Wednesday, June 17, 2009

குபீர் ஜாலி ‍ - ஃப்ருட்ஷாப் ப்ராஜக்ட்

நாம எல்லாம் கம்ப்யூட்டர் ல பெரிய புலினு நினைச்சிகிட்டு இருக்காங்க வீட்டுல.எங்க வீட்டுல 1000 வாட்டி சொல்லி பாத்துட்டேன், " நான் சாப்ட்வேர் எஞ்சினியர் இல்ல... நெட்வொர்க் எஞ்சினியர்"னு..அத பத்தி எல்லாம் அவுங்க கண்டுக்கிறதா இல்லை.

எனக்கு சிஸ்கோ ல வேல கிடைச்சப்போவே, "என்னய்யா..டி.வி. கம்பெனிக்கு வேலைக்கு போற"னு கேட்டாங்க.இத எதுக்கு சொல்றேன்னா.. நம்மள ஏதோ பில் கேட்ஸ் ரேஞ்சுக்கு நினைச்சுட்டாங்க.எதையோ சொல்ல வந்து எதையோ சொல்லிட்டு இருக்கேன்,விசயத்துக்கு வர்றேன்.

ரெண்டாவது செமஸ்டர். கம்ப்யூட்டர் லேப்ல உக்காந்துருக்கோம். எனக்கு இடது பக்கம் ஷங்கர் ராம் (எங்க செட்லயே ரொம்ம்ம்ம்ம்ப புத்திசாலியான பையன்.ரெண்டாவது செமஸ்டர்லயே, லைப்ரரி ஃபைல்ஸ்லாம் நோண்டிகிட்டு இருப்பான், நம்மளுக்கு அடிஷன் ப்ரோக்ராம் போட்டாலே,15 கம்பைலேஷன் எர்ரர் சொல்லும்.இனிமே அவன மாமினு கூப்பிடுவோம்), வலது பக்கம் சங்கிலி.அப்போ தான் விண்டோஸ் டெஸ்க்டாப்‍‍ ஐ முதல் முதல்லா பாக்குறோம், நானும் சங்கிலியும்.மாமி என்னடான்னா "சி" க்கு உள்ள போயி ப்ரோக்ராம் போட ஆரம்பிச்சிட்டான்.எங்களுக்கு "ஸ்டார்ட்" பட்டனை அமுக்குனா "விண்டோஸ் ப்ராம்ப்ட்" வரும்னு கூட தெரியல.சங்கிலி அத மாமிகிட்ட கேட்டு என்கிட்ட சொன்னான்.அப்போதான் நான் ஒரு பெரிய சந்தேகத்தை கேட்டேன்."அந்த ப்ராம்ப்ட் போறதுக்கு என்ன செய்யணும்"னு...அந்த அளவுக்கு தான் நம்ம புத்திசாலித்தனம் இருந்துச்சு அப்போ.

இப்படி இருந்த நாங்க கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி, ஒரு லெவல்க்கு வந்துக்குட்டு இருந்தோம். மூணாவது செமஸ்டர்ல "எக்ஸ்"னு ஒருத்தன் லேட்டரல் என்ட்ரி வந்து சேர்ந்தான்.எங்க "குபீர் ஜாலி" செட் உருவாகி கூடி கும்மி அடிக்க ஆரம்பிச்சது அப்போ தான்.

செமஸ்டர்க்கு முன்னாடி எங்களுக்கு "சி++" லேப் எடுத்த மேடம், மினி ப்ராஜக்ட் பண்ணனும்னு சொல்லிருச்சு.அதுவும் தனித்தனியா தான் பண்ணனும்னு சொல்லிருச்சு.ஒண்ணுமே பண்ண முடியாதுனு தெரிஞ்சும் அசராம களம் இறங்கியாச்சு.மாமி என்னடான்னா "ரெயில்வே ரிசர்வேஷன்" ப்ராஜக்ட் பண்றேங்கிறான்,இன்னொருத்தன் "டெலிஃபோன் பில்லிங்"னு சொல்றான். நான் என்ன பண்றதுனு தெரியல.லேப்ல உக்காந்து வெறித்தனமா கோட் அடிச்சிக்கிடு இருக்கோம்.

அப்போதான் எக்ஸ் என்னை,சங்கிலியை,மாமியை மூணு பேரையும் கூப்பிட்டான்."மினி ப்ராஜக்ட் முடிச்சிட்டேன்"னு சொன்னான்.எங்களுக்கு எல்லாம் ஒரே ஷாக்காயிடிச்சு " இந்த பையனுக்குள்ள என்னவோ இருந்துருக்கு பாரேன்"னு சொல்லாத குறைதான்.என்ன ப்ராஜக்ட்டா மாப்ளனு கேட்டதுக்கு "ஃப்ரூட் ஷாப்" ப்ராஜக்ட்னு சொன்னான்.எங்களுக்கு அப்போவே உரைச்சிருக்கனும்.விட்டுட்டோம்.


"ரன் பண்றேன் , பாக்குறீங்களா"னு கேட்டுப்புட்டு, F9 அமுக்குனான். கம்பைலேஷன் எர்ரர் ஒண்ணுமே இல்ல. ரன் பண்ணப்புறம் வந்த அவுட்புட் இப்படி தான் இருந்துச்சு

Enter the price for 1Kg of apple in Rs:

10

Enter the number of Kg you want:

5

Total amount to be paid : 50

Thanks !!!எனக்கு மூத்திரத்தை மூணு நாள் அடக்கி வச்சிருந்தா கூட அவ்வளவு கடுப்பு வந்துருக்காது.அத விட ஜாஸ்தியா சிரிப்பு வருது. அவன் அதை மினி ப்ராஜக்ட்னு முடிவே பண்ணிட்டான்.அப்புறம் அந்த டொமாங்கி மண்டையனுக்கு ," நீ பண்ணிருக்கது மினி பராஜக்ட் இல்லடா, மல்டிப்ளிகேஷன் ப்ரோக்ராம்"னு புரிய வக்கிறதுக்குள்ள டங்கு வாரு அந்து போச்சு..

7 comments:

விஷ்ணு. said...

நிஜமாவே அந்த எக்ஸ்குள்ள என்னமோ இருக்குங்க...

சண்முக சுந்தரம் said...

@ விஷ்ணு
உண்மைதான்...ஆனா அத நான் இங்க சொன்னேன்னா..அடுத்த வாட்டி அவிங்கள பாக்குறப்போ.. என் டவுசர் கிழிஞ்சிரும்..

சண்முக சுந்தரம் said...

@ விஷ்ணு...

நீங்க...adventnet ல வேலை பாக்குறீங்களா..அப்போ உங்களுக்கு இன்னொரு மேட்டர் சொல்றேன்..இப்போ இல்ல..கொஞ்ச நாள் கழிச்சு..:‍)..

ur blog had "zoho creator" link..thats y I asked

விஷ்ணு. said...

ஆமாம். ஆனா ZOHO Corpன்னு பேர மாத்திட்டோம்ல. நீங்க

சண்முக சுந்தரம் said...

நான் சிஸ்கோ ல வேலை பாத்துட்டு இருந்தேன்...இப்போ ஜுனிப்பர்ல இருக்கேன்

Joe said...

//
செமஸ்டர்க்கு முன்னாடி எங்களுக்கு "சி++" லேப் எடுத்த மேடம், மினி ப்ராஜக்ட் பண்ணனும்னு சொல்லிருச்சு.அதுவும் தனித்தனியா தான் பண்ணனும்னு சொல்லிருச்சு.
//
தனியா போயி என்னத்தப் பண்ணுறது?

தமிழினி said...

உங்கள் பதிவு தமிழ்10 தளத்தில் முதல் பக்கத்தில் பிரசுரமாகலாம்


உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-ஓட்டளிப்புப் பட்டை
3-இவ்வார கிரீடம்
4-சிறப்புப் பரிசு
5-புத்தம்புதிய அழகிய templates
6-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html