Thursday, November 11, 2010

ஆடுகளம் - பாடல்கள் ஒரு பார்வைஅய்யயோ..

அருமையான மெலடி. போற போக்குல பாடிட்டு போற மாதிரி, அவ்வளவு நல்லா இருக்கு. "இஞ்சி இடுப்பழகி" பாட்டோட சாயல்ல இருந்தாலும் ரசிக்க முடியுது.. வழக்குல இருக்க சுத்தமான தமிழ் வார்த்தைகளை அழகா பயன்படுத்திருக்காங்க. எவ்வளவு கேட்டாலும் சலிக்கவேயில்லை.

எஸ்.பி.பி , எஸ்.பி சரண் ரெண்டு பேரும் சேர்ந்து பாடியிருக்காங்க. சூப்பரா !!!

"உன் வாசம் அடிக்கிற காத்து என்கூட நடக்கிறதே"ன்னு பாடுறப்ப, உங்க காதலி நினைப்பு வரலாம், வரணும் :)

இந்த பாட்டுல தனுஷ் ரியாக்ஷன் கண்டிப்பா கிளப்பிருப்பாரு.

ஒத்த சொல்லால‌..

ஆரம்பிக்கும் போதே ஆடணும் தோணுது. வேல்முருகன் வாய்ஸ்ல அவ்வளவு துள்ளல். கிண்டி கெழங்கெடுக்குறாரு :)

காதல் பாட்டு தான், ஆனா நொறுக்கி அள்ளிருக்காங்க.மறுபடியும் சொல்றேன் ... சலிக்காது. இந்த வாட்டி ஊர் திருவிழாவுக்கு இதப் போட்டு தேய்ச்சிருவானுங்க :)

"மனசை இனிக்க வைச்ச சீனி மிட்டாயே"...இந்த வரியும் ரொம்ப சூப்ப‌ரா இருக்கு. நிறுத்தி அடிக்கிறாங்க.

கவனிக்க...எல்லா வரிகளுமே நல்லா இருக்கு...உ.தா. "ஊருக்கெல்லாம் சேதி சொல்லுவேன்...அவ காதில் மட்டும் ஊதி சொல்லுவேன்".

யாத்தே..யாத்தே..

ரொம்ம்ம்ம்ம்ப மெதுவா ஆரம்பிக்கிற பாட்டு, போகப் போக வேகம் பிடிக்குது. பெத்தாய்ங்களா..வளத்தாய்ங்களான்னு , மதுரை வழக்க மெனக்கெட்டு உபயோகிச்ச மாதிரி இருக்கு. மறுபடியும் ..யதார்த்தமான் வார்த்தைகள். ஜி.வி யோட இசை, வார்த்தகளை முழுங்கல.

மத்த ரெண்டு பாட்டளவுக்கு என்னை இந்த பாட்டு இம்ப்ரெஸ் பண்ணல. விஷுவல் பாத்தா புடிக்கலாம்.

என் வெண்ணிலவே..

சோகப் பாட்டு. பிழிய பிழிய அழற மாதிரி இருக்கு. ஐ ஆம் சாரி. இது நம்ம டிபார்ட்மெண்ட் இல்ல. :)

A Love Blossoms

லவ் தீம் சாங்க் மாதிரி இருக்கு. மதராஸபட்டினம் டச் தெரியுதுங்கோவ்.ஒரு வேளை அந்த புல்லாங்குழல் இசையால அப்படி தோணுதோ என்னவோ. செல்ஃபோன் ரிங் டோனா வச்சிக்கலாம் :)மத்தபடி பெருசா இல்ல.

போர்க்களம்..

டங்கா...டுங்கா பாட்டு மாதிரியே ஆரம்பிக்குது. யோகி பி. வழக்கமான ராப். இங்கிலீஷ் வெர்ஷன், தமிழ் வெர்ஷன்ன்னு ரெண்டு இருக்கு. இதில எது படத்துல வரும்னு தெரியல. ரெண்டுமே வராம போகலாம். மத்த பாட்டுக்கெல்லாம் சேர்த்து, இதுல வெஸ்டர்ன் ஸ்டைல் யூஸ் பண்ணிட்டாங்க.


நல்ல பாட்டுக்கு இசையமைப்பாளர் மட்டும் காரணம் இல்ல. இயக்குனருக்கும் நல்ல இசையயை வாங்கத் தெரியணும். "எதிரி"க்கும் "7ஜி" க்கும் யுவன் தான் மியூசிக். ஆனா எது நல்லா இருந்துச்சு. வெற்றி மாறனுக்கு வாங்கத் தெரியுது !!

படம் கண்டிப்பா பட்டய கிளப்பும்னு நினைக்கிறேன். வெற்றிமாறன் இயக்கத்துல மதுரையப் பாக்க ஆசை :)

ஆடுகளம் ‍-  ஆட்டம் ஆரம்பம்..

7 comments:

ers said...

உங்கள் படைப்புக்களை இங்கேயும் இணைக்கலாம்
தமிழ்
ஆங்கிலம்

சே.குமார் said...

தனுஷோட ஆட்டம் ஆரம்பிக்கட்டும்.

"ஸஸரிரி" கிரி said...

நான் "பொல்லாதவன்" பார்த்த பின்னர் வெற்றி மாறனின் ரசிகன். ஆடுகளம் பட்டையைக் கிளப்பும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

மாணவன் said...

//ஆடுகளம் - பாடல்கள் ஒரு பார்வை//

பாடல்கள் பற்றி அருமையா சொல்லியிருக்கீங்க
பகிர்ந்தமைக்கு நன்றி

VASANTH said...

youth beats dhanush vechi azhaga first film panna vetri ku thanks then second film also dedicated to all youths

பாலாஜி சங்கர் said...

பாடல் எழுதியவர்கள் மற்றும் பாடியவர்களையும் சொன்னால் [மற்ற பாடல்கள் ]இன்னும் நன்றாக இருக்கும்
மற்றபடி உங்கள் பகிர்வு நன்று

ச ம ர ன் said...

@ பாலாஜி..
அடுத்த முறை எழுதும் போது, நீங்கள் கேட்ட விவரங்களையும் சேர்த்து தருகிறேன்..:)

@மாணவன்

நன்றி !!