Tuesday, December 8, 2009

பெங்களூர் ஸ்பெஷல் - கார் கண்ணாடியில் முட்டை


ஒரு மூணு வாரம் முன்னாடி ஆபிஸ்ல ஒரு ஃபார்வேர்ட் மெயில் வந்தது. அதாவது , பெங்களூரில ஆட்டய போடுறதுக்கு புதுசா ஒரு டெக்னிக் கண்டுபுடிச்சிருக்காங்க. அதுனால எல்லாரும் கொஞ்சம் கவனமா இருங்க. அப்டின்னு. என்னா டெக்னிக்...

"நீங்க கார் ஓட்டிட்டு போகும் போது, "சட்"னு கண்ணாடியில் முட்டை வந்து விழுந்து உடைஞ்சா எப்படி இருக்கும். அய்யய்யோ ஓண்ணுமே தெரியலயேன்னு வைப்பரை போட்டீங்க. அவ்ளோதான்... "வெங்கட்ராமா கோவிந்தா"ன்னு தூக்கிருவாங்க. ஏன்னா ? தண்ணியோட முட்டை கலந்தா, அது ரொம்ப கடினமா மாறி உங்க விஷன் ப்ளாக் ஆயிருமாம். உங்களால எதுவும் பாக்க முடியாது. ரோட்டோரத்துல வண்டிய நிப்பாட்டியே ஆகணும். அப்புறம் வந்து ஆப்படிச்சுட்டு, ஆட்டயப் போட்டு போயிருவானுங்க. அதுனால உசாரய்யா உசாரு"ன்னு மெயில் வந்துச்சு.


இப்படி எல்லாமா யோசிப்பாங்கன்னு லூசுல விட்டுட்டேன். ஏன்னா முட்டை அடிக்காமலும் நம்ம கார் அப்படிதான் இருக்கும் .. ஹி..ஹி..

ஆனா இது மெயில் வ‌ந்து கொஞ்ச‌ நாள்ல‌யே , நேத்து நைட்டு என்கூட‌ வேல‌ பாக்குற‌வ‌ரு கார்ல‌ அடிச்சிட்டாங்க‌ :( . பான‌ஸ்வாடி ஃப‌ய‌ர் ப்ரிகேட் ரோட்டுல‌ வ‌ச்சு. அவ‌ரு இந்த‌ மெயிலை ப‌டிச்சிருந்த‌தால‌, வைப்ப‌ர் போடாம‌ எஸ் ஆயிட்டாரு.அந்த ஃபோட்டோதான் நீங்க பாக்குறது

உசார‌ய்யா உசாரு... எப்ப‌டியெல்லாம் யோசிக்கிறாங்க‌.

4 comments:

யூர்கன் க்ருகியர் said...

அட கொடுமையே !!

மீன்துள்ளியான் said...

நண்பா தேவையான பதிவு .. இதை பாத்து கொஞ்சம் பேர் உஷாரவங்க
அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

ரோஸ்விக் said...

விளங்காதவய்ங்க....நம்ம நாடு எதுலஎல்லாம் முன்னேறுது பாருங்க. ச்சீ...

ச ம ர ன் said...

@ரோஸ்விக்

விடுங்க.. நாம நம்மள காப்பாத்திக்க வேண்டியதுதான்.. சும்மாவா சொன்னாங்க "திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது"