Friday, May 29, 2009

எனது பதிவுக்கு கிடைத்த ஒரு பின்னூட்டம் , கண்டிப்பாக படியுங்கள்

"இலங்கையில் பத்து ஏக்கர் பண்ணை, இங்கே தச்சு வேலை"

என்னுடைய இந்த பதிவுக்கு, அன்பர் "உண்மை விரும்பி" இட்ட பின்னூட்டத்தை, அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக,இங்கே தனி பதிவாக எழுதி உள்ளேன்.உங்கள் கருத்துகளையும் சொல்லவும்.

உண்மை விரும்பி said...
அன்பரே!
இன்றை இலங்கை மக்களின் பிரச்சினை தனி ஈழம் அல்ல. தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், உறைவிடமும் உணவும் தான் என்பதை மறவாதீர். உம்மைப் போன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிஈழம் தனிநாடு என்று கதைத்துக் கொண்டு இருப்போர் ஒரு தடவை இங்கு வந்து எறிகணைகளுக்கு மத்தியில் மாட்டுபட்டால் தெரியும். இங்கு இன்று அகதி முகாம்களில் உடல் அங்கங்களை இழந்து உறவுகள், உடமைகளை இழந்து கற்பிழந்து இனி இழக்க ஏதும் இல்லாத நிலையில் இருக்கும் உறவுகளிடம் சொல்லிப் பாருங்கள் தமிழ்நாடு தமிழீழம் கதையை. உங்களை செருப்பால் அடிக்கும். பட்டால் தானே தெரியும் எதுவும். நமக்கு தமிழ் ஈழம் கொடுத்தால் மட்டும் நாங்கள் என்ன ஒற்றுமையாய் அமைதியுடன் வாழப் போகின்றோமா? அப்பொழுதும் நான் யாழ்ப்பானத்தான் நீ வன்னியான் அவன் மட்டக்களப்பான் இவன் தோட்டக்காட்டான் என்று வேற்றுமை பாராட்டி அடித்துக்கொள்ளத்தானே போகின்றோம்.”சிங்களவன் தேவ....மகன்” என்று ஓர் வசனத்தை உங்கள் பதிவில் இட்டு உள்ளீர்கள். அதில் சிங்களவன் என்பதுடன் தமிழ் என்பதையும் சேர்த்துக் கொண்டால் சரியென்பேன். ஏனென்றால் இங்கு வன்னியிலும் கூட எத்தனையோ பாலியல் ரீதியா பிரச்சினைகள் வி.பு. தளபதிகளால் ஏற்படவில்லையா(உ.தா. முன்னால் வி.பு உறுப்பி்னர் கருணா,அவர் வி.பு விட்டு வெளியேறிய பிறகுதான் அவர் அவளுடன் தொடர்பு இவளுடன் படுத்தார் என்ற செய்தியெல்லாம் வெளியிடப்பட்டது வி.புவால் அப்படியானால் அதற்கு முன்பே அவர்களுக்கு தெரிந்த தானே உள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ சொல்ல முடியாத விடயங்கள் வி.புவிலும் ஏனைய ஒட்டு தமிழ் குழுக்களினாலும் நடந்தேறியுள்ளது.)

இங்கு வாழும் மக்களின் இப்பொழுதைய என்னோட்டம். எங்களுக்கு தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இவனுங்களை விட சிங்கள அரசே பரவாயில்லை என்பதுதான்.

நண்பரே !!

தங்கள் வலியும் வேதனையும் எனக்கு புரிகிறது.ஆனால் அதை நேரடியாக அனுபவிப்பது நீங்கள்தான் என்பதால் , உங்களுக்கு தான் அதன் வீரியம் தெரியும்.

//உம்மைப் போன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிஈழம் தனிநாடு என்று கதைத்துக் கொண்டு இருப்போர் ஒரு தடவை இங்கு வந்து எறிகணைகளுக்கு மத்தியில் மாட்டுபட்டால் தெரியும்.


உண்மைதான் நண்பரே .. அதற்காக கடல் கடந்து அனைத்தையும் இழந்து தவித்து கொண்டிருக்கும் என் உறவினர்களுக்காக நானும் , என்னைப் போல் ஒத்த எண்ணம் கொண்ட நண்பர்களும் , மனதில் இருப்பதைத் கொட்டாமல் இருக்க முடியுமா.

//பட்டால் தானே தெரியும் எதுவும்.

நாங்க‌ள் நீங்க‌ள் ப‌ட்ட‌ துன்ப‌த்தை போல் எதுவும் அனுபவித்த‌து இல்லை.
ஆனால் , என் இன‌ம் அங்கே பாடு ப‌டுவ‌தை நினைத்து தீராத‌ வேத‌னையில் இருக்கிறோம் என்ப‌து ம‌ட்டும் உண்மை.வேத‌னைப்ப‌டுவ‌தைத் த‌விர‌ வேறெதுவும் செய்ய‌ இய‌லாத‌ பேடிக‌ளாக‌ இருக்கிறோம் என்ப‌து தான் நித‌ர்ச‌ன‌ம்.


//இங்கு வாழும் மக்களின் இப்பொழுதைய என்னோட்டம். எங்களுக்கு தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இவனுங்களை விட சிங்கள அரசே பரவாயில்லை என்பதுதான்.

எங்க‌ளுக்கு அங்கே இருக்கும் நிலைமையை தெரிய‌ப்ப‌டுத்துவ‌து ஊட‌க‌ங்க‌ள் தான். எஞ்சிய‌ ம‌க்க‌ளை பாதுகாப்ப‌த‌ற்காக‌ சிங்க‌ள‌ அர‌சே ப‌ர‌வாயில்லை என்று ஏற்றுக் கொண்டாலும், ஒரு இன‌த்தை அழித்துக் கொண்டு இருக்கும் அர‌சை விம‌ர்சிக்க‌ கூடாதா..


என்னுடைய‌ ப‌திவு ஏதெனும் வித‌த்தில் உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்தி இருக்குமானால் , அத்ற்காக‌ நான் உங்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

Thursday, May 28, 2009

என்ன சொல்வது இதைப் பற்றி

என் நண்பன் சமீபத்தில் , ஒரு வலைத்தளத்தில் பார்த்த போட்டோ..இதுக்கு வேற விளக்கம் தேவையில்லைனு நினைக்கிறேன்


நன்றி : http://cartoonworld.mywebdunia.com/

இலங்கையில் பத்து ஏக்கர் பண்ணை , இங்கே தச்சு வேலை

இதுவும் என் நண்பன் ஒருத்தன் சொன்ன விசயம் தான்.அவனோட ஊரு பேரு நான் சொல்ல விரும்பல.அவுங்க வீட்டுல தச்சு வேலை செய்ய வந்த ஒருத்தர் , அவன்கிட்ட சொன்ன விசயம்.

அவரு பேரு ஜேசு. அவரு அங்க இருந்து தப்பி வந்த தமிழர்கள்ல ஒருத்தர்.என் நண்பன் வீட்டுல ஒரு மாசம் தச்சு வேலை செஞ்சாரு.இவன் ஆபீஸ் லீவு போட்டுட்டு ஊருக்கு போனப்போ தான் அவரை பாத்திருக்கான்.அவரு தான் இலங்கைல இருந்து அகதியா தப்பிச்சு வந்ததையும்,அங்க ஒரு 10 ஏக்கர் பண்ணைக்கு முதலாளி அப்டிங்றதையும் சொல்லிருக்காரு.

இவன் ஊருக்கு கிளம்பும் போது , அவரு இவன் கிட்ட வந்து , சில மெடிக்கல் சர்டிபிகேட், ரிப்பொர்ட் எல்லாம் குடுத்து , உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது இருந்தா இத காமிச்சு , ட்ரீட்மென்ட் எடுக்க முடியுமானு பாருங்கனு சொல்லிருக்காரு.அந்த ரிப்போர்ட் எல்லாம் அவரொட பொண்ணோட ரிப்பொர்ட்.உடம்புக்கு என்னனு கேட்டப்பொ அவரு சொன்னது ,

"அந்த பொண்ணுக்கு 12 வயசு, உடம்புல இடது பக்கம் எதுவுமே வேலை செய்யாது , கழுத்து ஒரு இடத்துல நிக்காது, நிமிர்ந்து உக்கார முடியாது, படுத்தே தான் இருக்கணும்.உக்காரணும்னா..யாராவது புடிக்கணும்."
அந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை.அவரு அழுதுகிட்டே சொன்னது.

நீங்க ரொம்ப மென்மையானவரா இருந்தா, இதுக்கு மேல படிக்காதீங்க.

அவுங்க இலங்கைல இருந்தப்போ, வீட்டுக்கு ரெயிட் வந்த சிங்கள‌த் தே...பசங்க‌, கர்ப்பிணியா இருந்த அவரோட மனைவிய சுவத்துல சாத்தி நிக்க வச்சு, ரெண்டு பேரு கைய புடிச்சிகிட்டு ,மாறி மாறி வயித்துல உதைச்சிருக்கானுங்க..இதுக்கு மேல என்னால் அதப் பத்தி விவரிச்சு எழுத முடியல.


குறிப்பு : என்னடா இப்படி எழுதுறானேனு யாரும் என்னய தப்பா நினைச்சுக்காதீங்க.இந்த கொடுமைக எல்லாத்தயும் பதிவு பண்ணனும்.

அதை எல்லாம் விட முக்கியமா..சில வரலாறு தெரியாத முட்டாள் நாயிங்க, தமிழன் போயி இலங்கைல இடம் கேட்டா,கொல்லத்தான் செய்வான்னு நியாயம் பேசுறானுங்க.அந்த நாயிங்களுக்கு அஙக நடக்குற கொடுமைகள புரிய வக்கிறதுக்காகத்தான்.உங்களுக்கு இது தப்பா தெரிஞ்சா பின்னூட்டத்துல காரணம் சொல்லுங்க.

நான் இப்டி எழுதுறத நிறுத்திக்கிறேன்.

Wednesday, May 27, 2009

இலங்கையில் ஒரு தமிழ் குடும்பத்தின் நிலை

போன வாரம் சென்னை போயிருந்தப்போ என் நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். நம்ம தலைவனை பற்றி ஏடாகூடமான தகவல்கள் வந்துகிட்டு இருந்த சமயம்.அவன் வீட்டுல மதிய சாப்பாடு முடிச்சிட்டு உக்காந்து பேசிட்டு இருந்தப்போ , நம்ம இனம் அங்க படுற கஷ்டத்த பத்தின பேச்சு தவிர்க்க முடியாம போச்சு.

தலைவர்ல ஆரம்பிச்ச பேச்சு, ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் , அண்ணன் திலீபன் மரணம் , புரட்சி தலைவர் உதவி , இப்டியே போயி கடைசில .. முதுகெலும்பில்லாத சிங்கள நாயிங்க நமக்கு பண்ணுன கொடுமையில வந்து நின்னுச்சு. அப்போ என் நண்பனோட மனைவி சொன்ன ஒரு விஷயம்.அவுங்களோட சொந்தகாரங்களுக்கு இலங்கைல நாலு நகைக்கடை இருக்குது போல. அத விட்டுட்டு இங்க வர முடியாம அங்கேயே இருக்காங்களாம்.

நம்ம குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்பும் போது, அப்டி பாத்து போகணும்,இப்டி பாத்து போகணும்னு சொல்ற மாதிரி, "பாப்பா டம்முன்னு பெருசா சத்தம் கேட்டுச்சுன்னா , பக்கத்துல இருக்குற பதுங்கு குழியில போயி இப்படி உக்காந்துக்கணும்"னு சொல்லி குடுத்து அனுப்புவாங்களாம். விவரம் தெரியாத அந்த குழந்தைகளுக்கு பாவம் என்ன புரிஞ்சிருக்கும்.

வீட்டுல திடீர்னு கதவ தட்டி ஒரு நூறு ஆர்மிக்காரனுங்க திபு திபு னு உள்ள புகுந்து ..சோதனைன்னு சொல்லிட்டு , இருக்குறத எல்லாம் உடைச்சு போட்டுட்டு , மெத்தை எல்லாம் கிழிச்சிட்டு போய்டுவாங்களாம்.அவிங்க போற வரைக்கும் பேசாம , குழந்தைகளை கூட்டிட்டு ஒரு ஓரமா போயி ஒதுங்கி உக்காந்துருவாங்களாம்.வீட்டுல இருக்குற எல்லாத்தையும் இப்டி உடைச்சிட்டு போறாங்களேனு கவலப்படறத விட , ஆளுகள ஒன்னும் பண்ணாம போறாங்க னு மனச தேத்திகிட்டு இருப்பாங்களாம்.நம்ம வீட்டுல ஒரு போலீஸ்காரன் வந்தாலே நமக்கு மனசு ஆயிரம் விதமா யோசிக்கும். நூறு ஆர்மிக்காரன், வீட்டுல பொம்பளயாளுக தனியா இருக்கப்போ வந்தா மனசு தாங்குமா.

அதுவும் இல்லாம, வீட்டுல இருக்குற பொம்பள புள்ளைங்க பெரியபுள்ளை ஆகுற வரைக்கும் அங்க இருப்பாங்களாம்.பெரிய பொண்ணு ஆன உடனே கூட்டிட்டு வந்து மதுரைல சொந்தக்காரங்க வீட்டுல விட்டுட்டு போயிருவாங்களாம். மறத்தமிழனுக்கு வந்த நிலைமைய பாத்தீங்களா ?

அவுங்க அங்க இருந்து மதுரைக்கு வருசத்துக்கு ஒரு தடவை வர்றப்போ , அங்க நடக்குற கொடுமைய பத்தி வீட்டுல யாரும் கேக்க மாட்டாங்களாம் . ஏன்னா , அவுங்க குண்டு சத்தம் கேக்காம , நிம்மதியா தூங்குறது இங்க வர்ற பத்து நாள் தான். அப்போ அத பத்தி கேட்டு கஷ்டப்படுத்த கூடாதுன்னு.

இப்டியே பொலம்பிகிட்டு எழுத வேணாம்னு நினைச்சேன்.ஆனா நம்மளால இதைத்தவிர வேற ஒண்ணும் புடுங்க முடியாது . (சத்தியமா சொல்றேன் .. யோசிச்சு பாருங்க).

தலைவர் திரும்பி வருவாரு..அவரால தான் இந்த கொடுமைக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட முடியும்.

குறிப்பு : எந்த ப்ளாக்ல படிச்சேன்னு ஞாபகம் இல்ல . யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஒருத்தர் எழுதி இருந்தாரு. எழுதுன விஷயம் எனக்கு புடிச்சிருந்தது , சாராம்சம் இது தான்.

"நேதாஜியின் மரணத்தைப் போல , பிரபாகரனின் மரணமும் உலகுத்துக்கு மர்மமா தான் இருக்கணும்.அதுதான் என் ஆசை "னு . தலைவர் மேல இவ்வளவு அன்பு வச்சதுக்கு நன்றி.

ஆனா, மனுஷனுக்கு தான் சாவு வரும் ... கருப்பசாமிக்கு சாவெல்லாம் கிடையாது ..நம்ம தலைவர் நம்ம இனத்த காக்குற கருப்பசாமி .

காசு வேணாம் .. சாப்பாடு மட்டும் போதும்

சில விஷயங்கள் காலம் கடந்ததுக்கு அப்புறம் யோசிக்கும் பொது மனசு ரொம்ப கஷ்டப்படும் , " இப்படி பண்ணிருக்கலாமோ, அப்படி பண்ணிருக்கலாமோ" னு .அது மாதிரி நேத்து எனக்கு நடந்த ஒரு விஷயம்.

நேத்து மத்தியானம் நானும் என்கூட வேல பாக்குறவரும் சாப்பிடறதுக்காக திப்பசந்திரானு ஒரு ஏரியாவுக்கு போனோம்.சி.வி.ராமன் நகருக்கு பக்கத்துல தான் இந்த ஏரியா இருக்கு."பரீஸ்" னு ஒரு கேரளா ஹோட்டல் , நல்லா இருக்கும் னு கூட்டிட்டு போனாரு.நல்லா ஜனரஞ்சகமான ஏரியா.நான் பைக்ல இருந்து இறங்கிட்டேன்.அவரு பார்க் பண்ண போயிருந்தாரு.

அப்போ பக்கத்துல யாரோ கூப்பிடற மாதிரி இருந்துச்சு.ஒரு பொண்ணு நின்னுகிட்டு இருந்துச்சு."அண்ணா .. ஒரு நிமிஷம்" னு கூப்பிட்டா. உடனே , நான் இந்த பக்கம் தள்ளி வந்துட்டேன்.என் பின்னாடியே வந்து " அண்ணா காசெல்லாம் வேண்டாம் .. ரொம்ப பசிக்குது .. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு.ஏதாவது வாங்கிக் குடுங்களேன் " னு கேட்டுச்சு.
அப்போ தான் நான் நல்லா கவனிச்சேன்.அந்த பொண்ணைப் பார்த்தா பிச்சை எடுக்குறவ மாதிரி தெரியல.ஒரு 27 இல்ல 28 வயசு இருக்கும்.நம்ம ஊரு பொண்ணுன்னு மூஞ்சில எழுதி ஒட்டாத குறை தான்.கையில ஒரு கூடை.என் கூட சாப்பிட வந்தவரு "ஏதாவது சில்லறை இருந்தா குடுத்து அனுப்பிரு"னு சொன்னாரு.எனக்கு ஏனோ மனசு வரல.
"ஏங்க..அது காசு கேக்கலங்க..பசிக்குது னு சாப்பாடு கேக்குது "னு சொன்னேன்.சில்லறை இல்லைன்னு சொல்லிட்டு ஹோட்டல் உள்ள போயிட்டோம்.

சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கும் போது..மனசே சரியில்லை.தப்பு பண்ணிட்டமோ..அந்த பொண்ணுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துருக்கலாமோ னு...ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு.கையில வேற ரெண்டு பேர் கிட்டயும் நூறு ரூவா நோட்டு தான் இருந்துச்சு.நான் ரொம்ப டல்லா இருக்குறத பாத்துட்டு ..என் கூட வந்தவரு "இதெல்லாம் இப்படி தான் ஏமாத்துவாங்க"னு சொன்னாரு.
எனக்கு என்னமோ அப்டி தோணல."அண்ணேன் பசிக்குது னேன் " னு சொன்னது ரெம்ப ஒரு மாதிரியா இருந்துச்சு."காசு கேட்டாவது தப்பா நினைச்சிருக்கலாம்..சாப்பாடு தான கேட்டா வாங்கி குடுதுருக்கலாமோ ...ஏன் இந்த ஹோட்டல் லையே பக்கத்துக்கு டேபிள் ல உக்காந்து சாப்பிட சொல்லிருக்கலாமோ "னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.ஏற்கனவே தலைவன் விஷயத்துல ஒரு வாரமா மனசு சரி இல்லை .சட்டுன்னு முடிவு பண்ணி எந்திச்சு .. சில்லறை மாத்திட்டு .. ரோட்டுல இறங்கி அந்த பொண்ண தேட ஆரம்பிச்சிட்டேன்.சாப்பாடு வாங்கி குடுத்துட்டு வந்துரலாம்னு.ஒரு பதினஞ்சு நிமிஷம் தேடி பாத்தேன் , கிடைக்கல.

திருப்பி வந்து சாப்பிட உக்காரும் பொது .. ஏனோ சாப்பாடு சரியாய் இறங்கல .நான் தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு உணர்வு இருந்துகிட்டே இருக்கு.

எவ்வளவோ பிச்சைக்காரங்கள பாத்துருக்கோம்..ஆனா இவ்வளவு தூரம் என்னைய பீல் பண்ண வச்சதுக்கு காரணம் என்னனு யோசிச்சு பாத்தா..அந்த பொண்ணு என்னைய "அண்ணா" னு கூப்பிட்டது மட்டும் இல்ல..."காசு வேணாம் .. சாப்பாடு வாங்கி குடுங்க "னு சொன்னதும் ..நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தும் தான்னு நினைக்கிறேன்.

ஒரு பொண்ணு இப்டி கெஞ்சுனதுக்கே மனசு தாங்கல. அங்க கடல் கடந்து நம்ம அக்கா தங்கச்சி எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு..நினைக்காம இருக்க முடியல.