Saturday, January 14, 2017

லெமூரியா ‍- பகுதி 3 - சவிக்கா

சென்ற இரண்டு பகுதிகளில் லெமூரியாக்கண்டத்தைப் பற்றியும், இரு வேறு நிலப்பரப்புகளுக்கு இடையில் இருக்கும் ஒற்றுமையைப் பற்றியும் பார்த்தோம். நிலப்பரப்பு ஒன்றாக இருக்கும் பட்சத்தில்,வாழ்வியல், உணவு மற்றும் கலாச்சாரம் ஆகியவை ஒன்றாகத்தான் இருக்கும்.உதாரணமாக பிறப்பு மற்றும் இறப்புக்கு
செய்யும் சடங்குகள், திருமண விழாக்கள், சாதி அமைப்புகள், தொழில்கள் போன்றவை. காலையில் சாப்பிடும் சிற்றுண்டி முதற்கொண்டு topography-யைப் பொறுத்து இடத்துக்கு இடம் மாறலாம் அல்லாது ஒன்றாக இருக்கலாம்.

உருவகப்படுத்தப்பட்ட லெமூரியாக் கண்டத்தின் மேற்கு எல்லையான மடகாஸ்கருக்கும், தமிழகத்திற்கும் உள்ள முதல் ஒற்றுமையாக தேவாங்கு எனும் விலங்கைப் பார்த்தோம். அது போக ஆடு,மாடு, என்று நிறைய ஒற்றுமைகள் உண்டு. விலங்குகள் மட்டுமல்ல, அந்த விலங்குகளை வளர்க்கும் முறை, உபயோகப்படுத்தும் விதம், மதிக்கும் பண்பாடு என்று அனைத்திலும் ஒரு ஒற்றுமை உண்டு.

மடகாஸ்கரில் உள்ள பெட்சிலியோ இனமக்களிடம் உள்ள வழக்கங்கள் நம் தமிழ் வழக்கங்களோடு நிறைய ஒத்துப்போகின்றன். திருமணத்திற்கு ஆண்/பெண் பார்ப்பதில் இரண்டு மூன்று தலைமுறைகள் வரையாவது விசாரித்து அறிவது, இறப்புக்கு பின் முன்னோர்களை மதித்து செய்யப்படும் சடங்குகள், ஆண் சிறுவர்களுக்கு செய்யப்படும் சர்கிம்ஸிஷன் (தென் தமிழகத்தில் பிரமலைக் கள்ளர் வகையறாவில் இந்த வழக்கம் உண்டு என்று படித்திருக்கிறேன். மதயானைக்கூட்டம் திரைப்படத்தில் கூட ஒரே ஒரு காட்சி இதைப்பற்றி வரும்) போன்றவற்றில் பெட்சிலியோ மக்களும், நாமும் கிட்டத்தட்ட ஒரே வழிமுறைகளைத்தான் பின்பற்றி வருகிறோம்.

இது போன்ற விழாக்களில் அவர்கள் செய்யும் மிக முக்கியமான விசயங்களில் ஒன்று "சவிக்கா" எனப்படும் விளையாட்டு. கிராமத்து இளைஞர்கள் ஊர் மைதானத்தில் காளைகளின் திமிலைப் பிடித்து தொங்கிக்கொண்டு, ஊர்மக்கள் முன் தங்கள் உடல்வலுவையும், மனதைரியத்தையும் பறைசாற்றுகிறார்கள். இது பல நூற்றாண்டுகளாக அவர்கள் விரும்பி கடைப்பிடித்து வரும் முக்கியமான ஒரு நிகழ்வு. வீரத்தின் அடையாளமான இந்த விளையாட்டை பெண்களும் ரசிக்கிறார்கள்.

இதுவரை எந்தவொரு ஸோ கால்டு மிருககாருண்ய இயக்கமும் அங்கே சென்று வெட்டி நாட்டாமை செய்யாததால்,அம்மக்களுக்கு இந்த விளையாட்டின் பின்னால் இருக்கும் சமூக அறிவியல் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நமக்கும் சல்லிக்கட்டை தடை செய்யும் வரை அது வெறும் விளையாட்டாக மட்டும்தானே தெரிந்தது. We always learn things the hard way.
லட்சம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த ஒன்றிணைந்த நிலப்பரப்புகளில் இருக்கும் ஒரே மாதிரியான வழக்கங்கள் பிரம்மிப்பூட்டுவது.இது மதம் சார்ந்த விழா அல்ல, நிலம் சார்ந்தது, நிலத்தின் மக்கள் சார்ந்தது.அவர்கள் வாழ்வு சார்ந்தது. எவராலும் இதனை எதிர்த்து நியாயம் பேசி ஜெயிக்க முடியாது. ஆனால் சதி செய்யலாம். அதற்கு நியாய தர்மங்கள் தேவையில்லை. ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து வந்த வழக்கங்களை எல்லாம் நேற்று முளைத்த காளாண்களால் அசைக்க முடியாது. இந்த வழக்கங்கள் எல்லாம் இயற்கையோடு இணைந்தவை, நீங்கள் அடக்க அடக்க, தடுக்க தடுக்க, வெவ்வேறு உருப்பெறும்.

This is in our DNA.

கொம்பாதி கொம்பனை எல்லாம் பார்த்த இனம் இது.

அதிகாரம் செய்தவர்களை எல்லாம் மண்டியிட வைத்து, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக
தழைத்து வரும் இனம் இது.

எவ்வளவு சதி செய்தாலும், இறுதியில், எங்கள் கெண்டைக்கால் மயிரைக்கூட
உங்களால் தொடமுடியாது என்பதை உணர்வீர்கள்.
வாழ்க வளமுடன் !
 பி.கு: தமிழில் இருந்து வேறு மொழிகளுக்குசென்ற வார்த்தைகளைப் போல (உதாரணத்திற்கு மாங்காய் -Mango, கயிறு- Coir, கட்டுமரம் - Cattamaran) சல்லிக்கட்டு சவிக்கா ஆகியிருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். வழக்கம் தான் முக்கியம், வார்த்தை அல்ல.
தென் தமிழகத்தில் இருக்கும் பிரமலைக்கள்ளர்களிடம் இருக்கும்/இருந்த சர்க்கிம்ஸிஷன் முறை மதம் சம்பந்தப்பட்டது அல்ல. சமுதாயம் சம்பந்தப்பட்டது. இணையத்தில் நிறைய ஆவணங்கள் கிடைக்கும்.தேடிப்படிக்கலாம்.

யூ‍‍ ட்யூப்பில் "சவிக்கோ" பற்றி தட்டினால்
வீடியோக்கள் கொட்டும்.

No comments: