Monday, December 7, 2009

லீலை - சக்கரைப்பொங்கல்+தக்காளி சட்னி


லீலை. படத்துல வொர்க் பண்ணிருக்கிற யாரையுமே தெரியல. ஷிவ் பண்டிட் மட்டும், ஏர்டெல் விளம்பரத்துலயும், ஐ.பி.எல் லயும் பாத்துருக்கோம். சதீஷ் சக்கரவர்த்தினு ஒரு புது ஆளு இசை அமைச்சிருக்காரு. படத்துல மூணு பாட்டு அவர்தான் பாடியிருக்காரு.

ஜில்லென்று ஒரு கலவரம் ‍ பாதி நல்லாயிருக்கு. ஆனா எங்கேயோ கேட்ட ஃபீலிங். ஆரம்பத்துல வர்ற ஒரு ஹம்மிங் நல்லா இருக்கு. வார்த்தைகள் மட்டும் கொஞ்சம் கவனமா எழுதிருக்கலாம்.அங்க அங்க மொக்கயா இருக்கு. ஒரு சாம்பிள் "சாலையில் ட்ராஃபிக்கில் நான் வாடும் போது" :)மத்தபடி பாட்டு ஒ.கே. பின்னாடி இருந்து "ஹே.. ஹே"னு கத்தாட்டி நம்ம ஆளுங்களுக்கு ட்யூன் போட்ட திருப்தியே இருக்காது போலிருக்கு.


ஒரு கிளி ஒரு கிளி பாட்டு என்னால பாதிக்கு மேல கேக்க முடியல. ஷ்ரேயா கோஷல் மட்டும்தான் ஒரே ஆறுதல். என்னமோ கவிதை வாசிக்கிற மாதிரி ட்யூன் போட்டுருக்காங்க. ஷ்ரேயா வாய்ஸோட, சதீஷ் சக்கரவர்த்தி வாய்ஸ் காம்பினேஷன்....முடியல. சக்கரப்பொங்கலுக்கு தக்காளி சட்னி தொட்டுக்கிட்டு சாப்பிடற மாதிரி இருக்கு. என்னமோ ட்ரை பண்ணிருக்காங்க.வரல.தம் அடிக்கிற பழக்கம் இருக்குறவுங்க இந்த படத்துக்கு போறப்போ எக்ஸ்ட்ரா ஒரு சிகரெட் வாங்கி வச்சுக்குங்க. நீங்க கண்டிப்பா வெளிய எந்திச்சு போக வேண்டியது இருக்கும் :) இந்த பாட்டு ரிஜிட்டட்ட்ட்ட்ட்ட்ட்டட் !!!

பொன்மாலைப் பொழுது பென்னி..ப்ளீஸ்,இது மாதிரி பாட்டெல்லாம் இனிமே க‌மிட் ப‌ண்ணிக்காதீங்க. "ரெயின் ரெயின் கோ அவே" பாட்டுக்கு எஸ்.ஏ. ராஜ்குமார் ராக் ஸ்டைல்ல‌ ம்யூசிக் போட்டா எப்ப‌டி இருக்கும். அத‌விட‌ கேவ‌ல‌மா இருக்கு. "பொன்மாலைப் பொழுது"னு ஒரு அருமையான‌ பாட்டு இருக்குப்பா,த‌ய‌வு செஞ்சு வ‌ரிக‌ள் மாத்திக்குங்க‌ :(. போன‌ பாட்டுக்கு ஒரு சிக‌ரெட் எக்ஸ்ட்ரா சொன்னேன்..ஐ யாம் சாரி. ஒன் மோர் எடுத்துக்குங்க‌.

ப‌பிள் க‌ம் ‍ஒன்லி மீஸிக்.. நோ லிரிக்ஸ். பா.விஜ‌ய் வாஸ் ரைட்டிங் வெரி வெல்.வாட் ஹாப்ப‌ண்ட் டு ஹிம். ஐ யாம் ஏபிள் டு ஹிய‌ர் ஒன்லி "தொம் தொம்" ச‌வுண்ட்ஸ்". திஸ் இஸ் அப்ஸர்டு.என்னடா என்ன ஆச்சு இவனுக்குனு பாக்குறீங்களா.பாட்டு பூரா இப்ப‌டித்தான் பீட்ட‌ர் பீய்ச்சி அடிக்குது. விஜய், முத்துக்குமார் பட்டய கிளப்பிட்டு இருக்காரு கவனிச்சீங்களா? அர்னால்ட் ப‌ட‌த்துக்கா பாட்டு எழுதுறீங்க.அப்ப‌டியே எழுதுனாலும்,அத‌ எப்ப‌டி ர‌சிக்க‌ வைக்கிற‌துன்னு ஏ.ஆர். ர‌ஹ்மான்கிட்ட‌ ட்யூஷ‌ன் போங்க‌. அப்புற‌ம் ஒரு மேட்ட‌ர் சதீஷ், நாங்க‌ "கிஸ்ம‌த் க‌னெக்ஷ‌ன்" ஹிந்தி ப‌ட‌த்துல‌ வ‌ர்ற‌ "Move your body now..Shake your body now" பாட்டு கேட்டுருக்கோம். இடையில மட்டும் சொருகினா க‌ண்டுபுடிக்க‌ முடியாதுன்னு நினைச்சீங்க‌ளா ? நாங்கெல்லாம் ம‌துரைக்கார‌ங்க‌...ஆங் !!

உன்னைப் பார்த்த‌ பின்பு இந்த‌ பாட்டு நான் கேக்க‌ல‌, கேக்க‌ விரும்ப‌ல‌, கேக்க‌வும் மாட்டேன். எங்க‌ அப்ப‌த்தா சொல்லிருக்கு, "ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு ப‌த‌ம்".விஷுவல் ரொம்ம்ம்ம்ம்ப நல்லா இருந்தாதான் பாட்டு எல்லா பாட்டுமே தேறும்.

ஜில்லென்று பாட்டுக்கு 1 மார்க், மொத்த‌ம் 3/5. எப்ப‌டின்னு கேக்குறீங்க‌ளா ?
ஹீரோயினி ந‌ல்லா இருக்குற‌ மாதிரி இருக்குது, அவுங்க‌ளுக்காக ஒரு மார்க். க‌டைசி பாட்டு நான் கேக்க‌ல‌, அதுனால‌ அதுக்கு கிரேஸ் மார்க் "1".

"லீலை" பாட்டுக்கு என்னோட‌ லிஸ்ட்ல‌ இட‌ம் இல்லை.


எவனோ ஒருத்தன் லீலை சாங்ஸ் ஆர் குட்"னு நிலைமைத் தகவல்( அதாங்க ஸ்டேட்டஸ் மெசேஜ்) வச்சா..உனக்கு எங்கடா போச்சு புத்தி. பீ கேர்ஃபுல். ம்ம்ம்ம்... என்னைச் சொன்னேன். :(


டிஸ்கி : இது என்னோட‌ க‌ருத்துதான். யாராவ‌து கோவ‌ப்பட்டா வழக்கம் போல..க‌ம்பேனி பொறுப்பாகாது.

8 comments:

ஜெட்லி said...

ஜில்லென்று கலவரம் உண்மையில்
செம பாட்டு... பயணம் செய்யும்
போது கேட்டு பாருங்கள் ...

ச ம ர ன் said...

நண்பா..அது ஒண்ணுதான் கொஞ்ஞ்ஞ்ஞ்சசம் தேறுது..:)

Toto said...

நீங்க‌ அனுப‌விச்சு எங்க‌ளைக் காப்ப‌த்தின‌துக்கு ந‌ன்றி ச‌ம‌ர‌ன். :)

-Toto
www.pixmonk.com

Tech Shankar said...

அது எப்படிங்க அவருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்களுக்கு சுத்தமா பிடிக்கல.

கிள்ளிவளவன் said...

"ஜில்லென்று ஒரு கலவரம் " மிகவும் அருமையான பாடல். நீங்க சரியா கேட்கவில்லை என்று நினைக்கிறேன். முக்கியமாக பாடல் வரிகள். நீங்கள் குறிப்பிட்ட வரிகள் மொக்கையாக எனக்கு படவில்லை. இந்த பாடலை caller tune ஆக பயன்படுத்தி கொண்டு இருக்கிறேன். இதை கேட்ட எனது சக ஊழியர்களும் விரும்பி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

ச ம ர ன் said...

கிள்ளி..

ஜெட்லியும் நீங்க சொன்னத தான் சொன்னாரு. அந்த ஆல்பம்ல இருக்குற மத்த பாட்டுக்கு இது பரவாயில்ல. எனக்கு ஹம்மிங்லாம் புடிச்சிருந்தது. ஏனோ வரி அவ்வளவு மனசுல நிக்கல. ஒரு வேளை "என் காதல் சொல்ல" பாட்டு கேட்டதுனால இருக்குமோ. எதுக்கும் ஒரு 4,5 வாட்டி கேட்டுப்பாக்குறேன். இத்தன‌ பேரு சும்மாவா சொல்லுவீங்க :)

ச ம ர ன் said...

Tech Sankar

அதாங்க வாழ்க்கை :)

Jayapal Chandran said...

ஜெட் லீ சொன்னது கரீட்டு டான் . எச்செல்லேன்ட் சாங். இப்ப கூட அdhaiதான் கேட்டு கிட்டு இருக்கேன். 70 டைம்ஸ் கேட்டாச்சு. இன்னும் சளைக்கவில்லை. அந்த கம்போசெர் ர பத்தி யார்காவது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் சொல்லுங்கபா . அப்டேட் பண்ணிக்கலாம் .