Wednesday, May 27, 2009

இலங்கையில் ஒரு தமிழ் குடும்பத்தின் நிலை

போன வாரம் சென்னை போயிருந்தப்போ என் நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். நம்ம தலைவனை பற்றி ஏடாகூடமான தகவல்கள் வந்துகிட்டு இருந்த சமயம்.அவன் வீட்டுல மதிய சாப்பாடு முடிச்சிட்டு உக்காந்து பேசிட்டு இருந்தப்போ , நம்ம இனம் அங்க படுற கஷ்டத்த பத்தின பேச்சு தவிர்க்க முடியாம போச்சு.

தலைவர்ல ஆரம்பிச்ச பேச்சு, ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் , அண்ணன் திலீபன் மரணம் , புரட்சி தலைவர் உதவி , இப்டியே போயி கடைசில .. முதுகெலும்பில்லாத சிங்கள நாயிங்க நமக்கு பண்ணுன கொடுமையில வந்து நின்னுச்சு. அப்போ என் நண்பனோட மனைவி சொன்ன ஒரு விஷயம்.அவுங்களோட சொந்தகாரங்களுக்கு இலங்கைல நாலு நகைக்கடை இருக்குது போல. அத விட்டுட்டு இங்க வர முடியாம அங்கேயே இருக்காங்களாம்.

நம்ம குழந்தைகள ஸ்கூலுக்கு அனுப்பும் போது, அப்டி பாத்து போகணும்,இப்டி பாத்து போகணும்னு சொல்ற மாதிரி, "பாப்பா டம்முன்னு பெருசா சத்தம் கேட்டுச்சுன்னா , பக்கத்துல இருக்குற பதுங்கு குழியில போயி இப்படி உக்காந்துக்கணும்"னு சொல்லி குடுத்து அனுப்புவாங்களாம். விவரம் தெரியாத அந்த குழந்தைகளுக்கு பாவம் என்ன புரிஞ்சிருக்கும்.

வீட்டுல திடீர்னு கதவ தட்டி ஒரு நூறு ஆர்மிக்காரனுங்க திபு திபு னு உள்ள புகுந்து ..சோதனைன்னு சொல்லிட்டு , இருக்குறத எல்லாம் உடைச்சு போட்டுட்டு , மெத்தை எல்லாம் கிழிச்சிட்டு போய்டுவாங்களாம்.அவிங்க போற வரைக்கும் பேசாம , குழந்தைகளை கூட்டிட்டு ஒரு ஓரமா போயி ஒதுங்கி உக்காந்துருவாங்களாம்.வீட்டுல இருக்குற எல்லாத்தையும் இப்டி உடைச்சிட்டு போறாங்களேனு கவலப்படறத விட , ஆளுகள ஒன்னும் பண்ணாம போறாங்க னு மனச தேத்திகிட்டு இருப்பாங்களாம்.நம்ம வீட்டுல ஒரு போலீஸ்காரன் வந்தாலே நமக்கு மனசு ஆயிரம் விதமா யோசிக்கும். நூறு ஆர்மிக்காரன், வீட்டுல பொம்பளயாளுக தனியா இருக்கப்போ வந்தா மனசு தாங்குமா.

அதுவும் இல்லாம, வீட்டுல இருக்குற பொம்பள புள்ளைங்க பெரியபுள்ளை ஆகுற வரைக்கும் அங்க இருப்பாங்களாம்.பெரிய பொண்ணு ஆன உடனே கூட்டிட்டு வந்து மதுரைல சொந்தக்காரங்க வீட்டுல விட்டுட்டு போயிருவாங்களாம். மறத்தமிழனுக்கு வந்த நிலைமைய பாத்தீங்களா ?

அவுங்க அங்க இருந்து மதுரைக்கு வருசத்துக்கு ஒரு தடவை வர்றப்போ , அங்க நடக்குற கொடுமைய பத்தி வீட்டுல யாரும் கேக்க மாட்டாங்களாம் . ஏன்னா , அவுங்க குண்டு சத்தம் கேக்காம , நிம்மதியா தூங்குறது இங்க வர்ற பத்து நாள் தான். அப்போ அத பத்தி கேட்டு கஷ்டப்படுத்த கூடாதுன்னு.

இப்டியே பொலம்பிகிட்டு எழுத வேணாம்னு நினைச்சேன்.ஆனா நம்மளால இதைத்தவிர வேற ஒண்ணும் புடுங்க முடியாது . (சத்தியமா சொல்றேன் .. யோசிச்சு பாருங்க).

தலைவர் திரும்பி வருவாரு..அவரால தான் இந்த கொடுமைக்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட முடியும்.

குறிப்பு : எந்த ப்ளாக்ல படிச்சேன்னு ஞாபகம் இல்ல . யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஒருத்தர் எழுதி இருந்தாரு. எழுதுன விஷயம் எனக்கு புடிச்சிருந்தது , சாராம்சம் இது தான்.

"நேதாஜியின் மரணத்தைப் போல , பிரபாகரனின் மரணமும் உலகுத்துக்கு மர்மமா தான் இருக்கணும்.அதுதான் என் ஆசை "னு . தலைவர் மேல இவ்வளவு அன்பு வச்சதுக்கு நன்றி.

ஆனா, மனுஷனுக்கு தான் சாவு வரும் ... கருப்பசாமிக்கு சாவெல்லாம் கிடையாது ..நம்ம தலைவர் நம்ம இனத்த காக்குற கருப்பசாமி .

4 comments:

தமிழர்ஸ் - Tamilers said...


You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a Tamil Bookmarking site called "Tamilers"...

www.Tamilers.com
தமிழர்ஸ் டாட் காமில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

நண்பா அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

பித்தன் said...

//எந்த ப்ளாக்ல படிச்சேன்னு ஞாபகம் இல்ல . யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்க. ஒருத்தர் எழுதி இருந்தாரு. எழுதுன விஷயம் எனக்கு புடிச்சிருந்தது , சாராம்சம் இது தான்.

"நேதாஜியின் மரணத்தைப் போல , பிரபாகரனின் மரணமும் உலகுத்துக்கு மர்மமா தான் இருக்கணும்.அதுதான் என் ஆசை "னு . தலைவர் மேல இவ்வளவு அன்பு வச்சதுக்கு நன்றி.//

www.luckylookonline.com

வேறு எங்கயும் படிச்சா மாதரி ஞாபகம் இல்ல

கலையரசன் said...

மனச என்னவோ பன்னுதுங்க உங்க பதிவு..
தொடர்ந்து எழுதுங்கள்...
வரவேற்க்கிறேன்!

சண்முக சுந்தரம் said...

@ பித்தன் - மிக்க நன்றி !!

@கலையரசன் - இப்போ நடந்துகிட்டு இருக்குற விஷயங்கள் .. ஒவ்வொரு தமிழனோட மனசுலயும் ஏதாவது பண்ணனும் .. அப்போ தான் அவன் தமிழன் ..அத தான் நான் பதிவு பண்றேன்.. இந்த உணர்வுகளை பதிவு பண்ணாமல் இருக்கக் கூடாது.
வருகைக்கு நன்றி