Saturday, January 14, 2017

லெமூரியா ‍- பகுதி 2 - டெக்டானிக் தட்டுகள்

சென்ற‌ பகுதியில் சொல்ல நினைத்து விட்டுப்போன ஒரு விசயம். "மடகாஸ்கர்" அனிமேஷன் படத்தில் வரும் கிங் ஜூலியன் என்கிற கதாபாத்திரம் இந்த லெமூர்தான்.
பேக் டு தெ டாபிக்.
லெமூரியா என்பது புராணமா அல்லது புவியியல் ரீதியாகவே அப்படி ஒரு கண்டம் இருந்ததா என்பதைப் பார்ப்போம். ஸ்க்லேட்டரின் கூற்றுப்படி, நிலவழிப்பாலங்கள் (Land Bridges) இருந்ததற்கான வாய்ப்புகள் இல்லை என்பதற்கு ஒரு வலுவான காரணம் உண்டு.
டெக்டானிக் தட்டுகளின் நகர்வு (Plate Tectonics).
பூமியின் மேல்புற ஓடு க்ரஸ்ட் (Earth's Crust) எனப்படும். க்ரஸ்ட்டுக்கும் பூமியின் மையப்பகுதியான கோர்‍-க்கும் (Earth's Core) இடையில் இருக்கும் சிலிகேட் பாறைகளால் ஆன அடுக்கு மேண்ட்டில் (Mantle) எனப்படும். இந்த க்ரஸ்ட் மற்றும் மேண்ட்டில் சேர்ந்ததுதான் டெக்டானிக் ப்ளேட். இந்த டெக்டானிக் தட்டுகள் ஒரே சீராக தனித்தனித் துண்டுகளாக, பூமியின் வடிவத்தோடு ஒன்றியிருப்பவை. இந்தத் தட்டுகளின் நகர்வு டெக்டானிக் ப்ளேட் மூவ்மெண்ட் ஆகும்.இது போன்ற நகர்வுகள்தான் பூகம்பம், எரிமலை, புதிய மலைகள் உருவாதல் போன்றவற்றிற்கு காரணமாக அமையும். எவரெஸ்ட் சிகரம்கூட இது போன்ற இரு தட்டுகளின் உராய்வினால் தோன்றியது என்று கூறுவர். 2012 ஆங்கிலப்படத்தில் இந்த ப்ளேட் மூவ்மெண்ட்டைப் பற்றி தெளிவாக‌ பேசியிருப்பார்கள்.
பொதுவாக டெக்டானிக் தட்டுகள் நகர்ந்து கொண்டே இருப்பவை. அதற்குக் காரணம் பூமியின் மையப்பகுதியில் இருக்கும் கன்வெக்ஷன் கரெண்ட். இப்படி நகர்ந்து கொண்டிருக்கும் தட்டுகளின் மீதுதான் நம் கண்டங்கள் அமைந்துள்ளன. இப்போதிருக்கும் பூமியின் அமைப்புப்படி ஏழு டெக்டானிக் தட்டுகள் இருக்கின்றன.
Pacific Plate
North American Plate
Eurasian Plate
African Plate
Antarctic Plate
Indo-Australian Plate
South American Plate
இது போக சில சிறிய தட்டுக்களும் உண்டு. இப்போதிருக்கும் தொழிநுட்பத்தால் சாட்டிலைட மூலம் இந்த நகர்வுகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறோம். மழையை கணிக்க முடிந்த நமக்கு சுனாமி, பூகம்பம் போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியாததற்கு காரணம் டெக்டானிக் தட்டுகளின் நகர்வு, பூமியின் மையப்பகுதியில் இருந்து ஏற்படும் மாற்றங்களால் தொடங்குவதால்தான். You can arrive at a probability but not predict an earthquake or tsunami.
பலகோடி ஆண்டுகளுக்கு முன்னர், பூமியில் உள்ள கண்டங்கள் இதே அமைப்பில் இல்லை. வெறும் இரண்டு மெகா சைஸ் கண்டங்களாக இருந்த பூமியின் நிலப்பரப்பு, டெக்டானிக தட்டுகளின் நகர்தலால், காலப்போக்கில் துண்டுதுண்டாகிப் போனது. அந்த நகர்தலுக்கு முன் இருந்த இரண்டு பெருங்கண்டங்களில் (Super Continents) ஒன்று "லாரேசியா"(Laurasia) மற்றொன்று "கோண்ட்வானா"(Gondwana).
இப்போதிருக்கும் தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இந்திய துணைக்கண்டம், ஆஸ்திரேலியா, அண்டார்டிகா போன்றவை, இந்த கோண்ட்வானாவை சேர்ந்தவை. டெக்டானிக் தட்டின் நகர்வுகளால், துண்டாடப்பட்டு, அங்கங்கே தூக்கி வீசப்பட்டன (not literally) இந்தக் கண்டங்கள். அருகருகே இருந்த இந்த நிலப்பரப்புகளின் அமைப்பு, புவியியல் ஒன்றுபோல இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் நூறு சதவிகிதம் உண்டு.
அங்கே இருந்த விலங்குகள் இங்கே இருப்பதற்கான சாத்தியமும் உண்டு.
"கோண்ட்வானா", ஆராய்ச்சியாளர்களால் த‌ற்போதைய இந்தியாவைச் சேர்ந்த கோண்டி இன ஆதிவாசிகளைப் பின்பற்றி பெயரிடப்பட்டது.
இந்த டெக்டானிக் நகர்தல் தியரிப்படி, ஸ்க்லேட்டர் சொல்வது போல நிலவழிப்பாலங்கள் இருந்ததில்லை, மாறாக இந்த நிலத்துண்டுகள் எல்லாம் ஒரே இடத்தில் இருந்தவை. காலப்போக்கில் மெதுவாக, மிக மெதுவாக நகர்ந்து சென்றவை. அதனால் அங்கிருக்கும் எல்லாமும் இங்கேயும் இருக்கும்.
ஆதலால் லெமூரியா புராணமாக, உருவகமாக‌ இருந்தாலும், ஒற்றுமை இருப்பது உண்மை, தொன்மத் தொடர்பு இருப்பது உண்மை. ஆப்பிரிக்க கருப்பிற்கும், தமிழகக் கருப்பிற்க்கும் இருக்கும் ஒற்றுமை புவியியல் ரீதியானது. "நம்ம என்ன அவ்வளவு கருப்பாவா இருக்கோம்" என்கிற கேள்விக்கு பதில், "லட்சம் ஆண்டுகளாக நிகழ்ந்த பயணத்தில் ஈக்வேடாருக்கு கீழே இருந்து டிராபிக் ஆப் கேன்சர் வரை மேலேறி வந்திருக்கிறோம். அதனால் ஒற்றுமைகள் இருந்தாலும், அவை சிறிது சிறிதாக fade out ஆவது தவிர்க்க முடியாதது.
இப்போது ஏன் திடீரென்று லெமூரியா, புவியியல், வரலாறு பற்றிய பேச்செல்லாம் என்கிற கேள்விக்கு பதில் அடுத்த பகுதியில்.
தொடரும்....

No comments: