Tuesday, March 16, 2010

சென்னை சூப்பர் கிங்ஸ் - பெரிய விசில் அடிங்க !!

 இப்போ நடந்துகிட்டு இருக்குற ஐ.பி.எல் மேட்ச் இன்னும் முடியல. ஆனா கண்டிப்பா இந்த மேட்ச்ல நம்ம சென்னை சூப்பர் கிங்ஸ் ஜெயிச்சிரும்னு ஒரு நம்பிக்கை இருக்கு.சும்மா சொல்லக் கூடாது நம்ம மச்சிங்க கிளப்புறாங்க.அந்த கடைசி அஞ்சு ஓவர் என்னா அடி..உங்க வூட்டு அடி எங்க வூட்டு அடி இல்ல..மரண அடி. என்ன...அத விட மரண அடி நம்ம பத்ரிக்கு தோனிகிட்ட இருந்து விழுந்துச்சு.

நம்ம டீம் பேட்டிங் பண்றப்போ, என் ரூம்ல விழுந்த வசவை கேட்டா, நம்ம டீம் ஆளுங்கெல்லாம், தனியா கயிறு ஆர்டர் குடுத்து, அதுலயே தூக்கு போட்டு தொங்கிருப்பாங்க. அதுல அடியேனின் பங்கும் உண்டு ( "அடியேன் ங்கிற வார்த்தையை உபயோகிச்சதுக்காக, நான் சாருவோட ரசிகன்னு நீங்க முடிவு பண்ணுனா, அதுக்கு நம்ம கம்பேனி வாட்ச்மேன் கூட பொறுப்பேத்துக்க மாட்டாரு."அந்த" மாதிரி ஆளு நான் கிடையாது :)).ஆனாலும் முதல் பதினைஞ்சு ஓவர்ல, நம்ம ஆளுங்க ஒண்ணும் பெருசா பட்டய கிளப்பல.

பத்ரி உள்ள இறங்குனப்போவே, ஒரு கடுப்பு,"எதுக்குடா மார்க்கல் இருக்கப்போ இவன இறக்குனாங்க", அப்டின்னு பயபுள்ளைகளுக்கு ஒரே கோவம். இருக்காதா பின்னே. ஆனா கடைசி ஓவர் வரைக்கும் விளையாடி பட்டைய‌ கிளப்பிட்டாரு. கலக்கிட்டீங்க பிரதர்.

தோனி. உங்கள ஸ்ரீகாந்த்.. "புல்"னு சொன்னதுல தப்பே இல்ல.ஆடு மாதிரி அமைதியா ஆரம்பிச்சு மாடு மாதிரி மாத்து மாத்து‍ன்னு நொறுக்கிட்டீங்க. இப்போ கே.கே.ஆர். க்கு எட்டு விக்கெட் அவுட்டு.மார்க்கல் முதல் ஓவர் அம்சமா போட்டாப்ல.ரெண்டாவது ஓவர்ல கோனி முதல் ரெண்டு பால் எட்டு ரன் குடுத்து மொக்க போட்டாரு.ஆனா நடு குச்சிய புடிங்கி எறிஞ்சு அள்ளிட்டீங்க.அதுக்காக கோவத்துல அந்த பேட்ஸ்மேனோட அக்காவ திட்டிருக்க வேணாம்.எனக்கு ஹிந்தி தெரியும். போதாக்குறைக்கு, ஸ்லோ மோஷன்ல, நீங்க சொன்ன உச்சரிப்பு எனக்கு தெளிவா புரிஞ்சிடுத்து :)))

அதுக்கப்புறம் அந்த சாஹா பையன் தான் கொஞ்சம் டென்ஷன் குடுத்துட்டான். ஆனா நம்ம பயலுவ ஒரே அதிரடி சரவெடிதான்.

ஹர்ஷா போக்லே க்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான். க்ரீஸ் ல சுக்லாவும், ரோகன் கவாஸ்கரும் நிக்கிறப்போ," சுக்லா அவுட் ஆனா, கே.கே.ஆர் அவ்ளோதான்"னு நீங்க சொன்னத நினைச்சு, கவாஸ்கர் எவ்வளவு வேதனை பட்டுருப்பாரு. உண்மைகளை அப்படி எல்லாம் வெளிப்படையா பேசப்படாது. ஓ.கே ?

எப்படியோ ஒன்பது விக்கெட் காலி. நம்ம ஜெயிக்க போறது கிட்டத்தட்ட உறுதி. ஹைடன் , அடுத்த மேட்ச்ல, சும்மா டைனோசர் மாதிரி எந்திச்சு வாங்க ப்ளீஸ். உங்கள சிங்கம்னு சொல்ல என் மனசு ஏத்துக்கலை. எவ்ளோ பெருசா இருக்கீங்க.?

சென்னை சூப்பர் கிங்ஸ்...பட்டய கிளப்புங்க மச்சிகளா..

6 comments:

Ameer Hasshan said...

ஹர்ஷா போக்லே க்கு கொஞ்சம் குசும்பு ஜாஸ்திதான். க்ரீஸ் ல சுக்லாவும், ரோகன் கவாஸ்கரும் நிக்கிறப்போ," சுக்லா அவுட் ஆனா, கே.கே.ஆர் அவ்ளோதான்"னு நீங்க சொன்னத நினைச்சு, கவாஸ்கர் எவ்வளவு வேதனை பட்டுருப்பாரு. உண்மைகளை அப்படி எல்லாம் வெளிப்படையா பேசப்படாது. ஓ.கே

WELLL SAID

live ipl cricket said...

Chennai super kings has good batting line up, but it's lacking in bowling and fielding..

ச ம ர ன் said...

@ Ameer Hasshan
@ live ipl cricket

வருகைக்கு நன்றி.

பிரியமுடன் பிரபு said...

எப்படியோ தப்பிச்சுடிங்க

நான் மும்பை ரசிகன்

நாங்கதான் ஜெயிப்போம்
http://priyamudan-prabu.blogspot.com/
அங்க வந்து ஓட்டு போடுங்க எந்த டீம் ஜெயிக்குமுன்னு

ச ம ர ன் said...

@ பிரியமுடன் பிரபு

பாக்கலாம் :)

பிரியமுடன் பிரபு said...

பாக்கலாம் :)

பாக்கலாம் :)

பாக்கலாம் :)