Monday, June 1, 2009

ஒரு பின்னூட்டதிற்கு கிடைத்த பதில்..இதில் எது சரி ?

சென்ற பதிவில் இட்டது போல, இன்னொரு நண்பரின் பின்னூட்டத்தையும் தனி பதிவாக இட்டுள்ளேன்.சென்ற் பதிவுகளை வாசித்துவிட்டு வ்ந்தால் விசயம் இன்னும் தெளிவாக விளங்கும்.

எனக்கு இருக்கும் ஒரு பிரச்சனை இந்த பின்னூட்டத்தில் என்னவென்றால், த.வி.பு அமைப்பு மட்டுமே பெண்கள் விடயத்தில் கட்டுக்கோப்பாக இருந்த அமைப்பு, அவர்கள் வெளியில் என்ன செய்தார்கள், தாய்லாந்தில் என்ன செய்தார்கள் என்பதிருக்கட்டும், ஆனால் அவர்கள் செல்வாக்குப்பிரதேசங்களிலோ, அவர்களுக்கு அடங்கிய மக்களிடமோ அவர்கள் கண்ணியமாகத்தான் நடந்துள்ளார்கள். அவர்களின் கட்டுப்பாட்டில் ஒரு 8 வருடம் இருந்த அனுபவத்தில் சொல்கிறேன். கருணா பிரிந்து சென்றபின் அவரின் பெயரை களங்கப்படுத்துவதற்கும் துரோகிப்பட்டம் சுமத்துவதற்குமான ஒரு முயற்சியாக இது இருக்கலாம். ஆனால் பொதுவில் த.வி.பு எப்போதும் கீழ்த்தரமாக நடந்து கொண்டது கிடையாது. நானொன்றும் த.வி.பு விட்ட வரலாற்றுத்தவறுகளுக்கு வக்காளத்துவாங்குபவன் இல்லை. ஆனால் தமிழன் இவ்வளவுகாலம் சீலையுரிபடாமல் இருந்தது அவர்களால்தான். இல்லாவிட்டால் நாயைவிடக்கீழ்த்தரமாகத்தான் நாங்கள் பேரினவாதிகளால் நடத்தப்பட்டிருப்போம். தமிழனென்று சொல்லி சிற்றளவேனும் கவுரவமாக நாமிந்த மண்ணில் நடந்து திரிந்ததுக்கு அவர்கள் செய்த யுத்தம் தான் காரணம். நாம் எமக்குள் சண்டை பிடிக்கிறது உள்வீட்டுப்பிரச்சனை. வேறொருத்தன் எனது வீட்டுக்குள் வந்து ஏனிங்கு நீயிருக்கிறாய் என்று கேட்பதைவிட வீட்டுக்குள் இருப்பவன் வந்து கேட்பது ஒப்பீட்டளவில் கவுரவமானது. நானொன்றும் யுத்தத்தால் பாதிக்கப்படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்பவனல்ல. இதுவரைக்கும் 4 முறை இடம்பெயர்ந்திருக்கிறேன், ஊரில இருந்த ஒரு வீட்டில இப்ப மிச்சமிருக்கிறது தலைவாசல் மட்டும்தான். யுத்தம் என்னையும் பாதிச்சிருக்குத்தான். ஆனால் அதுக்காக எல்லாத்தையும் விட்டிட்டு ஏறிமிதிக்க மிதிபட்டுப்போற அளவுக்கு எனக்கு மானம் மரத்துப்போகேலை. தமிழீழமும் வேண்டாம் ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம் எண்டு முடிவெடுக்க நியாயம் இருக்கு, அதுக்காக உவங்கள் செய்யிற அநியாயம் எல்லத்தையும் பாத்து தலைவிதி உதுதான் எண்டு தலையில அடிச்சுப்போட்டு அவன் குட்டக்குட்ட குனியிற அளவுக்கு நானின்னும் வரேலை. பின்னூட்டமிட்டவர் சொல்லுறமாதிரி வன்னிக்கை இருந்து அடிபட்டு தேறி வந்தவன் தான் நானும், ஆனா மானம் விட்டு உசிர் பெரிசெண்டு உதைபட நான் தயாரில்லை. இது என்ரை கருத்து...ஒருத்தரோடையும் வில்லங்கத்துக்கு சண்டை பிடிக்கோணும் என்பதற்காக இல்லை

1 comment:

உண்மை விரும்பி said...

அன்பரே நீங்கள் இப்பொழுது இலங்கையில் வன்னி மண்ணில் உள்ள ஏதாவது ஒரு இடைதங்கள் முகாமில் உடல் அங்கம் ஏதாவதை இழந்தோ அல்லது உறவுகள் யாராவது பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தா இந்தப் பின்னூட்டத்தை எழுதுகின்றீர். சரி போகட்டும் வடபகுதியில் எங்காவது அல்லது இலங்கை மண்ணில் எங்காவது உள்ளீரா? வாருங்கள் வந்து பாருங்கள் மக்களுடன் கதையுங்கள் அவர்களின் வேதனையைப் பாருங்கள்.
இந்த இழப்புக்களை விட நாம் எதிரியிடம் சரனைடைந்து அவர்களுடன் சமரசமாக போயிருக்கலாம் தானே! என்பது தான் என் ஆதங்கம் அவ்வளவு தான்.

இன்று இந்தப் போராட்டம் எத்தனையோ ஆயிரம் மக்களை கொன்று நடைபெற்ற போதும் இதன் தோல்விற்கு யார்க்காரணம்? எம்முள் இருக்கும் பிரிவினை தானே? முதலில் வீட்டுப் (நம்முள் இருக்கும் மாவட்ட வேறுபாடு) பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம். பிறகு நாம் நம் இனப் பிரச்சினையைப் பற்றி யோசிப்போம்.