Monday, February 22, 2010

துரோகம்

ந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பாரில் அமர்ந்திருந்தான் ஷ்யாம். இளம் தொழிலதிபர். அப்பா தாத்தா விட்டுச் சென்ற அபரிமிதமான சொத்துக்களுக்கு ஒரே வாரிசு. அழகான மனைவி, ஒரு பெண் குழந்தை உண்டு.எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், இவனுக்கு வேண்டியது நடந்து கொண்டுதான் இருக்கும். அந்த அளவுக்கு அரசியல் செல்வாக்கும் உண்டு. மங்கலான வெளிச்சத்தில், மிதமான் ராப் இசையில்,ஜானி வாக்கர் ரெட் லேபிளை ஸிப்பிக் கொண்டிருந்தான்.  ஆனால் அவன் மனம் அதில் லயித்திருக்கவில்லை. காரணம் உண்டு. பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியிருந்தது. ஆம், அவன் பழிவாங்க துடித்துக் கொண்டிருந்தது, எதிரியாகிப் போன அவன் நண்பனை. தவறு..எதிரி நண்பனாகலாம்...ஆனால்..நண்பன் தடம் மாறினால், எதிரியாக பாவிக்க முடியாது, துரோகி என்பதுதான் சரியான வார்த்தையாய் இருக்கும். அவனைப் பொறுத்தவரை அவனுக்கு துரோகியாகிப் போனவன் , அப்துல். இருவருக்கும் பதினைந்து வருடப் பழக்கம்.

"சொல்லுங்க ஷ்யாம்..என்ன பண்ணனும்"..கேட்டது ராம். இவனுக்கு நிலையான பெயர் கிடையாது. இந்த அஸைன்மெண்ட்டை பொறுத்தரையில் இவனது பெயர் ராம். இவன் ஒரு ப்ரொஃபஷனல் கில்லர் என்று சத்தியம் செய்து சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு கம்பெனியின் நிர்வாக அதிகாரி என்று சொல்லும் அளவுக்கு இருக்கும் அவனது நடை,உடை, பாவனை, பேச்சு அனைத்தும்.ஜெர்மனியில் ஒரு மென்பொருள் கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன். சில சூழ்நிலைகளால் இந்த தொழிலுக்கு வந்து 8 வருடங்கள் ஆகிறது. மெத்தப் படித்தவன். செய்யும் வேலையில் ஒரு நேர்த்தி இருக்கும். ப்ரொஃபஷனிலசம்..ஆம் அதுதான் ஷ்யாமை இவனிடம் அழைத்து வந்தது.

"அவன் இருக்கக் கூடாது ராம். அவ்ளோதான். பாஸ்டர்ட். எங்கிட்டயே அவன் வேலையைக் காமிச்சிட்டான். பணம் போனதை பத்தி எனக்கு கவலை இல்ல. ஆனா எவ்வளவு கேவலமா எடை போட்டிருக்கான். நோ வே..ஐ ஷுட் டீச் ஹிம் எ லெஸன்".

" 20 லட்சம் அட்வான்ஸ். பாக்கி 30 வேலை முடிஞ்சதும்.ஆல் இன் கேஷ்.அவரும் கொஞ்சம் பெரிய கை இல்லயா. நிறைய ரிஸ்க் இருக்கு ஷ்யாம். பண்ணிரலாம்", ராம்.

"ஹும்..பெரிய கை..ஆக்குனதே நான் தான். அட்வான்ஸ்-லாம் இல்ல..ஃபுல் பேமண்ட் தர்றேன். உன் கார் டிக்கில இருக்கும். அடுத்த வாரம் அவன் இருக்கக்கூடாது ராம்...தாட்ஸ் இட்".

"கூல்..அடுத்த வாரம் நீங்க கொண்டாடுறதுக்கு பார்ட்டிக்கு அரேஞ்ச் பண்ணுங்க. நான் கிளம்புறேன். ஸீ யூ",ராம்.

"இன்னொரு விஷயம் ராம்..அவன் சாகுறத நான் பாக்கணும். ஐ வாண்ட் டு சீ ஹிம் சஃபர்", ஷ்யாம்.

"ஷ்யூர்", என்று சிரித்தான் ராம்.

ராமின் ஹோண்டா ஸிவிக்கை தொடர்ந்து, ஷ்யாமின் பென்ஸும் ஹோட்டலிலிருந்து வெளியேறியது.

"எவ்வளவு குடிச்சாலும் .. வீட்டுல குடிங்கன்னு சொல்லிருக்கேன்ல.. அப்புறம் ஏங்க இப்படி வெளிய போயி குடிச்சிட்டு வர்றீங்க ? உங்களுக்கு ஏதாவது ஓண்ணுன்னா, நான் என்ன பண்றது ?",உள்ளே நுழைந்த ஷ்யாமை கெஞ்சலாக கேட்டாள் ஸ்வேதா. ஷ்யாமின் மனைவி.

"சாரி டார்லிங்,கொஞ்சம் டென்ஷன் அதான். இனிமே இப்படி நடக்காம பாத்துக்குறேன், சாப்பாடு எடுத்து வைம்மா", உள்ளே சென்றான் ஷ்யாம்.


"க்ரேட் ராம், நான் அவன் குடுத்ததை விட ரெண்டு மடங்கு தர்றேன். அவன் சொன்ன அதே ஒரு வாரத்துக்குள்ள அவன காலி பண்ணிரு. அப்துலின் பண்ணைவீட்டில் ராமிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தான் அப்துல்.

"நீங்க சாகுறத, ஷ்யாம் பாக்கணும்னு ஆசைப்பட்டாரு. நான் அவரை இங்க வரச் சொல்றேன். நீங்க அவரைத் தீர்த்துக் கட்டிருங்க. பட்  அந்த நேரத்துல பண்ணைவீட்டுல யாரும் இல்லாம பாத்துக்குங்க.", ராம்.

"சியர்ஸ்..டூ ஷ்யாம்" சிரித்தனர் இருவரும்.

இரு நாட்கள் கழித்து,ஷ்யாமின் செல்லுக்கு கால் செய்தான் ராம்.

" உடனே கிளம்பி வாங்க ஷ்யாம், ரொம்ப நேரம் தாங்க மாட்டான். பாதி உயிர்தான் இருக்கு, சீக்கிரம்", ராம்.

"சூப்பர்ப்..இதோ வந்துட்டேன்"

"வந்துட்டு இருக்கான்", அப்துலிடம் சிரித்தான் ராம்.

அடுத்த முப்பதாவது நிமிடத்தில் ஷ்யாமின் கார் அப்துலின் பண்ணைவீட்டில் நுழைந்தது.

சேரில் கட்டப்பட்டிருந்த அப்துலை பார்த்தவுடன் , ராமை கட்டியணைத்தான் ஷ்யாம்.  "யூ டிட் இட் ட்யூட்"

"ஏன் ஒரு மாதிரி நெர்வஸா இருக்க ராம். எனி ப்ராப்ளம்", ஷ்யாம்.

"இல்ல ஷ்யாம், இந்த ஸ்டைல் எக்ஸிக்யூஷன் எனக்கு புதுசு. தேட்ஸ் த ரீசன். சீக்கிரம் முடிச்சிட்டு கிளம்பலாம்", ராம்.

"ஷ்யூர். டூ மினிட்ஸ். இவங்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்", ஷ்யாம்.

"உன்ன என் கூடப் பிறந்தவன் மாதிரிதான வச்சிருந்தேன். உனக்கே தெரியும் அந்த நூறு கோடி ரூபா ப்ராஜக்ட் என்னொட கனவுன்னு. அதுல டபுள் கிராஸ் செய்ய உனக்கு எப்படி மனசு வந்துச்சு. உன்ன கூட சேர்த்துக்க வேணாம்னு, டாட் சொன்னப்பவே நான் கேட்டிருக்கணும். என் தப்புதான். என் தப்புக்கு நானே ப்ராயசித்தம் தேடிக்கிறேன்", என்றபடி ஷ்யாம் பிஸ்டலை உயர்த்தினான்.

சைலன்சர் பொருத்திய துப்பாக்கி "டப்" பென்று வெடித்தது.

நெஞ்சைப் பிடித்தபடி சரிந்தான் ஷ்யாம்.

கட்டை அவிழ்த்தபடி எழுந்தான் அப்துல்.

"பாஸ்டர்ட், சுட வந்தா சுடணும். டயலாக் பேசிட்டு இருக்க. நீ இன்னும் திருந்தவேயில்லை. ராம் ஐ வாஸ் ஸ்கேர்ட்.. கொஞ்சம் மிஸ் ஆயிருந்தா என்ன போட்டிருப்பான். நல்ல வேளை உன் ஐடியா படி நான் ஒரு துப்பாக்கியை மறைச்சு வச்சிருந்தேன்.", பேசியபடியே ராமிடம் திரும்பினான்.

"டப் !!"

ராமின் பிஸ்டலில் இருந்து வந்த புல்லட் அப்துலின் மூளையை சிதறடித்திருந்தது.

இரண்டு மாதங்களுக்கு பிறகு, ஷ்யாமின் வீடு. சோகம் , அழுகை அனைத்தும் வடிந்து, அமைதியாக இருந்தது.

"நீங்க ஜெர்மனியில் இருந்தப்ப , அவன் கிட்ட வேலை பாத்த எங்க அப்பாவுக்கு பணத்தாசை காட்டி, என்ன கல்யாணம் பண்ணிகிட்டான்ல, அவனுக்கு சரியான தண்டனை. எப்படியோ நம்ம ப்ளான் சக்ஸஸ் ஆச்சே..அதுவரைக்கும் சந்தோஷம். இனிமே மிச்சம் இருக்கிற லைஃப் உங்ககூட நிம்மதியா இருப்பேன்.ஷ்யாமை கொன்னீங்க ஒ.கே, ஆனா அப்துலை ஏன் கொன்னீங்க ?". ஸ்வேதா, ராமின் தலையை கோதியபடி கேட்டாள்

"அப்படி ஷ்யாமை திட்டாத ஸ்வேதா.. அவன் குறுக்க வரலைன்னா, நாம ரெண்டு பேரும் கல்யாணம் மாசம் 40 ஆயிரம் , 50 ஆயிரம்னு சம்பாதிச்சு லைஃபை ஓட்டிருக்கணும். அவனாலதான் இவ்வளவு சொத்து கிடைச்சிருக்கு.ஷ்யாமை மட்டும் போட்டிருந்தேன்னா...நாளைக்கு அப்துல் ஷ்யாமோட சொத்துக்கு ஆசைப்பட்டு கண்டிப்பா நமக்கு தொல்லை குடுப்பான். நான் யாருன்னு துருவ ஆரம்பிச்சிருவான். இப்ப நான் உன்ன கல்யாணம் பண்ணாலும் வெளிய இருக்கவுங்களுக்கு சந்தேகம் வராது.ஏன்னா இப்ப நீ இருக்குற சொஸைட்டில இதெல்லாம் சகஜம். இதெல்லாம் கடைசி நேரத்துல தோணுனது தான். இப்போவும் எல்லாரும் நினைக்கிறது ஷ்யாமும் அப்துலும் ஒருத்தரை ஒருத்தர் சுட்டுக்கிட்டாங்கன்னுதான் .எவ்ரிதிங் இஸ் கூல் நவ்." என்றடி ஸ்வேதாவை கட்டியணைத்தான் ராம்.

5 comments:

மீன்துள்ளியான் said...

மாமா கதை சூப்பர் டா ..

Joe said...

Inspired by the movies "Good, bad, ugly" and "Assassin"?

ச ம ர ன் said...

@joe

Neenga sonnathu ethuvume enakku theriyala..

en kula saamy koththaala veerappan sathiyama ithu en sontha sarakku :)

டக்கால்டி said...

கதை நடை விறுவிறுப்பு ... ரசித்தேன்...

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in