Tuesday, May 8, 2012

டி.என்.ஏ


டி.என்.ஏ. என்றால் என்ன ? டீஆக்ஸி- ரிபோநியூக்ளிக் ஆசிட் என்பது இதன் விரிவாக்கமாக இருந்தாலும், "மரபு அடிப்படைக் கூறு" என்று சொல்லும் போது எளிதாக விளங்கும். அதாவது உங்கள் அடிப்படை உருவ அமைப்பை நிர்ணயம் செய்வதற்கு மூல காரண‌மாக இருப்பது இந்த டி.என்.ஏ தான்.

ஒரு மனிதனுக்கு விரல் ரேகை எவ்வளவு தனித்துவம் வாய்ந்ததோ, அது போல, ஏன்..அதை விட ஒரு படி மேலானது இந்த டி.என்.ஏ.

அப்படியென்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ள டி.என்.ஏ, ஒன்றை ஒன்று ஒத்து இருக்காதா என்றால், அது தவறு. பெரும்பாலான டி.என்.ஏ-க்களில் வேறுபாடு இருக்காது. அடிப்படையான மூன்று மில்லியன் டி.என்.ஏ-க்கள் மட்டுமே ஒவ்வொரு மனிதனுக்கும் இடையில் வேறுபடுபவை.

அடிப்படையே மூன்று மில்லியன் என்றால் ? மொத்தம் எவ்வளவு ? இந்த வேறுபடும் டி.என்.ஏ வின் விகிதம் மொத்தமுள்ள டி.என்.ஏ வில் ஆயிரத்தில் ஒரு பங்குதான்.( நாம் அனைவரும் ஆயிரத்தில் ஒருவர் தான்)

ஒரு டி.என்.ஏ என்பது  நீளமான, முறுக்கிய, இரட்டைவட சங்கிலி போன்ற அமைப்பை உடையது. இதைத்தான் ஆங்கிலத்தில் double helix என்பார்கள்.
பார்ப்பதற்கு சிக்கலான வடிவத்தில் இருந்தாலும், இதன் உட்பொருட்கள் வெறும் நான்கு உட்கரு அமில மூலங்கள் தான். அதாவது nucleotides.

1)அடினின்
2)சைட்டோஸின்
3)குவாமின்
4)தையமின்

மேற்கண்ட நான்கு அமிலமூலங்கள் தான் ஒரு டி.என்.ஏ வின் அடிப்படை இணைகளாக அமைபவை. இவற்றில் எப்பொழுதும் அடினின் மற்றும் தையமின் ஒரு இணையாகவும், சைட்டொஸின் மற்றும் குவாமின் ஒரு இணையாகவும் அமைந்திருக்கும், ஒரு ஏணியின் படிகளைப் போல.

இந்த இணைகளை உடைய டி.என்.ஏ வின் ஒரு அமைப்புதான் குரோமோசோம் எனப்படுவது. மனித உடலில் இந்த டி.என்.ஏ 23 ஜோடி குரோமோசொம்களாக உருப்பெற்றிருக்கும். இந்த 23 இணைகளில், ஒரு இணை உங்கள் தந்தையிடமிருந்தும், மற்றொரு இணை உங்கள்  தாயிடம் இருந்தும் பெறப்பட்டிருக்கும். அதாவது உங்களது டி.என்.ஏ உங்கள் தாய்,தந்தை, இருவரின் டி.என்.ஏ க்களின் கலவையாக இருக்கும். இப்போது புரிந்திருக்கும் இது எவ்வளவு தனித்துவம் வாய்ந்தது என்று.

1) இரட்டையர்களின் டி.என்.ஏ ஒன்றையொன்று ஒத்து இருக்குமா ?
2) தற்கால அறிவியலில் டி.என்.ஏ வின் பயன் என்ன ?
3) டி.என்.ஏ பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது ?

இந்தக் கேள்விகளுக்கான பதில்களை பின்வரும் பகுதிகளில் பார்ப்போம்.



பி.கு : இந்தப் பகுதியில் நான் எழுதும் எதுவும் நானாக கண்டுபிடித்தது அல்ல. அறிந்ததை, படித்ததை எழுதுகிறேன். முடிந்தவரை சரியாக :)

2 comments:

முனைவர் பரமசிவம் said...

மிகவும் விரும்பிப் படித்தேன்.
இம்மாதிரி, அறிவியல் செய்திகளை எளிமையாகவும் சுவையாகவும் தருகின்ற பதிவுகள் அரிது.
என் மனப்பூர்வமான பாராட்டுகள்.
I.A.S ஆகியிருக்கிறீர்கள். வாழ்த்துகள்.
இனியும் பதிவுகள் போட நேரம் வாய்க்குமா?
நன்றி.

ச ம ர ன் said...

சார்..தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க..ஐ.ஏ.எஸ்‍னு கிண்டலுக்கு எழுதியிருந்தேன். இன்னும் அந்த அளவுக்கு அறிவு வளரலை :)

உங்களுக்கு பதிவு பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சி. தொடர்ந்து இது போல எழுத முயற்சி பண்றேன்..