Monday, December 7, 2009

என் தனிமை நீங்க என்ன‌ வ‌ழி ?



செல்ஃபோனின் ஒரு அழுத்தில்
உறவுகளோடு பேச முடிகிறது

ஜிடாக்கில் நூற்றுக்கும் மேற்பட்ட‌
நண்பர்களோடு வ‌ழ‌க்க‌மாக‌ சாட்ட‌ முடிகிற‌து

இணைய‌த்தின் ஒவ்வொரு க்ளிக்கிலும்
புதிதாக‌ க‌ற்றுக் கொள்ள முடிகிற‌து

விண் ஆம்ப்பில் பாட‌ல் கேட்டு
இசையில் ல‌யிக்க முடிகிற‌து

இப்ப‌டி எதையாவ‌து மொக்கையாக
தில்லோடு எழுத‌ முடிகிறது

இவ்வ‌ள‌வு இருந்தும் த‌னிமையால்
என்னை வாட்ட‌ முடிகிறது.




மீள‌ என்ன‌ வழி





ம்ஹூம்..







கேபிள் க‌னெக்ஷ‌ன் வாங்கியே
ஆக‌ணும் போல் இருக்கிறது :(

3 comments:

Karthick said...

Machi antha nallavan kita DISH TV vangikoda :))))

ILA(@)இளா said...

கண்ணாலம் கட்டிகிட்டா?

ச ம ர ன் said...

இளா.. ஏன் இந்த ரத்த வெறி உங்களுக்கு :)