Thursday, May 28, 2009

இலங்கையில் பத்து ஏக்கர் பண்ணை , இங்கே தச்சு வேலை

இதுவும் என் நண்பன் ஒருத்தன் சொன்ன விசயம் தான்.அவனோட ஊரு பேரு நான் சொல்ல விரும்பல.அவுங்க வீட்டுல தச்சு வேலை செய்ய வந்த ஒருத்தர் , அவன்கிட்ட சொன்ன விசயம்.

அவரு பேரு ஜேசு. அவரு அங்க இருந்து தப்பி வந்த தமிழர்கள்ல ஒருத்தர்.என் நண்பன் வீட்டுல ஒரு மாசம் தச்சு வேலை செஞ்சாரு.இவன் ஆபீஸ் லீவு போட்டுட்டு ஊருக்கு போனப்போ தான் அவரை பாத்திருக்கான்.அவரு தான் இலங்கைல இருந்து அகதியா தப்பிச்சு வந்ததையும்,அங்க ஒரு 10 ஏக்கர் பண்ணைக்கு முதலாளி அப்டிங்றதையும் சொல்லிருக்காரு.

இவன் ஊருக்கு கிளம்பும் போது , அவரு இவன் கிட்ட வந்து , சில மெடிக்கல் சர்டிபிகேட், ரிப்பொர்ட் எல்லாம் குடுத்து , உங்களுக்கு தெரிஞ்ச டாக்டர் யாராவது இருந்தா இத காமிச்சு , ட்ரீட்மென்ட் எடுக்க முடியுமானு பாருங்கனு சொல்லிருக்காரு.அந்த ரிப்போர்ட் எல்லாம் அவரொட பொண்ணோட ரிப்பொர்ட்.உடம்புக்கு என்னனு கேட்டப்பொ அவரு சொன்னது ,

"அந்த பொண்ணுக்கு 12 வயசு, உடம்புல இடது பக்கம் எதுவுமே வேலை செய்யாது , கழுத்து ஒரு இடத்துல நிக்காது, நிமிர்ந்து உக்கார முடியாது, படுத்தே தான் இருக்கணும்.உக்காரணும்னா..யாராவது புடிக்கணும்."
அந்த பொண்ணுக்கு ஏன் இந்த நிலைமை.அவரு அழுதுகிட்டே சொன்னது.

நீங்க ரொம்ப மென்மையானவரா இருந்தா, இதுக்கு மேல படிக்காதீங்க.

அவுங்க இலங்கைல இருந்தப்போ, வீட்டுக்கு ரெயிட் வந்த சிங்கள‌த் தே...பசங்க‌, கர்ப்பிணியா இருந்த அவரோட மனைவிய சுவத்துல சாத்தி நிக்க வச்சு, ரெண்டு பேரு கைய புடிச்சிகிட்டு ,மாறி மாறி வயித்துல உதைச்சிருக்கானுங்க..இதுக்கு மேல என்னால் அதப் பத்தி விவரிச்சு எழுத முடியல.


குறிப்பு : என்னடா இப்படி எழுதுறானேனு யாரும் என்னய தப்பா நினைச்சுக்காதீங்க.இந்த கொடுமைக எல்லாத்தயும் பதிவு பண்ணனும்.

அதை எல்லாம் விட முக்கியமா..சில வரலாறு தெரியாத முட்டாள் நாயிங்க, தமிழன் போயி இலங்கைல இடம் கேட்டா,கொல்லத்தான் செய்வான்னு நியாயம் பேசுறானுங்க.அந்த நாயிங்களுக்கு அஙக நடக்குற கொடுமைகள புரிய வக்கிறதுக்காகத்தான்.உங்களுக்கு இது தப்பா தெரிஞ்சா பின்னூட்டத்துல காரணம் சொல்லுங்க.

நான் இப்டி எழுதுறத நிறுத்திக்கிறேன்.

9 comments:

கலையரசன் said...

தொடர்ந்து பதிவு பன்னுங்க..

சண்முக சுந்தரம் said...

நன்றி கலையரசன்

Ananth said...

தொடர்ந்து பதிவு பன்னுங்க..

Anonymous said...

:( :( :( :(

பித்தன் said...

//சில வரலாறு தெரியாத முட்டாள் நாயிங்க, தமிழன் போயி இலங்கைல இடம் கேட்டா,கொல்லத்தான் செய்வான்னு நியாயம் பேசுறானுங்க.அந்த நாயிங்களுக்கு அஙக நடக்குற கொடுமைகள புரிய வக்கிறதுக்காகத்தான்.உங்களுக்கு இது தப்பா தெரிஞ்சா பின்னூட்டத்துல காரணம் சொல்லுங்க.

நான் இப்டி எழுதுறத நிறுத்திக்கிறேன். //

வரலாறு தெரியாம பேசுபவர்களை, நாய்கள் என்று கூறி நாயை கேவலபடுத்தும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்...

சண்முக சுந்தரம் said...

@ ஆனந்த் ‍‍‍
நன்றி

@பித்தன்

நாயைக் கேவலபடுத்தியதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன்

உண்மை விரும்பி said...

அன்பரே!
இன்றை இலங்கை மக்களின் பிரச்சினை தனி ஈழம் அல்ல. தங்களின் உயிரை காப்பாற்றிக்கொள்ளவும், உறைவிடமும் உணவும் தான் என்பதை மறவாதீர். உம்மைப் போன்றி வெளிநாடுகளில் இருந்து கொண்டு தனிஈழம் தனிநாடு என்று கதைத்துக் கொண்டு இருப்போர் ஒரு தடவை இங்கு வந்து எறிகணைகளுக்கு மத்தியில் மாட்டுபட்டால் தெரியும். இங்கு இன்று அகதி முகாம்களில் உடல் அங்கங்களை இழந்து உறவுகள், உடமைகளை இழந்து கற்பிழந்து இனி இழக்க ஏதும் இல்லாத நிலையில் இருக்கும் உறவுகளிடம் சொல்லிப் பாருங்கள் தமிழ்நாடு தமிழீழம் கதையை. உங்களை செருப்பால் அடிக்கும். பட்டால் தானே தெரியும் எதுவும். நமக்கு தமிழ் ஈழம் கொடுத்தால் மட்டும் நாங்கள் என்ன ஒற்றுமையாய் அமைதியுடன் வாழப் போகின்றோமா? அப்பொழுதும் நான் யாழ்ப்பானத்தான் நீ வன்னியான் அவன் மட்டக்களப்பான் இவன் தோட்டக்காட்டான் என்று வேற்றுமை பாராட்டி அடித்துக்கொள்ளத்தானே போகின்றோம்.”சிங்களவன் தேவ....மகன்” என்று ஓர் வசனத்தை உங்கள் பதிவில் இட்டு உள்ளீர்கள். அதில் சிங்களவன் என்பதுடன் தமிழ் என்பதையும் சேர்த்துக் கொண்டால் சரியென்பேன். ஏனென்றால் இங்கு வன்னியிலும் கூட எத்தனையோ பாலியல் ரீதியா பிரச்சினைகள் வி.பு. தளபதிகளால் ஏற்படவில்லையா(உ.தா. முன்னால் வி.பு உறுப்பி்னர் கருணா,அவர் வி.பு விட்டு வெளியேறிய பிறகுதான் அவர் அவளுடன் தொடர்பு இவளுடன் படுத்தார் என்ற செய்தியெல்லாம் வெளியிடப்பட்டது வி.புவால் அப்படியானால் அதற்கு முன்பே அவர்களுக்கு தெரிந்த தானே உள்ளது. இப்படி எத்தனை எத்தனையோ சொல்ல முடியாத விடயங்கள் வி.புவிலும் ஏனைய ஒட்டு தமிழ் குழுக்களினாலும் நடந்தேறியுள்ளது.)

இங்கு வாழும் மக்களின் இப்பொழுதைய என்னோட்டம். எங்களுக்கு தமிழீழமும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இவனுங்களை விட சிங்கள அரசே பரவாயில்லை என்பதுதான்.

சண்முக சுந்தரம் said...

த‌ங்க‌ள் ம‌ன‌தில் இருக்கும் எண்ண‌ங்க‌ளை அனைவ‌ரும் அறிய‌ வேண்டும் என்ப‌த‌ற்காக‌, உங்க‌ள் பின்னூட்ட‌த்தை த‌னி ப‌திவாக‌ போட்டுள்ளேன்.என‌து க‌ருத்துக்க‌ளையும் அதில் இணைத்துள்ளேன்.

என்னுடைய‌ ப‌திவு ஏதெனும் வித‌த்தில் உங்க‌ள் ம‌ன‌தை புண்ப‌டுத்தி இருக்குமானால் , அத்ற்காக‌ நான் உங்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்

Joe said...

சுந்தர்,
நீங்கள் தொடர்ந்து இது போன்ற செய்திகளை பதிவிடுங்கள்.

உங்கள் பதிவுகளை படிக்கும் மக்களில், பத்து பேர் அங்கே கஷ்டப்படும் மக்களுக்கோ, இங்கே அகதியாக வந்த மக்களுக்கோ உதவி செய்வார்கள் என்றால் அதுவே பெரிய வெற்றி தான் உங்களுக்கு.

இங்கேருக்கிற பல தயிர்வடைகள் சிங்களவனுக்கு தான் ஆதரவு கொடுப்பானுங்க.

Also write in English so that other friends from other states will know the facts. How many of them will truly understand their miseries, is another issue.