Monday, July 13, 2009

நம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும்

மு.கு : இத நான் எழுதி 10 நாளுக்கு மேல ஆச்சு, இன்னைக்குதான் போஸ்ட் பண்றேன்.இப்போ கூட ரொம்ப யோசனைக்கு அப்புறம்தான் இத பதிவு பண்றேன்.

ஈழத்தைப் பத்தி இனிமே பதிவு போடக்கூடாதுனு கங்கணம் கட்டிட்டு இருந்தேன்.காரணம், ஒரு அளவுக்கு மேல என்னால புலம்ப முடியல.

என்ன எளவுக்கு நான் வீட்டுல இண்டர்நெட் கனெக்ஷன் வாங்குனேனு இப்போ வருத்தப்படுறேன்.எதப்பத்தி தேடக்கூடாதுனு நினைக்கிறனோ, அதயே தேடத் தோணுது.எது என் கண்ணுல படக்கூடாதுனு நினைக்கிறனோ அதுவே என் கண்ணுல படுது. நாம படுற கஷ்டமெல்லாம் மயிருக்கு கூட சமானம் இல்லனு தோணுது.

பத்து நாளைக்கு முன்னாடி ஒரு வீடியோ பாத்தேன், எல்லாம் இந்த பாழாப்போன இண்டர்நெட்லதான்.அது என்னான்னு நான் சொல்ல விரும்பல. நீங்க அதப் பாக்குறதையும் நான் விரும்பல.முடியல.என்னய அறியாம என் கை ரெண்டும் என் கன்னத்துக்கு போயி, அப்டியே பதறிருச்சு. நான் என்னோட நெருங்குன நண்பர்களுக்கு கூட அதை பாக்க சொல்லல.


அப்போ என் கூட இருந்தது ரெண்டு பேரு, ஒருத்தன் வடமாநிலத்துக்காரன், இன்னொருத்தன் நம்ம ஊருக்காரன்.அந்த வடமாநிலத்துக்காரன் என்கிட்ட சொன்னது " அது அவுங்க நாடு, நீங்க போயி இடம் கேட்டா தருவானா..சண்டை போடத்தான் செய்வான், போர்னு வந்துட்டா, இந்த மாதிரி நடக்குறதெல்லாம் சகஜம்தான்"


அவிங்கட்ட புரிய வச்சு, புரிய வச்சு , நான் ஓஞ்சு போனதுதான் மிச்சம்.இதுல "You speak like a rebel, this is not gonna help u in anyway. Be practical."னு எனக்கு அவன் பெரிய புடுங்கி மாதிரி பேசுனதுதான் மிச்சம்.


இதெல்லாம் விட்டுரலாம்.ஆனா கூட இருந்த முட்டா.கூ நம்ம ஊருக்காரன்.அவன் என்கிட்ட கேட்டதை என்னால ஏத்துக்கவே முடியல,அந்த கே.தே.ம , கொஞ்சம் கூட ஈவு எரக்கமே இல்லாம " சும்மா ஒவரா சீன் போடாதடா, உனக்கும் அவிங்களுக்கும் என்னா சம்பந்தம், ஏன் தேவை இல்லாம இவ்ளோ அலும்பு பண்றீங்க, உனக்கு சொந்தமா , பந்தமா"னு கேக்குறான்.அவங்கிட்ட பேசக்கூட எனக்கு பொறுமை இல்ல,அதுனால தான் இங்க எழுதுறேன் "ஏண்டா, நான் பேசுற மொழிய பேசுறாங்க , அப்டிங்றத விட ,என்னடா பெரிய உறவு வேண்டிக்கெடக்கு, மொன்ன தே.நாயே"

சத்தியமா சொல்றேங்க, அந்த வீடியோவைப் பாத்தா, தாங்க முடியாது. ஒரு ஆஸ்பத்திரில எடுத்த வீடியோ.ஆனா அந்த தே.பய அத அவ்ளோ லேசா கேட்டுட்டு போயிட்டான்.இன்னைக்கு இளவட்ட பயலா இருக்கப்போவே, முட்டாக்கூ மாதிரி பேசுறாங்கன்னா, நாளைக்கு என்னா ஆகும்ணு நினைச்சாலே பயமா இருக்கு.

"பிரபாகரன் டெரரிஸ்ட்டாப்பா"னு நாளைக்கு என் மகன் வந்து என்கிட்ட கேட்டுறக்கூடாது, அந்த நெலம மட்டும் வந்துச்சுனா, ஒரு மகத்தான மனிதன், ஒரே கொள்கையோட இருந்த ஒரு கூட்டம், ஒரு இனத்துக்காக 30 வருசத்துக்கு மேல பட்ட கஷ்டம் இந்த தலைமுறையோட வீணாப் போயிடும்.

நாம போராட வேணாம், உதவி செய்ய வேணாம், அதுக்குதான் வக்கில்லைனு ஆகிப்போச்சு.ஆனா, தமிழனாப் பொறந்துட்டு பெரிய கே.புழு. மாதிரி பேசுற மு.கூ களுக்கு முதல்ல புரியவப்போம், எது தப்பு அது ரைட்டுனு. அவிங்க கஷ்டத்தை புரிஞ்சிக்கிறவிங்களே ரொம்ப கம்மி, அதுலயும் வலிய போயி உதவி பண்றவிங்க இன்னும் கம்மி. இப்போ அவுங்க கஷ்டத்தை நியாயப் படுத்துற கூட்டம் ஜாஸ்தியாயிட்டு இருக்கோனு தோணுது.


ஆதரவு கூடணும்னா, இங்க இருக்குற மொன்ன நாயிங்களுக்கு புரிய வக்கணும்.அவிங்களும் நம்மளோட சேரணும்.ஃபாதர் ஜெகத் காஸ்பர் சொன்னது மாதிரி, அடுத்த கட்ட வேலையப் பாக்கணும்,ஏதோ நம்மளால முடிஞ்ச அளவு.

உலகத்துல இருக்குற அத்தனை தமிழர்களும் நம்புற மாதிரி

"தலைவர் திரும்ப வருவாரு, புலி பதுங்குறது பாயுறதுக்குதான்"


நம்பிக்கையுடன் நடை போடுவோம், தமிழினம் தழைத்தோங்கும்..உறுதியாக‌

3 comments:

Prabhagar said...

நண்பா,

உங்களின் வலி புரிகிறது, எனக்கும் இருப்பது போலிருப்பதால்...

இந்த பாழாய்ப்போன ஓட்டுக்காக மற்றும் குடும்ப அரசியல் நடத்தும் நாய்கள் இருக்கும் வரை ஒன்றும் செய்ய இயலாது...

நான், பாதிக்கப்பட்ட ஒருத்தருக்காவது உதவி செய்ய வேண்டும் எனும் முயற்சியில் இருக்கிறேன்.

வருத்தத்துடன் உங்களைப்போல்,

பிரபாகர்.

Raj said...

இவனுங்க எப்படிதான் மன சாட்சியே இல்லாம இப்படி பேசுரானுங்கன்னுதான் புரியலெ

Joe said...

சில பேருக்கு சொல் புத்தியும் இருக்காது, சுய புத்தியும் இருக்காது.
அவனுங்களை எல்லாம் திருத்த முடியாது நண்பா!