Saturday, July 23, 2011

என் மனக்குதிரை

நிலைகொள்ளா நினைவின்
இலக்கில்லா தேடலில்
அலைபாயும் விழியோடு

விரலால் சிகை திருத்தி
முகத்தில் நகை இருத்தி
கண் களைக்க காத்திருந்தேன்

என் அருகாமையில்
உன் வருகைக்காக‌

தொட்டுவிடும் தூரம் வேண்டாம்..பெண்ணே
அறியாமல் என் மேல் பட்டு விடும் உன் பார்வை போதும்
குதித்தோடும் என் மனக்குதிரை !!

Friday, July 22, 2011

ரசிகன் மட்டுமே !!

காத்திருந்து பார்க்கையில்
உன் விழிகளில் விழுந்தெழுந்தேன்

வளைந்து நீளும் உன் பரப்புகையில்
இருந்து இணங்கும் புள்ளியானேன்

சிதறித் தெறிக்கும் சிரிப்பினில்
நித்தம் நானும் தொலைந்திருந்தேன்

திட்டமிட்டுத் திசையறிந்து
தேடியலைந்து பார்த்தாலும்

ஆசையில்லை அன்புமில்லை
அகம் கொண்ட ஆர்வத்தினால் உன்
அழகில் மயங்கும் ரசிகன் மட்டுமே நான் :)

Monday, May 23, 2011

சமையலறையில் எலி மருந்து ‍ - எண்டோசல்ஃபான்..

எலி மருந்தை நம்ம வீட்டு சமையலறையில் வச்சிருப்போமா ??

இல்லைன்னு சொல்றீங்களா ?? வச்சிருக்கோம்னு நான் சொல்றேன்...

"எண்டோசல்ஃபான்"...

எத்தன பேருக்கு இந்தப் பேரு பரிச்சயமா இருக்கும்னு தெரியல. தேர்தல், ஸ்பெக்ட்ரம், ஐ.பி.எல் இதுக்கு மத்தியில நாம இத மறந்திருப்போம் .இல்ல கவனிச்சிருக்க மாட்டோம். விடுங்க நல்லாத் தெரிஞ்ச ஈழத்தையே மறந்துட்டோம்..இது தெரியாத பேருதான..ஒண்ணும் ப்ரச்சனையில்லை...

ஒரு பூச்சிக்கொல்லி மருந்தா 1950கள்ல உலகச் சந்தையில இது அறிமுகமாச்சு. இப்போதான் தெரியுது இது பூச்சிக்கொல்லி இல்லை, உயிர்க்கொல்லின்னு. தெரிஞ்சுதா?? தெரிஞ்சா என்ன பண்ணனும்.. தடை பண்ணனும். ஆனா நம்ம என்ன பண்ணிக்கிட்டு இருக்கோம்.. சுப்ரீம் கோர்ட்டுல கேசு போட்டுட்டு தற்காலிகத் தடை வாங்கிட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்கோம். சூப்பர்ல ?? இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் பாஸ்னு சொல்றீங்களா ?? :)

இந்தக் கருமத்தை 84 நாடுகள் தடை பண்ணியாச்சு. நம்ம இன்னும் யோசிக்கவே ஆரம்பிக்கல. ஏன்னா ஜெனீவாவுல நடந்த மாநாட்டுல எடுக்கப்பட்ட தீர்மானத்துல "Exception"ன்னு ஒண்ணு இருந்ததாம். அதை பெர்ஃபெக்டா யூஸ் பண்ணிக்கிட்டோம். எப்பூடி ... இதுனால நமக்கு இன்னும் 11 வருஷம் டைம் கிடைச்சிருக்கு...எதுக்கு ? இதை தடை பண்ணலாமா வேணாமான்னு யோசிக்கிறத்துக்கு... டபுள் சூப்பரா ??


ஆமா.. ஏன் இதை தடை பண்றதுக்கு யோசிக்கணும்னு கேக்குறீங்களா ?? ஏற்றுமதி பாதிக்கப்படுதுல்ல ஓய்.. அது முக்கியம் இல்லையா நமக்கு. உலகத்துல இதை அதிகமா ஏற்றுமதி பண்ணுறது நம்மளா இருந்தாலும், இதக் கண்டுபுடிச்சது...?? அதே அதேதான்... வேற யாரு நம்ம அறிவுகெட்ட அமெரிக்கா..தக்காளி..இதைக் கண்டுபுடிச்சு 50 வருஷமாச்சு.

இன்னொரு விஷயம், இயற்கை உரத்தைவிட இது 15 மடங்கு விலை கம்மியாம். விலை கம்மிங்கிறதுகாக எதை எதை யூஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லையா ?? என்னய்யா கணக்கு இது ??

ட்ரிபிள் சூப்பரா ??

ஒரு எளவும் புரியல. வேதியியல் தெரிஞ்சவுங்க விக்கிபீடியாவுல இதோட மூலக்கூறைப் பார்த்து, வினைகளைச் சொன்னால் நல்லா இருக்கும்..
ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளிய வர்றதுக்கு இத்தன வருசம் ஆச்சு.. இந்தக் கருமம் வெளிய வர்றதுக்கு இன்னும் எத்தன வருசம் ஆகுமோ ??

பி.கு : பாதிப்பேரு இந்தத் தடையை இந்திய ஏற்றுமதியை தடுக்கும் நோக்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்னு சொல்லிக்கிட்டு திரியுறாங்க...

என்னது...ஆமாமா... இந்தியா வல்லரசுதான்.. இன்னும் பத்தே வருசம்தான்... !!

Saturday, April 23, 2011

சரியென்ற தவறு..


நான் செய்வது தவறு
உன் பார்வையில்

உனக்குப் பிடிக்குமானால்
நான் செய்யும் தவறும் சரியானதாகும்
உன் பார்வையில்

எனக்கு பிடிக்காவிடில்
உன் சரியும் தவறாகும்
என் பார்வையில்

இது உண்மையானால்
சரியெது தவறெது

இது பொய்யானால்
தவறெது சரியெது

உண்மை பொய்யாகும் போது
சரியும் தவறாகும்

உண்மையில்
சரியென்றும் தவறென்றும்
ஏதுமில்லை

உண்மையென்றும் ஒன்றுமில்லை
இவையனைத்தும் உண்மையாகும்
நான் சொல்வது பொய்யில்லையென்றால்

Thursday, February 17, 2011

நினைவுகள் இறக்குமா ?


வாசித்த கவிதைகளை
வரைந்து வை மறக்குமென்றாய்

நேசத்தால் வந்ததிது
நாள்தோறும் வளருமென்றேன்

வரைந்தது நீயானாலும்
கரைந்தது நானென்றாய்

வாசனைகூட மறக்கவில்லை
வாழ்நாள் கனவு வீணானதே

பாசமிழந்து தவிப்பதால்
யோசிக்காமல் எழுதுகிறேன்

வாசிக்க நீயில்லை
யாசித்தும் பலனில்லை

நினைத்தது பொய்த்தாலும்
நினைவுகள் இறக்குமா ??

Tuesday, February 15, 2011

நீ மட்டும் தானடி...விழிகள் விதைத்த காதலிது
விழலுக்கிரைத்த நீராவதில்லை

மனதை யாண்ட ஆசையிது
மண்ணுக்குள் போனாலும் அழிவதில்லை

நெஞ்சம் கொண்ட அன்பு இது
நெருப்பால் சுட்டாலும் கேட்பதில்லை

பேதம் தாண்டிய வேள்வியிது
பெருந்துன்பம் வந்தாலும் தோற்பதில்லை

என்னுள் இருந்த எண்ணமிது
இருந்தாலும் இன்று நிறைவேறவில்லை

நட்பில் தண்மையாய் இருந்தாய்
தாய்மையில் நட்பாய் இருந்தாய்

இருப்பாய் என நினைத்தேன்.. பொய்யான
வெறுப்பால் எனது உறவறுத்தாய்

என்னகத்தின் அழகை அறிமுகம் செய்தவள்
என்னகத்தே இல்லை இன்று

இருந்தாலும் சொல்வேன்...

நானறிந்த உறவுகளுக்கும்
அறியாத உணர்வுகளுக்கும்

இப்போதும் எப்போதும்
உருவமாவது நீ மட்டும் தானடி...

Monday, February 14, 2011

என் காலம் தீரும் வரை....


அன்பினால் என்னை அரவ‌ணைத்ததால்
அழகென்ற வார்த்தைக்கு அர்த்தமானாய்
என் வாழ்க்கைக்கும் ஆதாரமானாய்..

உன் காதல் பாரம் தாளாமல் தவித்த பொழுது
பாசத்தால் எனக்கு கனிவாய் பரிவளித்தாய்
எனக்கெப்போதும் பாதுகாப்பானாய்

காதலித்தேன்...
காதலித்தாய்...
காதலித்தோம்..
காதலியாய் இல்லாமற் போனாலும்
காதலாகவே இருக்கிறாய் எனைச் சுற்றி

பிரிந்து வருந்தி எச்சமாய் நின்றாலும்...
நீ விட்டுச் சென்ற காதலின் மிச்சம் போதும்
என் காலம் தீரும் வரை....