Friday, November 27, 2009

மாவீரன் பிரபாகரன் !!

இதப் பத்தி எழுதவே கூடாதுனு நினைச்சேன். இப்ப எழுதாம எப்ப எழுதப்போறோம்னு தோணுச்சு. அதான் எழுதுறேன்.

முன்னாடி இந்த விஷயத்துக்கு நம்ம கொடுத்த முக்கியத்துவம் இப்போ குறைஞ்சிருக்குனு தான் சொல்லணும். தப்பில்லை. அது வழக்கமா நம்ம செய்யுறதுதான். பிரபாகரன் இருக்காரா இல்லையான்னு விவாதம் நடத்துறத விட்டுட்டு, இப்படி ஒரு தலைவன் இருந்தும், ஏன் இந்த நிலைமை ஆச்சுனு யோசிச்சிப் பாக்குறேன். ஒரு இனத்துக்காக போராடுற தலைவன், எதிரியோட மட்டும் போராடுனா, அவனது இன உணர்வு அவனுக்கு கண்டிப்பா வெற்றி தேடி தரும்.ஆனா இனத்துக்கான ஒரு இயக்கம் (கவனிக்க..இயக்கம்) சர்வதேச அரசியல் விளையாட்டுனால, சில நாடுகளை எதிர்த்து போராட வேண்டியிருந்தது. அப்படி இருந்தும் இந்த அளவுக்கு போராட்டம் வலுவா இருந்தது அப்படிங்கிறது பெரிய விஷயம். இந்த பக்கம் இந்தியா..அந்த பக்கம் சீனாக்காரன், எல்லாத்தையும் தாண்டிதான் கூடவே முத்தாய்ப்பா..ஒரு அருமையான, அக்மார்க் இனவெறி சொறி நாய் அரசியல்.இதை எல்லாம் சமாளிக்க நமக்கு ஒருத்தர் கிடைச்சதுக்கு நம்ம பெருமைப் பட்டுக்கலாம். ஆனா வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னான்னா..இவ்ளோ இருந்தும் இன்னைக்கு இந்த பிரச்சினை ஒரு ஆணித்தரமான முடிவு இல்லாம வெறும் விவாதமாத் தான் போயிட்டு இருக்கு.

இதுல அரசியல் தீர்வுதான் சரி, அப்படின்னு ஒரு பக்கம் பேச்சு. அரசியல் தீர்வு கிடைச்சா ரெண்டு இனமும் ஒரே நாடா சேர்ந்தே வாழலாம்னு ஒரு கணிப்பு. ஒரு இனம் சாகுறதுக்கு இன்னொருத்தன் இனிப்பு கொடுக்குற இடத்துல எப்படி சேர்ந்து இருக்கு முடியும். இருக்கலாம் .. முதுகெலும்பு இல்லாம இருக்கலாம். அப்படி இருக்கக் கூடாதுங்கிறதுனால தான சண்டையே ஆரம்பிச்சது.அட அவன் இனிப்பு கொடுக்குறத விடுங்க..இங்க பக்கத்து ஊர்க்காரனே பார்ட்டி கேக்குறான்.

ஏதோ மீடியா புண்ணியத்தால நிறைய விஷயம் தெரிய வந்தது.கடந்த ஒரு வருஷத்துக்குள்ளதான் இப்போ இருக்குற இளைய த(மிழ்)லைமுறைல நிறைய பேரு ,பிரபாகரன் செய்யுறது சரின்னு ஏத்துக்கிட்டு இருப்பாங்கனு நான் நினைக்கிறேன். நம்ம இன்னும் இறையாண்மைக்கும், இன உணர்வுக்கும் இருக்குற வித்தியாசத்தயே புரிஞ்சிக்கல. அமெரிக்காக் காரன் விசாரிக்கிறான், ஆ ஊன்னு பேச்சு இருந்துச்சு. கடைசில அவன் வந்து "ராஜபக்சே..சாப்பாடெல்லாம் ஆச்சா.. நல்லா இருக்கீங்களா ? " அப்டின்னு விசாரிச்சுட்டு போயிட்டான்.

ரெண்டு நாள் முன்னாடி நானும் ஜோவும் பேசிக்கிட்டோம். இந்த வாட்டி பெருசா எதுவும் எதிர்பார்க்க வேணாம்னு.இதோட மாவீரர் தினம் முடிஞ்சிரப் போறது இல்லையே.இன்னும் இருக்கு.இனிமேல் தான் ஆரம்பம்.இப்போ நமக்கு தேவை நம்பிக்கை மட்டும் தான். தலைவர் இல்லங்கிறத உறுதிப்படுத்த எதுவும் இல்லயே. அவரோட வீர‌மரணம் நேதாஜி மாதிரி இருந்தால்தான் அது பெருமை.லக்கி லுக் இதப்பத்தி முன்னாடி சொல்லிருந்தாரு. எதப் பத்தி பேசக்கூடாதுன்னு நினைச்சனோ..அங்க சுத்தி .. இங்க சுத்தி.. நேரா அந்த எடத்துக்கே வந்துட்டேன். என்னத்த எழுதினேன் தெரியல.. தோணுச்சு.எழுதியாச்சு.


எதுலயோ படிச்சேன்..

"தமிழனுக்கு அகராதியில் அர்த்தம் இனிமேல் அகதி..
ஈழத்தில் தமிழன் இனிமேல் சகதி"

10 comments:

Anonymous said...

உனக்கெல்லாம் யாரு சிஸ்கோவில் வேலை கொடுத்தார்களோ? ஏதாவது தமிழன் நடத்தும் கம்பெனியில் வேலை செய்வதுதானே? ஏன் அமெரிக்க கம்பெனியில் வேலை செய்கிறாய்?

ஜெகநாதன் said...

ஆழமான கருத்துக்கள் இல்லாமல் உங்கள் பார்​வை​யை
எடுத்துச் ​சொல்லியிருக்கிறீர்கள். நன்று. இதில் விவாதிக்க ஏதும் இல்லை. பொறு​​மையாக ஆய்ந்து எழுதியிருக்கலாம் என்று ​தோன்றுகிறது.

ச ம ர ன் said...

@ஜெகநாதன்

எனக்கு தோணுனதை மட்டும் தான் எழுதுனேன். ஆழமா யோசிக்க விரும்பல.முடியல என்பது உண்மை.

ச ம ர ன் said...

அனானி

பேர சொல்லிட்டு கமெண்ட் போட்டா நல்லா இருக்கும். பொழப்புக்கும், உணர்வுக்கும் சம்பந்தம் இல்லாம இருக்குற அளவுக்கு நான் இன்னும் பக்குவப்படலை :(

Joe said...

//
உனக்கெல்லாம் யாரு சிஸ்கோவில் வேலை கொடுத்தார்களோ? ஏதாவது தமிழன் நடத்தும் கம்பெனியில் வேலை செய்வதுதானே? ஏன் அமெரிக்க கம்பெனியில் வேலை செய்கிறாய்?
//
That was a valid question, Sir. This guy has to be booked under TADA, POTA, or anything else!

Joe said...

"தலைவர் இன்னும் உயிரோடு தான் இருக்கிறார்" என்றதற்கு, உன் இளைய தலைமுறை நண்பன் "தலைவர்-னா ரஜினியா?" கேட்டது ஞாபகமில்லையா? இன்றைய தலைமுறைக்கு ஈழம் மட்டுமல்ல, எந்தப் பிரச்சினை குறித்தும் கருத்து / கவலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. (எல்லாத் தலைமுறைகளைச் சேர்ந்த தமிழர்களும் "என் குடும்பம், எனது பிரச்சினைகள்" என்றே வாழ்ந்து மடிந்து விடுகிறார்கள்.)

"எல்லா விஷயங்களையும் அறிந்த நீங்கள் மட்டும் என்ன செய்து கிழித்தீர்கள்" என்று நம்மை கேள்வி கேட்டால் நம்மிடம் பதிலில்லை.

பாலஸ்தீனம் போல ஈழப் பிரச்சினையும் இன்னுமோர் நூற்றாண்டு கடந்தாலும் தீராது என்றே தோன்றுகிறது.

ச ம ர ன் said...

//That was a valid question, Sir. This guy has to be booked under TADA, POTA, or anything else!

ஜோ...அத தமிழ்ல எழுத வேண்டியது தான...ஏன் ஆங்கிலம் :)... எப்பூடி..

Joe said...

Simple, transliteration doesn't work at times in the office!

ச ம ர ன் said...

ரைட்டு விடுங்க !!

முகிலினி said...

Even Bangladesh General was in SL to help them. How do I know? His son was in my class, boosting abt his dad's aid. I lost faith in Newton's 3rd law after the loss in the battle. Its our fault too. We didnt participate in the Yagam