Monday, February 22, 2010

எனக்கு அஜித்தை சுத்தமா பிடிக்காது

நான் அஜித் ரசிகன் இல்லை.எனக்கு அஜித்தை சுத்தமா பிடிக்காது. எந்த அளவுக்குன்னா அதாவது அவரு படம் நல்லாவே இருந்தாலும், அது ரொம்ப கேவலமா இருக்குன்னு என்ன நானே கன்வின்ஸ் பண்ணிப்பேன். (அவரு படம் எது நல்லா இருந்துருக்குன்னு நக்கல் பண்ணப்படாது..மேட்டர் அது இல்ல...கான்சன்ட்ரேஷன் திஸ் ஒகே ?)

தெல்லாம் அஜித்தோட லேட்டஸ்ட் வீடியோ பாக்குற வரைக்கும் தான். தல சும்மா பிச்சு உதறிட்டாப்ல. அவரு பேசுனதெல்லாம் 100% நியாயம். மாற்றுக் கருத்தே கிடையாது. அதுக்கு ரஜினி கைதட்டுனாருங்கிறத பெருசா பேசக்கூடாது. "அவங்கள உதைக்க வேணாமான்னு" சொல்லிட்டு திரும்ப "கோவத்துல வந்த வார்த்தைகள்"ன்னு சமாதானமா போயிருக்காரு ரஜினி. ஆனா அந்த விஷயத்துல அஜித் " நான் பேசுனது தப்பு இல்ல..தப்புன்னா சினிமாவ விட்டே போயிர்றேன்"னு சொன்னது, ஒரிஜினல் , அக்மார்க் , 100% ஆம்பளைத்தனம். இது தைரியம்.( இந்த பேச்சு ஃபெஃப்சி மீட்டிங்க்கு அப்புறம் வந்தது இல்ல..அதுக்கு முன்னாடியே வந்ததுன்னும் சொல்றாங்க. நம்ம இத ஃபெஃப்சி மீட்டிங்க்கு அப்புறம் வந்ததாவே எடுத்துப்போம். அப்பதான் கொஞ்சம் சுறு சுறு‍ன்னு இருக்கும்.ஹி ஹி கமர்ஷியல் வேல்யூ)


வரு பேரு என்னாங்க புலி பூபதியா..இல்லையே..சிங்கம் சின்னச்சாமியா..குரங்கு குமாரு ?? அடச்சே..ஆங்..ஜாகுவார் தங்கம். நீங்க ஸ்டண்ட்டை விட்டுட்டு காமெடி ட்ரை பண்ணுங்களேன். வடிவேலுவுக்கு சரியான போட்டியா இருக்கும்.அட நெசமாத்தாங்க சொல்றேன்.

ஜித், சோனா பர்த்டே பார்ட்டிக்கு போறாரு, ஆனா ஒரு சமூகப் போராட்டத்துக்கு வரமாட்டாரான்னு கேட்டிருக்காங்க. ஏன்யா..சோனா பர்த்டே பார்ட்டி எங்க ? சமூகப் ப்ரச்னை எங்க. உங்களை சோனாக்கா பார்ட்டிக்கு கூப்பிடலைன்னு கோவமாக்கும். ப்ரச்னைக்கு வரணும்..ஆனா அரசியலுக்கு வரப்படாது. இது எந்த ஊரு நியாயம். இப்பவே ..அமுக்கம் சொல்றேன்.நாளைக்கு எங்க தளபதி கட்சி ஆரம்பிச்சாருன்னா யாரும் இதப் பத்தி பேசப்படாது. சினிமாவில் இருந்து சமூகப் ப்ரச்னைக்கு வரலாம்,ஆனா அரசியலுக்கு வரப்ப்டாதா?

ன்னொண்ணும் சொல்லிக்கிறேன். ஏதோ இந்த அஜித்,ரஜினி, விஜய் எல்லாம் என்னய ( நம்மள :)) மாதிரி கோவக்காரங்களா இல்லாம, கொஞ்சம் சாஃப்டா இருக்காங்க. இவிங்க பாட்டுக்கு கோவப்பட்டு எங்களுக்கு சினிமா வேண்டாம்..அரசியலுக்கு வர்றோம்னு சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பிச்சுட்டாங்கன்னு வைங்க. அப்புறம் நீங்க 8 கட்சி கூட்டணி வைக்க வேண்டியது இருக்கும்.கிக்கிரி பிக்கிரிதான்.இவுங்களுக்கு அம்புட்டு தாக்கம் இருக்குதப்பா தமிழ் நாட்டுல.அம்புட்டு தான் சொல்லுவேன்.

டி.வி. ல காமிக்காம இருந்தா யாருக்கும் தெரியாதுங்கிறதெல்லாம் அந்தக் காலம். இப்போ இண்டர் நெட் வந்துருச்சு சாமிகளா. படத்தயே ரிலீஸ் பண்றானுங்க. வீண் முயற்சி.


றுபடியும் சொல்றேன். நான் அஜித் ரசிகன் இல்லை..இல்லை...இல்லை. எனக்கு அஜித்தைப் பிடிக்காது.
ஆனா ..

" நீ கலக்கு தல"

ப்புறம் இன்னொரு விஷயம்,அஜித் அடுத்த படத்துக்கு தயாநிதி அழகிரிகிட்ட இருந்து அட்வான்ஸ் வாங்கி இருக்காராம்.

"ய் யாருப்பா அது, அஜித் படத்துக்கு ஒத்துழைப்பு தர மாட்டேன்னு சொல்றது"

பி.கு:

ஜித் : நல்ல படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை
பொதுமக்கள் :நல்ல படத்துக்கு அஜித்தே தேவை இல்லை

ஹி ...ஹி...ஹி...

3 comments:

Joe said...

குசேலன், வேட்டைக்காரன், அசல் போன்ற படங்களையும் ஒரு தடவை திரையரங்கில் பார்க்கலாம் என்று ஏன் சில தமிழர்கள் சொல்கிறார்கள்?

சில தமிழர்களிடம் கருப்புப்பணம் நிறைய இருக்கிறது, குப்பைப் படங்களைத் தயாரித்து நஷ்டமடைந்தாலும் அவர்களுக்குக் கவலையில்லை.

பல தமிழர்களிடம் விரயம் செய்ய நேரம் நிறைய இருக்கிறது.

வினையூக்கி said...

//இனத்துக்காக குரல் கொடுப்பவன் இறையாண்மையை மீறுபவன் அல்ல //

அருமை. நானும் TCE 2001 பாஸ்ட் அவுட்

மணிப்பக்கம் said...

:)