Wednesday, May 27, 2009

காசு வேணாம் .. சாப்பாடு மட்டும் போதும்

சில விஷயங்கள் காலம் கடந்ததுக்கு அப்புறம் யோசிக்கும் பொது மனசு ரொம்ப கஷ்டப்படும் , " இப்படி பண்ணிருக்கலாமோ, அப்படி பண்ணிருக்கலாமோ" னு .அது மாதிரி நேத்து எனக்கு நடந்த ஒரு விஷயம்.

நேத்து மத்தியானம் நானும் என்கூட வேல பாக்குறவரும் சாப்பிடறதுக்காக திப்பசந்திரானு ஒரு ஏரியாவுக்கு போனோம்.சி.வி.ராமன் நகருக்கு பக்கத்துல தான் இந்த ஏரியா இருக்கு."பரீஸ்" னு ஒரு கேரளா ஹோட்டல் , நல்லா இருக்கும் னு கூட்டிட்டு போனாரு.நல்லா ஜனரஞ்சகமான ஏரியா.நான் பைக்ல இருந்து இறங்கிட்டேன்.அவரு பார்க் பண்ண போயிருந்தாரு.

அப்போ பக்கத்துல யாரோ கூப்பிடற மாதிரி இருந்துச்சு.ஒரு பொண்ணு நின்னுகிட்டு இருந்துச்சு."அண்ணா .. ஒரு நிமிஷம்" னு கூப்பிட்டா. உடனே , நான் இந்த பக்கம் தள்ளி வந்துட்டேன்.என் பின்னாடியே வந்து " அண்ணா காசெல்லாம் வேண்டாம் .. ரொம்ப பசிக்குது .. சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு.ஏதாவது வாங்கிக் குடுங்களேன் " னு கேட்டுச்சு.
அப்போ தான் நான் நல்லா கவனிச்சேன்.அந்த பொண்ணைப் பார்த்தா பிச்சை எடுக்குறவ மாதிரி தெரியல.ஒரு 27 இல்ல 28 வயசு இருக்கும்.நம்ம ஊரு பொண்ணுன்னு மூஞ்சில எழுதி ஒட்டாத குறை தான்.கையில ஒரு கூடை.என் கூட சாப்பிட வந்தவரு "ஏதாவது சில்லறை இருந்தா குடுத்து அனுப்பிரு"னு சொன்னாரு.எனக்கு ஏனோ மனசு வரல.
"ஏங்க..அது காசு கேக்கலங்க..பசிக்குது னு சாப்பாடு கேக்குது "னு சொன்னேன்.சில்லறை இல்லைன்னு சொல்லிட்டு ஹோட்டல் உள்ள போயிட்டோம்.

சாப்பாடு ஆர்டர் பண்ணிட்டு காத்திருக்கும் போது..மனசே சரியில்லை.தப்பு பண்ணிட்டமோ..அந்த பொண்ணுக்கு சாப்பாடு வாங்கி குடுத்துருக்கலாமோ னு...ஒரு மாதிரி கஷ்டமா இருந்துச்சு.கையில வேற ரெண்டு பேர் கிட்டயும் நூறு ரூவா நோட்டு தான் இருந்துச்சு.நான் ரொம்ப டல்லா இருக்குறத பாத்துட்டு ..என் கூட வந்தவரு "இதெல்லாம் இப்படி தான் ஏமாத்துவாங்க"னு சொன்னாரு.
எனக்கு என்னமோ அப்டி தோணல."அண்ணேன் பசிக்குது னேன் " னு சொன்னது ரெம்ப ஒரு மாதிரியா இருந்துச்சு."காசு கேட்டாவது தப்பா நினைச்சிருக்கலாம்..சாப்பாடு தான கேட்டா வாங்கி குடுதுருக்கலாமோ ...ஏன் இந்த ஹோட்டல் லையே பக்கத்துக்கு டேபிள் ல உக்காந்து சாப்பிட சொல்லிருக்கலாமோ "னு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு.ஏற்கனவே தலைவன் விஷயத்துல ஒரு வாரமா மனசு சரி இல்லை .சட்டுன்னு முடிவு பண்ணி எந்திச்சு .. சில்லறை மாத்திட்டு .. ரோட்டுல இறங்கி அந்த பொண்ண தேட ஆரம்பிச்சிட்டேன்.சாப்பாடு வாங்கி குடுத்துட்டு வந்துரலாம்னு.ஒரு பதினஞ்சு நிமிஷம் தேடி பாத்தேன் , கிடைக்கல.

திருப்பி வந்து சாப்பிட உக்காரும் பொது .. ஏனோ சாப்பாடு சரியாய் இறங்கல .நான் தப்பு பண்ணிட்ட மாதிரி ஒரு உணர்வு இருந்துகிட்டே இருக்கு.

எவ்வளவோ பிச்சைக்காரங்கள பாத்துருக்கோம்..ஆனா இவ்வளவு தூரம் என்னைய பீல் பண்ண வச்சதுக்கு காரணம் என்னனு யோசிச்சு பாத்தா..அந்த பொண்ணு என்னைய "அண்ணா" னு கூப்பிட்டது மட்டும் இல்ல..."காசு வேணாம் .. சாப்பாடு வாங்கி குடுங்க "னு சொன்னதும் ..நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு மாதிரி இருந்தும் தான்னு நினைக்கிறேன்.

ஒரு பொண்ணு இப்டி கெஞ்சுனதுக்கே மனசு தாங்கல. அங்க கடல் கடந்து நம்ம அக்கா தங்கச்சி எல்லாம் எவ்வளவு கஷ்டப்படுறாங்கனு..நினைக்காம இருக்க முடியல.

7 comments:

பித்தன் said...

உறுத்தல் இருந்தாதான் மனுசன் இல்லாட்டி அதுக்கு பேரு வேற -:)

சரவணகுமரன் said...

:-(

Joe said...

நல்ல பதிவு.

இலங்கைத் தமிழர்களுக்கு உதவ வேண்டி நான் இட்ட பதிவு.
http://joeanand.blogspot.com/2009/05/blog-post_26.html

கவின் said...

எனக்கும் இப்படி ஒரு சம்பவம்... நேர்ந்தது ஆனா அது பெண்னு இல்லை பையன்.. உங்க மனநிலைதான் எனக்கும் இருந்த்து!

சண்முக சுந்தரம் said...

@ ஜோ - உங்க பதிவை நான் ஏற்கனவே படிச்சிட்டேன் :-) .. நேரம் இல்லாததால பின்னூட்டம் போட முடியல .
@ பித்தன் , கவின் , சரவணா - வருகைக்கு நன்றி !! தொடர்ந்து வரவும்

Joe said...

நான் உங்க பதிவை படிச்சிட்டு பின்னோட்டமும் போட்டு, வோட்டும் போட்டுட்டு போயிருக்கேன்.

நீங்க எதுவுமே பண்ணாமே, "தொடர்ந்து வரவும்னா", நல்லா இருக்கே நியாயம்?

சண்முக சுந்தரம் said...

இல்ல ஜோ .. நேத்து டைம் இல்ல .. நிறைய வேல ஆபீஸ் ல ... அதான் .. இப்போ பாருங்க