Sunday, March 14, 2010

விஜய் டி.வி லிட்டில் ஜீனியஸ் ‍ - மொகரக் கட்டை

தமிழ்ல இருக்குற மத்த சேனல்களை விட விஜய் டி.வி கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகளை நடத்துறாங்க.அத பாத்து மத்த சேனல்கள் காப்பி அடிச்சாலும், விஜய் டி.வி பண்ற அளவுக்கு பண்ண முடியலைங்கிறதுதான் உண்மை. அதுக்கு ஒரு நல்ல உதாரணம் " நீயா நானா"வைப் போல் ஆரம்பிக்கப்பட்ட "கருத்து யுத்தம்".

இப்போ ஒரு புது நிகழ்ச்சி ஆரம்பிச்சிருக்காங்க. "லிட்டில் ஜீனியஸ்"னு. நாலு டீம், வேற வேற பள்ளிகள்ல‌ இருந்து, கலந்துக்குறாங்க. அந்த ஈர வெங்காயம்லாம் இருக்கட்டும். ஒரு 10 நிமிசத்துக்கு மேல என்னால நிகழ்ச்சியை பாக்க முடியல. பொதுவாவே தொகுப்பாளர்கள்னா, தமிழை துவைச்சு தொங்கப்போடணும்னுங்கிறது, ஒரு எழுதப்படாத விதி. ஒரு சில பேர் தான் விதிவிலக்கு. ஆனா இந்த நிகழ்ச்சியில‌ வர்ற ஆள் பேசுறத பாத்தா, எனக்கு சுவத்துல போயி முட்டிக்கணும் போல இருக்கு.

முதல் சுற்றுல, நாலு கேள்வி கேட்டு, அந்த கேள்விகளுக்கு சரியான பதில் சொன்னா, ஒரு குறள்ல இருக்குற நாலு வார்த்தைய சொல்றாங்க. அத வச்சு, ஒவ்வொரு அணியும், அந்த குறளை சரியா சொல்லணும். பரவாயில்லயே, இந்த அளவுக்கு பண்றாங்களேன்னு நினைச்சு முடிக்கல. முதல் கேள்வி இதுதான்,

"1988 ல வந்த அக்னி நட்சத்திரம் படத்துல, எந்த நடன இயக்குனர், அறிமுகமானார் ?"

இதுதான் "லிட்டில் ஜீனியஸ்" தி அல்டிமேட் க்விஸ்ஸிங் எக்ஸ்ப்ரீயன்ஸ் நிகழ்ச்சியில கேக்க வேண்டிய கேள்வியா ? இதுக்கு பதில் சொன்னா அவுங்க குறள் கண்டுபிடிக்க இவுங்க க்ளூ குடுப்பாங்களாம்.மொகரக் கட்டை.மத்த கேள்வியெல்லாம் நல்லா இருந்தாலும், என்னால இந்த கேள்விய ஏத்துக்கவே முடியல.

என் நண்பன் சொன்னான், எப்படிடா இவனுங்கெல்லாம் குறள் கண்டுபிடிக்க போறாங்கன்னு. ஆனா சில பேரு சரியா கண்டுபுடிச்சாங்க. எனக்கு கோவமே, அந்த தொகுப்பாளர் மேலதான்.

அய்யா..தெய்வமே.. நீங்க மூக்கு மேல நாக்க போட்டு ரொம்ப நல்லா இங்கிலிபீஸு பேசுறீங்க.அதுக்கு உங்க தாவாங்கட்டையில இருக்குற, கரப்பாம்பூச்சி தாடியும் ரொம்ப உதவியாத்தான் இருக்கு.ஆனா எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான் சாமி, ஏன் சாமி, தமிழையே இங்கிலிபீஸுல பேசுறீங்க ?
அது எப்படி ராசா.. "குறால்"..எனக்கு.."இறால்" தெரியும், அதென்ன அது குறால். திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.

முடியலை, தயவு செஞ்சு எம் டிவி , வி டிவி பக்கம் ஓடிருங்க, மிச்சம் இருக்குற தமிழாவது நல்லா இருக்கும். எரியுது. உங்க சேனல்லயும் நல்ல தமிழ் பேசுற ஆளுங்க இருகாங்க. டாக்டர்கிட்ட போயி உங்க நாக்கை சரி பண்ணுங்க.எனக்கு நீங்க பேசுறத கேக்குறதுக்கே இவ்வள்வு நாராசமா இருக்கே, உங்க வீட்டுல இருக்குறவுங்கதான் பாவம்.

"ஆம்மா, ணான் வேலீயா பொயீட்டு வார்ரேய்ன்"

உஸ்ஸ்ஸ் யப்பா.. சாணிய எடுத்து சப்புன்னு மூஞ்சியில அறையணும் போல இருக்காது. வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் வச்ச மாதிரி இருக்கு.

தயவுசெஞ்சு சொல்றேன், இங்கிலீபீஸ இங்கிலிபீஸு மாதிரி பேசுறீங்களோ இல்லையோ, தமிழை தமிழா பேசுங்க. தமிழை எப்படி பேசக்கூடாதுன்னு தெரிஞ்ச கொஞ்ச பேரு இங்க இருக்கோம் சாமீ.

" ஏங்க்யூம் பொய்ராதீங்க், ஈங்க்யே இரூங்க..ஒரு ஸின்ன இடைவெலைக்காப்றம் சாந்திக்லாம்"

அய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது.

16 comments:

பிரியமுடன் பிரபு said...

திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.
///

நல்ல கலக்கல் எழுத்து நடை

அப்புறம் எவன் அந்த தொகுப்பாளி??

ஏன்னா நான் சிங்கபூர்ல இருக்கேன் அதுதான் நான் நிகழ்ச்சிய பார்க்கல

ச ம ர ன் said...

@ பிரியமுடன் பிரபு

அது எவன்னு தெரியல. தெரிஞ்சுக்க விருப்பமும் இல்ல. :)

Robin said...

//" ஏங்க்யூம் பொய்ராதீங்க், ஈங்க்யே இரூங்க..ஒரு ஸின்ன இடைவெலைக்காப்றம் சாந்திக்லாம்"

அய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது. //:)

Thekkikattan|தெகா said...

அது எப்படி ராசா.. "குறால்"..எனக்கு.."இறால்" தெரியும், அதென்ன அது குறால். திரூவால்லுவர் (எங்களுக்கு தெரிஞ்ச தமிழ்ல அது திருவள்ளுவர்) இதக் கேட்டாருன்னா, ஆர்.டி.எக்ஸ் வெடிகுண்டு செய்யுறது எப்படின்னு கத்துகிட்டு வந்து, உம்ம தலை மேலதான் முதல்ல போடுவாரு.//

ஹாஹாஹா, செமையா கொடுத்து கட்டியிருக்கீங்க... இந்தப் பின்னூட்டமே இங்கிலிபீசில அடிப்போம்னு இருந்தேன் பதிவ படிச்சத்திற்குப் பிறகு சோம்பேறித்தனம் பார்க்காம தமிழ்லயே பண்ணிட்டேன்... :)) , தொடர்ந்து எழுதுங்கவோய்.

ச ம ர ன் said...

@ Thekkikattan|தெகா
இங்கிலிபீசுல எழுதுறது, பேசுறது தப்பு இல்ல..தமிழை ஏன் இங்கிலிபீசு மாதிரி பேசணும்னு சொன்னேன்... :)

@ ராபின்

வருகைக்கு நன்றி !!

shaan said...

கேள்வியை எழுதியவன் தமிழனாக இருப்பான். தொகுப்பாளன் மலையாளி அல்லது வடநாட்டுக்காரனாக இருக்கலாம்.

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

இந்த மாறி தமிழ நாராசமா பேசுற நட்டுவாக்காலிகளுக்கே நம்முடைய தமிழ் சேனல்களில் அதிக வாய்ப்பு..

நம்ம தமிழையே மாத்தீருவாணுக போல பிக்காளிப் பயலுக...

ஒரு ஒதாரணம். ஓடி விளையாடு பாப்பா'னு ஒரு நிகழ்ச்சி.அதுல சொல்றாங்க.. "நீங்க ஆடுன டான்ஸ்க்கு நான் குடுக்கறது சிக்ஸ்" தமிழ்'ல தான் பேசுறாங்க... ஆனா பெயர்ச் சொல், வினைச் சொல் இடமாற்றங்கள் அப்படியே ஆங்கில வாடையில், "உங்கள் நடனத்திருக்கு நான் ஆறு மதிப்பெண்கள் கொடுக்கிறேன்" என்பதே தமிழ் வரிகள் அல்லவா..?"i will give you six" இது இங்கிலீஷ். அதாவது, தமிழை ஆங்கில வழியில் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்.. இல்லை, இல்லை, கொல்கிறார்கள்..
நீங்க சொன்னது தான் சரி.. அது வருது... ஒடுங்க.... போங்கப்பா.. போய் கொழந்த குட்டிகள தமிழ்'ல படிக்க வைங்கப்பா.. போய் டிஸ்கவரி தமிழ் பாருங்கப்பா...

நன்றி...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

தமிழ் மணத்தில் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யலாமே...

Renga said...

I think, he is a mallu.

கிரி said...

ஹி ஹி ஹி நல்லா இருக்கு..

எனக்கும் புரியல இதுல எப்படி அந்த கேள்வி வந்தது என்று..

ச ம ர ன் said...

//"நீங்க ஆடுன டான்ஸ்க்கு நான் குடுக்கறது சிக்ஸ்"

இதக்கூட நான் ஏத்துப்பேன். என்னால "நான்" ங்கிற வார்த்தை "ணான்"ன்னு சொல்றத தான் ஏத்துக்க முடியாது. :)

@பிரகாஷ்..

நான் இது வரைக்கும் தமிழ்மணத்துல பதிவு பண்ணல..இனிமே நீங்க சொன்னதுக்காக பண்ணுனா உண்டு.. :)

ரெங்கா

அவன் மல்லுவா இருந்தா என்ன..தெலுங்கா இருந்தா என்ன..என்னோட கோவம் எல்லாம்...என்ன இளவுக்கு..தமிழை வேற மொழியோட உச்சரிப்பு அடிப்படைல பேசணும்ங்கிறதுதான்.

உ.தா : உரல்...உராழ்.

:(

ச ம ர ன் said...

//தமிழை ஆங்கில வழியில் இவர்கள் புரிந்து கொள்கிறார்கள்//

செருப்படி... நீங்க சொன்னது நூறு சதவிகிதம் சரி.

உன் தாய்மொழியை இன்னொரு மொழி வாயிலாக புரிந்து கொள்ள நினைத்தால்..அது தவறான உச்சரிப்பில் தான் முடியும்.

ச ம ர ன் said...

@கிரி

வருகைக்கு நன்றி.. தொடர்ந்து வரவும்.

பாலாஜி said...

நல்ல பதிவு

"அய்யய்யோ, அது நம்மள நோக்கித்தான் வருது..ஓடுங்க..அது ரொம்ப பயங்கரமானது."

இப்ப வர்ற இங்கிலீஷ் படதுலக்௯ட நல்ல தமிழ் பேசுறாங்க டப்பிங்க சொன்னேன்

ஜெகநாதன் said...

எல்லாம் மடியில உக்காந்து ​வேலை வாங்கின ஆளுகளா இருப்பாங்க (விவேக் காமடி ஞாபகத்துக்கு வருதுப்பா)

Joe said...

தொலைக்காட்சிகளில் மட்டுமல்ல பண்பலை வானொலி கூட இப்படிப்பட்டவர்களையே தேர்ந்தெடுக்கிறது (முதல் குற்றவாளி : ரேடியோ மிர்ச்சி)

அன்றே தீர்க்கதரிசனமாகச் சொன்னான் பாரதி "தமிழ் இனி மெல்லச் சாகும்"-ன்னு.