Monday, February 22, 2010

துரோகம்

ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்தான் ஷ்யாம். இளம் தொழிலதிபர். அப்பா தாத்தா விட்டுச் சென்ற அபரிமிதமான சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. அழகான மனைவி, ஒரு பெண் குழந்தை உண்டு.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், இவனுக்கு வேண்டியது நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கும் உண்டு. மங்கலான வெளிச்சத்தில், மிதமான் ராப் இசையில்,ஜானி வாக்கர் ரெட் லேபிளை ஸிப்பிக் கொண்டிருந்தான்.  ஆனால் அவன் மனம் அதில் லயித்திருக்கவில்லை. காரணம் உண்டு. பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியிருந்தது. ஆம், அவன் பழிவாங்க துடித்துக் கொண்டிருந்தது, எதிரியாகிப் போன அவன் நண்பனை. தவறு..எதிரி நண்பனாகலாம்...ஆனால்..நண்பன் தடம் மாறினால், எதிரியாக பாவிக்க முடியாது, துரோகி என்பதுதான் சரியான வார்த்தையாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அவனுக்கு துரோகியாகிப் போனவன் , அப்துல். இருவருக்கும் பதினைந்து வருடப் பழக்கம்.

"சொல்லுங்க ஷ்யாம்..என்ன பண்ணனும்"..கேட்டது ராம். இவனுக்கு நிலையான பெயர் கிடையாது. இந்த அஸைன்மெண்ட்டை பொறுத்தரையில் இவனது பெயர் ராம். இவன் ஒரு ப்ரொஃபஷனல் கில்லர் என்று சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு கம்பெனியின் நிர்வாக அதிகாரி என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் அவனது நடை,உடை, பாவனை, பேச்சு அனைத்தும்.ஜெர்மனியில் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன். சில சூழ்நிலைகளால் இந்த தொழிலுக்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது. மெத்தப் படித்தவன். செய்யும் வேலையில் ஒரு நேர்த்தி இருக்கும். ப்ரொஃபஷனிலசம்..ஆம் அதுதான் ஷ்யாமை இவனிடம் அழைத்து வந்தது.

"அவன் இருக்கக் கூடாது ராம். அவ்ளோதான். பாஸ்டர்ட். எங்கிட்டயே அவன் வேலையைக் காமிச்சிட்டான். பணம் போனதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா எவ்வளவு கேவலமா எடை போட்டிருக்கான். நோ வே..ஐ ஷுட் டீச் ஹிம் எ லெஸன்".

" 20 லட்சம் அட்வான்ஸ். பாக்கி 30 வேலை முடிஞ்சதும்.ஆல் இன் கேஷ்.அவரும் கொஞ்சம் பெரிய கை இல்லயா. நிறைய ரிஸ்க் இருக்கு ஷ்யாம். பண்ணிரலாம்", ராம்.

"ஹும்..பெரிய கை..ஆக்குனதே நான் தான். அட்வான்ஸ்-லாம் இல்ல..ஃபுல் பேமண்ட் தர்றேன். உன் கார் டிக்கில இருக்கும். அடுத்த வாரம் அவன் இருக்கக்கூடாது ராம்...தாட்ஸ் இட்".

"கூல்..அடுத்த வாரம் நீங்க கொண்டாடுறதுக்கு பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணுங்க. நான் கிளம்புறேன். ஸீ யூ",ராம்.

"இன்னொரு விஷயம் ராம்..அவன் சாகுறத நான் பாக்கணும். ஐ வாண்ட் டு சீ ஹிம் சஃபர்", ஷ்யாம்.

"ஷ்யூர்", என்று சிரித்தான் ராம்.

ராமின் ஹோண்டா ஸிவிக்கை தொடர்ந்து, ஷ்யாமின் பென்ஸும் ஹோட்டலிலிருந்து வெளியேறியது.

"எவ்வளவு குடிச்சாலும் .. வீட்டுல குடிங்கன்னு சொல்லிருக்கேன்ல.. அப்புறம் ஏங்க இப்படி வெளிய போயி குடிச்சிட்டு வர்றீங்க ? உங்களுக்கு ஏதாவது ஓண்ணுன்னா, நான் என்ன பண்றது ?",உள்ளே நுழைந்த ஷ்யாமை கெஞ்சலாக கேட்டாள் ஸ்வேதா. ஷ்யாமின் மனைவி.

"சாரி டார்லிங்,கொஞ்சம் டென்ஷன் அதான். இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன், சாப்பாடு எடுத்து வைம்மா", உள்ளே சென்றான் ஷ்யாம்.


"க்ரேட் ராம், நான் அவன் குடுத்ததை விட ரெண்டு மடங்கு தர்றேன். அவன் சொன்ன அதே ஒரு வாரத்துக்குள்ள அவன காலி பண்ணிரு. அப்துலின் பண்ணைவீட்டில் ராமிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான் அப்துல்.

"நீங்க சாகுறத, ஷ்யாம் பாக்கணும்னு ஆசைப்பட்டாரு. நான் அவரை இங்க வரச் சொல்றேன். நீங்க அவரைத் தீர்த்துக் கட்டிருங்க. பட்  அந்த நேரத்துல பண்ணைவீட்டுல யாரும் இல்லாம பாத்துக்குங்க.", ராம்.

"சியர்ஸ்..டூ ஷ்யாம்" சிரித்தனர் இருவரும்.

இரு நாட்கள் கழித்து,ஷ்யாமின் செல்லுக்கு கால் செய்தான் ராம்.

" உடனே கிளம்பி வாங்க ஷ்யாம், ரொம்ப நேரம் தாங்க மாட்டான். பாதி உயிர்தான் இருக்கு, சீக்கிரம்", ராம்.

"சூப்பர்ப்..இதோ வந்துட்டேன்"

"வந்துட்டு இருக்கான்", அப்துலிடம் சிரித்தான் ராம்.

அடுத்த முப்பதாவது நிமிடத்தில் ஷ்யாமின் கார் அப்துலின் பண்ணைவீட்டில் நுழைந்தது.

சேரில் கட்டப்பட்டிருந்த அப்துலை பார்த்தவுடன் , ராமை கட்டியணைத்தான் ஷ்யாம்.  "யூ டிட் இட் ட்யூட்"

"ஏன் ஒரு மாதிரி நெர்வஸா இருக்க ராம். எனி ப்ராப்ளம்", ஷ்யாம்.

"இல்ல ஷ்யாம், இந்த ஸ்டைல் எக்ஸிக்யூஷன் எனக்கு புதுசு. தேட்ஸ் த ரீசன். சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பலாம்", ராம்.

"ஷ்யூர். டூ மினிட்ஸ். இவங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்", ஷ்யாம்.

"உன்ன என் கூடப் பிறந்தவன் மாதிரிதான வச்சிருந்தேன். உனக்கே தெரியும் அந்த நூறு கோடி ரூபா ப்ராஜக்ட் என்னொட கனவுன்னு. அதுல டபுள் கிராஸ் செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு. உன்ன கூட சேர்த்துக்க வேணாம்னு, டாட் சொன்னப்பவே நான் கேட்டிருக்கணும். என் தப்புதான். என் தப்புக்கு நானே ப்ராயசித்தம் தேடிக்கிறேன்", என்றபடி ஷ்யாம் பிஸ்டலை உயர்த்தினான்.

சைலன்சர் பொருத்திய துப்பாக்கி "டப்" பென்று வெடித்தது.

நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தான் ஷ்யாம்.

கட்டை அவிழ்த்தபடி எழுந்தான் அப்துல்.

"பாஸ்டர்ட், சுட வந்தா சுடணும். டயலாக் பேசிட்டு இருக்க. நீ இன்னும் திருந்தவேயில்லை. ராம் ஐ வாஸ் ஸ்கேர்ட்.. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா என்ன போட்டிருப்பான். நல்ல வேளை உன் ஐடியா படி நான் ஒரு துப்பாக்கியை மறைச்சு வச்சிருந்தேன்.", பேசியபடியே ராமிடம் திரும்பினான்.

"டப் !!"

ராமின் பிஸ்டலில் இருந்து வந்த புல்லட் அப்துலின் மூளையை சிதறடித்திருந்தது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஷ்யாமின் வீடு. சோகம் , அழுகை அனைத்தும் வடிந்து, அமைதியாக இருந்தது.

"நீங்க ஜெர்மனியில் இருந்தப்ப , அவன் கிட்ட வேலை பாத்த எங்க அப்பாவுக்கு பணத்தாசை காட்டி, என்ன கல்யாணம் பண்ணிகிட்டான்ல, அவனுக்கு சரியான தண்டனை. எப்படியோ நம்ம ப்ளான் சக்ஸஸ் ஆச்சே..அதுவரைக்கும் சந்தோஷம். இனிமே மிச்சம் இருக்கிற லைஃப் உங்ககூட நிம்மதியா இருப்பேன்.ஷ்யாமை கொன்னீங்க ஒ.கே, ஆனா அப்துலை ஏன் கொன்னீங்க ?". ஸ்வேதா, ராமின் தலையை கோதியபடி கேட்டாள்

"அப்படி ஷ்யாமை திட்டாத ஸ்வேதா.. அவன் குறுக்க வரலைன்னா, நாம ரெண்டு பேரும் கல்யாணம் மாசம் 40 ஆயிரம் , 50 ஆயிரம்னு சம்பாதிச்சு லைஃபை ஓட்டிருக்கணும். அவனாலதான் இவ்வளவு சொத்து கிடைச்சிருக்கு.ஷ்யாமை மட்டும் போட்டிருந்தேன்னா...நாளைக்கு அப்துல் ஷ்யாமோட சொத்துக்கு ஆசைப்பட்டு கண்டிப்பா நமக்கு தொல்லை குடுப்பான். நான் யாருன்னு துருவ ஆரம்பிச்சிருவான். இப்ப நான் உன்ன கல்யாணம் பண்ணாலும் வெளிய இருக்கவுங்களுக்கு சந்தேகம் வராது.ஏன்னா இப்ப நீ இருக்குற சொஸைட்டில இதெல்லாம் சகஜம். இதெல்லாம் கடைசி நேரத்துல தோணுனது தான். இப்போவும் எல்லாரும் நினைக்கிறது ஷ்யாமும் அப்துலும் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கிட்டாங்கன்னுதான் .எவ்ரிதிங் இஸ் கூல் நவ்." என்றடி ஸ்வேதாவை கட்டியணைத்தான் ராம்.

எனக்கு அஜித்தை சுத்தமா பிடிக்காது

நான் அஜித் ரசிகன் இல்லை.எனக்கு அஜித்தை சுத்தமா பிடிக்காது. எந்த அளவுக்குன்னா அதாவது அவரு படம் நல்லாவே இருந்தாலும், அது ரொம்ப கேவலமா இருக்குன்னு என்ன நானே கன்வின்ஸ் பண்ணிப்பேன். (அவரு படம் எது நல்லா இருந்துருக்குன்னு நக்கல் பண்ணப்படாது..மேட்டர் அது இல்ல...கான்சன்ட்ரேஷன் திஸ் ஒகே ?)

தெல்லாம் அஜித்தோட லேட்டஸ்ட் வீடியோ பாக்குற வரைக்கும் தான். தல சும்மா பிச்சு உதறிட்டாப்ல. அவரு பேசுனதெல்லாம் 100% நியாயம். மாற்றுக் கருத்தே கிடையாது. அதுக்கு ரஜினி கைதட்டுனாருங்கிறத பெருசா பேசக்கூடாது. "அவங்கள உதைக்க வேணாமான்னு" சொல்லிட்டு திரும்ப "கோவத்துல வந்த வார்த்தைகள்"ன்னு சமாதானமா போயிருக்காரு ரஜினி. ஆனா அந்த விஷயத்துல அஜித் " நான் பேசுனது தப்பு இல்ல..தப்புன்னா சினிமாவ விட்டே போயிர்றேன்"னு சொன்னது, ஒரிஜினல் , அக்மார்க் , 100% ஆம்பளைத்தனம். இது தைரியம்.( இந்த பேச்சு ஃபெஃப்சி மீட்டிங்க்கு அப்புறம் வந்தது இல்ல..அதுக்கு முன்னாடியே வந்ததுன்னும் சொல்றாங்க. நம்ம இத ஃபெஃப்சி மீட்டிங்க்கு அப்புறம் வந்ததாவே எடுத்துப்போம். அப்பதான் கொஞ்சம் சுறு சுறு‍ன்னு இருக்கும்.ஹி ஹி கமர்ஷியல் வேல்யூ)


வரு பேரு என்னாங்க புலி பூபதியா..இல்லையே..சிங்கம் சின்னச்சாமியா..குரங்கு குமாரு ?? அடச்சே..ஆங்..ஜாகுவார் தங்கம். நீங்க ஸ்டண்ட்டை விட்டுட்டு காமெடி ட்ரை பண்ணுங்களேன். வடிவேலுவுக்கு சரியான போட்டியா இருக்கும்.அட நெசமாத்தாங்க சொல்றேன்.

ஜித், சோனா பர்த்டே பார்ட்டிக்கு போறாரு, ஆனா ஒரு சமூகப் போராட்டத்துக்கு வரமாட்டாரான்னு கேட்டிருக்காங்க. ஏன்யா..சோனா பர்த்டே பார்ட்டி எங்க ? சமூகப் ப்ரச்னை எங்க. உங்களை சோனாக்கா பார்ட்டிக்கு கூப்பிடலைன்னு கோவமாக்கும். ப்ரச்னைக்கு வரணும்..ஆனா அரசியலுக்கு வரப்படாது. இது எந்த ஊரு நியாயம். இப்பவே ..அமுக்கம் சொல்றேன்.நாளைக்கு எங்க தளபதி கட்சி ஆரம்பிச்சாருன்னா யாரும் இதப் பத்தி பேசப்படாது. சினிமாவில் இருந்து சமூகப் ப்ரச்னைக்கு வரலாம்,ஆனா அரசியலுக்கு வரப்ப்டாதா?

ன்னொண்ணும் சொல்லிக்கிறேன். ஏதோ இந்த அஜித்,ரஜினி, விஜய் எல்லாம் என்னய ( நம்மள :)) மாதிரி கோவக்காரங்களா இல்லாம, கொஞ்சம் சாஃப்டா இருக்காங்க. இவிங்க பாட்டுக்கு கோவப்பட்டு எங்களுக்கு சினிமா வேண்டாம்..அரசியலுக்கு வர்றோம்னு சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சுட்டாங்கன்னு வைங்க. அப்புறம் நீங்க 8 கட்சி கூட்டணி வைக்க வேண்டியது இருக்கும்.கிக்கிரி பிக்கிரிதான்.இவுங்களுக்கு அம்புட்டு தாக்கம் இருக்குதப்பா தமிழ் நாட்டுல.அம்புட்டு தான் சொல்லுவேன்.

டி.வி. ல காமிக்காம இருந்தா யாருக்கும் தெரியாதுங்கிறதெல்லாம் அந்தக் காலம். இப்போ இண்டர் நெட் வந்துருச்சு சாமிகளா. படத்தயே ரிலீஸ் பண்றானுங்க. வீண் முயற்சி.


றுபடியும் சொல்றேன். நான் அஜித் ரசிகன் இல்லை..இல்லை...இல்லை. எனக்கு அஜித்தைப் பிடிக்காது.
ஆனா ..

" நீ கலக்கு தல"

ப்புறம் இன்னொரு விஷயம்,அஜித் அடுத்த படத்துக்கு தயாநிதி அழகிரிகிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கி இருக்காராம்.

"ய் யாருப்பா அது, அஜித் படத்துக்கு ஒத்துழைப்பு தர மாட்டேன்னு சொல்றது"

பி.கு:

ஜித் : நல்ல படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை
பொதுமக்கள் :நல்ல படத்துக்கு அஜித்தே தேவை இல்லை

ஹி ...ஹி...ஹி...

Friday, February 19, 2010

லவ் லெட்டர்

 "இங்க பாரு மச்சி.. சப்ப மேட்டருடா இது. ஒரு லெட்டர் எழுது ..ரம்யாவை காஃபி ஷாப் கூப்பிடு. நீங்க ரெகுலரா போற இடம்தான?  அங்க வச்சு லெட்டரை குடுத்துட்டு, விஷயத்த‌ சொல்லிரு." , கடைசி கட்டிங்கை முடித்தான் சுந்தர்.

"என்னாது, லெட்டரா.. என்னடா 1980 ல வந்த ஐடியா எல்லாம் சொல்ற ?", அருண்.

"மச்சி.. நீ என்னதான் ஃபிலிம் காட்டுனாலும், அவகிட்ட இதப் பேசுறப்போ, முக்கி முனகி, திக்கித் தடுமாறி, மொக்க வாங்கிருவ. அதுனால பெஸ்ட் வழி லெட்டர்தான்", சுந்தர்

"அது ஒகே தான் சுந்தரு.. ஆனா, அவ ஏதாவது தப்பா எடுத்துகிட்டு, இருக்குற ரிலேஷன்ஷிப்பும், கட் ஆயிருச்சுன்னா, என்ன பண்றதுன்னு பயமா இருக்கு"

"அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது, நான் இருக்கேன்ல, இது ஊத்திக்கிச்சுன்னா, நீ அடுத்து வேற ஒரு பொண்ண லவ் பண்ணு, இத விட பெட்டரா ஐடியா தர்றேன்..ஒகே வா" ,சுந்தர்

"டே.. சுந்தரு விளையாடாதடா, ஐ ஆம் வெரி சீரியஸ் இன் திஸ். ஷி இஸ் மை கேர்ள்..கிண்டல் பண்ணாத. அதெல்லாம் காதல் வந்தாதான் தெரியும். அப்டியே மனசை போட்டு பிசையுற மாதிரி இருக்குடா"

"ஓ.. நல்லா தண்ணி விட்டு பிசைஞ்சிரு மச்சு.. அப்போதான் புரோட்டா ஸாஃப்டா வரும்". சுந்தர்.

"டேய்...&#$@**"

"அப்புறம் என்னடா..உன் மனசு என்ன மைதா மாவா ? பிசையுது, கிசையுதுன்னு உயிர வாங்கிட்டு இருக்க. நீ வாங்கி குடுத்த ரெண்டு குவார்ட்டருக்கு இதுக்கு மேல என்னால மொக்க தாங்க முடியாது. அப்புறம் நீ அவ தேவதை, நிலான்னு உயிர எடுப்ப. இந்த ஐடியாவுக்கே என் கிட்னியை எவ்வளவு வேலை வாங்கிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். போய் மூச்சா போயிட்டு தூங்கு போ", சுந்தர்.

"கிட்னியா"

"ஆமாடா உங்களுக்கு மட்டும் மனசு பிசையும்..எங்களுக்கு கிட்னி யோசிக்காதா ? நாங்களும் பி.இ படிச்சவிங்கதான். அதுவும் இல்லாம இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம், என் மூளையை டிஸ்டர்ப் பண்ண முடியாது.அது ரொம்ப பிஸி", சுந்தர்.

"இல்லடா சுந்தரு.. அது வந்து.."

"இதுக்கு மேல என்ன அனத்துன.. நீ வாங்கி குடுத்த சரக்க, வாய்க்குள்ள விரலை விட்டு வாந்தி எடுத்துருவேன். நான் மானஸ்தன். ஆறு மாசமா எப்படிடா அதே டயலாக்கை அடிக்கிற ? போயிரு. நான் மொட்டை மாடிக்கு போறேன். இங்க இருந்தா, நீ என்ன தூங்க விட மாட்ட" சுந்தர்.

"இவனால மட்டும் எப்படி இவ்ளோ கூலா இருக்க முடியுது. எனக்கு கூலா இருக்குறது முக்கியம் இல்லை, என் காதல் ஜெயிக்கணும். அவ்ளோதான். என்னிக்கு இருந்தாலும் சொல்லித்தான ஆகணும். நாளைக்கு சொல்லிர வேண்டியது தான். சுந்தர் சொன்னா மாதிரி லெட்டர் எழுதிர வேண்டியதுதான்" தனக்குள் பேசிக் கொண்டே லெட்டர் எழுத அமர்ந்தான்"

மறுநாள்,

"மச்சி .. சுந்தரு... நீ சொன்னதுதான் மச்சி சரி. நான் லெட்டர் எழுதிட்டேன். கொண்டு போயி குடுக்க போறேன்டா"

"ஒகே டா வர்றப்போ, ஒரு ஃபுல் வாங்கிட்டு வந்துரு". சுந்தர்

"என்னடா.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க ?", அருண்.

"அங்க என்ன ஆனாலும், மொக்க வாங்கப் போறது நாந்தான்..அதுனாலதான் சொன்னேன்.கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்", சுந்தர்.

"போடாங்.." என்றபடியே கிளம்பினான் அருண்.

காஃபி ஷாப்.

"ரம்யா.. நீ தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒண்ணு சொல்லலாமா", அருண்.

" என்னடா சொல்லு, ஆறு மாசமா பேசிட்டு இருக்கோம். வி ஆர் ஃப்ரெண்ட்ஸ்..என்கிட்ட சொல்லாம, யார்கிட்ட சொல்லப் போற", ரம்யா.

"இல்ல ரம்யா, என்னால மனசுக்குள்ளயே வச்சிருக்க முடியல. நேர்ல பேசவும் வார்த்தை வரமாட்டிங்குது..அதான்" என்று சொல்லியபடியே லெட்டரை எடுத்தான்.

"என்ன லவ்வா ?? " ரம்யாவின் முகம் மாறியது.

"எத்தன நாளா உனக்கு என்னை தெரியும். ஜஸ்ட் 6 மன்த்ஸ் மேன். நீ இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை அருண். கொஞ்சம் ஜோவியலா பேசுனா, உடனே ப்ரபோஸ் பண்ணிர்றதா ? வாட் டு யூ தின்க் ஆஃப் மி ? கமான்,என்னால் இத ஏத்துக்க முடியல. எப்படி உன்னால கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம் இப்படி வந்து சொல்ல முடியுது. எல்லாப் பசங்களும் ஒரே மாதிரிதான். இல்ல ? ஐ கான்ட் டாலரேட் திஸ். நான் அன்னிக்கே சந்தேகப்பட்டேன்.கெட் லாஸ்ட். என் முகத்துலயே முழிக்காத" கிளம்ப எத்தனித்தாள் ரம்யா.

"யேய்...ங்கொய்யால உக்காரு.. என்ன ஓவரா சீன் போடுற, 6 மாசம், 7 மாசம்னு.உன் மனசுல என்ன நினைச்சிகிட்டு இருக்க ? பெரிய ரதின்னு நினைப்பா ? இந்த லெட்டர் உனக்கு இல்ல. உன் ஃப்ரெண்ட் அனன்யாவுக்கு. அவளத்தான் நான் லவ் பண்றேன். யப்பா.. உன்னப் போயி நான் லவ் பண்றதா? ஹே ஹே..போடி.. நான் லெட்டரை அவகிட்டயே குடுத்துக்கிறேன். 23 வயசாவுது இன்னுமா நீ ஒரு மொக்க ஃபிகருன்னு இன்னுமா உனக்கு தெரியல.சீ பே.." , நக்கலாக சிரித்து விட்டு கிளம்பினான் அருண்.


வீடு திரும்பியவுடன்...


"என்னா மச்சி என்னா சொன்னா உன் தேவதை ரம்யா ?", சுந்தரு.

"ஜஸ்ட் மிஸ் மச்சி.. ரொம்ப கேவலப்படுத்திருப்பா. சீப், நீயா இப்படின்னு. ஓவரா பேசிட்டா மச்சி"

"அப்புறம் என்னடா ஆச்சு" , சுந்தர்.

" நான் உன்ன லவ் பண்ணல, உன் ஃப்ரெண்ட் அனன்யாவைத்தான் லவ் பண்றேன். என் லெவலுக்கு உன்ன போயி லவ் பண்றதா ? நீ ஒரு மொக்க ஃபிகரு. அவகிட்டதான் லெட்டரை குடுக்க சொன்னேன்னு சொல்லிட்டு, மொக்கையப் போட்டு எஸ் ஆயிட்டேன். அவ இத எதிர்பார்க்கல.ஷாக் ஆயிட்டா..", அருண்

"அப்புறம் என்னதான்டா பண்ணப்போற. ", அருண்.

"அந்த சிப்ஸ் பாக்கெட் எடு மச்சி, அப்டியே சரக்கப் போட்டு பேசலாம்", அருண்.


"சியர்ஸ்"..


"சொல்டா..என்னதான் பண்ணப் போற?", சுந்தரு


"மச்சான், சுந்தரு.. இந்த அனன்யா இருக்காள்ல மச்சி...அவ .." அருண் ஆரம்பிக்க...


சுந்தர் மட்டையானான்....!!!

Thursday, February 18, 2010

இது ஒரு காதல் கதை

"நாளைக்கு 3 மணிக்கு மேட்ச் மறந்துராதடா.. 2 மணிக்கு வர்றேன் ரெடியா இரு..சொதப்பிராத " சொல்லிவிட்டு கருப்பு நிற சிபிசி யில் விர்ர்ரினான் அருள்.

அருளுக்கு பதில் சொல்லியவாறே,காம்பவுண்ட் கேட்டை சாத்திவிட்டு, உள்ளே சென்ற அமுதன்,

"சுஜா.. நான் வெளிய சாப்பிட்டு வந்துட்டேன். நீ சாப்பிட்டு படு" , என்று மேல் மாடிக்கு கேட்குமாறு கத்தி விட்டு, டிவியை ஆன் செய்தான்.

"ஏண்டா, ஒரு ஃபோன் பண்ணி சொல்லிருந்தா, நான் அப்போவே தூங்கப் போயிருப்பேன். நான் சாப்பிட்டு முடிச்சு ஒரு மணி நேரம் ஆச்சு. நீ வருவன்னு தான் வெயிட் பண்ணிகிட்டு இருந்தேன். உனக்கு அந்த அருள் கூட இருந்தா உலகமே மறந்துருமே !!" மாடியிலிருந்து இறங்கி வந்தாள் சுஜா.

"போடி..போயி உன் வேலையப் பாரு..ஆமா அப்பா எங்க?"

"க்கும்..யாரோ ஃப்ரெண்டை பாக்க போறேன்னு மதியம் கிளம்பி போனாரு.இப்போ வரைக்கும் ஆளக் காணோம். அவருக்கு நீ எவ்வளவோ பரவாயில்லை. அம்மா இருந்திருந்தா நீங்க ரெண்டு பேரும் இப்படி இஷ்டத்துக்கு இருக்க முடியுமா? உனக்கு கல்யாணம் ஆனப்புறம் இருக்குதுடா ஆப்பு"

"சரிங்க மேடம்..உங்க மொக்கைய நிப்பாட்டுங்க.உனக்கு கல்யாணம் ஆனதுக்கு அப்புறம்தான் எனக்கு கல்யாணம். இந்த மார்ச்சோட உனக்கு கோர்ஸ் முடியுதுல்ல. இதுக்கு மேல எதுவும் படிக்கிறேன்னு அலும்பு பண்ணாத.இந்த வருசத்துக்குள்ள உனக்கு கல்யாணம் பண்ணிரனும்"

"அண்ணா..இந்த பேச்சை நிறுத்துறியா ?"

"ஏன் கல்யாணப் பேச்சை எடுத்தாலே, டென்ஷன் ஆகுற. யாரையாவது லவ் பண்றியா? சொல்லு. பேசி முடிச்சிரலாம்"

"அதெல்லாம் ஒண்ணும் இல்லை, இருந்தா உன்கிட்ட சொல்றேன். நான் தூங்கப் போறேன்.குட் நைட். மாடிக்கு போயி தம் அடிக்காத. ஒழுங்கா படுத்து தூங்கு"


13வது தடவையாக புரண்டு படுத்தாள் சுஜா.

"அண்ணன்கிட்ட லவ பண்றத சொல்லிரலாமா.இப்போ ஓ.கே.ன்னு சொல்றான், ஆனா விஷயத்த சொன்ன உடனே, டென்ஷன் ஆகிட்டா என்ன பண்றது." மனசாட்சியுடன் விவாதித்து கொண்டிருந்தாள் சுஜா.

"அறிவு கெட்டவளே, அதுக்கு முன்னாடி லவ் பண்றவன்கிட்ட உன் லவ்வை சொல்லு.அதயே சொல்லாம் அண்ணன்கிட்ட சம்மதம் வாங்குறத பத்தி யோசிக்கிற. கிணறு வெட்றதுக்கு முன்னாடி, தவளை கூப்பாடு போட்ட கதையா இருக்கு" பன்ச் டயலாக் பேசியது மனசாட்சி.

"அதுவும் சரி தான். சே.. இதுல போயி எப்படி விழுந்தேன். இது வரைக்கும் எத்தன பேரு ப்ரபோஸ் பண்ணியிருப்பாங்க. எப்போவுமே டிஸ்டர்ப் ஆனதில்ல. இப்படி தூக்கம் வராம இருந்ததில்ல. இந்த ஆறு மாசமாத்தான் இப்படி.இந்த அருள் பாக்குறதுக்கு அப்படி ஓண்ணும் பெரிய அழகன் இல்லை. அவன் இது வரைக்கும் சிரிச்சுக்கூட பாத்ததில்லை.ஆனா எனக்கு ஏன் அவன
இவ்ளோ புடிச்சிருக்கு ?

ஒரு வேளை , என்னை கண்டுக்காம இருந்து என்னை ஜெயிக்க ட்ரை பண்றானோ ? அதான் பண்ணிட்டானே. இதுக்கு மேல என்ன ? என் ஈகோ கிட்டத்தட்ட உடைஞ்சிருச்சு. இன்ஃபாக்ச்சுவேஷனாக் கூட இருக்கலாம். இருந்தா இருந்துட்டு போகட்டும். அவனோட அலட்சியம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு. இது வரைக்கும் எனக்கு வரப் போற புருஷன் எப்படி இருக்கணும்னு நான் கற்பனை பண்ணினது இல்ல. ஆனா இப்போ எனக்கு தோணுது, ஹி இஸ் மை மேன். நாளைக்கு அவன் வீட்டுக்கு வர்றப்போ சொல்லிர வேண்டியதுதான். கண்டிப்பா ரிஜக்ட் பண்ண மாட்டான்."

தனக்குள் சொல்லிக்கொண்டே, ஏ.சியின் ரீங்காரத்தில் தூங்கிப் போனாள்.

மறுநாள், அருள் மதியத்துக்கு மேல்தான் வருவான் என்று தெரிந்தும், காலையில் இருந்தே எதிர்பார்க்க தொடங்கிவிட்டாள். தான் இன்னும் கொஞ்சம் அழகாக இருப்பதாக அவளுக்கு தோன்றியது.

அப்பா லேட்டாக வந்திருப்பார் போலும், இன்னும் தூங்கிக் கொண்டுதான் இருந்தார். அமுதன் கேக்கவே வேண்டாம், மதியத்துக்கு மேல் தான் அவனுக்கு விடியும்.

"எப்படி சொல்றது, தனியாப் பேசணும்னு எங்கயாவது வர சொல்லலாமா ? வேணாம், அண்ணகிட்ட ஏதாவது சொல்லிட்டா ? நேரடியா கேட்டுற வேண்டியதுதான். எப்படியும் அருள் வந்ததுக்கு அப்புறம்தான் அண்ணன் எந்திரிப்பான்.அந்த நேரம் போதும். ஒரு வேளை அவன் என்னை புடிக்கலன்னு சொல்லிட்டு, அண்ணன்கிட்ட சொல்லிட்டா என்ன பண்றது ?"

"மண்டு..உன்னப் போயி யாராவது புடிக்கலன்னு சொன்னா ? அவன் குருடன்னு அர்த்தம். நம்பிக்கையோட இரு" மனசாட்சி முந்தியது.

மணி 2 அடிக்க பத்து நிமிடம் இருக்கும்போது, அருள் வந்தான்.

"அமுதன் ரெடியாயிட்டானா? "

"இல்லை அருள், இன்னும் எந்திரிக்கவேயில்லை,உள்ள வந்து உக்காரு" சுஜா.
சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

"ஹாய் மச்சி, இன்னும் 15 மினிட்ஸ் டா. குளிச்சிட்டு வந்துர்றேன், என்றபடி பெட்ரூமிலிருந்து ஹாலைக் கடந்து பாத்ரூமிற்குள் சென்றான் அமுதன்.

இப்போதே சொல்லிவிடு சுஜா..இந்த நேரம் கிடைக்காது...யோசிக்காதே..ம்ம் சீக்கிரம்..என்ற மனசாட்சியின் உந்துதலில், சுஜா ஆரம்பித்தாள்..

"அருள், என்னால இதுக்கு மேல இத மனசுலயே வச்சிருக்க முடியல. எனக்கு உன்ன ரொம்ப புடிச்சிருக்கு அருள். நீ உன் மனசுல என்ன நினைச்சிருக்கன்னு தெரியல. என் காதலை நீ ஏத்துக்கோன்னு உன்னை நான் கேக்கலை. ஆனா என காதலை உன்கிட்ட சொல்லாமயே இருந்து குழப்பிகிறதுக்கு, உன்கிட்ட சொல்லிர்றது பெட்டர்‍னு ஃபீல் பண்றேன்.

ஏன் என்னய புடிச்சிருக்குன்னு, என்கிட்ட கேள்வி கேக்காத அருள், என்கிட்ட பதில இல்ல. வேணாம்னு சொல்ல மாட்டேன்னு நினைக்கிறேன். நீ ஓ.கே சொன்னா, இதப்பத்தி அண்ணன்கிட்ட பேசலாம், இல்லாட்டி இத்தோட இந்த விஷயத்த விட்டுரலாம்."

"ஹப்பா..ஒரு வழியா டிப்ளோமேட்டிக்கா என் காதலை புரிஞ்சிக்கோன்னு சொல்லியாச்சு", என்று சுஜா ரிலாக்ஸ் ஆகும் முன்பு, அமுதன் வெளியே வந்து விட்டான்.

"இரு மச்சி..டூ மினிட்ஸ்" என்று டிரஸ் மாட்ட உள்ளே சென்றான்.

"சீக்கிரம் வாடா..வெளிய வெயிட் பண்றேன்" என்ற சொல்லிவிட்டு, சுஜாவை மையமாக ஒரு பார்வை பார்த்து விட்டு வெளியேறினான் அருள்.

உடைந்து போனாள் சுஜா. "ஏதாவது சொல்லியிருக்கலாம். 1000 காரணங்கள் சொல்லலாம்.பிடிக்கலை. இன்னொரு பொண்ண லவ் பண்றேன். ஆனா ஒண்ணுமே சொல்லாமப் போறான். இப்படி மையமா பார்த்தா ? இந்த ரியாக்ஷன பாத்து என்னன்னு புரிஞ்சிக்கிறது. அய்யோ .. இதுக்கு இவன்கிட்ட சொல்லாமயே இருந்துருக்கலாம் போல." மருகினாள்.

அதற்குள், அமுதனும், அருளும் தெருமுனையை தாண்டி விட்டிருந்தார்கள். அருள் ஆரம்பித்தான் " நான் அன்னிக்கு சொன்னப்ப, நீ கேக்கலை அமுதா, இன்னைக்கு சுஜா என்கிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டா தெரியுமா ? அதுக்குதான் நான் உன் வீட்டுக்கு வர மாட்டேன் சொல்லுவேன். நீ கேக்க மாட்ட‌"

"ம்ம் நானும் எதிர்பார்த்தேன்.இனிமே நீ வீட்டுப் பக்கம் வர வேண்டாம் அருள். ஆமா அதுக்கு நீ என்ன சொன்ன ?"

கிறீச்சிட்டு வண்டி ப்ரேக்கியது.

"அமுதா..என்னடா கேள்வி இது..இன்னொரு வாட்டி என்ன சந்தேகப்பட்ட அவ்ளோதான் ..நடக்குறதே வேற."

"கோச்சுக்காதடா அருள்..ஒரு பொசஸிவ்னஸ்ல கேட்டுட்டேன். நான் இல்லாட்டி நீ செத்துருவன்னு தெரியும் டா. அதே மாதிரி தான் நானும். நமக்குள்ள யாரும் வர முடியாது" என்றபடி அருளின் இடையில் ஒரு கையைப் படரவிட்டு, தோள்பட்டையில் முத்தம் பதித்தான் அமுதன்.

அருள் சிரிக்க, அமுதன் இறுக்க.. வண்டி சீறிப் பாய்ந்தது !!