Friday, February 19, 2010

லவ் லெட்டர்

 "இங்க பாரு மச்சி.. சப்ப மேட்டருடா இது. ஒரு லெட்டர் எழுது ..ரம்யாவை காஃபி ஷாப் கூப்பிடு. நீங்க ரெகுலரா போற இடம்தான?  அங்க வச்சு லெட்டரை குடுத்துட்டு, விஷயத்த‌ சொல்லிரு." , கடைசி கட்டிங்கை முடித்தான் சுந்தர்.

"என்னாது, லெட்டரா.. என்னடா 1980 ல வந்த ஐடியா எல்லாம் சொல்ற ?", அருண்.

"மச்சி.. நீ என்னதான் ஃபிலிம் காட்டுனாலும், அவகிட்ட இதப் பேசுறப்போ, முக்கி முனகி, திக்கித் தடுமாறி, மொக்க வாங்கிருவ. அதுனால பெஸ்ட் வழி லெட்டர்தான்", சுந்தர்

"அது ஒகே தான் சுந்தரு.. ஆனா, அவ ஏதாவது தப்பா எடுத்துகிட்டு, இருக்குற ரிலேஷன்ஷிப்பும், கட் ஆயிருச்சுன்னா, என்ன பண்றதுன்னு பயமா இருக்கு"

"அதுக்கெல்லாம் பயப்படக்கூடாது, நான் இருக்கேன்ல, இது ஊத்திக்கிச்சுன்னா, நீ அடுத்து வேற ஒரு பொண்ண லவ் பண்ணு, இத விட பெட்டரா ஐடியா தர்றேன்..ஒகே வா" ,சுந்தர்

"டே.. சுந்தரு விளையாடாதடா, ஐ ஆம் வெரி சீரியஸ் இன் திஸ். ஷி இஸ் மை கேர்ள்..கிண்டல் பண்ணாத. அதெல்லாம் காதல் வந்தாதான் தெரியும். அப்டியே மனசை போட்டு பிசையுற மாதிரி இருக்குடா"

"ஓ.. நல்லா தண்ணி விட்டு பிசைஞ்சிரு மச்சு.. அப்போதான் புரோட்டா ஸாஃப்டா வரும்". சுந்தர்.

"டேய்...&#$@**"

"அப்புறம் என்னடா..உன் மனசு என்ன மைதா மாவா ? பிசையுது, கிசையுதுன்னு உயிர வாங்கிட்டு இருக்க. நீ வாங்கி குடுத்த ரெண்டு குவார்ட்டருக்கு இதுக்கு மேல என்னால மொக்க தாங்க முடியாது. அப்புறம் நீ அவ தேவதை, நிலான்னு உயிர எடுப்ப. இந்த ஐடியாவுக்கே என் கிட்னியை எவ்வளவு வேலை வாங்கிருக்கேன்னு எனக்குத்தான் தெரியும். போய் மூச்சா போயிட்டு தூங்கு போ", சுந்தர்.

"கிட்னியா"

"ஆமாடா உங்களுக்கு மட்டும் மனசு பிசையும்..எங்களுக்கு கிட்னி யோசிக்காதா ? நாங்களும் பி.இ படிச்சவிங்கதான். அதுவும் இல்லாம இந்த மாதிரி சப்ப மேட்டருக்கெல்லாம், என் மூளையை டிஸ்டர்ப் பண்ண முடியாது.அது ரொம்ப பிஸி", சுந்தர்.

"இல்லடா சுந்தரு.. அது வந்து.."

"இதுக்கு மேல என்ன அனத்துன.. நீ வாங்கி குடுத்த சரக்க, வாய்க்குள்ள விரலை விட்டு வாந்தி எடுத்துருவேன். நான் மானஸ்தன். ஆறு மாசமா எப்படிடா அதே டயலாக்கை அடிக்கிற ? போயிரு. நான் மொட்டை மாடிக்கு போறேன். இங்க இருந்தா, நீ என்ன தூங்க விட மாட்ட" சுந்தர்.

"இவனால மட்டும் எப்படி இவ்ளோ கூலா இருக்க முடியுது. எனக்கு கூலா இருக்குறது முக்கியம் இல்லை, என் காதல் ஜெயிக்கணும். அவ்ளோதான். என்னிக்கு இருந்தாலும் சொல்லித்தான ஆகணும். நாளைக்கு சொல்லிர வேண்டியது தான். சுந்தர் சொன்னா மாதிரி லெட்டர் எழுதிர வேண்டியதுதான்" தனக்குள் பேசிக் கொண்டே லெட்டர் எழுத அமர்ந்தான்"

மறுநாள்,

"மச்சி .. சுந்தரு... நீ சொன்னதுதான் மச்சி சரி. நான் லெட்டர் எழுதிட்டேன். கொண்டு போயி குடுக்க போறேன்டா"

"ஒகே டா வர்றப்போ, ஒரு ஃபுல் வாங்கிட்டு வந்துரு". சுந்தர்

"என்னடா.. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன். நீ என்ன சொல்லிட்டு இருக்க ?", அருண்.

"அங்க என்ன ஆனாலும், மொக்க வாங்கப் போறது நாந்தான்..அதுனாலதான் சொன்னேன்.கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்", சுந்தர்.

"போடாங்.." என்றபடியே கிளம்பினான் அருண்.

காஃபி ஷாப்.

"ரம்யா.. நீ தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒண்ணு சொல்லலாமா", அருண்.

" என்னடா சொல்லு, ஆறு மாசமா பேசிட்டு இருக்கோம். வி ஆர் ஃப்ரெண்ட்ஸ்..என்கிட்ட சொல்லாம, யார்கிட்ட சொல்லப் போற", ரம்யா.

"இல்ல ரம்யா, என்னால மனசுக்குள்ளயே வச்சிருக்க முடியல. நேர்ல பேசவும் வார்த்தை வரமாட்டிங்குது..அதான்" என்று சொல்லியபடியே லெட்டரை எடுத்தான்.

"என்ன லவ்வா ?? " ரம்யாவின் முகம் மாறியது.

"எத்தன நாளா உனக்கு என்னை தெரியும். ஜஸ்ட் 6 மன்த்ஸ் மேன். நீ இவ்ளோ சீப்பா பிஹேவ் பண்ணுவன்னு நான் எதிர்பார்க்கவேயில்லை அருண். கொஞ்சம் ஜோவியலா பேசுனா, உடனே ப்ரபோஸ் பண்ணிர்றதா ? வாட் டு யூ தின்க் ஆஃப் மி ? கமான்,என்னால் இத ஏத்துக்க முடியல. எப்படி உன்னால கொஞ்சம் கூட வெக்கம் இல்லாம் இப்படி வந்து சொல்ல முடியுது. எல்லாப் பசங்களும் ஒரே மாதிரிதான். இல்ல ? ஐ கான்ட் டாலரேட் திஸ். நான் அன்னிக்கே சந்தேகப்பட்டேன்.கெட் லாஸ்ட். என் முகத்துலயே முழிக்காத" கிளம்ப எத்தனித்தாள் ரம்யா.

"யேய்...ங்கொய்யால உக்காரு.. என்ன ஓவரா சீன் போடுற, 6 மாசம், 7 மாசம்னு.உன் மனசுல என்ன நினைச்சிகிட்டு இருக்க ? பெரிய ரதின்னு நினைப்பா ? இந்த லெட்டர் உனக்கு இல்ல. உன் ஃப்ரெண்ட் அனன்யாவுக்கு. அவளத்தான் நான் லவ் பண்றேன். யப்பா.. உன்னப் போயி நான் லவ் பண்றதா? ஹே ஹே..போடி.. நான் லெட்டரை அவகிட்டயே குடுத்துக்கிறேன். 23 வயசாவுது இன்னுமா நீ ஒரு மொக்க ஃபிகருன்னு இன்னுமா உனக்கு தெரியல.சீ பே.." , நக்கலாக சிரித்து விட்டு கிளம்பினான் அருண்.


வீடு திரும்பியவுடன்...


"என்னா மச்சி என்னா சொன்னா உன் தேவதை ரம்யா ?", சுந்தரு.

"ஜஸ்ட் மிஸ் மச்சி.. ரொம்ப கேவலப்படுத்திருப்பா. சீப், நீயா இப்படின்னு. ஓவரா பேசிட்டா மச்சி"

"அப்புறம் என்னடா ஆச்சு" , சுந்தர்.

" நான் உன்ன லவ் பண்ணல, உன் ஃப்ரெண்ட் அனன்யாவைத்தான் லவ் பண்றேன். என் லெவலுக்கு உன்ன போயி லவ் பண்றதா ? நீ ஒரு மொக்க ஃபிகரு. அவகிட்டதான் லெட்டரை குடுக்க சொன்னேன்னு சொல்லிட்டு, மொக்கையப் போட்டு எஸ் ஆயிட்டேன். அவ இத எதிர்பார்க்கல.ஷாக் ஆயிட்டா..", அருண்

"அப்புறம் என்னதான்டா பண்ணப்போற. ", அருண்.

"அந்த சிப்ஸ் பாக்கெட் எடு மச்சி, அப்டியே சரக்கப் போட்டு பேசலாம்", அருண்.


"சியர்ஸ்"..


"சொல்டா..என்னதான் பண்ணப் போற?", சுந்தரு


"மச்சான், சுந்தரு.. இந்த அனன்யா இருக்காள்ல மச்சி...அவ .." அருண் ஆரம்பிக்க...


சுந்தர் மட்டையானான்....!!!

3 comments:

மீன்துள்ளியான் said...

மச்சி கதை சூப்பர்டா . ஒரு பாட்டில் சரக்குக்காக இப்படி மரண மொக்கைல மாட்டிகிட்டியே .......

என்னடா சொந்த அனுபவம் மாதிரி இருக்கு

ராஜகோபால் said...

பரவா இல்ல, பல்புக்கு பல்பு இந்த ஐடியாவும் நல்லாருக்கு., i will try next time this .

ச ம ர ன் said...

@ராஜகோபால்

கண்டிப்பா ட்ரை பண்ணுங்க :)