Tuesday, March 16, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் - பெரிய விசில் அடிங்க !!

 இப்போ நடந்துகிட்டு இருக்குற ஐ.பி.எல் மேட்ச் இன்னும் முடியல. ஆனா கண்டிப்பா இந்த மேட்ச்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சிரும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.சும்மா சொல்லக் கூடாது நம்ம மச்சிங்க கிளப்புறாங்க.அந்த கடைசி அஞ்சு ஓவர் என்னா அடி..உங்க வூட்டு அடி எங்க வூட்டு அடி இல்ல..மரண அடி. என்ன...அத விட மரண அடி நம்ம பத்ரிக்கு தோனிகிட்ட இருந்து விழுந்துச்சு.

நம்ம டீம் பேட்டிங் பண்றப்போ, என் ரூம்ல விழுந்த வசவை கேட்டா, நம்ம டீம் ஆளுங்கெல்லாம், தனியா கயிறு ஆர்டர் குடுத்து, அதுலயே தூக்கு போட்டு தொங்கிருப்பாங்க. அதுல அடியேனின் பங்கும் உண்டு ( "அடியேன் ங்கிற வார்த்தையை உபயோகிச்சதுக்காக, நான் சாருவோட ரசிகன்னு நீங்க முடிவு பண்ணுனா, அதுக்கு நம்ம கம்பேனி வாட்ச்மேன் கூட பொறுப்பேத்துக்க மாட்டாரு."அந்த" மாதிரி ஆளு நான் கிடையாது :)).ஆனாலும் முதல் பதினைஞ்சு ஓவர்ல, நம்ம ஆளுங்க ஒண்ணும் பெருசா பட்டய கிளப்பல.

பத்ரி உள்ள இறங்குனப்போவே, ஒரு கடுப்பு,"எதுக்குடா மார்க்கல் இருக்கப்போ இவன இறக்குனாங்க", அப்டின்னு பயபுள்ளைகளுக்கு ஒரே கோவம். இருக்காதா பின்னே. ஆனா கடைசி ஓவர் வரைக்கும் விளையாடி பட்டைய‌ கிளப்பிட்டாரு. கலக்கிட்டீங்க பிரதர்.

தோனி. உங்கள ஸ்ரீகாந்த்.. "புல்"னு சொன்னதுல தப்பே இல்ல.ஆடு மாதிரி அமைதியா ஆரம்பிச்சு மாடு மாதிரி மாத்து மாத்து‍ன்னு நொறுக்கிட்டீங்க. இப்போ கே.கே.ஆர். க்கு எட்டு விக்கெட் அவுட்டு.மார்க்கல் முதல் ஓவர் அம்சமா போட்டாப்ல.ரெண்டாவது ஓவர்ல கோனி முதல் ரெண்டு பால் எட்டு ரன் குடுத்து மொக்க போட்டாரு.ஆனா நடு குச்சிய புடிங்கி எறிஞ்சு அள்ளிட்டீங்க.அதுக்காக கோவத்துல அந்த பேட்ஸ்மேனோட அக்காவ திட்டிருக்க வேணாம்.எனக்கு ஹிந்தி தெரியும். போதாக்குறைக்கு, ஸ்லோ மோஷன்ல, நீங்க சொன்ன உச்சரிப்பு எனக்கு தெளிவா புரிஞ்சிடுத்து :)))

அதுக்கப்புறம் அந்த சாஹா பையன் தான் கொஞ்சம் டென்ஷன் குடுத்துட்டான். ஆனா நம்ம பயலுவ ஒரே அதிரடி சரவெடிதான்.

ஹர்ஷா போக்லே க்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான். க்ரீஸ் ல சுக்லாவும், ரோகன் கவாஸ்கரும் நிக்கிறப்போ," சுக்லா அவுட் ஆனா, கே.கே.ஆர் அவ்ளோதான்"னு நீங்க சொன்னத நினைச்சு, கவாஸ்கர் எவ்வளவு வேதனை பட்டுருப்பாரு. உண்மைகளை அப்படி எல்லாம் வெளிப்படையா பேசப்படாது. ஓ.கே ?

எப்படியோ ஒன்பது விக்கெட் காலி. நம்ம ஜெயிக்க போறது கிட்டத்தட்ட உறுதி. ஹைடன் , அடுத்த மேட்ச்ல, சும்மா டைனோசர் மாதிரி எந்திச்சு வாங்க ப்ளீஸ். உங்கள சிங்கம்னு சொல்ல என் மனசு ஏத்துக்கலை. எவ்ளோ பெருசா இருக்கீங்க.?

சென்னை சூப்பர் கிங்ஸ்...பட்டய கிளப்புங்க மச்சிகளா..

Sunday, March 14, 2010

விஜய் டி.வி லிட்டில் ஜீனியஸ் ‍ - மொகரக் கட்டை

தமிழ்ல இருக்குற மத்த சேனல்களை விட விஜய் டி.வி கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துறாங்க.அத பாத்து மத்த சேனல்கள் காப்பி அடிச்சாலும், விஜய் டி.வி பண்ற அளவுக்கு பண்ண முடியலைங்கிறதுதான் உண்மை. அதுக்கு ஒரு நல்ல உதாரணம் " நீயா நானா"வைப் போல் ஆரம்பிக்கப்பட்ட "கருத்து யுத்தம்".

இப்போ ஒரு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சிருக்காங்க. "லிட்டில் ஜீனியஸ்"னு. நாலு டீம், வேற வேற பள்ளிகள்ல‌ இருந்து, கலந்துக்குறாங்க. அந்த ஈர வெங்காயம்லாம் இருக்கட்டும். ஒரு 10 நிமிசத்துக்கு மேல என்னால நிகழ்ச்சியை பாக்க முடியல. பொதுவாவே தொகுப்பாளர்கள்னா, தமிழை துவைச்சு தொங்கப்போடணும்னுங்கிறது, ஒரு எழுதப்படாத விதி. ஒரு சில பேர் தான் விதிவிலக்கு. ஆனா இந்த நிகழ்ச்சியில‌ வர்ற ஆள் பேசுறத பாத்தா, எனக்கு சுவத்துல போயி முட்டிக்கணும் போல இருக்கு.

முதல் சுற்றுல, நாலு கேள்வி கேட்டு, அந்த கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னா, ஒரு குறள்ல இருக்குற நாலு வார்த்தைய சொல்றாங்க. அத வச்சு, ஒவ்வொரு அணியும், அந்த குறளை சரியா சொல்லணும். பரவாயில்லயே, இந்த அளவுக்கு பண்றாங்களேன்னு நினைச்சு முடிக்கல. முதல் கேள்வி இதுதான்,

"1988 ல வந்த அக்னி நட்சத்திரம் படத்துல, எந்த நடன இயக்குனர், அறிமுகமானார் ?"

இதுதான் "லிட்டில் ஜீனியஸ்" தி அல்டிமேட் க்விஸ்ஸிங் எக்ஸ்ப்ரீயன்ஸ் நிகழ்ச்சியில கேக்க வேண்டிய கேள்வியா ? இதுக்கு பதில் சொன்னா அவுங்க குறள் கண்டுபிடிக்க இவுங்க க்ளூ குடுப்பாங்களாம்.மொகரக் கட்டை.மத்த கேள்வியெல்லாம் நல்லா இருந்தாலும், என்னால இந்த கேள்விய ஏத்துக்கவே முடியல.

என் நண்பன் சொன்னான், எப்படிடா இவனுங்கெல்லாம் குறள் கண்டுபிடிக்க போறாங்கன்னு. ஆனா சில பேரு சரியா கண்டுபுடிச்சாங்க. எனக்கு கோவமே, அந்த தொகுப்பாளர் மேலதான்.

அய்யா..தெய்வமே.. நீங்க மூக்கு மேல நாக்க போட்டு ரொம்ப நல்லா இங்கிலிபீஸு பேசுறீங்க.அதுக்கு உங்க தாவாங்கட்டையில இருக்குற, கரப்பாம்பூச்சி தாடியும் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் சாமி, ஏன் சாமி, தமிழையே இங்கிலிபீஸுல பேசுறீங்க ?
அது எப்படி ராசா.. "குறால்"..எனக்கு.."இறால்" தெரியும், அதென்ன அது குறால். திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.

முடியலை, தயவு செஞ்சு எம் டிவி , வி டிவி பக்கம் ஓடிருங்க, மிச்சம் இருக்குற தமிழாவது நல்லா இருக்கும். எரியுது. உங்க சேனல்லயும் நல்ல தமிழ் பேசுற ஆளுங்க இருகாங்க. டாக்டர்கிட்ட போயி உங்க நாக்கை சரி பண்ணுங்க.எனக்கு நீங்க பேசுறத கேக்குறதுக்கே இவ்வள்வு நாராசமா இருக்கே, உங்க வீட்டுல இருக்குறவுங்கதான் பாவம்.

"ஆம்மா, ணான் வேலீயா பொயீட்டு வார்ரேய்ன்"

உஸ்ஸ்ஸ் யப்பா.. சாணிய எடுத்து சப்புன்னு மூஞ்சியில அறையணும் போல இருக்காது. வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் வச்ச மாதிரி இருக்கு.

தயவுசெஞ்சு சொல்றேன், இங்கிலீபீஸ இங்கிலிபீஸு மாதிரி பேசுறீங்களோ இல்லையோ, தமிழை தமிழா பேசுங்க. தமிழை எப்படி பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச கொஞ்ச பேரு இங்க இருக்கோம் சாமீ.

" ஏங்க்யூம் பொய்ராதீங்க், ஈங்க்யே இரூங்க..ஒரு ஸின்ன இடைவெலைக்காப்றம் சாந்திக்லாம்"

அய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது.