‌ண்டி ஓட்ட‌ விடுவாங்க‌ன்னு. பின்னாடி ரெண்டு பி.சி. க்கு ந‌டுவுல‌ அவ‌ன் உக்காந்திருந்தான். "அண்ணே..மொத்த‌ம் நாலு பேரு இருந்தாங்க‌ன்னே"ன்னு சொன்னேன். "இல்ல தம்பி..அவிங்க எஸ் ஆயிட்டாங்க..வண்டிய மட்டும்தான் மடக்க முடிஞ்சது"ன்னு சொன்னாங்க. வண்டிய ஸ்டேஷனுக்கு கொண்டு போயிட்டாங்க.

அப்பாவும் நானும் ஸ்டேஷனுக்கு போனோம்."நீ ஸ்டேஷனுக்குள்ள வராத, வண்டிக்கு பெட்ரோல் போட்டுட்டு வா"ன்னு சொல்லிட்டாங்க. எனக்கு அவன ஒரு அடி கூட அடிக்க முடியலயேன்னு ஆத்திரம். பெட்ரோல் போட்டுட்டு வந்த உடனே, "உள்ள இருக்கான், அந்த ஜன்னல் வழி பாரு"ன்னு அப்பா சொன்னாங்க. ஜன்னல் வழி கைய விட்டு அவனை அடிச்சேன். அப்போ அங்க இருந்த ஒரு ஏட்டு "தம்பி..ஒண்ணும் இல்ல..புடிச்சிசாச்சுல்ல"னு சொன்னாரு.

இதெல்லாம் முடிஞ்சு, நாங்க கிளம்பும் போதுதான் ஆம்புலன்ஸ் வந்துச்சு. "அப்பா..எப்படியும் உள்ள வச்சிருவாங்கள்ல..ஹிட் அண்டு ரன் கேஸ்..விட மாட்டாங்கள்ல பா"ன்னு கேட்டேன். இன்னிக்கு சாயங்காலம் வெளிய வந்துருவான்டா. பத்தாயிரமோ, இருவதாயிரமோ குடுத்துட்டு வந்துருவான்டா"ன்னு சொன்னாங்க. என்னால ஏத்துக்கு முடியல. "அப்பா நீங்க டிபார்ட்மெண்ட் ஆளு, பாத்துருக்கோம், கூட இருந்துருக்கோம்..அப்புறம் அப்படி"ன்னு கேட்டதுக்கு. "பையன் பொழச்சா சந்தோசம்"னு சொல்லிட்டு வீட்டுக்கு போன்னு சொல்லிட்டாங்க.

வீட்டுக்கு வ‌ந்த‌ உட‌னே ப‌டுத்துட்டேன். செம‌ த‌லைவ‌லி. அப்பா அம்மாகிட்ட‌ சொல்லிட்டு இருந்தாங்க‌. "இவ‌ன‌ இதுக்கா ப‌டிக்க‌ வ‌ச்சோம். இவ்ளோ கோவ‌ம் வ‌ருது.காட்டுப்ப‌ய‌ மாதிரி கத்துறான்.அடிக்க‌ போறான். ச‌ங்க‌ட‌மா இருக்கு. பைய‌ன‌ பாக்காம‌, அடிச்ச‌வ‌னை விர‌ட்டிட்டு போறான்."

சாய‌ங்கால‌ம் அப்பாகிட்ட‌ கேட்டேன் " பையான் பொழ‌ச்சிட்டானாப்பா ? சின்ன‌ பைய‌ன் பா". அதுக்கு அப்பாவோட‌ ப‌தில் "இன்னிக்கு நான் கூட‌ இருந்தேன், உன்ன‌ய‌ எல்லாருக்கும் தெரியும். கோவ‌த்த‌ காமிச்ச‌, கையெழுத்து போடுறேன்னு சொன்ன‌. வேற‌ ஊருல‌ இது மாதிரி ந‌ட‌ந்துச்சுன்னா, த‌னியா இப்ப‌டி எல்லாம் ப‌ண்ணாத‌. அடிப‌ட்ட‌வுங்க‌ள‌ ம‌ட்டும் காப்பாத்த‌ பாரு. அதுக்கே நீ எத்தன‌ கையுழுத்து போட‌ணும், எவ்ளோ அலைய‌ணும் தெரியுமா. தாங்க‌ மாட்ட‌டா, என்னால‌யும் நீ அப்ப‌டி அலையுற‌த‌ பாக்க‌முடியாது"ன்னு சொன்னாங்க‌.

ச‌ம்ப‌ந்த‌ம் இல்லாம‌ அப்பா பேசுற‌ப்போவே தெரிஞ்ச‌து பைய‌ன் இல்ல‌ன்னு. டிபார்ட்மெண்ட்ல‌ இருந்தே இவ்ளோதான் செய்ய‌ முடியும்னு நினைக்கும் போது க‌ஷ்ட‌மா இருந்த‌து. இன்னும் இருக்குது.

"அவன் இவன் இல்லடா..ங்கொய்யால யுவன் டா"

இன்னிக்குதான் "பையா" பாட்டு கேட்டேன்.

என் காதல் சொல்ல நேரமில்லை பாட்டு அட்டகாசம். இந்த ஒரு பாட்டு போதும், "அவன் இவன் இல்லடா..ங்கொய்யால யுவன் டா"ன்னு சொல்லாம சொல்றாரு. வரிகளும் சரி, அதுக்கு இசையமைச்ச விதமும் சரி, வழக்கம் போல யுவன் வயித்துல இருந்து பாடுறதுலயும் சரி..அள்றாரு. அவரு "உன் அழகாலே"ன்னு இழுக்குறப்போ, உள்ளுக்குள்ள உடைஞ்சு உருகுது. யப்ப்ப்பா !!

அடடா மழைடா" பாட்டும் நல்லாத்தான் இருக்கு. அக்மார்க் யுவன் பாட்டு.எனக்கு இந்த பாட்டு முதல் தடவை கேக்கும் போது, ஏதோ விஷால்க்கு எழுதுன மாதிரி இருந்துச்சு. சண்டைக்கோழி படத்துல வர்ற பாட்டு மாதிரி இருந்துச்சு.லிங்குசாமி ரொம்ப பாட்டு விஷயத்துல ரொம்ப ஈஸியா காம்ப்ரமைஸ் ஆயிருவாருன்னு நினைக்கிறேன். திரைக்கதைக்கு மெனக்கெடுற அளவுக்கு பாட்டுக்கு மெனக்கெடுறதில்ல. ஆனா ஒண்ணு ரெண்டு பாட்டு எப்படியும் நல்லா அமைஞ்சிருது.

பூங்காற்று..பூங்காற்று பாட்டு ஏதோ பாறைப் பாடல்(அதாங்க..ROCK SONG)மாதிரி ஆரம்பிக்குது. கேக்கும் போதே, டிராவல் பண்றமாதிரிதான் இந்த பாட்டு படத்துல வரும்னு யூகிக்க முடியுது. விஷுவல் நல்லா இருந்தா, சன் ம்யூசிக்ல ஒரு நாளைக்கு இருவது வாட்டி இந்த பாட்ட பாக்க முடியும் (!).பென்னி தயாள் வழக்கம் போல நல்லா பாடிருக்காரு.மத்தபடி பெருசா ஒண்ணும் இல்ல.


துளி துளி பாட்டுல ஆரம்பத்துல வ்ர்ற‌ கிடார் இசை சூப்ப‌ர்.ஆனா வ‌ரிக‌ள் ஆர‌ம்பிக்கும் போது எங்கேயோ கேட்ட‌ மாதிரி இருக்குது. எல்லா பாட்டுமே,காத‌லிக்காக‌ பாடுற‌ மாதிரி இருக்கு. "செல் செல் அவ‌ளுட‌ன் செல்"ங்கிற‌ வ‌ரி சூப்ப‌ரா இருக்கு.

சுத்துதே..சுத்துதே என‌க்கு சுத்தமா புடிக்க‌ல‌.அஞ்சு பாட்டுமே கார்த்தி ..த‌ம‌ன்னாவை பாத்து பாடுற‌ மாதிரி இருக்குது. தேவை இல்லாத‌ இட‌த்துல‌ பாட்டு போட்டாங்க‌ன்னா, ப‌ட‌ம் புஸ்வான‌மாயுரும்.ஏன்னா எல்லாமே காத‌ல் பாட்டா இருக்கு.

கார்த்தி ‍ ந‌டிச்சு ந‌டிச்சு, ப‌ட‌த்த‌யெல்லாம் பெட்டில‌ போட்டு ப‌த்திர‌மா பூட்டி வைக்காம‌ ரிலீஸ் ப‌ண்ணுங்க‌. லிங்குசாமி சார், பாத்து செய்யுங்க‌.

ம‌த்த‌ பாட்டுக்கு எல்லாம் சேர்த்து 1.5 மார்க், "என் காத‌ல் சொல்ல‌" பாட்டுக்கு மட்டும் 2.5 மார்க் :) 4/5 .இன்னும் ஒரு மாச‌த்துக்கு "என் காத‌ல் சொல்ல‌" பாட்ட‌ போட்டு தேய்ச்சுர‌ வேண்டிய‌துதான் :)

Friday, November 27, 2009

சிகப்பு சட்டை மேல ஏறு !!

ஹாஸ்டல்ல, ஒரு நாளு செம மொக்கயா இருந்துச்சு. என்ன பண்றதுன்னு மல்லாக்க படுத்து யோசிச்சிட்டிருந்தப்போ, ரமேஷ் வந்தான்.

"மாப்ள பெரியார் வரைக்கும் போயிட்டு வருவோமாடா..கொஞ்சம் புக்ஸ் வாங்க வேண்டியது இருக்கு"

"உனக்கு எப்போ பாத்தாலும் இதே விளையாட்டாப் போச்சு. ங்கொய்யால சரக்கடிக்கணும்னா, இந்தா இருக்கு பக்கத்துலயே டாஸ்மாக்.இதுக்கு பெரியார் வரைக்கும் போகணுமா, கூடவே புக் வாங்கணும்னு காரணம் வேற".

"இல்லடா...ஊர்ல மாப்ள ஒருத்தன் கேட்டுருக்கான்டா. வா போயிட்டு வருவோம்"

"சரி.. அப்போ நைட்டு புரோட்டா, வாங்கித்தருவியா ? சங்கிலி வரலயா ?"

"அவன கூப்பிட்டேன், அவன் கிழவன கூப்பிடப் போயிருக்கான்."

ஒரு வழியா நாலு பேரும் கெளம்பியாச்சு. கிழவன் , எரும சாணிய மூஞ்சீல அப்புன மாதிரி வந்துட்டிருந்தான். இது மாதிரி ஏதாவது ரியாக்ஷன் குடுத்தாலே, அடுத்து ஏதோ மொக்க போடப் போறான்னு அர்த்தம். சங்கிலியும் நானும் எதுவுமே கேக்கல. ரமேஷ் மட்டும், அவன போட்டு நோண்டிகிட்டே வந்தான்.

பஸ்சை விட்டு இறங்கி நேதாஜி ரோட்டுல நடக்க ஆரம்பிச்சாச்சு.ரமேஷோட அனத்தல் தாங்க முடியாம, கிழவன் பேச ஆரம்பிச்சான்.

"இந்தா போறான் பாரு, இந்த வெண்ணை (சங்கிலி), சரியான பவுண்டு வாயன்டா. போன வாரம் இவன ஊருக்கு கூட்டிட்டு போயிருந்தேன்டா.வீட்டு வாசல்ல எங்க டிராவல்ஸ் வேன் நின்னுகிட்டு இருந்துச்சு. அதப்பாத்துட்டு இந்த மு.கூ. , "என்னடா அவன் அவன் வீட்டுல காருதான் இருக்கும், நீங்க வேன்லாம் வச்சிருக்கீங்கனு வாயப் பொளந்தான்.""

"சரி இப்போ அதுக்கு என்னடா" இது ரமேஷ்.

"எங்க வீட்டுல அந்த வேனை வித்துட்டாங்கடா. ஏதோ காசு பிரச்சினையாம் " கிழவன்

"அதான் அவ்ளோ பெரிய வீடு வச்சிருக்கீங்கள்ல, ரெண்டு மாடி கட்டு..அப்புறம் என்ன..போடா..ஒரு வேனுக்கு போயி ஓவரா பேசிகிட்டு" இது சங்கிலி.

"ங்கொய்யால சாவடிச்சிருவேன் டா. நானே நொந்து போயி இருக்கேன். வேன் போனது பத்தாதுனு , வீடு மேல வேற கண்ணு வக்கிறியா..உனக்கு நக்கலா இருக்கு என்ன‌ ??" கிழவன்.

உடனே ரமேஷ் ஆரம்பிச்சிட்டான். " இப்போ என்ன பிரச்சினை உனக்கு, எதுக்கு இவ்ளோ கோவப்படுற"

"இல்ல ரமேசு, முன்னாடி மாதிரி எல்லாம் இல்லடா. ஜோசியர் வேற நேரம் சரியில்லைனு சொல்லிருக்காரு. உனக்கே தெரியும்ல எவ்ளோ கஷ்டப்படுறேன்னு. கையில காசே நிக்க மாட்டேங்குதுடா"

"ஒரு சேரை போடு உக்கார வைய்யி" ரமேஷ்

"உன்கிட்ட எல்லாம் மனுசன் பேச முடியுமா? "

"அப்ப பாடு" இதுவும் ரமேஷ்.

ரமேஷ் ஃபார்முக்கு வந்துட்டான், இனி நல்லா பொழுது போகும்னு முடிவாயிருச்சு.

"நீ கூப்பிட்ட உடனே வந்தேன் பாரு..என்ன செருப்பால அடிக்கணும்டா" கிழவன், நேதாஜி ரோடுனு கூட பாக்காம பேய் மாதிரி கத்துறான்.

"கூப்பிடாம இருந்தா, என்னயக் கூப்பிடவே இல்லைல,உன் கூட பழகுனதுக்கு என்ன செருப்பால அடிக்கணம்னு சொல்லுவ. ஆக மொத்தம் உன்ன நீயே செருப்பால அடிச்சிக்கணும் என்ன ??".


"டேய் .. அந்த நாலு பேரு காலேஜ் பயலுவ, ரோட்டுல நடக்காத, ப்ளாட்ஃபார்ம்ல ஏறு." பின்னாடி மைக்ல டிராபிக் போலீஸ் குரல்.

"டேய் நம்மளத் தான்டா சொல்றான், மேல ஏறுடா"னு சொன்னேன். ரமேஷும், கெழவனும் மேல ஏறிட்டாங்க. சங்கிலி மேல ஏறாம, காலரை தூக்கி விட்டுட்டு, ரோட்டு மேல வந்துட்டு இருந்தான்.

"டேய் நீ ஏறலையா.."னு கேட்டதுக்கு என்னய நக்கலா ஒரு பார்வை பாத்துட்டு , அவன் பாட்டுக்கு போயிட்டு இருந்தான்.

"ஏ..சிகப்பு சட்டை, மேல ஏறு, ஒரு வாட்டி சொன்னா தெரியாதா"னு மறுபடியும் சவுண்டு.


"மாப்ள உன்னத்தான்டா சொல்றான்..ப்ளாட்ஃபார்ம்ல ஏறிடு.வந்தான்னா சுளுக்கெடுத்துருவான் டா"ன்னு சொன்னேன்.


"லூசாடா நீ, சவுண்டு பின்னாடி இருந்து வருது , எதுக்குடா இப்படி பயந்து சாகுற"னு சங்கிலி சொல்லி முடிக்கல, முன்னாடி, பொன்னம்பலம் சைசுல ஒரு ஏட்டு நிக்கிறாரு. என்னடா சவுண்டு பின்னாடி வந்துச்சு, இவரு முன்னாடி வந்து நிக்கிறாருனு பாத்தா. பின்னாடி இருந்தது ஸ்பீக்கர் மட்டும் தான். இவரு எங்களுக்கு முன்னால தான் மைக்ல பேசிட்டு இருந்துருக்காரு. ஒரு நிமிசம் சங்கிலிக்கு வெளிறிப்போச்சு.

"ஏண்டா, காட்டுக்கத்து கத்துறேன், கேக்கலியா" இது பொன்னம்பலம்.

சங்கிலி கெத்த விட்டுக் கொடுக்காம , வழக்கமான் ஸ்டைல்ல , காலரைத் தூக்கி விட்டுட்டு, "கேக்கல"னு சொன்னான்.

"பொளேர்"னு காதோட ஒண்ணு விழுந்துச்சு பாருங்க, இப்போ நினைச்சு பாத்தாலும், எனக்கு காது ங்கொய்ங்குது.

"இப்போ கேக்குதா"னு கேட்டாரு போலீஸ்.

"கேக்குது"னு சொன்னான் சங்கிலி.

"மேல ஏறுடா"னு சொல்லிட்டு அவரு பாட்டுக்கு போயிட்டாரு.

அதுக்கப்புறம் புக்கும் வாங்கல, கிழவன் வேனைப் பத்தியும் பேசலை.என்ன....அன்னிக்கு நைட்டு, நாங்க ஊறுகாய் வாங்கலை !!!

மாவீரர் தின வணக்கம் !!

போரும் வீரமும் தமிழர் மரபடா
புரட்சி புலிப்படை புயலென வருமடா
மானம் உயிரினும் பெரிதென நினைத்து
வெஞ்சமர் புரிவோம் சிங்களர் எதிர்த்து
ஈழம் வெல்வோம் இலங்கையை மிதித்து

போராளிகள் அனைவருக்கும் மாவீரர் தின வீர வணக்கம் !!

பி.கு : இது எனக்கு குறுந்தகவலில் வந்தது.

மாவீரன் பிரபாகரன் !!

இதப் பத்தி எழுதவே கூடாதுனு நினைச்சேன். இப்ப எழுதாம எப்ப எழுதப்போறோம்னு தோணுச்சு. அதான் எழுதுறேன்.

முன்னாடி இந்த விஷயத்துக்கு நம்ம கொடுத்த முக்கியத்துவம் இப்போ குறைஞ்சிருக்குனு தான் சொல்லணும். தப்பில்லை. அது வழக்கமா நம்ம செய்யுறதுதான். பிரபாகரன் இருக்காரா இல்லையான்னு விவாதம் நடத்துறத விட்டுட்டு, இப்படி ஒரு தலைவன் இருந்தும், ஏன் இந்த நிலைமை ஆச்சுனு யோசிச்சிப் பாக்குறேன். ஒரு இனத்துக்காக போராடுற தலைவன், எதிரியோட மட்டும் போராடுனா, அவனது இன உணர்வு அவனுக்கு கண்டிப்பா வெற்றி தேடி தரும்.ஆனா இனத்துக்கான ஒரு இயக்கம் (கவனிக்க..இயக்கம்) சர்வதேச அரசியல் விளையாட்டுனால, சில நாடுகளை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் இந்த அளவுக்கு போராட்டம் வலுவா இருந்தது அப்படிங்கிறது பெரிய விஷயம். இந்த பக்கம் இந்தியா..அந்த பக்கம் சீனாக்காரன், எல்லாத்தையும் தாண்டிதான் கூடவே முத்தாய்ப்பா..ஒரு அருமையான, அக்மார்க் இனவெறி சொறி நாய் அரசியல்.இதை எல்லாம் சமாளிக்க நமக்கு ஒருத்தர் கிடைச்சதுக்கு நம்ம பெருமைப் பட்டுக்கலாம். ஆனா வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னான்னா..இவ்ளோ இருந்தும் இன்னைக்கு இந்த பிரச்சினை ஒரு ஆணித்தரமான முடிவு இல்லாம வெறும் விவாதமாத் தான் போயிட்டு இருக்கு.

இதுல அரசியல் தீர்வுதான் சரி, அப்படின்னு ஒரு பக்கம் பேச்சு. அரசியல் தீர்வு கிடைச்சா ரெண்டு இனமும் ஒரே நாடா சேர்ந்தே வாழலாம்னு ஒரு கணிப்பு. ஒரு இனம் சாகுறதுக்கு இன்னொருத்தன் இனிப்பு கொடுக்குற இடத்துல எப்படி சேர்ந்து இருக்கு முடியும். இருக்கலாம் .. முதுகெலும்பு இல்லாம இருக்கலாம். அப்படி இருக்கக் கூடாதுங்கிறதுனால தான சண்டையே ஆரம்பிச்சது.அட அவன் இனிப்பு கொடுக்குறத விடுங்க..இங்க பக்கத்து ஊர்க்காரனே பார்ட்டி கேக்குறான்.

ஏதோ மீடியா புண்ணியத்தால நிறைய விஷயம் தெரிய வந்தது.கடந்த ஒரு வருஷத்துக்குள்ளதான் இப்போ இருக்குற இளைய த(மிழ்)லைமுறைல நிறைய பேரு ,பிரபாகரன் செய்யுறது சரின்னு ஏத்துக்கிட்டு இருப்பாங்கனு நான் நினைக்கிறேன். நம்ம இன்னும் இறையாண்மைக்கும், இன உணர்வுக்கும் இருக்குற வித்தியாசத்தயே புரிஞ்சிக்கல. அமெரிக்காக் காரன் விசாரிக்கிறான், ஆ ஊன்னு பேச்சு இருந்துச்சு. கடைசில அவன் வந்து "ராஜபக்சே..சாப்பாடெல்லாம் ஆச்சா.. நல்லா இருக்கீங்களா ? " அப்டின்னு விசாரிச்சுட்டு போயிட்டான்.

ரெண்டு நாள் முன்னாடி நானும் ஜோவும் பேசிக்கிட்டோம். இந்த வாட்டி பெருசா எதுவும் எதிர்பார்க்க வேணாம்னு.இதோட மாவீரர் தினம் முடிஞ்சிரப் போறது இல்லையே.இன்னும் இருக்கு.இனிமேல் தான் ஆரம்பம்.இப்போ நமக்கு தேவை நம்பிக்கை மட்டும் தான். தலைவர் இல்லங்கிறத உறுதிப்படுத்த எதுவும் இல்லயே. அவரோட வீர‌மரணம் நேதாஜி மாதிரி இருந்தால்தான் அது பெருமை.லக்கி லுக் இதப்பத்தி முன்னாடி சொல்லிருந்தாரு. எதப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைச்சனோ..அங்க சுத்தி .. இங்க சுத்தி.. நேரா அந்த எடத்துக்கே வந்துட்டேன். என்னத்த எழுதினேன் தெரியல.. தோணுச்சு.எழுதியாச்சு.


எதுலயோ படிச்சேன்..

"தமிழனுக்கு அகராதியில் அர்த்தம் இனிமேல் அகதி..
ஈழத்தில் தமிழன் இனிமேல் சகதி"

Tuesday, November 17, 2009

கமலா மேடம் வண்டி டயர் பஞ்சர்................

இது நான் ஸ்கூல் படிக்கும் போது நடந்த கூத்து. பிளஸ் ஒன் படிக்கும் போதுன்னு நினைக்கிறேன். உனக்கு எப்போதான் கூத்து நடக்கலனு கேக்காதீங்க. நம்ம நேரம் அப்படி. என்ன ஒரே ஆறுதல்..இதுல நான் வெறும் பார்வையாளன் தான். ஸ்டார் காஸ்ட் வேற.

அப்போ எங்க ஸ்கூல்ல வழக்கம் என்னான்னா, காலையில 8.30 க்கு ஃப்ர்ஸ்ட் பீரியட், 9.10 ல இருந்து 9.40 வரைக்கும் ப்ரேயர், அப்புறம் செகண்ட் பீரியட். இத யூஸ் பண்ணிக்கிட்டு, சில பேரு 9.40 க்கு கரெக்டா க்ளாஸுக்குள்ள நுழைவாங்க. ஃப்ர்ஸ்ட் பீரியடும் கட் ஆன மாதிரி ஆச்சு, ப்ரேயர் மொக்கையில இருந்து தப்பிச்ச மாதிரி ஆச்சு. ( நான் நல்ல பையன்..கரெக்டா வந்துருவேன்)

இந்த இடத்துல நான் முக்கியமான் ஆளுகள அறிமுகப்படுத்த வேண்டியது இருக்கு.

எங்க கணக்கு வாத்தியார். இவருக்கு நாங்க வச்ச பேரு..சி.ஐ.டி சின்னப்பையன்.பாக்க சில்வண்டு மாதிரி இருந்தாலும் பண்ற வேலை எல்லாம் ஜெய்சங்கர் மாதிரி இருக்கும். இவரு ரொம்ப ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..ஸ்ட்ரிக்டு..

எங்க கெமிஸ்டரி வாத்தியார்.இவருக்கு நாங்க வச்ச பேரு.. தர்மா. அப்போ விஜயகாந்த் நடிச்ச தர்மா படம் ரிலீஸ் ஆயிருந்துச்சு. அவருதான் எங்க அநியாயம் நடந்தாலும் தட்டி கேப்பாரே. இவரும் அப்படித்தான், எங்கயாவது மூணாங்கிளாஸ் பையன் நோட்டு கொண்டு வரலைன்னா.. +2 பசங்களுக்கு பாடம் எடுக்குறத விட்டுட்டு, அவன போயி காதை திருகிட்டு வருவாரு. அப்படி ஒரு கடமை உணர்ச்சி.

அப்போ எங்களுக்கு சி.ஐ.டி சின்னப்பையன் தான் கிளாஸ் டீச்சர்.எங்க கிளாஸ்ல கோபு னு ஒரு பையன் இருந்தான் ( பேர மாத்திருவோம்ல !!).அவனுக்கு லேட்டா வந்து, வரண்டு இழுத்து, வாத்தியாரை மண்டை காய விடுறது ஒரு பொழுதுபோக்கு. ஒரு நாளு எங்க கிளாஸ் டீச்சர் , " இனிமே யாருமே லேட்டா வரக் கூடாது, ஐ வான்ட் ஃபுல் அட்டன்டென்ஸ் இன் த ஃப்ர்ஸ்ட் அவர். கோபு உனக்கு தனியா சொல்றேன், நாளைக்கு ப்ரேயர் நடக்கும் போது இடையில வந்து ஜாயின் பண்ணிக்கலாம்னு நினைக்காத. பிச்சிருவேன்" னு சொல்லிட்டாரு.இதுக்கெல்லாம் அசருவானா நம்ம ஆளு.

அடுத்த நாள் ஃப்ர்ஸ்ட் பீரியட். கோபு வரல. வாத்தியாருக்கு செம கோவம். ங்கொய்யால... மூஞ்சிய..ரட்சகன் படத்துல வர்ற ரகுவரன் மாதிரியே வச்சிருந்தாரு. "எப்படியும் ப்ரேயர் நடுவுல வந்து தான ஜாயின் பண்ணுவான். அப்போ இருக்கு அவனுக்கு"னு சொன்னாரு.

அவரு எதிர்பார்த்த மாதிரியே, ப்ரேயர் நடக்கும் போது இடையில வந்து, லைன்ல சேர்ந்தான் கோபு. "கோபு ஒய் ஆர் யு லேட்"னு வாத்தி கேட்ட உடனே, "உஸ்ஸ்ஸ்..சார் ப்ளீஸ் டோன்ட் மேக் நாய்ஸ் டூரிங் த ப்ரேயர்"னு சொல்லிட்டு கமுக்கமா வந்து லைன்ல நின்னுட்டான்.வாத்திக்கு அதுக்கு மேல என்ன பேசுறதுன்னு தெரியாம, சி.ஐ.டி சிங்காரம் கிட்ட போயி பேச ஆரம்பிச்சிட்டாரு. (இது இன்னொரு வாத்தி .. ஹி ஹி )

ப்ரேயர் முடிஞ்ச உடனே, நேர கோபுகிட்ட வந்துட்டாரு சி.ஐ.டி சின்னப்பையன். "ஏண்டா லேட்டு. நேத்து தான உனக்கு படிச்சு படிச்சு சொன்னேன்". அதுக்கு கோபு சொன்ன பதில் "சார் நான் சீக்கிரமாவே வந்துட்டேன் சார், கலெக்ட்ரேட் கிட்ட..கமலா மேடம் வண்டி டயர் பஞ்சர் சார்" (இங்கதான் ஹீரோயினி என்ட்ரி)

"அடடா..அப்படியா.. இத முதல்லயே சொல்லிருக்க கூடாதா.. அவசரப்பட்டு உன்ன திட்டிட்டனே.. சரிப்பா.. நீ கிளாசுக்கு போ"


************************************************************************

மதியம் சாப்பாட்டு நேரம். மெஸ்ல சாப்பிட்டு முடிச்சிட்டு, கை கழுவப்போற இடத்துல, சி.ஐ.டி சின்னப்பையன், கமலா மேடம், கூட...தர்மா. ரைட்டு..சனியன் சடை போட ஆரம்பிச்சிருச்சு, இனி பொட்டு வச்சு பூ வைக்காம் விடாதுனு நினைச்சோம்.

சி.ஐ.டி : கோபு.. காலையில ஏண்டா லேட்டுனு கேட்டதுக்கு கமலா மேடம் வண்டி டயர் பஞ்சர்னு சொன்ன. நீ ஹெல்ப் பண்ணலயாமே, தர்மா (!) சார்தான் கூடவே இருந்து , சரி பண்ணி கூட்டிட்டு வந்துருக்காரு.

கோபு : நான் ஹெல்ப் பண்ணேன்னு சொல்லவேயில்லையே சார்.. கமலா மேடம் வண்டி டயர் பஞ்சர்னுதான சொன்னேன். நீங்க தான் கமலா மேடம் பேரைச் சொன்ன உடனே என்ன போகச் சொல்லிட்டீங்க. நீங்க தப்பா புரிஞ்சிகிட்டா நான் என்ன சார் பண்ண முடியும். தர்மா(!) சார் அளவுக்கு எனக்கு உதவி மனப்பான்மை கிடையாது சார்.

தர்மா : சார், இவிங்கள போகச் சொல்லுங்க, இவிங்கட்ட போட்டி போட்டு நம்மளால முடியாது.கிரகம் புடிச்சவிங்க.டிஸ்கி : நாங்க இந்த அளவுக்கு நல்லா இருக்கிறதுக்கு ..நான் சொன்ன எல்லா வாத்தியாருமே காரணம்தான். என்ன..சில பல பிரச்சினையால, கொஞ்சம் நக்கல் பண்ண வேண்டியாதாகி போச்சு.

Thursday, October 29, 2009

சுரேஷ்‍-அனிதா

"சுரேஷ்.. நான் உன்ன நம்பித்தான் என் வீட்டை விட்டு வந்தேன்.இதோட ஏழு வருசமாச்சு.இது வரைக்கும் நீ என்ன சந்தோசமாத்தான் வச்சிருக்க. நான் வேற யாரையாவது கல்யாணம் முடிச்சிருந்தா இவ்வளவு சந்தோசமா இருந்துருப்பனாங்கிறது சந்தேகம் தான்.ஆனா அதெல்லாம் விட இது ரொம்ப முக்கியம் சுரேஷ்.இத நீ க்ளியர் பண்ணியே ஆகணும்."

"அனிதா..ப்ளீஸ்..என்ன டென்சன் ஆக்காத.. நாந்தான் இதுக்கு நல்லா ப்ரிப்பேர் பண்ணிருக்கேன்னு உனக்கு தெரியும்ல...அப்புறம் என்ன"

"இல்ல..சுரேஷ்.. எனக்கு வேலை இருந்தா பிரச்சனை இல்ல... நம்ம வீட்ட விட்டு ஓடி வந்து கல்யாணம் பண்ணதால.. என்னோட டிகிரி கூட முடிக்கல..அதான் எனக்கு பயம்ம்மா இருக்கு"

முன்கதை சுருக்கம் :

சுரேஷ் அனிதாவை விட ஒரு வயது மூத்தவன்.. கல்லூரியில் படிக்கும் போது..அவன் 2 வருடம் அவள் பின்னாடி சுற்றி..அவளை காதலிக்க வைத்து...இருவரும் காதாலால் கசிந்துருகி..வீட்டை விட்டு ஓடி வந்தார்கள்.

இன்று :


மொத்தம் 25 கேள்வி...80% சரியா இருந்தா போதும்..க்ளியர் ஆயிடும்..இது வரைக்கும் 16 கரெக்ட். சுரேஷ் மும்முரமாக இருந்தான். கணக்கு கேள்வி கூட சமாளிச்சுடலாம்..ஆனா இந்த ஜெனரல் நாலெட்ஜ்...யப்பா தாங்க முடியல. ஒரு வழியாக எழுதி முடித்து வெளிவரும் போது...ஒரு கை தோளின் மேல் விழுந்தது.

"என்ன பாஸ்..எப்படி பண்ணிருக்கீங்க.." நெடு நெடுவென்று பனைமரம் போல இருந்தான்..கேட்டவன்.

" நீங்க தமிழா.. நான் தமிழ்னு உங்களுக்கு எப்படி தெரியும்"...இது சுரேஷ்..

"இல்ல பாஸ்... நீங்க உங்க ஒய்ஃப்ட்ட பேசிட்ட இருந்தப்போ கேட்டேன். நான் ஒட்டுக்கேக்கல...அவுங்கள கொஞ்சம் மெதுவா பேச சொல்லுங்க.."

"அத விடுங்க பாஸ்... நீங்க எப்படி பண்ணிருக்கீங்க ? .. 80% க்ராஸ் ஆயிடுமா??"

" ஆயிடும்னு நினைக்கிறேன்...பேசாம..இந்த பெங்களூரை...தமிழ்நாடு கவர்மென்ட் acquire பண்ணிரலாம்..எங்க பாத்தாலும்.. நம்ம ஊர்க்காரங்கதான் இருக்காங்க"

" நம்ம இடத்துலயே நம்மள‌ சிங்களன் விரட்டுறான்..அதயே பாத்துக்கிட்டு.. முதுகெலும்பு இல்லாம‌ பொத்திக்கிட்டு இருக்கோம்.. நீங்க என்ன..இதெல்லாம்..பேசுறீங்க"

"சரி பாஸ்..பாக்கலாம்..ஆனாலும்.. நம்ம பசங்க UKG படிக்கிறதுக்கு இந்த அளவுக்கு டஃபான என்ட்ரன்ஸ் எக்ஸாம் கொஞ்சம் ஓவர்தான் ..என்ன ?"

Thursday, July 23, 2009

ஓர் இரவு

"ஒரு கிங்ஸ் குடுப்பா" என்று கேட்ட சேகரின் முகத்தில் வேலைப்பளு தெரிந்தது. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் கடைக்கார சிறுவன் கூட உம்மென்று முகத்தை வைத்துக்கொண்டு ஒரு கிங்ஸ் சிகரெட்டை நீட்டினான்.பதட்டத்துடன் இழுக்க ஆரம்பித்து, ஆசுவாசமாக சிகரெட்டை முடிக்கும் வேளையில், சேகரின் செல்ஃபோன் சிணுங்கியது. ராகவன்.

"இவன் எதுக்கு இப்போ கால் பண்றான்" என்று நினைத்துக் கொண்டே, பேசத் தொடங்கினான் சேகர்.

"கண்டிப்பா போகணுமா டா" என்று சேகர் கேட்க, ராகவன் ஏதோ சொல்ல, "சரி விடு வெள்ளிக்கிழமை, மாசத்துல ஒரு நாள்தான.அப்போ பாண்டி பஜார் ரோட்டுல, இருக்குற டாஸ்மாக்கு எட்டரைக்கு வந்துரு" என்றபடி ஃபோனை வைத்தான் சேகர்.ஐந்து ரூபாய் குடுத்து விட்டு, மீதம் 1 ரூபாயும் ஒரு ஹால்ஸையும் வாங்கிக்கொண்டு கடுப்புடன் அலுவலகத்தை நோக்கி நடந்தான் சேகர்.இப்போதான் ஹால்சும் ,50 காசும் ஒண்ணாயிடுச்சே.

மணி எட்டேமுக்கால், பாண்டி பஜார் டாஸ்மாக்.

" நீ என்னா நினைக்கிற‌, என்ன இருந்தாலும் லட்சுமி என்னய விட்டுட்டு போனது தப்பு தானடா"..இது ராகவன்.

"பழச பேசி என்னடா பண்ணப்போற, காலம் கடந்து போச்சு ராகவா, ஒண்ணும் பண்ண முடியாது இனிமே"

"இல்ல சேகரு, அவ என்னய விட்டுட்டு போனாலும், 15 வருசமா அவளைத்தான நினைச்சிட்டு இருக்கேன், அவ என்னய பத்தி யோசிப்பான்னு நினைக்கிறியாடா நீ. சூளைமேடு வீட்டைக்கூட அவ பேருல தானடா எழுதி வச்சேன்", மறுபடியும் ராகவன்.

"தம்பி .. ஒரு எம்.சி விஸ்கி குவார்ட்டர் கொண்டா" என்றபடி தன் நரைத்த தாடியை நீவினான் சேகர்." ராகவா , இனிமே இதப்பத்தி யோசிக்காத.இந்நேரம் உன் பொண்ணுக்கே 20 வயசாயிருக்கும்.உன்கிட்ட எத்தன வாட்டி சொல்றது, நீ பண்ணது தப்பு.புருசன் வேற எவ கூடயாவது படுத்தா, எந்த பொண்ணுதான் ஏத்துப்பா ? என்னய எடுத்துக்கோ, நானும் சின்ன வயசுல அப்டி இப்டிதான் இருந்தேன், குடும்பம்னு வந்ததுக்கு அப்புறம் ஒழுங்கா இல்லையா??"

" நான் அப்டி இப்டினு இருந்தாலும், அவகிட்ட பாசமாத்தானடா இருந்தேன். பாவி மவ, அஞ்சு வயசு புள்ளயோட வெளிய போயிட்டாளே. சம்பாதிக்கிறோம்கிற திமிருடா அவளுக்கு" இது ராகவன்.


"சரி பத்திரமா, வீட்டுக்கு போயி சேரு, நாளைக்கு மதிய சாப்பாடுக்கு, வீட்டுக்கு வா" என்று சொன்னபடியே, கணக்கை செட்டில் செய்தான் சேகர்.அப்போது....

"சார், சூப்பர் குஜிலி, சின்ன வயசு, 500 ரூவாதான்,இடம் எங்க பொறுப்பு" என்ற தகரக்குரல் கேட்க, ராகவனின் தொட்டில் பழக்கம், பல்லைக் காட்டியது.

"சேகரு .. நீ வீட்டுக்கு போ, நாளைக்கு பாக்கலாம்" என்றபடியே தகரக்குரலோனுடன் நடையைக் கட்டினான் ராகவன்."இவன்லாம் திருந்தவே மாட்டான்" என்று சேகர் தலையிலடித்துக் கொள்ளும் போது, பாதி தூரம் கடந்திருந்தான் ராகவன்.

தகரக்குரலோன் சொன்னது போலவே, குஜிலிக்கு 500 ரூபாய் கம்மியோ என்று தோன்றியது ராகவனுக்கு. மதுவில் திளைத்த காமுகன் அன்றிரவு மாதுவிடத்திலும் திளைத்தான்.காலையில் களைத்து எழுந்த பொழுது, குஜிலி தூக்கத்தில் இருந்தாள். இண்டர்காமில் காபி ஆர்டர் செய்துவிட்டு திரும்பும் பொழுது குஜிலி விழித்திருந்தாள். இரவுதான் தான் வாய் தவிர மற்றதெல்லாம் பேசியது, இப்போதாவது பேசுவோம் என்ற் நினைத்தானோ என்னவோ, ராகவன் அவளைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தான்.

"என்னய பத்தி சொல்றதுக்கு இன்னா சார் இருக்கு. நல்ல குடும்பத்துலதான் பொறந்தேன். அப்பன் ஆத்தா ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டு இருந்தாங்க. எங்க அப்பன் ஒரு ஊதாரி, ஒரு குச்சிக்கு சேலை கட்டினா கூட அது பின்னாடியே நாக்க தொங்க போட்டுட்டு அலைவானாம். எங்க அம்மாதான் சொல்லிச்சு. அவன் பொம்பள சுகத்துக்கு அலையுறத பொறுத்துக்க முடியாம, எங்க அம்மா , என்ன மட்டும் கூட்டிட்டு அவன விட்டு பிரிஞ்சு வந்துருச்சி. காலக்கொடுமை, எங்கம்மாவுக்கும் வேலை போயி, கடைசில எனக்கு கஞ்சி ஊத்துறதுக்காக, இந்த பொழப்புக்கு வந்துருச்சி.ஆங்..எங்க அம்மா பேரு லட்சுமி சார், பேருக்கேத்த மாதிரி, லட்சுமி கடாட்சமா இருக்கும். எங்க அப்பன், ராத்திரி பூரா உடம்பு சுகத்துக்கு அலைஞ்சதுனால, அவனுக்கு ராகவன்கிற பேரு சரிதானோ என்னவோ.

ஆமா..என்னய பத்தி இவ்ளோ கேக்குறியே, உன் பேரு இன்னா சார் ? "


சனிக்கிழமை. மாலைமலர் பத்திரிகையின் சென்னை பதிப்பு.

" அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க, ஆணின் பிணம் கூவத்தில் கண்டெடுப்பு. தற்கொலையாக இருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது"

" நேத்து நைட்டுதான என்கூட சரக்கடிச்சிட்டு இருந்தான், என்ன ஆச்சுனு தெரியலயே, எடுபட்ட பய இப்டி பண்ணிட்டானே".. சேகர் புலம்பிக் கொண்டிருந்தான்.

Monday, July 20, 2009

அந்த 20 நிமிடங்கள் !!

இன்னும் 20 நிமிடம் தாக்குப்பிடித்துவிட்டால் போதும். சுரேஷ் மிகுந்த பதட்டத்துடன் நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தான்.தான் செய்வது அவனுக்கு தவறு என்று தெரிந்தது.இருந்தாலும் அவன் மனம் அவன் பேச்சை கேட்கவில்லை.இதற்காகத்தானே இத்தனை நாட்களாய் காத்துக் கொண்டிருந்தான்.அவன் செய்வது அப்பாவிற்கு தெரிந்தால் நடப்பதே வேறு.

மசங்கிய முன்னிரவுப் பொழுது. பனி இறங்க ஆரம்பித்திருந்தது. நெடுஞ்சாலையில் இருந்து வலதுபுறம் திரும்பி ஒரு கிலோமீட்டர் தூரம் நடந்தால், அந்த பங்களாவை நீங்கள் அடையலாம். ஆங்காங்கே பெரிய வீடுகள் தென்பட்டாலும், இது மட்டும் தனியாக இருப்பது போன்ற அமானுஷ்ய தோற்றத்தை உண்டு செய்தது.காம்பவுண்டுக்குள் இருந்த அசோக மரங்கள் காற்றுக்கு சலசலத்து மனதில் ஒரு வித அச்சத்தை உண்டு செய்தது.

ஒரு 1987ம் மாடல் கான்டெஸா கார் அந்த பங்களாவின் முன் நின்றது.அந்த காரில் இருந்து இறங்கிய ஒருவன் , சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, யாருக்கோ ஃபோன் செய்தான்.ஒடிசலான உருவம்தான் .இருந்தாலும், அவனது கண்கள், ஏதோ குரூரம் நடக்கப் போவதை உணர்த்தியது.

சற்று நேரத்தில், தூரத்தில் இரு வெளிச்சப் புள்ளிகள் தோன்றி, அந்த வீட்டை நோக்கி வந்தன. அது ஒரு வேனின் ஹெட்லைட் வெளிச்சம். சுரேஷின் மனம் ஷ்யாமின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.எந்த வித அசம்பாவிதமும் நடக்கும் முன் ஷ்யாம் அங்கு வர வேண்டும் என்று சுரேஷ் விரும்பினான்.

அதிலிருந்து, நான்கு பேர் தடிமாடு போல் இறங்கினார்கள். ஒவ்வொருத்தனும் ஒரு ஆட்டை முழுசாக தின்பான் போல் இருந்தார்கள். சுரேஷ் எதிர்பார்த்தது நடந்தே விட்டது. ஆம், அந்த பெண் வேனிலிருந்து இறக்கப்பட்டாள். அதிகம் போனால் 20 வயதிருக்கும். துவண்டு போய் இருந்தாள். ஏதோ பெரிய இடத்து பெண் போல் தெரிந்தாள். அவளை வீட்டுக்குள் கொண்டு செல்ல அந்த தடியர்கள் முயற்சிக்க, அவள் திமிர ஆரம்பித்தாள். அவர்களை வெல்ல முடியாது என்று தெரிந்தும், உயிரை காப்பாற்றிக் கொள்ள, கடைசி முயற்சி.ஒருவன் அவளை நெட்டித் தள்ளினான், இவள் எட்டி விழுந்தாள். தள்ளியவனை இதற்கு முன் சுரேஷ் எங்கேயோ பார்த்திருக்கிறான்.

இன்னும் ஷ்யாம் வரவில்லை.சுரேஷுக்கு பதட்டம் அதிகரித்தது. அவனது வியர்வை சுரப்பிகள் முழு வேகத்தில் இயங்கி கொண்டிருந்தன. அடுத்து என்ன நடக்கும் என்று அவனால் யூகிக்க முடிந்தது. ஆனால் ,அவன் எதிர்பாராத விதமாக கீழே விழுந்த அந்த பெண் பெருங்கூச்சலோடு எழுந்தாள். தரையில் கிடந்த ஒரு துருப்பிடித்த சிறிய கம்பி அவள் கையில் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் , அந்த கம்பி அவள் கையில் இருந்து , தடியனின் கண்களுக்குள் இடம் மாறி இருந்தது. அலறித் துடித்தான். இப்படி ஒரு தாக்குதலை அவளிடம் இருந்து அவன் எதிர்பார்க்கவில்லை. சுரேஷும்தான்.

பக்கத்தில் இருந்த ஒரு தடியன் , வண்டியில் இருந்து ஒரு கட்டையை உருவி அந்த பெண்ணின் மண்டையில் "நச்" என்று இறக்கினான். அந்த சத்தம் சுரேஷின் காதில் எதிரொலித்தது. அவள் மயங்கி விழுந்தாளா இல்லை செத்து விழுந்தாளா என்று தெரியவில்லை.சுரேஷ் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவனது தலையில்..."ணங்" கென்று
"ணங்" கென்று கொட்டினார் அவன் அப்பா.

"அடுத்த வாரம் பப்ளிக் எக்ஸாம் வச்சிகிட்டு இப்போ உனக்கு இந்த படம் அவசியமா ? அந்த ஷ்யாம்கிட்ட அப்படி என்னதான் இருக்கோ.என்னத்த நடிக்கிறான் அவன் ? திருந்தவே மாட்டியா ராஸ்கல்"

"அப்பா .. அப்பா..ப்ளீஸ் பா.. நான் படிச்சிருவேன்பா. இந்த கடைசி 20 நிமிசத்தை பாக்குறதுக்குதான்பா, இத்தனை நாளா வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன்"

Sunday, July 19, 2009

என்ன தொடர்பு ?

சூடான் நாட்டின் டர்ஃபர் நகரம்.உலகின் மிக மோசமான வன்முறை சம்பவங்கள் நடைபெறும் இடம்.மக்கள் வாழ்வதற்கு எள்ளளவும் பாதுகப்பில்லாத நகரம் என்று வல்லுனர்களால் அறிவிக்கப்பட்ட , சாபக்கேடு பெற்ற இடம்.இது வரையில் சுமார் இரண்டரை லட்சம் மக்கள் அகதிகள் ஆவதற்கும், நான்கு லட்சம் மக்கள் படுகொலை செய்யப்படவும் காரணமான உள்நாட்டுபோர் உச்சகட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நேரம்.

சூடால் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட சூடான் விடுதலை இயக்கத்தின் தலைமை அலுவலகம். அந்த இயக்கத்தின் தலைவரான ரஹீமுக்கும், உப தலைவரான ஜாவேதுக்கும் அனல் பறக்கும் வாக்குவாதம். அதற்கு காரணம்,
ரஹீம் , சூடான் அரசாங்கத்துடனான சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட முடிவு செய்தார். ஜாவேத் அதற்கு மறுப்பு தெரிவிக்க, வாக்குவாதம் மிதமிஞ்சி சென்று கொண்டிருந்தது.

"ட்ட்டமார்ர்ர்ர்" என்ற பெரும் சத்தத்துடன் ஒரு கொத்து வெடிகுண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் விழுந்தது.

________________________________________________________________________


பிரிட்டனில் இருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள சீலேண்டில் அமைக்கபபட்டுள்ள, "ஹேவன்கோ" அலுவலகம். முக்கியமான தகவல்கள் பாதுகாக்கப்பட்டுள்ள அதிமுக்கியமான இடம்.இங்கே இருக்கும் அலுவலர்களைத் தவிர,பிரிட்டன் அரச குடும்பத்திற்கே அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் இடம்.

நாற்பதுகளில் நடைபோடும் அலுவலர் ஜோன்ஸ், தனது வழுக்கையை தடவிக்கொண்டே, மானிட்டரில் தெரியும் கண்காணிப்பு கேமராக்களை உற்றுப் பார்த்து கொண்டிருந்தார்.

________________________________________________________________________

அமெரிக்கா. கென்டக்கியில் உள்ள, "ஃபோர்ட் நாக்ஸ்" கட்டிடம். உலகின் வல்லரசான அமெரிக்காவின் ஒரு இராணுவ அலுவலகம். இங்கேதான், அமெரிக்காவின் பெரும்பாலான தங்கம் ( அரசாங்கத்துக்கு சொந்தமானது) பாதுகாக்கப்பட்டுள்ளது. கற்பனைக்கு எட்டாத பாதுகாப்பு, அளவுக்கு அதிகமான செல்வம், இதுதான் இந்த இடத்தின் அடையாளம்.

அதன் வாயிலில் நிற்கும் இரண்டு காவலர்கள் , இருவரின் கையிலும் அதிநவீன இயந்திர துப்பாக்கிகள். ஒரு கொசு உள்ளே நுழைந்தால் கூட ஊரையே கூட்டும் பாதுகாப்பு ஏற்பாடுகள்.இருவரின் கண்களும் இமைப்பதைக் கூட மறந்து, மிக உன்னிப்பாக அவர்கள் வேலையில் கவனமாக இருந்தார்கள்.

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍________________________________________________________________________

மதுரை மாநகரம். காளவாசல் அருகே உள்ள விஜயா மெஸ். இரவு பத்து மணி, பர பரவென்று இயங்கிக் கொண்டிருக்கும் ஊழியர்கள். முருகன் தன்னுடைய யமஹாவின் உறுமலை அடக்கிவிட்டு, உள்ளே நுழைந்தான். அடித்திருந்த குவார்ட்டர் மானிட்டர் வயிற்றில் பசியையும், தொண்டையில் எரிச்சலையும் கிளப்பி விட்டிருந்தது.

நாலு வீச்சு பரோட்டா, ஒரு மட்டன் சுக்கா ஆர்டர் செய்துவிட்டு பொறுமையில்லாமல் அமர்ந்திருந்தான். சாப்பாடு வந்தவுடன், சுடு களியை முழுங்கும் நாய் போல, அவசர அவசரமாக அள்ளி வாய்க்குள் எறிந்தான். அப்போது அவனது ஆதி காலத்து 5100 மொபைல் அலறியது.

________________________________________________________________________

சூடான், பிரிட்டன், அமெரிக்கா, மதுரை. சம்பந்தம் இல்லாத இந்த இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்கிறதா ??
அப்படி இருந்தால் என்ன காரணம்.

ஒரு வெளக்கெண்ணயும் இல்ல. அவிங்க வழக்கமா அவிங்க செய்ற வேலையை பாத்துட்டு இருக்காங்க. நீங்க போயி உங்க வேலைய பாருங்க.


எப்பூடீ...ஹி ஹி ஹிடிஸ்கி : சும்மா மொக்கையா இருந்தாலும், நான் சொன்ன‌ இடங்களும் , அங்கே நடக்கும் நிகழ்வுகளும் உண்மை. பெயர்கள் கற்பனை.

________________________________________________________________________

Tuesday, July 14, 2009

கலைஞர் - கணக்குப் பாடம்

டாக்டர் கலைஞரை ஒரு கல்லூரியில் கணக்குப் பாடப்பிரிவை துவக்கி வைக்க கூப்பிட்டாங்களாம். அவர் அங்க எப்படி பேசிருக்காருன்னு பாருங்க.


" இருபதும் பதினெட்டும் கூட்டிச் சொல்லுதல் மனக்கணக்கு
இருபது பதினெட்டைக் கூட்டிச் செல்லுதல் காதல் கணக்கு
செட்டியார்தம் கடையிலே அட்டியின்றி கொடுப்பது வட்டிக்கணக்கு
அடுக்களையில் பாவையர்தம் கரிக்கோட்டால் கிழிப்பது
பால் கணக்கு, தயிர்க் கணக்கு, மோர்க் கணக்கு
மந்தையிலே போடாதே ஆட்டுக்கணக்கு
மொந்தையிலே போடாதே ஓட்டுக்கணக்கு

வாழ்க்கை கணக்கை தவறாகப் போடாமல், சரியாகப் போட‌
கணக்குப் பாடம் எடுத்து படிப்பீர்...வணக்கம்"


மூலம் : நகைச்சுவை தென்றல் லியோனியின் பட்டி மன்றம்.டிஸ்கி : பிழை இருந்தால் மன்னிக்கவும், கேட்டதைத்தான் எழுதியிருக்கிறேன்.

"ஒரு குடம் பால்ல, ஒரு துளி விஷம் கலந்தா என்னாகும் ?"

பிளஸ் 2 மெயின் எக்ஸாம் முடிச்சிட்டு, எண்ட்ரன்ஸ் கோச்சிங்க்கு , ட்யூசன் படிச்ச எடத்துலயே சேர்ந்துட்டோம், நானும் பகதூரும் .( இவனப் பத்தி அப்புறமா வெலாவாரியா சொல்றேன்)

நாம கொஞ்சம் வெறித்தனமா படிப்போம்கிறதால, வாத்தியாருக்கெல்லாம் நம்ம மேல கொஞ்சம் பாசம் சாஸ்தி. ஸ்டேட் லெவல் ரேங்க் எடுப்பேன்னு எதிர்பார்த்தாங்கன்னா பாத்துக்கோங்க. (ஏய், யார்றா அது சிரிக்கிறது, ராஸ்கல் உண்மைய சொன்னா நம்பணும்).எனக்கு அப்போதான் வாயில இருந்த,சரஸ்வதி ரிசைன் பண்ணிட்டு சனியன் அப்பாயிண்ட் ஆயிருக்கு. கோச்சிங் எடுத்தவிங்களும் கரெக்டா எங்க வாயப் புடுங்குறதுக்கு வசதியா என்ன என்ன பண்ணனுமோ எல்லாம் பண்ணுனாங்க.

கிளாஸ் ஆரம்பிச்சு 15 நாள் போயிருக்கும், எவனோ ஒருத்தனை கூப்பிட்டு வந்தாங்க.என்னமோ பெர்சனாலிட்டி டெவலப் பண்றவனாம்.அவனப் பாத்த உடனே எனக்கு புடிக்கல.வந்த உடனே பொண்ணுங்க பக்கம் போயிட்டான்.வழக்கம் போல "தகடு தகடு" தான். சரி கழுதய போனா போறான், நம்ம வேலய நம்ம பாப்போம்னு நானும் பகதூரும், என்னா பிசினஸ் பண்ணலாம்னு டிஸ்கஸ் பண்ண ஆரம்பிச்சிட்டோம்.


"ஓ.கே அட்டென்டன்ஸ்"னு ஆரம்பிச்சான். ஒரு பத்து பேரு வாசிச்சுருப்பான்.

"டேவிட் மரியம்மாள்"னு வாசிச்சான்.

"சார்..அது டேவிட் மரியம்மாள் இல்ல சார், தேவி மாரியம்மாள்"னு கொஞ்சம் நக்கலா சொன்னேன். இதுல பெருசா ஒண்ணும் இல்ல. ஆனா சுத்தி இருந்தவிங்க டைமிங்கா சிரிச்சு கவுத்திட்டானுங்க.கடுப்பா ஒரு பார்வை பாத்துட்டு போயிட்டான்.

அப்புறம் வழக்கமா பெர்சனாலிட்டி டெவலப்மன்ட் கேள்வியெல்லாம் கேட்டுபுட்டு,அவன் இடுப்புல சொருகி வச்சிருந்த மொபைல எடுத்தான்.

"இது என்னான்னு தெரியுதா" ("ம்...தெர்மாமீட்டர்"னு சொல்லணும்னு நினைச்சேன்)

"இது ஒரு மொபைல்.உங்க யாருக்காவது ப்ளூடூத் டெக்னாலஜி பத்தி தெரியுமா?"

"சார்.. நாங்க மொபைலயே இப்போதான் சார் பாக்குறோம்"னு சொன்னேன்.

"ஓ.கே. நோ பிராப்ளம். ப்ளூடூத் அப்டிங்கிறது ஒரு டெக்னாலஜி.அத நிறைய விசயங்களுக்கு உபயோகப்படுத்தலாம்"னு அவன் பாட்டுக்கு ஓட்ட ஆரம்பிச்சிட்டான். நம்ம கோஷ்டி தவிர மத்தவிங்கெள்லாம், வாய்க்குள்ள டைனோசர் போற அளவுக்கு அத பாத்துட்டு இருக்காங்க.

"புரியுதா" இது அவன்

"புரியுது சார்" இது நாங்க கோரஸா.

"இப்போ, ஒரு எக்சாம்பிள், இந்த மொபைல்ல இருக்குற ப்ளூடூத்தை வச்சு, இதோ இந்த ட்யூப்லைட்டை கண்ட்ரோல் பண்ணி எரிய வைக்கலாம்"னு சொன்னான்.

"முடியாது சார்" இது வேற யாரு, நாந்தான்.

இப்டி ஒரு பதில என்கிட்ட இருந்து யாருமே எதிர்பார்க்கலை.ஏன், நானே எதிர்பார்க்கலை.

அவன் உடனே " கண்டிப்பா முடியும்பா, இட் இஸ் பாஸிபிள், இஃப் இட் இஸ் கான்ஃபிகர்டு"னு இழுத்தான்.

"என்னா பண்ணாலும் முடியாது சார்"னு சொன்னேன்.

" ஏன் அப்டி சொல்ற"னு கேட்டான்

"அது ப்யூஸ் போன ட்யூப்லைட் சார், என்னா பண்ணாலும் எரியாது"னு சொல்லி முடிக்க, சுத்தி இருக்கவிங்க வழக்கம் போல அவிங்க டைமிங்க காப்பாத்த, எனக்கு ஆப்பு ரெடியானது.

விருட்டுனு வெளிய போயிட்டான்.

2 நிமிசம் கழிச்சு, இன்சார்ஜ் வந்தாரு .


பொதுவா எல்லாத்தயும் பாத்து "தம்பி,இந்த சென்டரை நாங்க ஒழுக்கமா, கண்டிப்போட நடத்திட்டு வர்றோம்.ஆனாலும் அதயும் மீறி சில தப்புகள் நடந்துகிட்டு இருக்கு. ஏம்பா சுந்தர், நீயும் ஏன் இப்டி ஆயிட்ட, பிரைட் ஸ்டூடண்ட் ஆச்சே"னு வருத்தமும் கோவமும் கலந்து பேசுனாரு.அது வரைக்கும் எனக்கு ஒண்ணும் தோணல.அப்புறம் அடிச்சாரு பாருங்க ஒரு பாயிண்ட்.அங்கதான் சுந்தர் மாட்டுனான்.

"எல்லாம் நல்ல பசங்களா இருக்குற இடத்துல, ஒரு சில கெட்ட பசங்க இருந்தா எல்லாமே போச்சுப்பா. பாருங்க, ஒரு குடம் பால்ல, ஒரு துளி விஷம் கலந்தா என்னாகும் ?"

ரெண்டு பக்கமும் திரும்பி " சொல்லுங்க என்னாகும்"

" கேக்குறேன்ல ..சொல்லுங்க என்னாகும்""தயிராகும்"

இது நான் இல்ல, என் வாயி.மறுபடியும் அதே டைமிங்.மறுபடியும் அதே சிரிப்பு.போன தடவ ரெடியான ஆப்ப, இந்த வாட்டி எறக்கிட்டாங்க.

அப்புறம் என்ன, வழக்கம் போல வீட்டுக்கு லெட்டர் "டிஸிப்ளின் சரி இல்லை". அங்க வழக்கம் போல என் மேல ஒரு என்கவுண்டர் முயற்சி. நாம எதுக்கும் பயப்படுற ஆள் கிடயாது,ஆனா அடிச்சா வலிக்கும்ல.


டிஸ்கி : பெரியவுங்களுக்கு ஒரு கேள்வி ."டிஸிப்ளின் சரியில்லை" அப்டின்னு சொன்னா, அதுல நிறைய வகை இருக்கு.அது என்னா பழக்கம், பொம்பள் புள்ளய கிண்டல் பண்ணிருக்கோம்னு நீங்களா நினைச்சிக்கிறது.அடிங்க, விசாரிச்சிட்டு அடிங்க.கிண்டல் பண்ற அளவுக்கு என்கூட ஒரு ஃபிகரும் படிக்கல.

ஒட்டகத்துல ஏறி உக்காந்தா நாய் கடிக்குமா ??

ஒரு வாட்டி கோயமுத்தூர்ல இருந்து பெங்களூருக்கு ஞாயித்துக்கிழமை மதியம் கெளம்பி வந்துட்டு இருந்தேன். ஞாயித்துக்கிழமை நைட்டு டிக்கெட் கிடைக்காதுனுதான், மதியம் கெளம்பினேன்.ங்கொய்யால அப்போக்கூட ஒரு வண்டிலயும் டிக்கெட் இல்ல.இது மாதிரி நேரத்துலதான் மக்கள்தொகையப் பத்தி கவலை ஜாஸ்தி ஆகுது.கடைசில ஒரு வழியா அலைஞ்சு, ஏ.பி.டி "ஏ.சி"ல டிக்கெட் எடுத்துட்டேன். நமக்கு தனியா டிராவல் பண்றதுனாலே ஆவாது. அதுனால இருக்குற வாரப் பத்திரிகை எல்லாத்தயும் வாங்கி போட்டுட்டேன்.

நமக்குத்தான் ஒட்டகத்து மேல ஏறி உக்காந்தாலும் நாய் கடிக்கிற அளவுக்கு டைம் ஒர்க் அவுட் ஆகுமே.வழக்கம் போல கடைசி சீட். இதுல மழை வேற. அது எப்புடினு தெரியல, மண்டை பொளக்குற அளவுக்கு வெயில் அடிக்கிறப்போ , "ஏ.சி"னா கிலோ எவ்வளவுனு கேக்குற அளவுக்குதான் இருக்கும். ஆனா மழை பேஞ்சுதுன்னா, ஒரு கருணைக்காகக் கூட குறைக்க மாட்றாங்க.ஆளாளுக்கு பக்கத்து சீட்டுல இருக்கவுங்கட்ட சொல்லிட்டு இருந்தாங்க. யாருடா பூனைக்கு மணி கட்டுறதுனு பாத்தா, ஒரு பயபுள்ள எந்திச்சு போயி சொல்லிட்டான். அத ஒண்ணும் பண்ண முடியாதுனு பதில் வந்துருக்கு போல.

சரி விட்றா, இதெல்லாம் ஒரு மேட்டரான்னு, வாங்கிட்டு வந்த புத்தகத்துல முங்கிட்டேன். நான் அப்போவே சொன்னேன்ல, நமக்கு ஒட்டகத்துல ஏறி உக்காந்தா கூட நாய் கடிக்கும்னு. ம்ம்ம்...போட்டாங்கல‌, வில்லு படம்.ஆண்டவா சோதனைக்கு ஒரு அளவே இல்லயா. முன்னாடி உக்காந்திருக்கவன், ஃபோன்ல ரகசியமா பேசுறதா நினைச்சிகிட்டு கீக்கி,பிக்கினுட்டு இருந்தான். அந்தப் பக்கம் அவன் கூட பேசுற புள்ளை மதியம் என்ன சாப்டுச்சு எனக்கு தெரியுற அளவுக்கு மெதுவா பேசுறாங்க.


வண்டிய ஒட்டுறானா, இல்ல பெடல் வச்சு மிதிச்சானான்னு தெரியல, வில்லு படம் முடியுறப்போ மேட்டுர்தான் தாண்டிருக்கான்.உஸ்ஸ்ஸ்ஸ் யப்பா முடியல.மறுபடியும் ஒட்டக மேட்டரை நினைச்சிக்கோங்க. இயற்கை என்கிட்ட விளையாட ஆரம்பிச்சிருச்சு. வேற என்ன, நமக்குதான் எது எங்க வரக்கூடாதோ, அங்கதான வரும். ஆத்திரத்த அடக்குனாலும், மூ..அடக்கமுடியாதுனு சும்மாவா சொன்னாரு சூப்பர்மேன்.சரி, கொஞ்ச நேரம் அடக்கிப் பாப்போம், எப்படியும் ஏதாவது மோட்டல்ல நிப்பாட்டி தான ஆவணும்னு மறுபடியும் அத மறக்குறதுக்காக, புக் படிக்க ஆரம்பிச்சிட்டேன்.


அது வரைக்கும் மெதுவா ஓட்டிகிட்டு இருந்த நாதாரி அதுக்கப்புறம், என்னமோ ஷூமேக்கர் வீட்டுல பொண்ணு எடுத்த மாதிரி, பேய் விரட்டு விரட்டுறான், அதுவும் குண்டும் குழியுமா இருக்குற ரோட்டுல.எந்திச்சு போயி நிப்பாட்ட சொல்லலாம்னா, நான் உக்காந்துருக்கது கடைசி சீட்டு.அந்த நேரத்துல அந்த தூரம் எனக்கு ஒரு வேலை இல்லாதவனுடைய பகல் பொழுதைவிட‌ நீளமா தெரிஞ்சது( ஐன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டு தியரி !!!).

அப்போதான் எனக்கு ஒரு ஒளி தெரிஞ்சது...ஒரு நாலு சீட் முன்னாடி இருந்தவன, வேகமா எந்திச்சு டிரைவர்கிட்ட போனான். ஆண்டவன் இந்த கஷ்டத்துலயும் உனக்கு துணைக்கு ஆள் அனுப்பிருக்கான்டா. சரி, அவன் போயி எப்புடியும் நிறுத்த சொல்லுவான்,அவன்கூட சேர்ந்து நாமளும் எறங்(க்)கிறலாம்னு தப்பு கணக்கு போட்டுட்டேன்.

அந்த பக்கி போயி 20 நிமிசம் ஆச்சு, அவனும் திரும்பி வரலை, பஸ்ஸும் நிறுத்துனபாடு இல்லை.படிக்காதவன் படம் ஓட ஆரம்பிச்சிருச்சு. ரைட்டு,
இதுக்கு மேல முடியாது,சத்தியமா முடியாதுனு முடிவு பண்ணிட்டு, டிரைவர்கிட்ட போயிட்டேன். நான் போறதுக்கும், பஸ் நிப்பாட்டுறதுக்கும் சரியா இருந்தது.20 நிமிசம் முன்னாடி போன ஆளு அவசரமா எறங்கி ஓடுனாரு.அடங்கொய்யால, இவ்ளோ நேரம் அவன இங்க சும்மாவாடா நிக்க வச்சிருந்தீங்க.

நான் எறங்கப்போறப்போ, நடுவுல ஒரு கதவு வச்சிருப்பாங்கள்ள, அத தடுத்துகிட்டு, ஒரு வெள்ளை டிரஸ் போட்ட ஆளு, " இங்க ரொம்ப நேரம் நிக்க முடியாது, உள்ள போங்க, அடுத்து நிப்பாட்டுவோம்"னு சொன்னான்.

"ஏண்டா , நான் என்ன போயி மெடிக்கல் காலேஜ்க்கு அடிக்கல் நாட்டவா போறேன், ஒண்ணுக்கு போக போறேன்டா"னு சொன்னா கேக்க்மாட்டுறான்.

"அவரே 20 நிமிசமா, கேட்டு இப்போதான் போறாரு, உள்ள போங்க சார்"னான்.

"டேய் நானும் போயிட்டு வந்துர்றேன் டா"னு சொன்னதுக்கு,

"அவருக்கு அர்ஜன்ட் சார், எமர்ஜன்சி, அதான் நிப்பாட்டுனோம்"

"ஒண்ணுக்குல என்னடா அர்ஜன்ட் ஆர்டினரினு, பிளைட்டா ஓட்டுறீங்க.மூணு மணி நேரம் முக்கி முக்கி உருட்டிட்டு,ங்கொய்யால 5 நிமிசத்துக்கு ஒவரா சீன் போடற"னு கத்துனதுக்கு அப்புறம்தான் விட்டாங்க.

அவன் ஒழுங்கா என்னய மட்டும் விட்டுருந்தா, 5 நிமிசத்தோட போயிருக்கும், நடந்த களேபரத்துல என் பின்னாடி ஒரு 5,6 பேரு வந்துட்டாங்க.கீழ எறங்கி எல்லாம் லேசானதுக்கு அப்புறமும், அதே போஸ்ல சும்மா நின்னு, 2 வாட்டி அவன் ஹாரன் அடிச்சு கூப்பிட்டப்புறம்தான் ஏறுனோம்.எப்புடீ..எங்ககிட்டயேவா ??

Monday, July 13, 2009

நம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும்

மு.கு : இத நான் எழுதி 10 நாளுக்கு மேல ஆச்சு, இன்னைக்குதான் போஸ்ட் பண்றேன்.இப்போ கூட ரொம்ப யோசனைக்கு அப்புறம்தான் இத பதிவு பண்றேன்.

ஈழத்தைப் பத்தி இனிமே பதிவு போடக்கூடாதுனு கங்கணம் கட்டிட்டு இருந்தேன்.காரணம், ஒரு அளவுக்கு மேல என்னால புலம்ப முடியல.

என்ன எளவுக்கு நான் வீட்டுல இண்டர்நெட் கனெக்ஷன் வாங்குனேனு இப்போ வருத்தப்படுறேன்.எதப்பத்தி தேடக்கூடாதுனு நினைக்கிறனோ, அதயே தேடத் தோணுது.எது என் கண்ணுல படக்கூடாதுனு நினைக்கிறனோ அதுவே என் கண்ணுல படுது. நாம படுற கஷ்டமெல்லாம் மயிருக்கு கூட சமானம் இல்லனு தோணுது.

பத்து நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோ பாத்தேன், எல்லாம் இந்த பாழாப்போன இண்டர்நெட்லதான்.அது என்னான்னு நான் சொல்ல விரும்பல. நீங்க அதப் பாக்குறதையும் நான் விரும்பல.முடியல.என்னய அறியாம என் கை ரெண்டும் என் கன்னத்துக்கு போயி, அப்டியே பதறிருச்சு. நான் என்னோட நெருங்குன நண்பர்களுக்கு கூட அதை பாக்க சொல்லல.


அப்போ என் கூட இருந்தது ரெண்டு பேரு, ஒருத்தன் வடமாநிலத்துக்காரன், இன்னொருத்தன் நம்ம ஊருக்காரன்.அந்த வடமாநிலத்துக்காரன் என்கிட்ட சொன்னது " அது அவுங்க நாடு, நீங்க போயி இடம் கேட்டா தருவானா..சண்டை போடத்தான் செய்வான், போர்னு வந்துட்டா, இந்த மாதிரி நடக்குறதெல்லாம் சகஜம்தான்"


அவிங்கட்ட புரிய வச்சு, புரிய வச்சு , நான் ஓஞ்சு போனதுதான் மிச்சம்.இதுல "You speak like a rebel, this is not gonna help u in anyway. Be practical."னு எனக்கு அவன் பெரிய புடுங்கி மாதிரி பேசுனதுதான் மிச்சம்.


இதெல்லாம் விட்டுரலாம்.ஆனா கூட இருந்த முட்டா.கூ நம்ம ஊருக்காரன்.அவன் என்கிட்ட கேட்டதை என்னால ஏத்துக்கவே முடியல,அந்த கே.தே.ம , கொஞ்சம் கூட ஈவு எரக்கமே இல்லாம " சும்மா ஒவரா சீன் போடாதடா, உனக்கும் அவிங்களுக்கும் என்னா சம்பந்தம், ஏன் தேவை இல்லாம இவ்ளோ அலும்பு பண்றீங்க, உனக்கு சொந்தமா , பந்தமா"னு கேக்குறான்.அவங்கிட்ட பேசக்கூட எனக்கு பொறுமை இல்ல,அதுனால தான் இங்க எழுதுறேன் "ஏண்டா, நான் பேசுற மொழிய பேசுறாங்க , அப்டிங்றத விட ,என்னடா பெரிய உறவு வேண்டிக்கெடக்கு, மொன்ன தே.நாயே"

சத்தியமா சொல்றேங்க, அந்த வீடியோவைப் பாத்தா, தாங்க முடியாது. ஒரு ஆஸ்பத்திரில எடுத்த வீடியோ.ஆனா அந்த தே.பய அத அவ்ளோ லேசா கேட்டுட்டு போயிட்டான்.இன்னைக்கு இளவட்ட பயலா இருக்கப்போவே, முட்டாக்கூ மாதிரி பேசுறாங்கன்னா, நாளைக்கு என்னா ஆகும்ணு நினைச்சாலே பயமா இருக்கு.

"பிரபாகரன் டெரரிஸ்ட்டாப்பா"னு நாளைக்கு என் மகன் வந்து என்கிட்ட கேட்டுறக்கூடாது, அந்த நெலம மட்டும் வந்துச்சுனா, ஒரு மகத்தான மனிதன், ஒரே கொள்கையோட இருந்த ஒரு கூட்டம், ஒரு இனத்துக்காக 30 வருசத்துக்கு மேல பட்ட கஷ்டம் இந்த தலைமுறையோட வீணாப் போயிடும்.

நாம போராட வேணாம், உதவி செய்ய வேணாம், அதுக்குதான் வக்கில்லைனு ஆகிப்போச்சு.ஆனா, தமிழனாப் பொறந்துட்டு பெரிய கே.புழு. மாதிரி பேசுற மு.கூ களுக்கு முதல்ல புரியவப்போம், எது தப்பு அது ரைட்டுனு. அவிங்க கஷ்டத்தை புரிஞ்சிக்கிறவிங்களே ரொம்ப கம்மி, அதுலயும் வலிய போயி உதவி பண்றவிங்க இன்னும் கம்மி. இப்போ அவுங்க கஷ்டத்தை நியாயப் படுத்துற கூட்டம் ஜாஸ்தியாயிட்டு இருக்கோனு தோணுது.


ஆதரவு கூடணும்னா, இங்க இருக்குற மொன்ன நாயிங்களுக்கு புரிய வக்கணும்.அவிங்களும் நம்மளோட சேரணும்.ஃபாதர் ஜெகத் காஸ்பர் சொன்னது மாதிரி, அடுத்த கட்ட வேலையப் பாக்கணும்,ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு.

உலகத்துல இருக்குற அத்தனை தமிழர்களும் நம்புற மாதிரி

"தலைவர் திரும்ப வருவாரு, புலி பதுங்குறது பாயுறதுக்குதான்"


நம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும்..உறுதியாக‌

நிறம்....சுவை...திடம் ( கண்டிப்பா 18+)

சிரிக்கணும்னு நினைக்கிறவுங்க மட்டும் மேல படிங்க.

நீங்க ஒரு க.கா அப்டீன்னா, தயவு செஞ்சு இதுக்கு மேல படிக்காதீங்க‌

ஒரு விளம்பரம்.. நம்ம எல்லாருக்கு ரொம்ப பரிச்சயமானது தான்.


முதல் நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில நிறமே இல்ல !!

இரண்டாவது நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில திடமே இல்ல !!

மூணாவது நபர் : என் பொண்டாட்டி போடுற டீயில சுவையே இல்ல !!நாலாவது நபர் : ( கொஞ்சம் கடுப்போட) போங்கடா டேய்..எனக்கு
போடுறதுக்கே பொண்டாட்டி இல்ல, வந்துட்டாய்ங்க.
டிஸ்கி 1 : இது என்னோட சீனியர்ஸ் இண்டர் காலேஜ் காம்படீசன்ல
லந்துக்குனு பண்ணுனது.


டிஸ்கி 2 : கலாச்சாரக் காவலர்கள்( இப்போ புரியுதா "க.கா"ன்னா என்னான்னு.), இதுக்காக கோவப்பட்டா, கம்பேனி அதுக்கு பொறுப்பு இல்ல.

ச ம ர ன்

இப்போ இருக்குற பதிவோட பேரை மாத்திட்டு, வேற பேரு வைக்கணும்னு, ரொம்ப நாளா யோசிச்சிட்டு இருக்கேன். எனக்கு ரொம்ப புடிச்ச தமிழ் பேரு "சமரன்" . ஆனா அந்த பேரை வேற யாரோ யூஸ் பண்றாங்க.

பதிவோட பேரை மாத்துனா, பின் தொடர்பவர்களுக்கு என் பதிவை படிக்கிறதுல, எதுவும் சிரமம் இருக்குமானு தெரியல.அதுனால நான் பேரை மாத்துறதுக்கு முன்னாடியே இத எழுதிர்றேன். நம்மளயும் நம்பி ஃபாலோ பண்றதுங்கிறது பெரிய விசயம் இல்லயா.அத வுட்ரக்கூடாதுனு தான் இம்புட்டு உசாரா இருக்கேன்.

ஏதாவது சிக்கல் இருந்தது அப்டின்னா, இதுதான் புது முகவரி

http://samarann.blogspot.com

தயவு செஞ்சு இத ஃபாலோ பண்ணிக்கோங்க.சிரமத்துக்கு மன்னிக்கவும்.

Saturday, July 11, 2009

ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..

இப்போ நானு "மாஸ்கோவின் காவிரி" படத்திலிருந்து "கிராமம் தேடி வாடா"னு ஒரு பாட்டு கேட்டுட்டு இருக்கேன். நல்லாத்தான் இருக்கு.

போன மாசம் எங்க கிராமத்துக்கு, பொங்கலுக்கு போயிருந்தேன்.எங்க அப்பா பிறந்து வளர்ந்ததெல்லாம் அங்கதான். ஸ்ரீவில்லிபுத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். நான் காலேஜ் போற வரைக்கும் ரெகுலரா பொங்கலுக்கு அங்க போயிடுவோம்.பொங்கலுன்னா அந்த ஊரை பொறுத்த அளவுக்கு மாஸ்டர் கடவுள் அருள்மிகு காளியம்மா தான்.காலேஜ் போனதுக்கு அப்புறம் அங்க போகலை.எங்க குடும்பம் அங்க பரம்பரையா பெரிய குடும்பம்கிறதுனால, எப்போவுமே கொஞ்சம் மரியாதை உண்டு. இந்த வாட்டி பொங்கலுக்கு போயிட்டு திரும்புனப்போ, மனசு கனத்தது என்னவோ உண்மைதான்.

இந்த வாட்டி மூணு நாளு லீவ் போட்டுட்டு காரை எடுத்துட்டு கெளம்பிட்டேன்.எனக்கு அங்க என்னோட நெருங்கின சொந்தக்காரங்கள தவிர நிறைய பேரத் தெரியாது.என்னய இத்தன பேருக்கு தெரியும், இவ்ளோ மரியாதை , பாசம் வச்சிருக்காங்கனு தெரிஞ்சப்போ மனசு உருகிருச்சு.

எங்க ஊருல ஒவ்வொரு பொங்கலுக்கும் பூ,சந்தனம், மஞ்சள் வச்சு சாமி செய்வாங்க. அதுக்கு பேரு கரகம். நைட்டு பூரா உக்காந்து கரகம் செஞ்சு முடிச்சிட்டு அதிகாலையில, சிங்க வாகனத்துல உக்கார வச்சு , ஊர்வலமா போயி, கோவில்ல இறக்கிருவாங்க.அப்புறம் பொங்க வச்சு, கிடா வெட்டி, சாயங்காலம் முளைப்பாரி எடுத்துட்டு, கரகத்தை கரைச்சிருவாங்க.இந்த வாட்டி காளியம்மன் கோவிலை புதுப்பிச்சுருந்தாங்க.இதுல முக்கியமான விசயம் சாமி செய்யுறதுக்கு பூ கொண்டு போறது.இந்த வாட்டி அந்த முறை எங்க குடும்பத்துக்கு வந்தது.சும்மா இல்லீங்க, 6000 ரூவா 7000 ரூவாக்கு பூ மட்டும்னா யோசிச்சு பாத்துக்குங்க, எவ்ளோ இருக்கும்னு.அது போக மாலைக்கு தனியா ஊர் பூரா செய்வாங்க.

சண்டை போட்ட சொந்தம், சண்டை போடாத சொந்தம்னு எல்லாரும் வந்துட்டாங்க.எங்க கொள்ளு தாத்தா கட்டுன வீட்டுலதான் இருப்போம்.அந்த வீடு கட்டி 107 வருசம் ஆச்சு.அந்த காலத்துலயே அவ்ளோ பெரிய வீடு.ஃபோட்டோ பாருங்க. நைட்டு பூ கொண்டு போறதுக்கு வைரசாமி, மேள தாளத்தோட எங்க வீட்டுக்கு வந்துட்டாங்க.எங்க வீட்டுல வச்சு பூஜை பண்ணி முடிச்சிட்டு, என்னய பூ தூக்க சொன்னாங்க.அப்பா வந்து " இல்ல சாமி இவனால் தூக்க முடியாது, ஆள் வச்சு தூக்கிக்கலாம்னு சொன்னாங்க.அதுக்கு சாமி " உங்க மகன் தான் தூக்குவான்" ..."தூக்குங்க தம்பி"னு சொல்லிட்டாரு.

கிழக்க பாத்து நின்னு , வைரசாமிகிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு பூக்கட்டை தூக்கி தலையில் வச்சேன்.அடிச்ச மேளத்துலயும், மனசுல இருந்த உணர்வுக்கும் உடம்பு ஒரு நிமிசம் உலுக்கிருச்சு.சத்தியமா என்னால அந்த உணர்ச்சிய விவரிக்க முடியல.மேள தாளத்தோட ஊர்வலமா போயி கோவில்ல எறக்கி வச்சாச்சு.பெரியவுங்க கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு, கோவில்ல இருந்து எங்க வீட்டுக்கு வர்ற வரைக்கும் அத்தன விசாரிப்பு.

"ராசா சுந்தரு எப்டிய்யா இருக்க..ஏன் இப்டி மெலிவா இருக்க..ஒரு வாய் சாப்புட்டு போய்யா"

"அவங்க அப்பனும் இப்படித்தான நரம்பா இருப்பான்"

"உன்ன பாத்தா அப்படியே பெரியய்யாவை பாத்த மாதிரி இருக்குய்யா.அம்புட்டு தொலவு கார்லயா வந்த.ஏன்யா ?"
(எனக்கு எங்க தாத்தா பேரத்தான் வச்சிருக்கு.அவரு இறந்த வீட்டுலதான் நான் பொறந்தேன்)

"ஏன்யா இம்புட்டு முடி வச்சிருக்க, வெட்டுய்யா"

"அவுக..அவுக இருக்குற ஊரு ஸ்டைல்ல இருக்காக,பேசாம இரு"

"காளியாத்தா சும்மாவா..எங்க போனாலும் வந்துதான் ஆகணும்..ஆத்தா அவ புள்ளகளை வர வச்சிருவா. யய்யா..வருசா வருசம் வந்துருய்யா"

"யய்யா..உன்னய தூக்கிகிட்டே திரிஞ்சேன் நீ சின்ன பயலா இருக்கப்போ..என்னயத் தெரியலனு சொல்ற"

"பயல என்னமோன்னு நினைச்சேன்..இம்புட்டு பாசமா இருக்கானே"

" நீ வேலை பாக்குற கம்பேனி நம்ம ஊருப்பக்கம் இல்லயாய்யா, மதுரைல கூடவா இல்ல"


இதெல்லாம் நான் வீட்டுக்கு வர்ற வரைக்கும் நடந்த பேச்சுல ஒரு பாதி தான்.கேட்டவிங்க எனக்கு என்ன முறை வேணும்னு கூட எனக்கு தெரியல.எங்க அப்பா ஒவ்வொரு முறையா சொல்லிட்டு இருந்தாரு.வீடு வந்து சேர்றதுக்குள்ள கண்ணு பூத்துருச்சு.இதுல ஒருத்தவுங்கள நான் பேச்சு வாக்குல, அக்கானு சொல்ல.."என்னய்யா, மதினிய போயி அக்கானு சொல்ற"னு ஒரு கெழவி கேட்டுச்சு. "தெரியல பாட்டி, ரொம்ப நாளு ஆச்சுல"னு சொன்னேன்."யய்யா... நான் உனக்கு பெரியம்மா முறைய்யா"னு சொல்ல..எனக்கே அசிங்கமா போச்சு.

வேல பாக்குற ஊருல, வீட்டை விட்டு வெளிய போனா,ஒருத்தனுக்கும் நம்மள தெரியாது, ஆனா அங்க.மூணு நாள்ல , 1000 கிலோமீட்டர் வண்டி ஓட்டிருப்பேன், ஆனா கஷ்டமே தெரியல.

எல்லாத்தயும் விட, எங்க பெரியப்பா ஒருத்தரு 85 வயசாகுது.காது விழுந்து போச்சு.ஸ்ரீவில்லிபுத்தூர்ல எங்க அக்கா வீட்டுல இருக்காரு.அவரை என் கார்ல பொங்கலுக்கு கூட்டிட்டு போனேன். பொங்கல் முடிஞ்சு கெளம்புறப்போ என் கை ரெண்டயும் புடிச்சிகிட்டு " 12 வருசமா .. என்னால இங்க வர முடியல..காளியாத்தால பாக்க முடியல, உன் புண்ணியத்துல பாத்துட்டேன்.இனி வர முடியுமான்னு தெரியல.என்னய கார்ல கூட்டிட்டு வந்துட்டியேய்யா."னு சொன்னப்போ, என்னால அழுகைய நிப்பாட்ட முடியல. கால்ல விழுந்து கும்பிட்டேன்."யய்யா.என்னய்யா என் கால்ல நீ விழுந்துட்டு"னு பதறிட்டாரு.

அதுதான்னே பாசம். எதயுமே எதிர்பார்க்காம, வர்ற உண்மையான பாசம்.கோடி ரூவா கொடுத்தாலும் கிடைக்காது.


பி.கு : என் மாப்பிள கணேசால இந்த வாட்டி வர முடியல.ஊருல ரெட்டப்புள்ளக மாதிரி சுத்திகிட்டு இருப்போம்.அவன் ஏன் வரலனு கேட்டவுகளுக்கு என்னால பதில சொல்ல முடியல.

எனக்காக மூணு நாள் லீவு போட்டு, என்கூட ஊருக்கு வந்த என் நண்பன் கார்த்திய என்னால நினைக்காம இருக்க முடியல.என்னய விட அதிகமா ஊருல மிங்கிள் ஆயிட்டான்.எல்லாரும் அவன கணேசுன்னு நினைச்சிட்டாங்க.எங்க வீட்டுல ஒரு புள்ள மாதிரி ஆயிட்டான்.

ஃபோட்டோவெல்லாம் பாத்துட்டு போங்க..கொஞ்சம் பெரிய இடுகை தான்.இருந்தாலும், எங்க ஊர்க்காரங்க என் மேல வச்சிருக்க பாசத்தவிட பெரிசு இல்ல.Friday, July 10, 2009

செமஸ்டர் ரிசல்ட்

செமஸ்டர் முடிஞ்ச உடனே நடக்கும் பேச்சு...

முதல் பெஞ்சு :

பேப்பர் கஷ்டம்தான் .. ஆனா எப்படியும் 95 மார்க் வந்துரும்

இரண்டாவது பெஞ்சு :

ச்சே..சின்ன தப்பு பண்ணிட்டேன்.. 10 மார்க் போயிடும்.

மூணாவது பெஞ்சு :

அடிச்சு கெளப்பிட்டோம்ல...கண்டிப்பா கிளியர் ஆயிடும் மாமா.

நாலாவது பெஞ்சு :

ஒவ்வொரு வாட்டியும் இதே பொழப்பா போச்சுடா..கிளியர் ஆகுமானு தெரியல மாப்ள (இதுல என்ன சந்தேகம்)

அஞ்சாவது பெஞ்சு :

ஹி..ஹி..அடிச்சு சொல்றேன்டா, என்னா பண்ணாலும் பாஸ் ஆக முடியாது.அடுத்த கப்பு ரெடி


கடைசி பெஞ்சு :....

.......மச்சான் , எக்ஸாம் ஹாலுக்கு வந்த இன்விஜிலேட்டர் , செம ஃபிகரு டா.

நன்றி : குபீர் ஜாலி
ஸ்பெஷல் நன்றி : பிரசன்னா

Wednesday, July 8, 2009

எங்ககிட்டயேவா.. போங்க பாஸ்

நம்மள மாதிரி ஒரு திறமைசாலி ஒரு நாளு , அவரோட காரை எடுத்துட்டு வெளிய கெளம்புனாரு.கெளம்பும் போது நம்மாளுக்கு ஃபுல் மப்பு.காரை பாம்பு மாதிரி ரோட்டுல நெளிச்சு நெளிச்சு ஒட்டிட்டு போனாரு.இதப்பாத்த போலீஸ்காரரு அவர ஃபாலோ பண்ணி புடிச்சிட்டாரு.பயபுள்ள குடிச்சிட்டு வண்டி ஓட்டுறானோனு போலீஸ்காரருக்கு ஒரு சந்தேகம்.

இவரு அவன புடிச்சு கேள்வி கேக்க ஆரம்பிச்சிட்டாரு..

போலீஸ் : சார், இந்த ப்ரீத்தலைசர்ல (போதையின் அளவை
அறியும்கருவி)ஊதுங்க ..

நம்மாளு : முடியாது சார்..எனக்கு ஆஸ்துமா.

போலீஸ் : சரி ஆஸ்பத்திரிக்கு வாங்க, ரத்தத்தை டெஸ்ட் பண்ணி
பாத்துக்கலாம்.
நம்மாளு : முடியாது சார், எனக்கு இரத்தசோகை நோய் இருக்கு.

போலீஸ் : யோவ், அப்போ யூரின் டெஸ்ட் ஆவது எடுக்கலாம்..

நம்மாளு : அதுவும் முடியாது சார், எனக்கு டயாபடீஸ் இருக்கு.(எப்பூடி!)

போலீஸ் : ங்கொய்யால , முதல்ல காரை விட்டு கீழ இறங்குடா .

நம்மாளு : முடியாது சார் .

போலீஸ் : ஏண்டா ?? சாவடிக்காதடா என்னய..

நம்மாளு : நான் குடிச்சிருக்கேன், இறங்குனா விழுந்துருவேன்.

போலீஸ் : அட பக்கிப்பயபுள்ள நீ குடிச்சிருக்கியானு கண்டுபுடிக்கத்தானடா,
உசிர் போற அளவுக்கு இவ்ளோ நேரம் கேள்வி கேட்டேன்.

Tuesday, July 7, 2009

குபீர் ஜாலி - சிவபெருமான்,சூடத்தில் லிங்கம்

எங்க குபீர் ஜாலிய பத்தி பேசுறதுக்கு முன்னாடி ஒருத்தனை பத்தி சொல்லியே ஆகணும்.அவன் தான் கிழவன் (எ) தமிழ்செல்வன்.பாலிடெக்னிக் முடிச்சிட்டு மூணாவது செமஸ்டர்ல எங்க கூட வந்து சேர்ந்தான்.பயபுள்ள வந்த கொஞ்ச நாள்லயே பச்சக்குனு எல்லார்கூடயும் ஒட்டிக்கிட்டான்.அப்புடி ஒரு பாசக்காரபய.அதே சமயம் கோவக்காரப்பயலும் கூட.அவன மண்டைக்கேத்தி பாக்குறதுதான் எங்க பொழுதுபோக்கே.அப்பபோ டெர்ரர் கெளப்பிருவான்.

இப்போ சொல்லப் போற விசயம் மூணாவது வருசம் படிக்கும் போது நடந்தது. நம்ம பயபுள்ளை எப்டினு ஒரு சாம்பிளுக்காக சொல்றேன்,அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா மெயின் மேட்டருக்கு போகலாம்.ஒரு நாள் நைட்டு 2 மணி இருக்கும், நானும் சங்கிலியும் என் ரூம்ல உக்காந்து ரெக்கார்ட் நோட் எழுதிட்டு இருக்கோம்.கிழவன் ரூம்ல இருந்து பாத்ரூம் போகணும்னா எங்க ரூமை தாண்டி தான் போகணும்.2 மணிக்கு துண்டை மட்டும் கட்டிகிட்டு, ஒரு வாளியை தூக்கிகிட்டு விருட்டுனு எங்க ரூம க்ராஸ் பண்ணி பாத்ரூம் பக்கம் போனான்.என்னடா இவன் இந்த நேரத்துக்கு, குளிக்க போறான்னு யோசிச்சு முடிக்கிறதுக்குள்ள ,குளிச்சிட்டு, தொப்பலா நனைஞ்சிட்டு, எங்கள மறுபடியும் க்ராஸ் பண்ணி போயிட்டான்.

பின்னாடியே அவன் ரூமுக்கு போயி பாத்தோம். உள்ள போன உடனே கொஞ்சம் டரியல் ஆனது என்னவோ உண்மைதான்.இந்த மூதேவி அந்த நேரத்துல..ஈரம் சொட்ட சொட்ட சூடம் ஏத்தி சாமி கும்பிட்டுகிட்டு இருக்கு.ஆத்தாடி அவனா நீ ?னு ஜூட் வுட்டாச்சு.ஒரே குழப்பம் , பசங்கள எழுப்பி சொல்றதா வேணாமானு.ஒரு அரை மணி நேரத்துல அவனே வந்தான் என் ரூமுக்கு.

ஒண்ணுமே பேசாம, கட்டில்ல உக்காந்துகிட்டான். சங்கிலி மெதுவா கேட்டான் "தம் வேணுமா"னு. என்னமோ தப்பு செய்ய சொன்னா மாதிரி "ம்ஹூம்"னு மண்டைய ஆட்டிட்டான்.ஒரே ஆச்சர்யம், ஏன்னா. இவன் இழுக்குறப்போ, ஃபில்ட்ர் சிகரெட்டே புள்ள பெத்துரும்.அந்த அளவுக்கு இழுப்பான்.சரி நம்மளா ஏதாவ்து கேட்டு எதுக்கு வாயக் குடுத்து சூ.. புண்ணாக்கணும் ஒண்ணும் சொல்லாம விட்டுட்டேன்.கொஞ்ச நேரத்துல அவனா ஆரம்பிச்சான்.

"மாப்ள என்னாச்சு தெரியுமா.. தூக்கத்துல இருக்கப்போ சிவபெருமான் வந்தாருடா"னு சொன்னான்.ஆத்தி,இது போற ரூட்டே சரியில்லைனு நினைச்சிகிட்டு இருக்கப்போ,அவன் மூஞ்சியில அப்புடி ஒரு பக்தி பரவசம்.இது வரைக்கும் கூட எங்களுக்கு ஒண்ணும் தோணல.அப்புறம் அடிச்சான் பாருங்க,"என்னை சுத்தி கிங்கரர்கள்லாம் (சிவனோட பாடிகார்ட்ஸ்) உக்காந்திருந்தாங்கடா..அதான் போயி குளிச்சிட்டு வந்தேன்.வந்து கற்பூரம் கொளுத்தினேன், அந்த கற்பூரம் அப்புடியே உருகி சிவலிங்கம் ஷேப்ல வந்துச்சுடா..உடம்பெல்லாம் புல்லரிச்சுடுச்சு"னான்.

இதுக்கு மேல பொறுக்க முடியல,பசங்கள எல்லாம் எழுப்பியாச்சு " ஏண்டா, நைட்டு பொழுது போகலனு , என்ன என்ன பண்றதுனு விவஸ்தை இல்ல.உன் ரூமுக்குள்ள எது வந்தாலும் உடனே உசிர் போயிடும்டா, அதுவும் நீ கட்டிருக்கியே ஒரு கைலி, அது நிக்க வச்சா அப்டியே அட்டை மாதிரி நிக்கும்.அதப் பாக்க சிவபெருமான் வந்தாரா ? ஒடிருனு" சொல்லியாச்சு.அவன் அதெல்லாம் ஏத்துக்குற மாதிரியே தெரியல.ரொம்ப ஒட்டுனதுக்கு அப்புறம் கடுப்பாகி கதவை சாத்திட்டு படுத்துட்டான்.காலையில இது ஹாஸ்டல் பூரா பரவி அவன டரியல் ஆக்கிட்டாங்க.


கிளாஸ்க்கு வந்து யார்ட்டயும் பேசல.பிரேக்ல ஆளக்காணோம்.எங்கடானு நாங்க வழக்கமா போற டீக்கடைக்கு போனா "அங்க உக்காந்து வழக்கம் போல, ஒரு ஃபில்டர் சிகரெட்டை புள்ள பெக்குற அளவுக்கு இழுத்துட்டு இருந்தான்".
"என்னடா தம் அடிக்க மாட்டேன்,சாமி கீமினு என்னம்மோ சொன்ன"னு கேட்டோம்.

அப்போக்கூட அந்த கிழட்டு மாக்கான் "ஆமாடா.. நேத்து நைட்டுல இருந்து என்னய ஓட்டி ஓட்டி, என்னோட கடவுள் நம்பிக்கைய போக வச்சிட்டீங்கடா ******களா"னு மீசயில மண்ணு ஒட்டாத மாதிரியே சொன்னான்.அடங்குடானு சொல்லிட்டு டீயைக் குடிச்சுப்புட்டு,கிளாஸுக்கு கெளம்பும் போது

" மத்த விசயம் கூட கனவா இருக்கலாம்டா..ஆனா அந்த சூடம் எரியும் போது
நான் அதுல லிங்கத்தோட உருவத்தை பாத்தென்டா"னு ஆரம்பிக்க..அம்புட்டு பேரும் தெரிச்சு ஓடிட்டோம்.அதுக்கப்புறம் அடுத்த ஒரு வாரம் பசங்க சரக்கடிக்கும் போது (அவனும்தான்) ஊறுகாய் செலவு மிச்சம்.

எவ்வளவு அடிச்சாலும் ஸ்டெடியா இருப்பேன்

1) உங்க கால் நனையுது/ஈரமா இருக்கா ??

காரணம் : நீங்க கிளாசை சரியா புடிக்கல.சரக்க கீழ ஊத்திக்கிட்டு இருக்கீங்க.
என்ன செய்ய : கொஞ்சம் கொஞ்சமா அட்ஜஸ்ட் பண்ணி, கிளாஸை நேரா
வைங்க பாப்போம்.

2) உங்க முன்னடி இருக்குற சுவரு பூரா வெளிச்சமா இருக்கா ??

காரணம் : மன்னிக்கணும், நீங்க தரையில மல்லாக்க படுத்துருக்கீங்க.
என்ன செய்ய :அப்டியே ஒரு 90 டிகிரி ஆங்கிள்ல எந்திரிங்க.

3)தரை நகர்ற மாதிரி இருக்கா ??

காரணம் : ராசா உன்னைய யாரோ இழுத்துட்டு போறாங்க‌
என்ன செய்ய : எங்க கூட்டிட்டு போறாங்கனாவது கேளு டா

4) நிறைய எதிரொலி கேக்குதா ??

காரணம் : உன் கிளாசை நீ காதுல வச்சிருக்க.
என்ன செய்ய : லூசுப்ப‌யலே, கிளாசை ஒழுங்கா வாய்க்கு மாத்து

5)உன்ன சுத்தி எல்லாரும் வெள்ளை டிரஸ் போட்டுருக்காங்க/ ரூம் ஆடுதா ??

காரணம் : நீ ஆம்புலன்ஸ்ல இருக்க செல்லம்
என்ன செய்ய : பேசாம படு. அவிங்க பாத்துப்பாங்க.

6)உங்க அப்பா, அண்ணன் , தம்பி யாரைப் பாத்தாலும், வித்தியாசமா இருக்கா?

காரணம் : அட் நன்னாரி நீ நுழைஞ்சிருக்கிறது வேற ஒருத்தன் வீடு
என்ன செய்ய : அவிங்க உன்னய டின்கரிங் பண்றதுக்குள்ள வெளிய ஓடி
போயிடு.
டிஸ்கி : இது நண்பன் ஒருத்தன் அனுப்பின மெயில்ல வந்தது, மொழிமாற்றம்
செஞ்சுருக்கேன்.

Monday, July 6, 2009

குபீர் ஜாலி-கணக்கு யானை

இது மூலமா நான் உங்களுக்கு சொல்ல வர்றது என்னான்னா, கணக்குல நான் ஒரு யானை (ஏன் புலி தான் இருக்கணுமா ??) நம்மளுக்கும் கணக்கு பாடத்துக்கும் சுத்தமா ஒத்து வராது. இந்த ஞானம் எனக்கு வர்றதுக்கு 15 வருசம் ஆச்சு. நாலாங்கிளாஸ் படிக்கிறப்போ, ராஜி மிஸ் எல்.சி.எம். சொல்லிக்குடுத்ததில் இருந்து கடைசி செமஸ்டர்ல operational research
பேப்பர்ல ஆப்பு வாங்குற வரைக்கும் இது தொடர்ந்து வந்துச்சுனா பாத்துக்கோங்க.


பிளஸ் 2ல கொள்ளை கொள்ளையா மார்க் எடுத்துப்புட்டு, முதல் செமஸ்டர் கணக்கு பரீட்சைக்கு முன்னாடியே எங்க அம்மாக்கு கால் பண்ணி " நான் பெயிலாடுவேன்" சொல்ற அளவுக்கு தைரியசாலியாக்கும். அத செஞ்சும் காமிச்சோம்ல...சும்மாவா ?? internal 12 மார்க் external 10 மார்க்..எப்பூடி ??

என்னாதான் நம்ம நெஞ்ச நிமித்தி தனியா ஆப்பு வாங்குனாலும் , மொத்தமா வாங்குற ஆப்புல இருக்குற சொகமே தனி.முதல் செமஸ்டர்ல வாங்குன கப்பை ரெண்டாவது செமஸ்டர்ல தூக்கிட்டு, அரியர் இல்லாம இருந்த நேரம்.மூணாவது செமஸ்டர் போறப்போ தான், குபீர் ஜாலியோட ஆரம்பகால அடிமட்ட உறுப்பினர்களெல்லாம் . "மாப்ள திருநகர்ல ரூம் எடுக்கலாம்"னு முடிவு பண்ணி, சனியன் சடை போட ஆரம்பிச்சது. அஞ்சாவது ஸ்டாப்ல நானும் ஸ்ரீராமும் ஒரு ரூம்ல தங்கிருந்தோம். மூணாவது ஸ்டாப்ல மாமன்,பரமன் ரெண்டு பேரும் தங்கிருந்தாங்க.அவிங்க ரெண்டு பேரும் மெக்கானிக்கல் , நாங்க ஐ.டி. அவுங்க ரூமுக்கு அப்போ அப்போ விசிட்டிங் வர்ற சங்கிலி எங்களோட கிளாஸ் மேட்.இப்புடியே பிக்கப் ஆகி எல்லாரும் பிளான் பண்ணி நாசமா போயிட்டு இருந்தோம். மூணாவது செமஸ்டர் கணக்கு எக்சாம் வந்துருச்சு, ஊரே எங்க ரூம்ல உக்காந்து படிக்க ஆரம்பிச்சுச்சு.படிப்புனா அப்புடி ஒரு படிப்பு. காலையில பரீட்சை, ஒரு பயலுக்கும் ஒண்ணும் புரியல.மாமி மட்டும் முக்கி முக்கி படிச்சிட்டு இருந்தான். நாலாவது சேப்டர்ல இருந்துதான்டி கம்பல்சரி கொஸ்டின் வரும்னு கண்டுபுடிச்சிட்டோம் (அத எப்டி கண்டுபுடிச்சோம்னு தனி பதிவே போடலாம்).அப்போ தான் கவனிக்கிறேன்.என்னோட (எங்களோட) நாலாவது சேப்டர் ஜெராக்ஸ்‍ ஐ காணோம்.


நான் : டேய் மாப்ள,இந்த நாலாவது சேப்டர் ஜெராக்ஸ் எங்கடா ?? இன்னும்
நான் அதை படிக்கல்..

சங்கிலி : அத மாமன் மதியம் வந்து அவன் ரூமுக்கு எடுத்துட்டு போயிட்டான்.

நான் : டுபுக்கு அத எதுக்குடா குடுத்து வுட்ட...இங்க என்னத்த புடுங்குறதாம் ?

சங்கிலி : அவன்கிட்ட இல்ல, கேட்டான், குடுத்துட்டேன்.

நான் : அதுக்கு உன் ஜெராக்ஸ் அ எடுத்து குட்றா , எதுக்கு என்னுத குடுத்த ?

மாமி : டேய், அது என்னோடது , 2 நாள் நீ வச்சிருந்தா உன்னோடதாயிருமா ?

ரைட்டு விடு, "சங்கிலி வாடா போயி வாங்கிட்டு வந்துருவோம், கொள்ளை தூரம் நடக்கணும்டா"னு சொன்னேன். "நான் வரலை நீ வேணும்னா போயிட்டு வா"னு சொல்லிட்டான். வேற வழி நைட்டு 11.30க்கு கெளம்பி நடக்க ஆரம்பிச்சிட்டேன்.மாமன் ரூம் அவன் தங்கி இருந்த வீட்டுல மாடியில இருந்துச்சு, சும்மா சொல்லக்கூடாது , அருமையான வீடு, நம்ம "புன்னகை தேசம்" படத்துல வர்ற மாதிரி. மேல ஏறும்போதே, கீழ இருந்த கிழவி ஒப்பாரி வக்க ஆரம்பிச்சுருச்சு, அதுகிட்ட எஸ்கேப் ஆகி ரூமுக்கு போனா , மாமன் வெளிய உக்காந்து வழக்கம் போல ஒரு பிரவுன் டவுசரை போட்டுகிட்டு இருந்தான். கையில பீடி, பக்கத்துல டேப்ல "ஈரமான ரோஜாவே..என்னைப் பார்த்து மூடாதே"னு "இசை"யராஜா பாட்டு கரைஞ்சு ஓடுது.

நான் : எலே.. நாளைக்கு என்ன பரீட்சைனு தெரியும்ல.கணக்கு டா.
அவிங்கிட்டலாம் ஒண்ணும் நொட்ட முடியாது, கப்பு குடுத்தா
கடைசி வரைக்கும் பொண்டாட்டி மாதிரி கூட்டிகிட்டே
போகணும்டா.படிச்சிட்டியா?

மாமன் : தம் இருக்கா ??


நான் : போடா டொபாக்கோ மண்டையா.உன்கிட்ட சொன்னென் பாரு, நான்
என் ஜெராக்ஸ் எடுத்துட்டு போறேன்.

மாமன் : பாஸாயிருவ போல ??


ரூமுக்குள்ள பரமன் உக்காந்து படிச்சிட்டு இருக்கான், "மாப்ள ஜெராக்ஸை எடுத்துக்குறேன் டா"னு சொல்லிட்டி திரும்புனேன். அதுக்குள்ள பரமன் " கம்பல்சரி கொஸ்டின் நாலாவது சேப்டர்னு பேசிக்கிறாங்க "னு சொன்னான்.ஆகா, அப்போ நம்ம கண்டுபுடிச்சது சரி தான்னு ஒரு சந்தோசம்.(கவனிக்க "கண்டுபுடிச்சது"). "என்ன கொஸ்டின்னும் லீக் ஆயிடுச்சுடா"னு சொன்னான். நம்ம்ள விட பெரிய ஆளா இருக்கான்னு ,"குடுறா மாப்ள"னு கேட்டேன். 2 பக்கத்துக்கு கொச கொசனு ஒரு கணக்கு.என்னடா ஒண்ணுமே புரியலனு கேட்டதுக்கு,"எங்களுக்கு மட்டும் தெரியுமா ?? மூடிக்கிடு மனப்பாடம் பண்றா டுபுக்கு"னு சொல்லிட்டான்.பத்து நிமிசத்துல தலைகீழா மனப்பாடம் பண்ணிட்டோம்ல."சரிடா நான் ரூமுக்கு போயிஅவிங்கட்ட கணக்கை எழுதி காமிச்சு , படிக்க சொல்றேன்"னு சொல்லிட்டு கெளம்பிட்டேன்.

அது ரொம்ப கஷ்டமா இருக்குனு மத்தவிங்க படிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க.எனக்கு ஒரு அபார நம்பிக்கை , எப்படியும் இந்த கணக்கு நாளைக்கு கேட்டுருவாங்கனு.காலையில 48ம் நம்பர் பஸ் புடிச்சு காலேஜ்க்கு போயாச்சு. எங்க பசங்க எல்லாரும் ரெஜிஸ்டர் நம்பர் 70ல இருந்து 80க்குள்ள தான். அடுத்து அடுத்து உக்கார்ற மாதிரி தான் வரும்.மாமனும் பரமனும் மெக்கானிக்கல்.அதுனால அவிங்க வேற ஹால்.

கொஸ்டின் பேப்பரை பாத்த உடனே "பக்"னு இருந்துச்சு. முந்துன நாள் ஒரு கணக்கு மனப்படம் பண்ணேன்ல..அதோட கேள்வி என்னான்னு தெரியாமயே மனப்பாடம் பண்ணிருக்கேன். அதுனால..கம்பல்சரி கொஸ்டின் ல இருந்தது அதுதானானு தெரியல.ரைட்டு வுடு .அது என்ன கேள்வியா இருந்தா எனக்கென்ன.. நான் படிச்சது வீணாகக்கூடாதுனு விறு விறுனு எழுத ஆரம்பிச்சா..ரெண்டு வரிக்கு மேல போகல. அதத் தவிர மத்த கேள்வியெல்லாம் பாத்த மாதிரிக்கூட இல்ல.சரி நம்ம சோலி முடிஞ்சிருச்சு, பயலுக என்ன ஆனாங்கனு பாக்குறதுக்கு திரும்புறேன், சங்கிலி பேய் அறைஞ்ச மாதிரு உக்காந்துருக்கான், ஸ்ரீராம் பென்சில்‍ஐ வச்சு ரொம்ப சீரியசா காது குடைஞ்சுட்டு இருந்தான்.அப்பாடா.. நமக்கு துணைக்கு ஆள் இருக்குனு ஒரு நிம்மதி. மாமி பாசாயிருவானோன்னு ஒரு சினன் பயம் எங்களுக்கு இருந்தது என்னமோ உண்மைதான்.பேப்பரை கட்டி குடுத்துட்டு கெளம்பிட்டோம்.

வெளிய ரமணா படத்துல வர்ற கடத்தல் சீன் மாதிரி ஒரே பரபரப்பு.அடங்கொய்யால..ஒருத்தனுக்குமே..ஏன் காலேஜ்ல பாதி பேருக்கு கொஸ்டின் பேப்பர் புரியல ( ஹைய்யா....) வந்து வருத்தப்பட்டவிங்கட்டல்லாம், "முடிஞ்சத பேசுறவன் முட்டாள்"னு தத்துவத்தை உதிர்த்துட்டு பஸ் ஏறிட்டோம். நமக்கு துணையா ஒரு 100 பேராவது இருப்பாங்க்ங்கிற பூரிப்பு.


போறப்போ.."பரமா, நேத்து நீ ஒரு கணக்கு குடுத்தீல..இதுதான் கம்பல்சரி கொஸ்டினா வரும்னு..அதத்தான் கேட்டாங்களாடா.. நான் பதிலத்தான் மனப்பாடம் பண்ணேன், கேள்விய பாக்கலடா..அதுனால இன்னைக்கு குழப்பமாயி..ரெண்டு வரிக்கு மேல எழுதலடா, நீ எழுதிட்டியா"னு கேட்டேன்.


அதுக்கு அவன் சொன்ன பதில்,

"மாப்ள , அத நான் நாளைக்கு தான்டா எழுதுவேன்..ஏன்னா, அது கணக்கு கொஸ்டின் இல்லடா...FLUID MECHANICS பேப்பர்ல வர்ற ஒரு ப்ராப்ளம். நீ எல்லாம் படிச்சு முன்னேறி..என்னத்த போ"
பின்குறிப்பு : ஆனா அந்த எக்சாம்ல ஒரு 280 பேரு ஃபெயில் ஆகி நம்ம மானத்த காப்பாத்துனாங்க..அது வேற மேட்டர்.

Friday, June 19, 2009

ராஜபக்சேவிடம் 32 கேள்விகள்

ஆளாளுக்கு 32 கேள்வி கேக்குறீங்க.இவன்கிட்ட கேட்டு பாப்போமே.ஆமா..
இந்த பிச்சைக்காரப் பயலுக்கெல்லாம் எதுக்கு 32 கேள்வி.இவனுக்கு 9 கேள்வி போதாது.என்ன பதில் சொல்றான்னு பாப்போம் வாங்க..

1. உனக்கு ஏண்டா நாயே இந்த பேரு வந்துச்சு? இந்த பேரு உனக்கு புடிக்குமா டா ?

அய்யே ..எனக்கு இந்த பேரு புடிக்காது.எனக்கு புடிச்ச பேரு..கோணங்கி கொரில்லா ..


2. கடைசியா எப்படா அழுத பொட்டப்பயலே ?

அத ஏன் கேக்குறீங்க ..நக்கீரன் அட்டைப்படம் பாத்தப்போ..மூணு நாள் ரூம் போட்டு அழுதேன் தெரியுமா

3.உன் கையெழுத்து உனக்கு புடிக்குமாடா தார்டின் தலையா ?

என் தலைஎழுத்து என்ன ஆகும்னு பயந்துகிட்டு இருக்கேன்.நீங்க வேற.

4. டேய் பன்னி வாயா .. வேற யார் கூடயாவது உடனே நட்பாயிருவியா ?

எனக்கு கரப்பாம்பூச்சி பாத்தாலே கக்கா வந்துரும். நான் எப்படி பிரபாகரன் அண்ணனை எதிர்த்து நிக்குறது.பாத்தீங்களா உங்களுக்கே சிரிப்பு வருதுல்ல.அதுனால அவர யாரு எதிர்த்தாலும் நான் கூட சேர்ந்துக்கிடுவேன்.

5.நீ குளிப்பியானே தெரியல .. சரி விடு..கடல்ல குளிக்க புடிக்குமா..அருவியில குளிக்க புடிக்குமா டா ?

பிரபாகரனை பார்த்து ..பயத்துல வேர்வையில குளிச்சு..குளிச்சு இப்போ அதுவே பழகி போச்சு..ஹி..ஹி..

6. உன்னைய நாயிக்கு கூட புடிக்காது.அத விடு.உனக்கு உன்கிட்ட புடிச்ச விஷயம் என்ன ? புடிக்காத விஷயம் என்ன ?

பிடிச்சது - பிரபாகரனைப் பார்த்து பயப்படாத மாதிரியே நடிக்கிறது..
பிடிக்காதது - எவ்வளவு முயற்சி பண்ணாலும் அவர பத்தி நினைச்சாலே , பயத்துல என் டவுசர்லையே மூச்சா போறது.

7.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

பொய் சொல்ல போறோம் ..பொய் சொல்ல போறோமே...

8.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

நானே ஒரு சாத்தான் தாங்க..

9.எப்படி இருக்கணும்னு ஆசை?

தலைவர் பிரபாகரன் மாதிரி வீரமா இருக்கணும்னு ஆசை தான்..ஆனா இப்போ தான் ஒரு விஷயம் புரிஞ்சது "பன்னி எல்லாம் புலியாக முடியாதாமே"


"அவ்ளோதான் உனக்கு கேள்வி.கிளம்பு."

"முடியாது.எல்லாருக்கும் 32 கேள்வி.எனக்கு மட்டும் 9 கேள்வியா.இதுல ஏதோ உள்குத்து இருக்கு."

"சொன்னா கேளு போயிரு."

"முடியாது"

"எந்திச்சி ஒடிப்போயிருடா.பக்கத்து வீட்டு எல்.கே.ஜி படிக்கிற பையனை வர சொல்லிருவேன்."

" நான் எல்.கே.ஜி பையனுக்கெல்லாம் பயப்பட மாட்டேனே"

"அந்த பையன் பேரு பிரபாகரன்"

"என்னது பிரபாகரனா..அய்யய்யோ...@$#$@#$@^$#%#$#^#$^"

யார்றா அங்க இந்த சீக்கு புடிச்ச சொறி நாய தூக்கி தூர வீசுங்கடா..

Thursday, June 18, 2009

அர‌வாணிக‌ள் - தீட்டு அல்ல..மூட‌ர்க‌ளே !!

நம்மள மாதிரி சராசரி மனுஷங்க எல்லாருமே அரவாணிகளை ஒரு தீட்டுப்பொருளாத்தான் பாக்குறோம்.ரொம்ப நாளா இதப் பத்தி ஒரு பதிவு போடணும்னு நினைச்சிட்டு இருந்தேன்.

தயவுசெஞ்சு கேக்குறேன் அவுங்கள பாத்து பயப்படவோ..அருவருப்போ படத்தேவையில்லை.கிட்டதட்ட அவுங்களும் ஊனமுற்றவுங்க தான்.உணர்வுகளால் ஊனப்பட்டவுங்க.என்கூட இருக்குற பசங்களே அவுங்கள திட்டுறத பாத்துருக்கேன்.சிக்னல்ல அவுங்க வந்தா விறு விறுனு கார் கண்ணாடிய ஏத்தி விடுறது.பழிப்பு காட்டுறது.தயவு செஞ்சு அப்படி செய்யாதீங்க.

அவுங்க யாசகம் கேட்டு வர்ற முறை வேணும்னா தப்பா இருக்கலாம்.ஆனா அவுங்க சமூகத்தால இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டவுங்க.எப்பொவுமே நான் சிக்னல்ல அவுங்கள பாத்தேன்னா காசு குடுக்குறது வழக்கம்.ஒரு நாள் எங்க அப்பா என் கார்ல வந்துட்டு இருந்தப்போ, சிக்னல்ல வந்து காசு கேட்டாங்க.பின்னாடி உக்காந்திருந்த என் நண்பன் அவுங்கள திட்டுனான். நான் கண்டுக்காம பர்ஸ்ல இருந்து காசு எடுத்து குடுத்தேன்.என் நண்பன் "அவளுக்கு எதுக்கு காசு குடுக்குற..இப்டி இருக்கப்போவே இவளுகளுக்கு இவ்வளவு திமிரு. உழைச்சு சம்பாதிக்க வேண்டியது தான"னு சொன்னான்.

"பிச்சை எடுக்குறவுங்களுக்கு மத்தியில இவுங்க எவ்வளவோ பரவாயில்லை.ஊனமுற்றவுங்க மாதிரி இவுங்களும், வேலை செய்ய வாய்ப்பு இல்லாமதான் இந்த நிலைமைக்கு வந்துருக்காங்க.உழைச்சு சம்பாதிக்க சொல்றியே.. நீ உங்க வீட்டுல அவளுக்கு வேலை போட்டு குடுப்பியா..மாட்டேல்ல..அப்போ மூடிக்கிட்டு இரு"னு சொல்லிட்டேன்.

அது வரைக்கும் பேசாம இருந்த எங்க அப்பா " நீ சொல்றது கரெக்ட் தான் டா..இது வரைக்கும் நான் இத யோசிக்காம இருந்துட்டேன்"னு சொன்னாரு. நம்ம நல்லா இருக்கப்போ..ஒரு ரெண்டு ரூவா , மூணு ரூவா அவுங்களுக்கு குடுக்குறதுல குறைஞ்சு போயிர மாட்டோம்.காசு குடுக்காட்டியும் பரவாயில்லை..குறை சொல்லி அசிங்கப்படுத்தாதீங்க.எல்லாராலயும் ஒதுக்கப்பட்டு இந்த நிலைமைக்கு வந்துருக்காங்க அவுங்க.ஒரு குடும்பத்துல பிறந்து, ஒரு குறையை காரணம் காட்டி..வீட்டுல இருந்து அப்பா,அம்மாவே
ஒதுக்கி வச்ச கொடுமயை தாண்டி வந்துருக்காங்க.அவுங்க‌ செத்தா தூக்கிப் போட‌ யாரு இருக்கானு யோசிச்சிருக்கீங்க‌ளா ?

இதுல‌ பாதி ஈன *** நாயிங்க‌..அவுங்க‌ள‌..உட‌ல் சுக‌த்துக்கு ப‌ய‌ன்ப‌டுத்திட்டு..அப்புற‌ம் 9னு வேற‌ சொல்ற‌து.

அவுங்க‌ளோட‌ குறையை சொல்லி..கேவ‌ல‌ப்ப‌டுத்தற‌ ப‌டிச்ச‌ முட்டா நாயிங்க‌ளுக்கு ஒண்ணு சொல்றேன்..அது ப‌ர‌ம்ப‌ரை நோய் இல்ல‌... நாளைக்கு உன் பிள்ளைக்கு கூட‌ அதே நிலைமை வ‌ர‌லாம்...

Wednesday, June 17, 2009

குபீர் ஜாலி ‍ - ஃப்ருட்ஷாப் ப்ராஜக்ட்

நாம எல்லாம் கம்ப்யூட்டர் ல பெரிய புலினு நினைச்சிகிட்டு இருக்காங்க வீட்டுல.எங்க வீட்டுல 1000 வாட்டி சொல்லி பாத்துட்டேன், " நான் சாப்ட்வேர் எஞ்சினியர் இல்ல... நெட்வொர்க் எஞ்சினியர்"னு..அத பத்தி எல்லாம் அவுங்க கண்டுக்கிறதா இல்லை.

எனக்கு சிஸ்கோ ல வேல கிடைச்சப்போவே, "என்னய்யா..டி.வி. கம்பெனிக்கு வேலைக்கு போற"னு கேட்டாங்க.இத எதுக்கு சொல்றேன்னா.. நம்மள ஏதோ பில் கேட்ஸ் ரேஞ்சுக்கு நினைச்சுட்டாங்க.எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டு இருக்கேன்,விசயத்துக்கு வர்றேன்.

ரெண்டாவது செமஸ்டர். கம்ப்யூட்டர் லேப்ல உக்காந்துருக்கோம். எனக்கு இடது பக்கம் ஷங்கர் ராம் (எங்க செட்லயே ரொம்ம்ம்ம்ம்ப புத்திசாலியான பையன்.ரெண்டாவது செமஸ்டர்லயே, லைப்ரரி ஃபைல்ஸ்லாம் நோண்டிகிட்டு இருப்பான், நம்மளுக்கு அடிஷன் ப்ரோக்ராம் போட்டாலே,15 கம்பைலேஷன் எர்ரர் சொல்லும்.இனிமே அவன மாமினு கூப்பிடுவோம்), வலது பக்கம் சங்கிலி.அப்போ தான் விண்டோஸ் டெஸ்க்டாப்‍‍ ஐ முதல் முதல்லா பாக்குறோம், நானும் சங்கிலியும்.மாமி என்னடான்னா "சி" க்கு உள்ள போயி ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சிட்டான்.எங்களுக்கு "ஸ்டார்ட்" பட்டனை அமுக்குனா "விண்டோஸ் ப்ராம்ப்ட்" வரும்னு கூட தெரியல.சங்கிலி அத மாமிகிட்ட கேட்டு என்கிட்ட சொன்னான்.அப்போதான் நான் ஒரு பெரிய சந்தேகத்தை கேட்டேன்."அந்த ப்ராம்ப்ட் போறதுக்கு என்ன செய்யணும்"னு...அந்த அளவுக்கு தான் நம்ம புத்திசாலித்தனம் இருந்துச்சு அப்போ.

இப்படி இருந்த நாங்க கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி, ஒரு லெவல்க்கு வந்துக்குட்டு இருந்தோம். மூணாவது செமஸ்டர்ல "எக்ஸ்"னு ஒருத்தன் லேட்டரல் என்ட்ரி வந்து சேர்ந்தான்.எங்க "குபீர் ஜாலி" செட் உருவாகி கூடி கும்மி அடிக்க ஆரம்பிச்சது அப்போ தான்.

செமஸ்டர்க்கு முன்னாடி எங்களுக்கு "சி++" லேப் எடுத்த மேடம், மினி ப்ராஜக்ட் பண்ணனும்னு சொல்லிருச்சு.அதுவும் தனித்தனியா தான் பண்ணனும்னு சொல்லிருச்சு.ஒண்ணுமே பண்ண முடியாதுனு தெரிஞ்சும் அசராம களம் இறங்கியாச்சு.மாமி என்னடான்னா "ரெயில்வே ரிசர்வேஷன்" ப்ராஜக்ட் பண்றேங்கிறான்,இன்னொருத்தன் "டெலிஃபோன் பில்லிங்"னு சொல்றான். நான் என்ன பண்றதுனு தெரியல.லேப்ல உக்காந்து வெறித்தனமா கோட் அடிச்சிக்கிடு இருக்கோம்.

அப்போதான் எக்ஸ் என்னை,சங்கிலியை,மாமியை மூணு பேரையும் கூப்பிட்டான்."மினி ப்ராஜக்ட் முடிச்சிட்டேன்"னு சொன்னான்.எங்களுக்கு எல்லாம் ஒரே ஷாக்காயிடிச்சு " இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்துருக்கு பாரேன்"னு சொல்லாத குறைதான்.என்ன ப்ராஜக்ட்டா மாப்ளனு கேட்டதுக்கு "ஃப்ரூட் ஷாப்" ப்ராஜக்ட்னு சொன்னான்.எங்களுக்கு அப்போவே உரைச்சிருக்கனும்.விட்டுட்டோம்.


"ரன் பண்றேன் , பாக்குறீங்களா"னு கேட்டுப்புட்டு, F9 அமுக்குனான். கம்பைலேஷன் எர்ரர் ஒண்ணுமே இல்ல. ரன் பண்ணப்புறம் வந்த அவுட்புட் இப்படி தான் இருந்துச்சு

Enter the price for 1Kg of apple in Rs:

10

Enter the number of Kg you want:

5

Total amount to be paid : 50

Thanks !!!எனக்கு மூத்திரத்தை மூணு நாள் அடக்கி வச்சிருந்தா கூட அவ்வளவு கடுப்பு வந்துருக்காது.அத விட ஜாஸ்தியா சிரிப்பு வருது. அவன் அதை மினி ப்ராஜக்ட்னு முடிவே பண்ணிட்டான்.அப்புறம் அந்த டொமாங்கி மண்டையனுக்கு ," நீ பண்ணிருக்கது மினி பராஜக்ட் இல்லடா, மல்டிப்ளிகேஷன் ப்ரோக்ராம்"னு புரிய வக்கிறதுக்குள்ள டங்கு வாரு அந்து போச்சு..

Monday, June 15, 2009

என்னிடம் 32 கேள்விகள் - வாழ்க்கை என்றால் என்ன ??

எனக்கு இந்த தொடர்பதிவை அனுப்புன ஜோவுக்கு நன்றி..அவரு அனுப்பி ரொம்ம்ப நாள் ஆச்சு..என்ன பண்றது.. நம்ம ஒரே பிஸி...அதான் எழுத லேட் ஆயிடுச்சு...


1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?

இது என் தாத்தாவின் பெய‌ர்.(என் அப்பாவோட‌ அப்பா).என‌க்கு ஆர‌ம்ப‌த்துல‌ என்னோட‌ பெய‌ர் புடிக்க‌ல‌.ஆனா அப்புற‌ம் தான் தெரிஞ்ச‌து,எங்க‌ குடும்ப‌த்துல‌ எல்லாமே சுத்த‌மான‌ த‌மிழ் பேரு தான் வைக்கிறாங்க‌னு.உதார‌ண‌த்துக்கு, வான‌தி,அருள்மொழி,பாண்டிமாதேவி,இள‌வேனில்,இசை நிலா,ம‌துராந்த‌க‌ன்.அதுல‌ இருந்து, ச‌ரி பேருல‌யாவ‌து த‌மிழ் இருக்க‌ட்டும்னு நினைக்க‌ ஆர‌ம்பிச்சு,இப்போ ந‌ல்ல‌ த‌மிழ் பேருங்கிற‌தால‌,ரொம்ப‌ புடிச்சிப்போச்சு.


2.கடைசியாக அழுதது எப்பொழுது?

தெரியல..

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?

கையெழுத்துன்னா..இந்த signature-அ கேக்குறீங்களா..இல்ல.. handwriting ஆ ??

4).பிடித்த மதிய உணவு என்ன?

அம்மா செய்யுற‌ சாம்பார்,உளுந்த‌ம்ப‌ருப்பு,வெந்த‌ய‌க்க‌ளி,கோழி,க‌றிக்குழ‌ம்பு,கோலா உருண்டை.
அஞ்ச‌ப்ப‌ர் அன்லிமிட்ட‌ட் நான்‍வெஜ் மீல்ஸ்..இது மாதிரி நிறைய‌ இருக்கு.

(என்னய நேர்ல பாத்தீங்க..அப்புற‌ம், இந்த‌ கேள்விய‌ என்கிட்ட‌ கேக்க‌ மாட்டீங்க‌)

5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?

அதெல்லாம் ப‌ச்ச‌க்குனு ஒட்டிக்குவேன்...இருக்குற‌ வ‌ரைக்கும் யாரையுமே ப‌கைச்சுக்க‌ கூடாதுங்கிறது என்னோட‌ பாலிஸி.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?

க‌ட‌ல்ல‌ நீந்தி போயிட்டு, கொஞ்ச‌ தூர‌ம் போன‌ உட‌னே திரும்பி க‌ரைய‌ பாத்தா "ப‌க்"னு ஒரு ப‌ய‌ம் வ‌ருமே..அது ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப‌ புடிக்கும்.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?

நீங்க‌ பாக்க‌ சொல்ற‌ ஆளு ஆணா, பெண்ணா.


8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?

நான் நிறைய செலவு செய்யுறது மட்டும் தான் எனக்குப் புடிக்காது

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?

இடது பக்க பாதியா...வலது பக்க பாதியா..கேள்விய தெளிவா கேளுங்கப்பா..

10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?

அப்டி எல்லாம் ஒண்ணும் இல்ல...அம்மா கூட இருந்தா நல்லா இருக்கும்..ஆனா நம்மளே இந்த நாசமா போன பெங்களூருல குப்பை கொட்ட முடியல..பாவம் அவுங்க வந்தா என்ன பண்ணுவாங்க.அதுனால அத நினைச்சு வருத்தப்படுறது இல்ல.

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?

வேணாம்..அப்புறம் வருத்தப்படுவீங்க..

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?

சப்பா..சப்பா..என்னாச்சப்பா..ஐசா..கைசா..மேட்டரு..
சும்மா சும்மா வராதுடா..குல்லா சேட்டு டாட்டரு.
டல்லு பப்பி .. டோலு டப்பி..டகுலு..பிகுலு..உஜாரு..

13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?

ஹே...
க‌ட‌லைனா ப‌ருப்பு,
த‌மிழுன்னா சிற‌ப்பு,
சுட்டா அது நெருப்பு,
கால்ல‌ போட்ற‌து செருப்பு,

என‌க்கு புடிச்ச‌ க‌ல‌ரு க‌ருப்பு.14.பிடித்த மணம்?

ஊருல‌ எங்க‌ வீட்டுல‌ இருக்குற‌ ப‌வ‌ள‌ம‌ல்லி பூவோட‌ வாச‌னை.ஃபாரீன் சென்ட்டெல்லாம் ப‌த்த‌டி த‌ள்ளி நிக்க‌ணும்.என‌க்கு அத‌ விட‌ ரொம்ப‌ புடிச்ச‌து,
"அந்த‌ ம‌ர‌த்த‌டியில‌ கிருஷ்ண‌ர் ப‌டுத்துருப்பாரு"னு எங்க‌ அம்மா வெள்ள‌ந்தியா சொல்ற‌து.


15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?

சத்தியமா யாரைக்கூப்டனு தெரியல.பேசாம இத திருப்பி ஜோவுக்கே அனுப்பிரலாம்னு இருக்கேன்.


16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?

அங்க‌ க‌ஷ்ட‌ப்ப‌டுற‌ ந‌ம்ம‌ இன‌த்துக்கு, உத‌வி செய்ய‌ சொல்லி எழுதி இருந்த‌ ப‌திவு.

17. பிடித்த விளையாட்டு?

நம்ம எல்லாத்தையுமே விளையாட்டா எடுத்துக்கிறதால..எல்லாமே புடிக்கும்.

18.கண்ணாடி அணிபவரா?

க‌ண்ணாடி அணிப‌வ‌ர்க‌ளில் 50% பேர் ரொம்ப வெறித்த‌னமான அதிபுத்திசாலிக‌ளாம். நானும் அதில் அட‌க்க‌ம்.

19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?

"ம‌ற‌ந்தேன் மெய்ம‌ற‌ந்தேன்" "சின்னப் பறவைகளே"னுலாம் ப‌ட‌ம் வந்துருக்கு தெரியுமா, அத‌யே 3 வாட்டி பாத்துருக்கேன். என்கிட்ட‌ போயி..ஹே ஹேஹ் ஹே..

20.கடைசியாகப் பார்த்த படம்?

அய்ய‌ய்யோ...ஜீவாவுக்கு கோவ‌ம் வ‌ந்துருச்சே!!!

21.பிடித்த பருவ காலம் எது?

அதெல்லாம் எல்லா வெங்காய‌மும் புடிக்கும்.ப‌ருவ‌ம்னு சொன்ன‌ உட‌னே ஞாப‌க‌த்துக்கு வ‌ருது.

"ப‌ருவ‌த்துல‌ ப‌ன்னிக்குட்டி கூட‌ அழ‌கா இருக்கும்"னு சொல்லுவாங்க‌ள்ல‌..
அதுல‌ ஒரு சின்ன‌ ச‌ந்தேக‌ம்.

ந‌ம்ம‌ ப‌ருவ‌த்துல‌ இருக்க‌ப்போ ப‌ன்னிக்குட்டி அழ‌கா தெரியுமா...இல்ல‌
ப‌ன்னிக்குட்டி ப‌ருவ‌த்துல‌ இருக்க‌ப்போ, ந‌ம‌க்கு அது அழ‌கா தெரியுமா..
த‌ய‌வு செஞ்சு சொல்லுங்க‌ ...

யாராவ‌து அது வேற‌ ப‌ருவ‌ம்,இது வேற‌ ப‌ருவ‌ம்னு ஆர‌ம்பிச்சீங்க‌..பிச்சுப்புடுவேன்..பிச்சு..


22. படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்:

சாரு நிவேதிதாவோட‌ புத்த‌க‌ம் ஒண்ண‌ ப‌டிச்சு .... என்ன‌ய‌ நானே வெறி ஏத்திக்கிட்டு இருக்கேன்.

23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?

எனக்கு புடிச்ச மாதிரி படம் வந்தா பழைய படத்த மாத்துவேன்.இல்லாட்டி, அப்டியே இருக்கும்.இப்பொ இருக்கது நக்கீரன்ல வந்த கெத்தான தலைவர் படம்.

24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?

பிடிக்காதது..கடலை போடுற பையன் அடிக்கிற மொக்க காமெடிக்கு...கெக்கபிக்கனு பொண்ணுங்க சிரிக்கிறது... அப்புறம்....
யமஹா சத்தம்.. நான் ஓட்டுனா மட்டும் புடிக்கும்.

பிடித்தது..என் கார்ல இருக்குற ஆடியோ சிஸ்டம்..சும்மா அதிரும்ல.


25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?

கோசானி,இம‌ய‌ம‌லைக்கு அருகில்.

26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?

அது நிறைய இருக்கு..

நாக்கால கண்ணைத் தொடுவேன்....
ஸ்டாண்டு போட்ட சைக்கிள சூப்பரா ஒட்டுவேன்...
பைக்ல ரிவர்ஸ் கியர் போடுவேன்..

இது போதுமா..


27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நான் ஏமாறுவது. நல்லா யோசிச்சு பாருங்க..எல்லா மனக்கஷ்டத்துக்கும்,இது தான் அடிப்படை.பாசத்தை நம்பி ஏமாறுவது, நட்பை நம்பி ஏமாறுவது,இது மாதிரி.


28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

If I am good, I am good. If I am bad, I am terrible.


29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?

"சாத்தாதால்"னு ஒரு இடம்.முடிஞ்சா போயி பாருங்க..பெண்டு கழன்றும். நானே நினைச்சாலும்,இனிமே அங்க போக முடியாது.

30.எப்படி இருக்கணும்னு ஆசை?

இப்போ இருக்குற மாதிரி இருந்தா போதும்.

31.கணவர்(மனைவி) இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?

பாஸ்.

32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க...

நம்ம ஜட்டிய நம்ம மட்டும் தான் போட முடியும்..உயிர் நண்பனா இருந்தாக்கூட..அவன்கிட்ட அத தர முடியாது..இது தான் வாழ்க்கை.

ஆயிரத்தில் ஒருவனில் யுவன் இசை ??

ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் கேட்டேன்.எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.செல்வராகவனோட ட்யூன் செலக்ஷன் மேல எப்பொவுமே எனக்கு ஒரு நம்பிக்கை உண்டு. பாடல்கள் நம்பி கேக்கலாம்.இந்த படத்தோட பாடல்கள் எனக்கு பிடிச்சிருந்தாலும், ஏதோ ஒரு குறை, யுவன் பண்ணிருந்தா இன்னும் பெட்டரா பண்ணிருப்பாரோனு தோணுது.

ஜி.வி.மன்னிக்கவும்.

"உன் மேல ஆசைதான்" பாட்டை கேக்கும் போது ‍"சர்வம்" படத்துல இருந்து "அடடா வா அசத்தலாம்" இளையராஜா பாடுன பாட்டு நினைவுக்கு வர்றத் தவிர்க்க முடியல.interlude bit கூட அதே மாதிரி தோணுது. நீங்களே கேட்டு சொல்லுங்களேன்.

படம் ஏதோ அகழ்வாராய்ச்சி, அப்புறம் சோழர் சாம்ராஜ்யம் பற்றி இருக்கும்னு நினைக்கிறேன்.பாடல்கள், விளம்பரம் எல்லாம் அப்படி தான் இருக்கு.படம் நல்லா இருக்கும்னு ஒரு நம்பிக்கை .. பாக்கலாம்.

Monday, June 1, 2009

ஒரு பின்னூட்டதிற்கு கிடைத்த பதில்..இதில் எது சரி ?

சென்ற பதிவில் இட்டது போல, இன்னொரு நண்பரின் பின்னூட்டத்தையும் தனி பதிவாக இட்டுள்ளேன்.சென்ற் பதிவுகளை வாசித்துவிட்டு வ்ந்தால் விசயம் இன்னும் தெளிவாக விளங்கும்.

எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை இந்த பின்னூட்டத்தில் என்னவென்றால், த.வி.பு அமைப்பு மட்டுமே பெண்கள் விடயத்தில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பு, அவர்கள் வெளியில் என்ன செய்தார்கள், தாய்லாந்தில் என்ன செய்தார்கள் என்பதிருக்கட்டும், ஆனால் அவர்கள் செல்வாக்குப்பிரதேசங்களிலோ, அவர்களுக்கு அடங்கிய மக்களிடமோ அவர்கள் கண்ணியமாகத்தான் நடந்துள்ளார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு 8 வருடம் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். கருணா பிரிந்து சென்றபின் அவரின் பெயரை களங்கப்படுத்துவதற்கும் துரோகிப்பட்டம் சுமத்துவதற்குமான ஒரு முயற்சியாக இது இருக்கலாம். ஆனால் பொதுவில் த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது. நானொன்றும் த.வி.பு விட்ட வரலாற்றுத்தவறுகளுக்கு வக்காளத்துவாங்குபவன் இல்லை. ஆனால் தமிழன் இவ்வளவுகாலம் சீலையுரிபடாமல் இருந்தது அவர்களால்தான். இல்லாவிட்டால் நாயைவிடக்கீழ்த்தரமாகத்தான் நாங்கள் பேரினவாதிகளால் நடத்தப்பட்டிருப்போம். தமிழனென்று சொல்லி சிற்றளவேனும் கவுரவமாக நாமிந்த மண்ணில் நடந்து திரிந்ததுக்கு அவர்கள் செய்த யுத்தம் தான் காரணம். நாம் எமக்குள் சண்டை பிடிக்கிறது உள்வீட்டுப்பிரச்சனை. வேறொருத்தன் எனது வீட்டுக்குள் வந்து ஏனிங்கு நீயிருக்கிறாய் என்று கேட்பதைவிட வீட்டுக்குள் இருப்பவன் வந்து கேட்பது ஒப்பீட்டளவில் கவுரவமானது. நானொன்றும் யுத்தத்தால் பாதிக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவனல்ல. இதுவரைக்கும் 4 முறை இடம்பெயர்ந்திருக்கிறேன், ஊரில இருந்த ஒரு வீட்டில இப்ப மிச்சமிருக்கிறது தலைவாசல் மட்டும்தான். யுத்தம் என்னையும் பாதிச்சிருக்குத்தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு ஏறிமிதிக்க மிதிபட்டுப்போற அளவுக்கு எனக்கு மானம் மரத்துப்போகேலை. தமிழீழமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் எண்டு முடிவெடுக்க நியாயம் இருக்கு, அதுக்காக உவங்கள் செய்யிற அநியாயம் எல்லத்தையும் பாத்து தலைவிதி உதுதான் எண்டு தலையில அடிச்சுப்போட்டு அவன் குட்டக்குட்ட குனியிற அளவுக்கு நானின்னும் வரேலை. பின்னூட்டமிட்டவர் சொல்லுறமாதிரி வன்னிக்கை இருந்து அடிபட்டு தேறி வந்தவன் தான் நானும், ஆனா மானம் விட்டு உசிர் பெரிசெண்டு உதைபட நான் தயாரில்லை. இது என்ரை கருத்து...ஒருத்தரோடையும் வில்லங்கத்துக்கு சண்டை பிடிக்கோணும் என்பதற்காக இல்லை