Friday, December 4, 2009

(((400/2)-(150/2))/5)* 2 = 50 வது இடுகை :)


ஐம்பதாவது இடுகை

திவு ஆரம்பிச்சு ரெண்டு வருசமாச்சு.ஆனா தொடர்ந்து எழுதுனது என்னமோ 2009ல இருந்துதான். தமிழிஷ்ல இணைச்சதுக்கு அப்புறமாதான் நிறைய பேரு படிக்க ஆரம்பிச்சாங்க. பாராட்டி வந்த பின்னூட்டங்கள், அசிங்கமா திட்டி வந்த மெயில்கள், இதெல்லாம் தாண்டி ஒரு வழியா 50 இடுகை எழுதியாச்சு.50 இடுகையெல்லாம் ஒரு மேட்டரான்னு கேக்காதீங்க, எனக்கு இது பெரிய விஷயம்தான்...இப்போதைக்கு.

டையில.. ஜோ அண்ணனும்,ஜெகநாதன் அண்ணனும் சுவாரஸ்ய பதிவர் விருது வேற குடுத்துட்டாங்க. அத இது வரைக்கும் நான் என்னோட பதிவுல போடல. 50 ஆவது இடுகை போடுறப்போ சொல்லணும்னு வச்சிருந்தேன். சொல்லிட்டேன். ஜெகநாதன் அண்ணன் நான் எழுதுன ரெண்டு இடுகைகாகத்தான் எனக்கு அந்த விருது குடுத்துருக்காருன்னு நினைக்கிறேன்.

அதுல எனக்கு புடிச்சது

இது


ரெண்டு இடுகையில நான் அவரை இம்ப்ரெஸ் பண்ணுனது சந்தோசமா இருந்துச்சு.


ஜோ அண்ணன் பின்னூட்டத்தில பேச ஆரம்பிச்சு, ஃபோன்ல பேசி, அப்புறம் நேர்ல பார்த்து. இன்னைக்கு என்னோட நெருங்கிய நண்பர் ஆகிட்டாரு. நாங்க ரெண்டு பேரு மட்டும் இருந்த பதிவர் சந்திப்பு ஏராளம். அலைச்சலை யோசிக்காம, வயசானவரா (எப்பூடி !!) இருந்தாலும் எலக்ட்ரானிக் சிட்டில இருந்து, கஸ்தூரி நகர் வரைக்கும் வருவாரு. என் நட்பு வட்டாரத்துக்கும் இவரு இப்போ ரொம்ப பரிச்சயம் ஆயிட்டாரு. இப்படியே நிறைய எழுதணும்னு ஆசையா இருக்கு. எழுதுவேன்னு நினைக்கிறேன் :)

னக்கு ஆதரவு குடுங்க, ஓட்டுப்போடுங்க‍ன்னு இது வரைக்கும் நான் கேட்டது இல்ல.இனிமேலும் கேக்கமாட்டேன். கேக்காமத்தான் எல்லாம் கிடைச்சிருக்கு. அத வச்சுதான் நான் என்ன திருத்திக்க முடியுது. ஃபாலோயர்ஸ் கூடணும்னு எண்ணம் இல்ல. இருக்குறவுங்க குறையாம பாத்துக்கிட்டாலே போதும்னு நினைக்கிறேன். ஏன்னா நான் இன்னும் சின்ன பையன் தான் :)

ங்க வாழ்த்து மட்டும் இல்ல..வசவும்கூட என்ன எழுதத்தான் தூண்டும்.

நான் எழுதுனதுல, எனக்கு புடிச்சது உங்களுக்காக..

இங்கே

நன்றி !!

‍சமரன்.

6 comments:

Sachanaa said...

VAAZHUTHUKKAL

ச ம ர ன் said...

மிக்க நன்றி Sachanaa :)

Joe said...

ஐம்பதாவது இடுகைக்கு வாழ்த்துக்கள்.

பதினெட்டு வயசுப் பையனா இருந்தாலும், எப்படியோ தேடி அலைஞ்சு வழி கண்டுபுடிச்சு வந்திரீங்களே-ன்னு நேர்ல சொல்லிட்டு, இடுகையில இப்படி அவமானபடுத்தலாமா? இது எப்படி இருக்கு? ;-)

ச ம ர ன் said...

ஜோ...

உங்களுக்கு நகைச்சுவைத் திறன் இருக்குன்னு எனக்கு தெரியும்..ஆனா இந்த அளவுக்கு அதிரிபுதிரியா இருக்கும்னு நான் நினைக்கல !!!

முகிலினி said...

Another blogger praising Joeanna. I cant wait to meet him :)

முகிலினி said...

Another blogger praising Joeanna. I cant wait to meet him :)