Wednesday, December 2, 2009

"அவன் இவன் இல்லடா..ங்கொய்யால யுவன் டா"

இன்னிக்குதான் "பையா" பாட்டு கேட்டேன்.

என் காதல் சொல்ல நேரமில்லை பாட்டு அட்டகாசம். இந்த ஒரு பாட்டு போதும், "அவன் இவன் இல்லடா..ங்கொய்யால யுவன் டா"ன்னு சொல்லாம சொல்றாரு. வரிகளும் சரி, அதுக்கு இசையமைச்ச விதமும் சரி, வழக்கம் போல யுவன் வயித்துல இருந்து பாடுறதுலயும் சரி..அள்றாரு. அவரு "உன் அழகாலே"ன்னு இழுக்குறப்போ, உள்ளுக்குள்ள உடைஞ்சு உருகுது. யப்ப்ப்பா !!

அடடா மழைடா" பாட்டும் நல்லாத்தான் இருக்கு. அக்மார்க் யுவன் பாட்டு.எனக்கு இந்த பாட்டு முதல் தடவை கேக்கும் போது, ஏதோ விஷால்க்கு எழுதுன மாதிரி இருந்துச்சு. சண்டைக்கோழி படத்துல வர்ற பாட்டு மாதிரி இருந்துச்சு.லிங்குசாமி ரொம்ப பாட்டு விஷயத்துல ரொம்ப ஈஸியா காம்ப்ரமைஸ் ஆயிருவாருன்னு நினைக்கிறேன். திரைக்கதைக்கு மெனக்கெடுற அளவுக்கு பாட்டுக்கு மெனக்கெடுறதில்ல. ஆனா ஒண்ணு ரெண்டு பாட்டு எப்படியும் நல்லா அமைஞ்சிருது.

பூங்காற்று..பூங்காற்று பாட்டு ஏதோ பாறைப் பாடல்(அதாங்க..ROCK SONG)மாதிரி ஆரம்பிக்குது. கேக்கும் போதே, டிராவல் பண்றமாதிரிதான் இந்த பாட்டு படத்துல வரும்னு யூகிக்க முடியுது. விஷுவல் நல்லா இருந்தா, சன் ம்யூசிக்ல ஒரு நாளைக்கு இருவது வாட்டி இந்த பாட்ட பாக்க முடியும் (!).பென்னி தயாள் வழக்கம் போல நல்லா பாடிருக்காரு.மத்தபடி பெருசா ஒண்ணும் இல்ல.


துளி துளி பாட்டுல ஆரம்பத்துல வ்ர்ற‌ கிடார் இசை சூப்ப‌ர்.ஆனா வ‌ரிக‌ள் ஆர‌ம்பிக்கும் போது எங்கேயோ கேட்ட‌ மாதிரி இருக்குது. எல்லா பாட்டுமே,காத‌லிக்காக‌ பாடுற‌ மாதிரி இருக்கு. "செல் செல் அவ‌ளுட‌ன் செல்"ங்கிற‌ வ‌ரி சூப்ப‌ரா இருக்கு.

சுத்துதே..சுத்துதே என‌க்கு சுத்தமா புடிக்க‌ல‌.அஞ்சு பாட்டுமே கார்த்தி ..த‌ம‌ன்னாவை பாத்து பாடுற‌ மாதிரி இருக்குது. தேவை இல்லாத‌ இட‌த்துல‌ பாட்டு போட்டாங்க‌ன்னா, ப‌ட‌ம் புஸ்வான‌மாயுரும்.ஏன்னா எல்லாமே காத‌ல் பாட்டா இருக்கு.

கார்த்தி ‍ ந‌டிச்சு ந‌டிச்சு, ப‌ட‌த்த‌யெல்லாம் பெட்டில‌ போட்டு ப‌த்திர‌மா பூட்டி வைக்காம‌ ரிலீஸ் ப‌ண்ணுங்க‌. லிங்குசாமி சார், பாத்து செய்யுங்க‌.

ம‌த்த‌ பாட்டுக்கு எல்லாம் சேர்த்து 1.5 மார்க், "என் காத‌ல் சொல்ல‌" பாட்டுக்கு மட்டும் 2.5 மார்க் :) 4/5 .இன்னும் ஒரு மாச‌த்துக்கு "என் காத‌ல் சொல்ல‌" பாட்ட‌ போட்டு தேய்ச்சுர‌ வேண்டிய‌துதான் :)

3 comments:

Joe said...

அவரு "உன் அழகாலே"ன்னு இழுக்குறப்போ...

ஒரே ஒரு கேள்வி : அவரு உண்மையிலேயே "அழகாலே"-ன்னு பாடுனாரா? அலகாலே-ன்னா?

ச ம ர ன் said...

அவருக்கு "அழகு" இருக்குற "ழ" வரும்..."மழை" ல இருக்குற "ழ" தான் வராது ;)

Joe said...

சும்மா சப்பைக் கட்டு கட்டாதீங்க தம்பி, எனக்கு தெரிஞ்சு யுவன், சிம்பு இதுகளுக்கெல்லாம் தமில் தான் தெரியும், தமிழ் தெரியாது.