Friday, July 22, 2011

ரசிகன் மட்டுமே !!

காத்திருந்து பார்க்கையில்
உன் விழிகளில் விழுந்தெழுந்தேன்

வளைந்து நீளும் உன் பரப்புகையில்
இருந்து இணங்கும் புள்ளியானேன்

சிதறித் தெறிக்கும் சிரிப்பினில்
நித்தம் நானும் தொலைந்திருந்தேன்

திட்டமிட்டுத் திசையறிந்து
தேடியலைந்து பார்த்தாலும்

ஆசையில்லை அன்புமில்லை
அகம் கொண்ட ஆர்வத்தினால் உன்
அழகில் மயங்கும் ரசிகன் மட்டுமே நான் :)

2 comments:

She-nisi said...

ரசிகனுக்கு வாழ்த்துக்கள்

ச ம ர ன் said...

வாழ்த்துக்கு நன்றி.. எதுக்கு வாழ்த்துக்கள்னு புரியலயே ?? :P